Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/24. நெருங்கி வந்து இணைந்து இழைந்து விலகி நிற்றல்; நெருக்கமாக விலகுதல்

  • நெருக்கம் தீவிரம் தரும். இணைந்தால் தீவிரம் அதிகமாகும். இழைவது இணைவதை முழுமைப்படுத்தும். விலகினால் இவையனைத்தும் குறையும், குறையாமல் விலக முடியாது.
  • பிரம்மம் மூலம், அதற்குத் தீவிரம் உண்டு.
  • இணைந்து இழைவது நெருக்கத்தை மூலமான சாரமாக்கி விடும்.
  • மூலத்தில் சாரம் தீவிரமானால், அதன் பிறகு விலகினாலும் விடுபடாது.
  • அப்படி விலகுவது சாரத்தை பெரிய அளவில் செயல்படச் செய்யும்.
  • விலகுவதால் தீவிரம் குறைந்து, மறந்து, மறைந்து போவதாகத் தெரியும்.
  • குறைவதும், மறைவதும் மேல் மனத்தில், தீவிரம் அதிகமாகி நினைவு நிரந்தரமாவது ஆழ்மனத்தில்.
  • நேரம் வரும் பொழுது அந்த நினைவு மட்டும் மேலெழும்.
  • P.V.G. ராஜு 50-தில் ஆந்திரா மந்திரி. அன்னையை தரிசனம் செய்தவர். அடிக்கடி இங்கு வருவதில்லை.
  • பஞ்சாப்பில் விபத்தில் சிக்கி ஸ்மரணை இழந்தார். இழந்த நிலையில் ஓர் ஆண்டிற்கு மேலிருந்தார்.
  • நினைவு வரவில்லை. ஏதோ ஒரு சமயம் நினைவு வந்தால் எவரும் நினைவில் தோன்றுவதில்லை.
    பகவான் அன்னை படங்களைக் கண்டு கொள்வார்.
  • கணவன் மனைவி பிரிவதுண்டு. நாளுக்கு நாள் விலக்கு வளரும். நினைவிலும் இருப்பதில்லை.
  • அவர் வாழ்வில் வரும் முதலாளி, நண்பர், கூட்டாளி, தலைவர் என எழுபவர்கள் பெயர் ஏதோ ஒரு வகையில் மனைவியின் பெயர், ஊருடன் தொடர்புள்ளவர், ஏதோ ஒரு வகையில் வந்தபடியிருக்கும். இவ்வாழ்வுக்குரிய சட்டங்கள் ஏராளம்.
    மேல் மனம் இழந்தது ஆழ்மனத் தீவிரமாகும்.
  • தன்னை மறந்தவரை மறவாத நினைவு அன்னை நினைவு.
  • ஜப்பானிலிருந்தபொழுது விஷ ஜுரம் அன்னையைத் தீண்டியது ஜப்பானை விட்டு விலகியது.
  • அணுகுண்டு நெடுநாள் கழித்து ஜப்பானில் சேதம் விளைவித்தது அழிந்த விஷ ஜுரத்தின் அழிந்த சுவடு.
  • திருடன் விலகியவனுடைய தீவிர நெருக்கத்தை இரகஸ்யமாக வலியுறுத்தத் திருடுகிறான்.
  • விலகியவன் தூர இருந்து தொடர்பு கொள்ள எதிரான உறவை ஏற்படுத்துகிறான்.
  • சாக்கிய முனி தூர இருந்து உறவை நிலைநிறுத்த கல்லால் அர்ச்சனை செய்தார்.
  • இந்தியா சுதந்திரம், சுபிட்சம், ஞானம், நேர்மை, நாணயம், இவற்றை இழந்தது இவற்றை அடுத்த கட்ட உயர்வாகப் பெறுவதற்காக என்பது ஒரு அடிப்படை வாழ்க்கைத் தத்துவம்.
  • இழப்பது வாழ்வுக்குரியதல்ல. நாள் கடந்தால் அதிக நஷ்டம் ஏற்படுவது ஆழத்தில் அதிக இலாபம் பெறுவதாகும்.
  • நண்பன் எதிரியானால், நட்பும் உறவும், நாலா பக்கங்களிலும் வளர்வதாகும்.
  • அவமானம் அகிலம் சூட்சுமமாக அறியும் ஆன்மிக மானம்.
  • நெருக்கம் என தலைப்பு கூறுவது உடலிலிருந்து பூரண ஜீவன்வரை எல்லா நிலைகளிலும் உண்டு.
  • ஒவ்வொரு நெருக்கத்திற்கும் உரிய செல்வம், பிரபலம், அதிகார நிலைகள் உண்டு. அதற்கு இருபுறமும் - நல்லது கெட்டதென - உள்ள பலன்கள் உண்டு.
  • ஒரு மனிதன் உச்சகட்டத்தில் உயர்வான நிலையில் உலகத்திற்கே சேவை செய்யும் சிறந்த பவர் உண்டு.
  • கணவனுக்கு உடலாலும், உயிராலும், மனதாலும், ஆத்மாவாலும் உண்மையானவள் அவனுக்கு மாங்கல்ய பலம் தருகிறாள்.
  • அவளே சமைத்து, அவளே பரிமாறும் உணவு அவனுக்கு எந்த வியாதியையும் குணப்படுத்தும்.
  • வெட்டுக்காயம் சாப்பிட்டு முடிந்தவுடன் தானே வாய் மூடி குணமாகும்.
  • இந்த ஞானம் எல்லோர்க்கும் உண்டு, கனவில் தெரியும்.
  • திருமணமான மனைவியின் விஸ்வாசம் திருமணமாகாதவர்க்கு வராது.
  • உயர்ந்த உள்ளம் ஆத்ம வளர்ச்சியால் பெற்றவர்க்கு சேர்ந்தவளுக்குள்ள உச்சகட்ட விஸ்வாசம் திருமணமானவர்க்கு வராது.
  • உலகில் எந்தக் காரியத்தையும் எந்தக் காரியத்தாலும் செய்ய முடியும்.
  • (Integrality) புறத்தில் இணைந்த நிலையும், அகத்தில் இழைந்த உணர்வும் பெற்றவர்க்கு அது முடியும்.
  • அது மனத்தால் செயல்பட முயற்சி எண்ணமாக எழ வேண்டும்.
  • செயலால் அது நிறைவேற உரிய செயல் உருவாக வேண்டும்.
  • கிருஷ்ணன் சாப்பிட்ட ஒரு சாதப் பருக்கை கருவியாகும்.
  • நரபலி, காவு, தீ மிதி அப்படி ஏற்பட்ட அற்புதமாகும்.
  • காளிதாசன் பெற்ற ஞானம் இம்முறையால் ஏற்பட்டதே.
  • வில்வம் தங்கமாவது, கனகதாரா இச்சட்டங்களைக் கூறும்.
  • சேற்றில் தாமரை எழுவது இச்சட்டத்தின் முறையாகும்.

*********



book | by Dr. Radut