Skip to Content

07. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

P.34 Then our thoughts sin against its unknowableness

அறிய முடியாத பிரம்மத்தை அறிந்தோம் என நினைப்பது பிரம்மத்தை அறியாததாகும்.

  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று குழந்தையைத் தெய்வமாக்குகிறது.
  • பகவான் ஆணின் சிறப்பை, "பெண்ணுக்குச் சரணம் அடைந்து பூர்த்தியாகிறது'' என்று கூறுவதை நான் அடிக்கடிக் குறிப்பிட்டு, அக்கருத்தை வெளியிடும் பாரதியின் பாடலை, "அவள் தாளினைக் கைக்கொண்டு மகிழ்ந்திருப்பான்'' மேற்கோளாகக் காட்டுவதுண்டு.
  • நட்பு, உறவு, உள்ளுணர்வு, வீட்டைக் குடும்பமாக்கும் பண்பு, பாட்டியின் இதம், தகப்பனாரின் இங்கிதம், மனம் நெகிழ்ந்து உணர்வாவது போன்ற உயர்ந்த உணர்ச்சிகள்.

    கணவன், மனைவி உறவில் சரணாகதி தத்துவமாக,
    குறிப்பாக ஆண் பெண்ணைச் சரணடைவதில்

    அபரிமிதமாகப் பூர்த்தியாகி, அனந்த வீச்சில் அமிர்தமாகும் ரஸம் குடும்பப் பண்பு.

  • இந்த உறவில் திறமை, காரியம் முடிவது, இலாப-நஷ்டக் கணக்கிற்கு இடமில்லை.
  • 1908இல் பகவான் சிறையில் இந்தியா பூரண சுதந்திரம் பெற்றுவிட்டது எனக் கண்டபொழுதே இங்கிலாந்து அதை பண்பின் உயர்வால் ஏற்கத் தயாராக இருந்ததையும் கண்டார்.
  • அரிசி சோறாக வேக வேண்டும் என்பது போன்று அடிமை நாடு விடுதலை பெற ஆயுதமேந்தி போராட வேண்டும் என்பதும் சட்டம்.
  • நாடு அப்பாதையை ஏற்றிருந்தால் சுமுகமாகச் சுதந்திரம் அப்பொழுதே போராட்டத்தின் வழி, போராட்டமின்றி வந்திருக்கும்.
  • எப்படிப் போராட்டம் வழி போராட்டம் தவிர்க்கப்படும் என்பது கேள்வி.
  • போராடி வெல்லக்கூடியவன் போராடத் தயாரானால் போராட்டமற்ற வெற்றியுண்டு.
  • இந்தியா அப்பொழுது சுதந்திரம் பெற்றிருந்தால் உலகப் போர்கள் மூண்டிரா.
  • இந்தியா உலகத்தின் குருவாகியிருக்கும்.
  • அன்று பகவான் சூட்சுமத்தில் தீய சக்திகளைக் கரிய உருவமாகக் கண்டு, அவை உருவம் பெற்றுவிட்டதால் ஜட உலகில் போரைத் தவிர்க்க முடியாது எனக் கண்டார்.
  • Orthodoxy வைதீகக் கட்டுப்பெட்டி, இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் நிரம்பிய சக்தி.
  • உலகில் அதிகாரம், செல்வம், ஞானம் எவருக்கும் சொந்தமல்ல, எல்லோர்க்கும் உரியது.
  • நிலம் உழுபவனுக்கே சொந்தம் என்ற கோஷத்தில் உண்மையுண்டு என்றாலும், துணி வெளுப்பவனுக்கே உரிமையானது, குழந்தை வளர்க்கும் தாய்க்கே உரிமையாகுமா என்பதற்குப் பதில் வேண்டும்.
  • எவர் பெறும் ஞானமும் அவருக்குரியதல்ல, உலகத்தின் பொதுச் சொத்து.
  • பொதுச் சொத்தை ஒருவரே பெற முயல்வது தவறு ஆதிக்கமாகும். அதனால் அவருக்கே நல்லது வாராது.
  • ஞானி, அரசன், வியாபாரி அது போல் ஞானம், அதிகாரம், செல்வத்தை அனைவருக்கும் பகிர்ந்து தருவது சரி. தான் மட்டும் பெறுவது தவறு.

*******



book | by Dr. Radut