Skip to Content

09. நிலையான சமர்ப்பணம் – நெடு நாளைய யோகம்

நிலையான சமர்ப்பணம் – நெடு நாளைய யோகம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

30 வால்யூமில் 30,000 பக்கப்படிப்பை ஞானம் வளர்ந்த வழி வரிசைப்படுத்தி எழுதினால் அது பயன்படும். அதற்கு 40 அல்லது 50 ஆசிரியர்கள் ஐந்து ஆண்டுகள் முயன்று 32 கோடி செலவில் அந்த அட்டவணையைத் தயார் செய்தனர். அதன் பெயர் Propedia. உலக ஞானத்தைக் கலைக்களஞ்சியம் (facts) விஷயமாக சேகரம் செய்து கொடுத்தது. அதை (Propedia) அட்டவணை, விஷயத்தைக் கருத்தாக உயர்த்தி (raised facts to ideas) அட்டவணைப்படுத்தித் தந்தது. ஒரு idea மூலம் 100 அல்லது 1000 facts அறிய முடியும். அகலாது அணுகாது தீக்காய்வது ஒரு idea. அது அரசருக்கும், கணவனுக்கும், ஆசைக்கும், உலகிலுள்ள 1000 அனுபவங்கட்கும் பொருந்தும். Propedia என்பது idea-வுக்குரிய அட்டவணை. அதன் மூலம் idea-வைத் தெரிந்துகொண்டால் 50 ஆண்டு படிப்பு 5 ஆண்டில் முடியும். மதர் சர்வீஸ் சொஸைட்டி course என ஒன்றைக் கண்டு சென்ற ஆண்டு 6 course ஏற்படுத்தியுள்ளது. இக்கோர்ஸ் மேலும் idea-வை ஞானமாக சுருக்கி மாற்றவல்லது. அன்னை சூழல் தரும் முறை அடுத்த கட்டம். அதை consent மனம் சம்மதப்படுவது எனலாம். Consentt மூலம் 100 ஆண்டில் பெறுவதை ஓராண்டில் பெறலாம். Printing-ம் அகர வரிசையும் கலைக்களஞ்சியத்தை அச்சிட்டது. பூரண ஞானம் பெற்ற editors ஆசிரியர்கள் தங்கள் ஞானம் மூலம் விஷயத்தை (facts)) கருத்தாக (idea) மாற்றி Propedia அட்டவணை எழுதினர். உலகப் பேரறிஞர்கள் ஜெனீவாவில் கூடி சென்ற ஆண்டு course எழுதினர். இது World Academy-ம் Mother’s Service Society-ம் செய்த பெரும் காரியம். உலக மாணவர்கட்குப் பயன்படக்கூடியது. $20,000 செலவு செய்து ஐந்து ஆண்டில் படிப்பதை $200 செலவில் 5 மாதத்தில் M.A. பயிலும் உலக மாணவர்கட்குரியது. அதற்குரிய கருவி internet. அச்சு, அகரவரிசை முதற்கட்டம், பெரிய ஆசிரியர்கள் பெற்ற ஞானம், அட்டவணை அடுத்த கட்டம்; உலகப் பேராசிரியர்கள் internet மூலம் course எழுதியது அடுத்தது. அதற்கடுத்தது அன்னை முறை. அன்னை சூழலில் அதைப் பெற உதவுவது சமர்ப்பணம். சமர்ப்பணம் பலித்ததை ஏதோ ஒரு விஷயத்தில் காட்டினால், நிதானமாக அடுத்தடுத்த இடங்களில் சமர்ப்பணம் பலிக்க பொறுமையாகச் செயல்பட வேண்டும். நிலையான சமர்ப்பணம் நம்மை இந்தக் கட்டத்திற்குக் கொண்டு வந்து விடும். அதை மேலும் பல கோணங்களில் பலவகைகளில் ஏற்கனவே எழுதியவை, கூறியவற்றை மீண்டும் மீண்டும் கூறி விளக்க முயல்வது இக்கட்டுரை. இனி வரப்போவதன் சுருக்கம்.

  • இடையறாத நினைவு, இடையறாத தரிசனமாகும் அழைப்பைத் தரும் சமர்ப்பணம்.
  • பூரண சமர்ப்பணத்தை இலட்சியமாகக் கொள்ளுதல்.
  • 1 மணி பூரண சமர்ப்பணத்தைத் தினமும் தவறாது பயிலுதல்.
  • அன்னையின் சட்டங்களைத் தவறாது பின்பற்றுதல்.
  • பெரும் செல்வம் பெறுவது இயலும் என அறிவது. அதைப் பெறுவது.
  • எந்த நேரமும் உள்ளிருந்து குதூகலம் பொங்கி வருவது.
  • பழைய நினைவுகளை திருவுருமாற்றுதல்.
  • திருவுருமாற்றம் கண்ணெதிரே செயல்படுவதைக் காண்பது.
  • உலகை அறிதல், அன்னை கூறியபடி அறிதல்.
  • உள்ளத்தை அறிதல், உள்ளம் உலகை உட்கொண்டதை அறிதல்.
  1. இரவும் பகலும் இதயம் நிறைந்து, நம்மையறியாமல் அது பூரணம் பெற்று, ஆழ்மனம் முழு மனமாகி, நாம் அன்னையை அழைத்ததை நம்மைக் கடந்தது ஏற்று அதுவே சொல்லால் அழைத்து, அச்சொல்லும் அழிந்து, உள்ளே சென்றது அன்னையாக மாறி அன்னை எழுப்பும் குரல் “கேட்பது’’ சமர்ப்பணம் நிலையாவது.
  2. இலட்சியமாக இன்று கொண்டால் வரும் காலத்தில் இலட்சியம் பூரணம் பெறும். பூரண சமர்ப்பணம் அவதாரப் புருஷனுக்குரியது. இந்த யோகம் அவதாரப் புருஷனுக்கு உரியதையும் அனைவருக்கும் தீவிர முயற்சிக்குப் பதிலாக க்ஷணம் தரவல்லது. ஒரு நாள் முழுவதும் பயிலச் செய்யும் முடிவின் தீவிரம் ஒரு மணி பலிக்கும். அதைச் செய்வது அவசியம். பூரண சமர்ப்பணத்தின் புனிதம் எல்லா வகையிலும் உள்ளும் புறமும் தெரியும். பலனில் தெரிவது எளிது.
  3. ஒரு மணி நேரம் பூரண சமர்ப்பணம் செய்ய ஒரு நாள் செலவாகும் எனர்ஜி தேவை.
  4. மெதுவான பேச்சு, பெரும் நல்லெண்ணம் முக்கியம். எந்த சட்டமும் தவறக்கூடாது. சுமார் 10 முதல் 20 சட்டங்களை எழுதிப் பயில வேண்டும்.
  5. பெரும் செல்வம் நம்பிக்கைக்குள் வருவது சிரமம். நம் சுபாவத்திற்கேற்ப நம்பிக்கையை சரி செய்து, மனம் இதமாக ஏற்கும் வரை முயல்வது அவசியம்.
    மனம் நம்பியதை செயல்படுத்துவது மகானுக்குரியது. அதை இலட்சியமாகப் பல பாகமாகப் பகுத்து - காலம், அளவு, அந்தஸ்து, கர்மம், பிரமிப்பு அவற்றை ஒன்றொன்றாய் நம்பிக்கைக்குள் கொண்டு வர வேண்டும். இது பறக்க முடியும் என நம்புவது போலிருக்கும். முதலில் பறந்தவர் மனநிலை எழும்.
  6. குதூகலம் பொங்கி வர மனம் இதமாக, பிரியமாக மலரும் நிலையிலிருக்க வேண்டும்.
    Pride and Prejudice, Jane Austen என்ற மேதை எழுதியது.
    பெரும் அதிர்ஷ்டம் வந்து ஒரு வருஷ காலம் அவதிப்பட்டு முடிகிறது. கட்டுக்கதை என விமர்சகர்களால் வர்ணிக்கப்பட்டது.
    ஜேன் ஆஸ்டினின் மேதாவிலாசத்தை ஏற்றவர் பலர். மறுத்தவர் பலர். 200 ஆண்டிற்குப்பின் நூல் அச்சிலிருப்பதால் மறுத்தவர் மனம் மாறுகின்றனர். தேவன் எழுதிய கோமதியின் காதலன் கதையில் 4-ஆம் நாள் ஜமீன்தார் பையனுக்கு ஜமீன்தார் பெண்ணை மணம் முடிக்கிறது. தேவன் ஸ்ரீ அரவிந்தரை அறிந்த கு.பா.ராவின் நண்பர். இந்தியர் என்பதால் வாழ்வின் சட்டங்களை வளமாக அறிந்திருக்கிறார். ரங்கராஜன் இதமான இதயம் இனிமையாகக் கனவு காணும் மனநிலை. சத்திரத்தில் கோமதியைப் பார்த்தவன் வழக்கத்திற்கு மாறாக மீண்டும் அவளைப் பார்க்கிறான். அவள் போய் விடுகிறாள். பத்து நிமிஷம் கழித்துத் தற்செயலாய் அவளைக் குடிகாரனிடமிருந்து காப்பாற்றுகிறான். மீண்டும் மறைகிறாள். எதிர்பாராதவிதமாக அவளிருப்பிடம் போகிறான். ஜமீன்தார் பிள்ளையான அவன் அவளுக்காக டிரைவர் வேலையை ஏற்கிறான். வம்பு வளர்கிறது. சிக்கல் உருவாகிறது. மனம் சிதையாமல் செயல்படுகிறான். அவளும் சந்தேகப்படுகிறாள். அவதி மலிகிறது. முதலாளி திருடச் சொல்கிறார். தாசி வீட்டிற்கு அனுப்புகிறார். வாழ்க்கை திருட்டுப்பட்டம் கட்டுகிறது. யுவதியை ஏற்ற இதயம் கலங்கவில்லை. வாழ்வே வழி சமைக்கிறது. தகப்பனாரும், பெண்ணின் தகப்பனாரும் வருகின்றனர். கதை கற்பனை போல் முடிகிறது. என்னைப் பொறுத்தவரை தேவன் ஞ்ஞுணடிதண். ஜேன் ஆஸ்டின் genius. அவர் போக்குக்கு French Revolution உதவுகிறது. ஒரு வருஷம் தேவைப்படுகிறது. தேவன் நான்காம் நாள் கதையை முடிக்கும்வரை “செய்யாத சமர்ப்பணம்’’ பூர்த்தியாவதைக் காட்டுகிறது.
  7. பழைய நினைவுகள் சிம்ம சொப்பனம். “மறப்பது, மன்னிப்பது” தத்துவம். நடைமுறை, கடந்த காலம் கடுமையானது. திருவுருமாறினால் கடந்த காலம் மாறும். திருவுருமாறுவது உலகம் அறியாதது. “நாவினால் சுட்ட புண் உள் ஆறாது” என்பது அனுபவம். அவற்றைச் சமர்ப்பணத்தால் திருவுருமாற்ற முயன்று வெற்றி பெறுவது யோகப் பயிற்சி. செய்வது தவிர்க்க முடியாதது. மகனானாலும், தாயானாலும் சுட்டது ஆறாது. ஒருவர் செய்த தவற்றை மகன் செய்ததாகக் கருதி மருகும் தாயாருக்குச் செய்தது வேறொருவர் எனத் தெரியும்பொழுது மனம் மாறும். அதுவும் 98% மாறும். பட்ட அடி மறக்காது. நாம் செய்த தவற்றுக்குப் பிறர் மேல் கோபப்படுவது பெரும்பாலோர். அது தெரிவது அரிது. ஏற்பது சிரமம். ஏற்றபின் திருவுருமாறும். திருவுருமாறியபின் உள்ளம் விழாக் கொண்டாடும். அது குதூகலம். திருவுருமாற்றம் பிரபஞ்சத்தின் முழு அசைவு ஒருவரில் பிரதிபலிப்பது. அது ஆன்மிக அனுபவம். “ஆத்ம சமர்ப்பணம்” என்ற அத்தியாயத்தில் திருவுருமாற்றம் ஒவ்வோர் இழையாகச் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. கோபம் மாற மனம் ஒவ்வாது. பத்து ஆண்டிற்குமுன் நாம் ஒருவர் மீது பட்ட கோபத்தைத் திருவுருமாற்ற தீவிர முடிவு செய்து, தத்துவத்தை ஏற்றபின், மனம் “நான் திருவுருமாறிவிட்டேன், ஏன் அவர் வந்து மன்னிப்புக் கேட்கவில்லை?’’ எனக் கேட்கும். அதுவே மனித மனநிலை. உள்ளபடி நம் தவற்றை அறிந்து, புரிந்து, மனம் ஏற்றால் அதே நேரம் சம்பந்தப்பட்டவர் வந்து பத்து ஆண்டிற்குப்பின் தலைகீழாக மாறி நடப்பார். அதுவே நம் உண்மையைக் குறிக்கும்.

சுயநலம் பரநலமாகும் நேரம் பரவசப்படும் மனம் ஆத்ம விழிப்பு தரும். அது உயர்ந்த நேரம். ஒரு முறை அது நடந்தால் ஒவ்வொரு விஷயத்திலும் அது நடக்க முயல்வதே யோகம். யோக சமர்ப்பணம்.

உலகம் இறைவனால் இயக்கப்படுவதை நாம் காண்பதில்øல. வீட்டிலுள்ள சிறுவர்கட்கு பெரிய குடும்ப விஷயங்களோ, ஊர் அரசியலோ தெரியாதது போல் நமக்கு ஆண்டவன் செயல் தெரிவதில்லை. மனத்தைக் கடந்தால் முதல் நிலை அறிவு வரும். உணர்ச்சியைக் கடந்தால் அடுத்த நிலை தெரியும். உடல் உணர்ச்சியைக் கடந்தால் அனைத்தும் தெரியும் என்று அன்னை கூறுகிறார். “மனம், உயிரின் இரகஸ்யம் நான் அறிவேன். உடலின் இரகஸ்யம் தெரியவில்லை” என்றார். மனத்தின் இரகஸ்யம் தெரியும் பொழுது உலகில் புரியாததிருக்காது. உயிரின் (பிராணன், vital) இரகஸ்யம் தெரிந்தால் பிடிக்காதது இராது. உடலின் இரகஸ்யம் தெரிந்தால் பிரபஞ்சத்தில் முடியாதது இருக்காது. நாம் வாழ்வது மூன்றாம் பரிமாணம் (3rd dimension). காலம் நம்மைக் கடந்தது. நல்லது, கெட்டது; உயர்ந்தது தாழ்ந்தது இல்லையெனில் மனத்தை அவரால் கடக்க முடியும். காய்தல், உவத்தலின்றிய மனம் உயிரைக் கடக்கும். அவருக்குத் தோல்வியிருக்காது. உடலின் இரகஸ்யம் தெரிந்தவரால் உலகில் மரணத்தை வெல்ல முடியும். எதற்கும் சிறு உருவம் (miniature) உண்டு. ராஜா நாட்டை ஆள்கிறார். வீட்டில் நடப்பது ஒரு சிறு ராஜ்யம். இக்கருத்தின் சாரத்தை ஓர் அன்பர் ஆழ்ந்து முழுமையாக ஏற்றால் அவரைச் சார்ந்த அனைவருக்கும் ஆயுள் வளரும்.

அன்னை கூறுபவை உயர்ந்த கருத்துகள். உயர்ந்தவரிலும் உயர்ந்தவர்க்குரியவை. மனம் தேவையற்ற கருத்துகளைக் கைவிட வேண்டும் என்கிறார் (Decondition of Mind). அதை செய்வதற்குமுன் நாம் இன்று உள்ள நிலையென்ன என்று காண்போம். இக்கருத்துகளை தெளிவாகக் குறிக்கும் தமிழ்ச்சொல் தெரியவில்லை என்பதால் அது அடிக்கடி என் எழுத்தில் இனி வரும் என்பதால் இங்கு அவற்றை - Pre-occupation, Occupation - விளக்குகிறேன். இது புரிந்தால் இனி எழுதும் பொழுது இச்சொற்களை நான் பயன்படுத்த முடியும். நம் வாழ்க்கை ஒரு சில நம்பிக்கைகளாலானது. பாவ, புண்ணியம், கர்மம், கடமை, முறை, நெறி, இலட்சியம், ஒழுங்கு, நல்லது ஆகியவற்றைப் பற்றி நமக்கு ஒரு அபிப்பிராயம் உண்டு. நாம் அவற்றைப் பின்பற்றினாலும், பின்பற்றாவிட்டாலும், அவை நம்மை ஆட்கொள்கின்றன. நாம் அதை நினைப்பதில்லை. ஆனால் அவற்றிற்கு எதிராக நாம் நடப்பதில்லை. அவை நம் நம்பிக்கைகள். அதை Occupation மனத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளவை எனக் கூறுகிறோம். எலக்க்ஷன், திருமணம், கடன், வரவேண்டிய பணம், உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவை எல்லா நேரமும், எல்லா வகைகளிலும், மனத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு, அரித்துக் கொண்டிருக்கும்.

(தொடரும்)

*********



book | by Dr. Radut