Skip to Content

06 - சாவித்ரி

சாவித்ரி

P.80 One pointed to the immaculate Delight.

பவித்திரமான ஆனந்தத்தை சிக்கெனப் பற்று.

  • இறையார்வம் இனிமையாக உடலைத் தினிய இருந்தது.
  • தழலெனவெழும் தணியாத ஆர்வம்.
  • அரிதாகப் பெறும் அபூர்வமான விடுதலை.
  • எட்டாதவர் எண்ணிறந்தவர்.
  • புற உலகின் புனிதப் பிணைப்பில் தன்னையிழந்தவர்.
  • இரகஸ்யமான நெற்றிக்கண் இனிமையாகத் தேர்ந்தெடுத்தது.
  • ஒளிமயமான கரம் ஓட்டுவிக்கும் பாணி.
  • அளவிட்டறியாத அனந்தமான ஆத்மப் பரப்பின் அகன்ற வீச்சு.
  • எடுக்க எடுக்க வளரும் எண்ணிறந்த புனித சத்தியப் பாதை.
  • அளவில் அகப்படாத அனந்தனின் மனம்.
  • குறுகிய குரலை விட்டகன்றான்.
  • மனிதன் வாழும் காலமெனும் சந்தைக் கைவிட்டான்.
  • பெரிய அரண்மனையின் அமைதியில் அழுந்தி,
  • கண்ணும் மனமும் கண்டறியாத தாழ்வாரங்களில் நடை பயின்றான்.
  • உடலெனும் உருவமற்ற குருவின் குரலைப் பின்பற்றினான்.
  • வரையறையற்ற சூன்யத்தின் ஒருமைக் குரலான ஒப்பாரி,
  • பிரபஞ்சம் முணுமுணுக்கும் ஆழ்ந்த குரலின் அமைதி தழுவும்.
  • சிருஷ்டியில் உலகம் ஜனிக்கும்முன் எழுந்த சலனமற்ற மௌனம்.
  • ஆத்மநிர்வாணம் காலம் கடந்த கடவுள்.
  • சிருஷ்டிக்கப்பட்ட உலகின் சீரான நிர்ப்பந்தத்தைக் கடந்து,
  • எண்ணமும், அதன் நிழலென எழும் உருவமும் மறைந்தன.
  • ரூபத்தின் அச்சும், மனிதனின் சட்டமும் மாய்ந்தன.
  • சொற்கடந்த சொர்க்கத்தின் பரப்பு அவனைச் சொந்தமாகக் கொண்டாடியது.
  • இறைவனைத் தேடும் ஜடமான பூமியில் முழுமுதற் கருவி.
  • உருவம் பெறாத அடையாளச் சின்னங்களின் அவையில்,
  • பார்வையால் கட்டுப்பட்டு, ஜனிக்காத முகத்தால் பிணிக்கப்பட்டு,
  • அவன் ஒற்றையடியின் எதிரொலிக் குரல்.
  • தனிமையின் அரசவைக் கொலு.
  • அசைவற்ற காலத்தை அளவிறந்து நிரப்பும் பேரறியாத பேறு.
  • காலத்தைக் கடந்த இதயத்துடன் இணையும் அவன் ஆத்மா.
  • அனந்த மௌனத்தைத் தாங்கும் அவனி.

*******

  • அழியும் எண்ணம் அழியாத ஆத்மாவிடம் புகலிடம் பெற்றது.
  • ஆத்ம-திருஷ்டி அபரிமிதமாக எழுந்தது.

******** 

ஸ்ரீ அரவிந்த சுடர்

 

பகுத்தறிவிலிருந்து பரம்பொருளுக்கும், அதிலிருந்து ஆன்மீக மனம் பரம்பொருளை அறியும் நிலைக்கும் நம்மை பகவான் அழைத்துச் செல்கிறார்.

பகுத்தறிவு கண்ட பரம்பொருள்.



book | by Dr. Radut