Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

(that) - அனைத்தும் ஆதிமுதலுள்ளவை.

(That)) பிரபஞ்சம் ஒவ்வொரு நிமிஷமும் கரைந்து மீண்டும் சிருஷ்டிக்கப்படுகிறது.

Volume 8, page 36

  • பெரும் பாடகர்கள், ஒலிம்பிக்கில் விளையாடுபவர், பார்லிமெண்டில் நெருக்கடியான நேரம் எதிர்கட்சியை மறுத்துப் பேசும் அரசியல்வாதி, உண்மை மட்டும் பேசும் உழைப்பாளி, மாமியார் கொடுமையை மனம் விரும்பி கட்டுப்பாடாக ஏற்கும் இளம் மனைவி, துரோகம் செய்யும் மானேஜரிடம் விபரம் தெரிந்து பெட்டிச் சாவியைக் கொடுத்தவர் இழக்க விரும்பாத பொறுமை, லஞ்ச ஊழல் நிறைந்த ஆபீஸில் அன்று மாலையே லைசென்ஸ் பெறாவிட்டால் அனைத்தும் போகும் என்ற கட்டத்தில் லஞ்சம் கொடுக்க மறுக்கும் வியாபாரி, அறிவில்லாத குருவின் அறிவுள்ள சிஷ்யன், ஊருக்குப் பெரியவன் உரிமையை எடுக்கக் கங்கணம் கட்டிக் கொண்ட பொழுது திணறும் எளியவன், தாயே மகள் விதவையாக நினைக்கும் சுமங்கலி, எவருக்கு மனமார பெரு நஷ்டப்பட்டு உதவினாரோ அவர் குதர்க்கமாக கர்வமாக உன்னை அழித்து வேடிக்கைப் பார்ப்பேன் என்ற நிலையை எதிர்கொள்ளும் மனிதன் போன்றவர்க்கு “அவர் உலகம் ஒவ்வொரு நிமிஷமும் கரைந்து மீண்டும் புதுப்பிக்கப்படுவது” தெரியும்.
  • கடவுள் பக்தியுள்ளவர் கடவுளுக்குப் பயந்து நடப்பார். அவர் பிரார்த்தனைகள் பலிக்கும். ஜாதகப்படி வாழ்வு ஓடும். அவருக்கு ஆண்டவன் “அவர் ஜாதகத்திற்குட்பட்டு” எந்தக் குறையும் வைப்பதில்லை. பெரும் நேரங்களில் பக்தியின் உயர்வால் ஜாதகப்படி உள்ள கண்டமும் சற்று விலகி வழிவிடும். இவருக்கு “அனைத்தும் கடவுளில் உள்ளது” என்ற விளக்கம் பொருந்தும். இது மத வழிபாட்டின் சிறந்த உயர்வு. தவம் இதைக் கடந்தது.
  • தவத்தை மேற்கொண்டவர் ஜாதகத்தை பார்க்கும் அதிகாரம் ஜோஸ்யனுக்கில்லை.
    அவனுக்கு ஜோஸ்யன் எழுதிய ஜாதகம் கிடையாது.
    தவத்தை ஏற்ற தவசிரேஷ்டருக்கு தவம் ஏற்படுத்தி நியதிகள் உண்டு.
    அதுபோன்ற ரிஷியின் தபோ வலிமையை அழிக்க வந் அப்சரஸைக் கண்டு 900 ஆண்டு தவத்தை மறந்தவர் “பாசம் பிரியம், மையல் என்ற நியதிக்குட்பட்டவர்.” இது “that’’
  • பூரண யோகம் “That’’.
    எந்த நிலையிலும் அந்த நிலைக்குரிய பெருமையும் உயர்வும் மட்டும் பெறும் அன்பர் “that’’ என்ற உலக தவ நிலையைக் கடந்து “That’’ என்ற பெரிய நிலையை அடைகிறார். அவரை “That’’ தேடி வருகிறது.
  • Pride and Prejudice 200 ஆண்டிற்குமுன் எழுதிய ஆங்கிலக் கதை. இங்கும் பிரெஞ்சுப் புரட்சி அலையாக வருவதை அது எலிசபெத் வாழ்வில் வந்து மிளிர்வதைக் காண்கிறோம். கதைக் கோப்புக்குட்பட்டு “that’’ மாறி “That’’ ஆவதைக் காண்கிறோம்.
  • “that’’ வாழ்வின் ஆன்மிக நெறி. “That’’ தெய்வீக வாழ்வுக்குரியது.

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

விஞ்ஞானி சக்தியை ஆராய்ந்து அது ஜடம் எனக் கண்டான். வேதாந்தம் சக்தியை ஜீவனிலிருந்து பிரித்து ஜடமாகக் காண்கிறது. பாதை வேறானாலும் இருவருக்கும் முடிவு ஒன்றே. ஸ்ரீ அரவிந்தம் உலகிலும், பிரபஞ்சத்திலும், சிருஷ்டியிலும் உள்ள அனைத்தும் ஜீவனுள்ளவையே எனக் கொள்கிறது.

*********



book | by Dr. Radut