Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

110. எதிரி தேடி வந்து உதவி கேட்பது.

  • மனிதன் மற்றவனை அந்தஸ்து மூலம் அறிகிறான்.
  • ஒருவனை உதவி கேட்டால் தன்னை உயர்ந்தவனாக நினைக்கிறான்.
  • அவன் செய்த உதவியைப் போல் மூன்று மடங்கு உதவி வலிய செய்தாலும் அது மனத்தில் படாது.
  • செய்யும் உதவியால் அந்தஸ்து உயராது.
  • அந்தஸ்தில்லாதவன் உதவி அலட்சியப்படுத்தப்படும்.
  • இல்லாத அந்தஸ்தை கிராக்கி ஓரளவு தரும்.
  • அந்தஸ்தில்லாமல், கிராக்கி செய்யாதவனை அதிகாரம் செய்து உதவி கேட்பார்கள்.
  • அன்பருக்கு இவைச் சமர்ப்பணத்தை உணர்த்தும்.
  • வலியப் போய் உதவி செய்வது தவறு.
  • மட்டமானவர்க்கு உதவி செய்தால் நம்மை மட்டமாக நினைப்பார்கள்.
  • ஒரு வேலையில் பல அம்சங்களிருக்கும்.
  • பலனுக்கு (fees) வேலை செய்தால் மரியாதை இருக்கும்.
  • பண்பற்ற ஊரில் தொடர்பில்லாதது நல்லது.
  • கொடுக்கும் உதவியின் தரம் தெரியாது. கேவலமாக நினைப்பார்கள்.
  • மக்களைப் புரியாதவர் எதைச் செய்வதும் தவறாக முடியும்.
  • செய்வது நல்ல காரியம் என நினைப்பது உலகம் தெரியாதது என்றாகும்.
  • அன்பர் பிறருக்கு உதவி எனச் செய்து அவமானப்படாமலிருக்க முடியாது.
  • அன்பரை அறிவதால் அவருக்கு நல்லது நடக்கும்.
  • நான் நல்லது செய்தேன் என அறிய விரும்புவது “நான்” செய்வது.
  • மனிதன் யார் என்பதைவிட, என்ன காரியம் என்பதைவிட, நான் யார் என்பது முக்கியம்.
  • இவற்றைக் கடந்து சமர்ப்பணம் செயல்படுவது அற்புதம்.
  • சமர்ப்பணம் அற்புதமானாலும் மனித சுபாவம் வெளிப்படும்.
  • வெளிப்படும் சுபாவம் அதற்குரிய பலனைப் பெறும்.
  • கொடுப்பதால் நல்ல பெயர் வாராது.
  • நல்ல உள்ளம் நல்ல பெயரைத் தராது.
  • காரியத்தை அறிந்து, மனிதனை அறிந்து, செய்வது பலன் தரும்.
  • நல்ல பெயரை நாடினால் கெட்ட பெயர் வரும்.
  • நல்ல பெயரை நாடாவிட்டால் எவரும் கண்டுகொள்ளமாட்டார்.
  • நல்ல பெயர் நல்லவனுக்கில்லை, நல்லதிலில்லை, உலகம் அறியும் அபத்தம் நல்ல பெயர் பெறுவதுண்டு.
  • எதிரி தேடி வந்தால் பூரண யோகம் பலிக்கும்.
  • எதிரி தேடி வரும் முறையையும் பொறுத்தது.
  • எதிரி திரும்புவது வாழ்வு மாறுவது.

**********

ஜீவிய மணி

எப்பொழுதும் சோகமானவர் பிறர் சோகமாக இருப்பார்கள் என நினைக்கிறார். எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பவர், பிறர் தம்மைப் போல் சந்தோஷமாக இருப்பார்கள் என நினைக்கிறார். நம்மைப் பொறுத்தவரை, உலகம் நம்மைப் போல் இருப்பதாக நினைக்கின்றோம்.

**********



book | by Dr. Radut