Skip to Content

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

Conversation

அண்ணன் - ஒரு ஜனாதிபதி எலக்க்ஷனில் அன்னை தேர்ந்தெடுத்த வரை அவரோடிருந்தவர் எவரும் ஏற்கவில்லை. அவர் ஓய்வு பெற்ற I.C.S ஆபீசர். தெலுங்கர், மத்திய மந்திரியாக இருந்தவர். சிந்தாமணி தேஷ்முக் எனப் பெயர். இவரே இந்தியாவின் பெருமையை நிலை நாட்டுவார் என்று அன்னை கூறியபின் அங்கிருந்த சாதகர் பலரும் இவருக்கு10 ஓட்டும் வாராது என்றனர்.

தம்பி - அன்னை தேர்ந்தெடுத்ததால் அவர் ஜெயிப்பார் என்ற நம்பிக்கை அந்தச் சாதகர்கட்கில்லை

அண்ணன் - அன்னைக்கு V.V.கிரியைப் பிடிக்காது. சஞ்சீவி ரெட்டியை நல்லவர் என்றார். ஆனால் கிரி தேர்ந்தெடுக்கப்பட்டார். ரெட்டி 10 வருஷம் கழித்து ஜனாதிபதியானார்.

தம்பி - கிரி ஆசீர்வாதம் கேட்டு, பிரசாதம் வந்தபின் வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டார். ரெட்டியிடம் பிரசாதம் போன பொழுது இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என்றார்.

அண்ணன் - அன்னைக்குப் பிடிக்காது என்றாலும், பிரசாதம் பெற்றவர் ஜெயித்தார். பிடிக்கும் எனினும் பிரசாதத்தை மறுத்தவர் தோற்றார். தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனினும் அன்னையை அறியாதவர் எதுவும் பெறவில்லை.

தம்பி - தேஷ்முக் எப்படி ஜெயிக்க முடியும்? அவருக்குக் கட்சி பலமில்லையே.

அண்ணன் - அந்தச் சாதகர்கள் போல், நம்மால் அன்னை சொல்லின் சத்தியத்தை ஏற்கமுடிவதில்லை. அன்னை சொல்லி விட்டார், அதனால் நடக்கும் என்ற நம்பிக்கை நமக்குண்டா?

தம்பி - அதுபோல் நம்பினால் நடக்குமா?

அண்ணன் - டிபார்ட்மெண்ட் சரித்திரத்தையே மாற்றி செக்ரட்டிரி, டைரக்டர் உத்தரவை ரத்து செய்தார் ஒருமுறை. அது அன்னை செயல். அப்படி நடந்ததே. நீ உன் வாழ்வில் அதைப் பார்த்ததில்லையா? 

தம்பி - பார்த்திருக்கிறேன். ஆனால் அடுத்தமுறை நம்பிக்கை வருவதில்லை. அன்னையோடு 50 வருஷமிருந்தவர்க்கே அந்த நம்பிக்கையில்லை என்றால் நமக்கு எப்படி வரும்?

அண்ணன் - சாதாரண பக்தர்கட்கு அந்த நம்பிக்கையுண்டு. பலிப்பதுண்டு. நெருங்கியவர்கட்கும் அந்த நம்பிக்கையிருப்பதில்லை.

தம்பி - ஏன்?

அண்ணன் - நம்பிக்கை என்றிருந்தால் அது குறையாது. பலனை மட்டும் ஏற்பது நம்பிக்கையாகாது. பலனைப் பார்ப்பவர்கட்கும் நம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை.

தம்பி - அன்னை சொல் அழியாத சத்தியம் என்று நம்பியவுடன் ஏராளமான தெம்பு வருகிறது என்பது உண்மைதான். அன்னை சொல் தவறுவதில்லை என்று தெரியும், என்றாலும் நம்பிக்கை குறைகிறது.

அண்ணன் - உனக்கு அன்னை ஒரு முறையும் தவறியதில்லை. உனக்கு நம்பிக்கை உண்டு. உண்டு என உனக்குப் புரியவில்லை. you are unconscious.

தம்பி - எப்படிச் சொல்கிறீர்கள்?

அண்ணன் - மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் உன் எதிரி சாட்சி உனக்கு சாதகமாகச் சொல்லவில்லையா? அது உன் நம்பிக்கையால் நடந்தது.

தம்பி - என் நம்பிக்கையால் நான் என்ன செய்யமுடியும்?

அண்ணன் - ஏன் அது? இதுவரை நடந்ததேயிருக்கிறதே. சட்டம் மாறிவந்து உன் காரியம் 4, 5 முறை நடந்திருக்கிறதே. நம்பிக்கையில்லாமல் அது நடந்திருக்காதே. அன்னையைச் சாதகர்கள் ஆட்சேபித்ததால், தேஷ்முக்கை அன்னை விட்டுவிட்டார்கள். ஆட்சேபித்திருக்காவிட்டால் தேஷ்முக்தான் ஜெயித்திருப்பார்.

தம்பி - அதுவும் நடக்கும் என்று நம்புவது நம்பிக்கை. அதுபோல் ஒன்றைச் செய்ய நான் விரும்புகிறேன்.

அண்ணன் - தானே விஷயம் எழும்பொழுது அதைச் செய்யவேண்டும். 

நாமே முனைந்து செய்தால் சரி வாராது. அப்படிச் செய்வதென்றால் அதைப்பற்றிப் பேசக் கூடாது.விஷயம் தானே வரவேண்டும். அதை வெளியில் சொல்லக்கூடாது. நம்பிக்கையாகச் செயல்படவேண்டும். தவறாது நடக்கும்.

தம்பி - ஆமாம். சோதனை செய்வது நம்பிக்கையில்லையே. யோசனை செய்தால் இதுபோல் எவ்வளவோ நடந்திருக்கிறது. நாம் கவனித்தவுடன் சூழல் மாறி சப்பென்றாகி விடுகிறது. பேசுவதென்றால் நாள் கழித்துப் பேசலாம் போலிருக்கிறது.

அண்ணன் - 3 மாதமாக ராவ் என்னை சந்திப்பதில்லை என முடிவு செய்திருக்கிறார். எனக்கு அவரிடம் முக்கிய வேலையிருக்கிறது. நானே போனால் நடக்காது. அவரே வந்தால் முடியும். அது தெரிந்து அவர் வரக்கூடாது என்றிருக்கிறார். இதை நான் வக்கீலிடம் சொன்னேன். அவர் ராவிடம் பேசி அனுப்புவதாகச் சொன்னார். அப்படிப் போனால் காரியம் முடியாது. "உங்களால் அன்னையிடம் சொல்ல முடியுமா?" என்றேன். ஒத்துக்கொண்டார். அன்று மாலை ராவ் வந்தார். விஷயம் முடிந்துவிட்டது. வரக்கூடாது என்ற ஒருவருடைய வைராக்கியத்தை அருள் உடைக்கிறது என்றால், அதனால் எதுவும் முடியும்.

தம்பி - எதுவும் முடியும் என்றால் நமக்கு 1 கோடி பெரிய தொகை. அதைக் கொண்டு வரமுடியுமா?

அண்ணன் - 5000ரூ சம்பளம் 50,000ரூ ஆனதைப் பார்த்தும் கேட்டால் என்ன சொல்வது?

தம்பி - நம்பாமல் கேட்கவில்லை. நம்பவில்லை என்றால் ஏன் கேட்கிறேன்? நம்புவதால் தான் கேட்கிறேன்.

அண்ணன் - இது நடந்தால் என்ன சொல்வார்கள்? உனக்கு அதிர்ஷ்டம் என்பார்கள். இதனால் உனக்கு மட்டும் நம்பிக்கை வரப்போகிறதா? பல காரியங்களைப் பார்த்தும் நம்பிக்கையில்லை என்கிறாயே. விஷயம் நீ மாறுவதிலிருக்கிறது. unconscious ஆக இருக்கிறாய். conscious ஆக மாறவேண்டும். நான் உனக்குச் சொல்கிறேன். நானும் உன்னைப்போல் தானிருக்கிறேன்.  

தம்பி - சரி, அதிருக்கட்டும். இந்தத் தொகை வருமா?

அண்ணன் - இதுவும் வரும், இதைவிடப் பெரியதும் வரும், உடனேயும் வரும். நம் மன நிலைக்கு வாராது. மனம் மாற வேண்டும். எப்படி மாற வேண்டும் என எனக்குத் தெரியும். சொல்லத் தெரியும். நான் செய்வதில்லை. செய்ய முடிவதில்லை.

தம்பி - காதால் கேட்கலாமே, சொல்லுங்கள்.

அண்ணன் - காதால் கேட்டால், அதனாலேயே பிறகு நடப்பது தடைபடும்.

தம்பி - அப்படி என்றால்?

அண்ணன் - தடைபடும் என்பது சட்டம். சட்டத்தை மீறி நடக்கும் என்பதும் சட்டம். எல்லாம் நம்மைப் பொருத்தது. சோதனை செய்யக் கூடாது. செய்வதானால், முதலில் எதிர்பார்க்கும் மனமிருக்கக் கூடாது. அதாவது மனம் நிதானமடைய வேண்டும்.

தம்பி - பக்குவம் வேண்டும் என்று சொல்லுங்கள். பக்குவம் வந்தால் பிறகு பணம் எதற்கு?

அண்ணன் - பக்குவம் வாராமல் பணம் வாராது. எதுவும் வாராது. பக்குவம் வந்தால் பணமும் வரும், எல்லாம் வரும். இந்த விதிக்கு மாற்றில்லை. எப்படிப் பக்குவம் வரும் என்று வேண்டுமானால் சொல்கிறேன். பிரார்த்தனை ஒரு சமயம் பலிக்கும். பக்குவம் நிரந்தரமாகப் பலிக்கும். ஏராளமாக எதுவும் வரும்.

தொடரும்

******* 

மனம்  எதை  நம்புகிறது? 

மனமே மனிதன். இந்தியாவில் 1971 முதல் வசிக்கும் அமெரிக்கப் பெண்மணிக்கு விசா (visa) வேண்டும். பெண்ணின் மனம் சட்டத்தையும், documentஐயும், அரசியல் சிபார்சையும் நம்புகிறது. அன்னையை நம்ப முடியவில்லை.

  • 1970இல் புதுவை வந்தவருக்கு ஆசிரமம் visaக்கான பொறுப்பை ஏற்றது.
  • 1977இல் local politics ஸ்தாபனப் போட்டி விஷயமாக இவர் கணவன் visaவை ஆசிரமம் ரத்து செய்தது, மனைவிக்கும் விசா ரத்தானது.
  • 1980 வரை கணவன் visaவை டெல்லி சர்க்கார் ஸ்தாபனப் போட்டியை மீறி visaவை அளித்தது. மனைவி கணவன் visaவால் இந்தியாவிலிருந்தார்.
  • இந்நிலைமை '86 வரை நீடித்தது.
  • 1986இல் மனைவி அமெரிக்கா திரும்பினார்.1990இல் மீண்டும் வந்தார்.

அன்னைச் சூழலில் வாழ்ந்த பின் அமெரிக்காவில் மூச்சு முட்டுவதைக் கண்டு புதுவை வர மனம் ஏங்கியதால் அவர் ஆத்மா புதுவைக்கு அவரை அழைத்து வந்தது. கல்லூரியில் சேர்ந்து B.A., M.A.,M.Phil.,பெற்றார். 9 வருஷம் படிப்புக்காக visa நீடிக்கப்பட்டது. இதில் அரசியல் சிபார்சும் கலப்பு. பெண் மனம் சட்டத்தையும், சிபார்சையும் நம்புகிறது. ஆத்மா புதுவையை விழைகிறது. அமெரிக்க வாழ்வு ஆத்மாவுக்குப் புழுக்கமாக இருக்கிறது. Ph.D. சேர்ந்தார். இதுவரை கிடைத்ததைப்போல் இதுவும் கிடைக்குமென நினைத்தார். 1 1/2 வருஷம் பாண்டி, சென்னை, டெல்லி என இவரது file போவதும், உண்டு எனவும், இல்லை எனவும் மாறிமாறி வருகிறது. மனம் சட்டத்தையும், சிபார்சையும் மட்டும் நம்புகிறது. முடிவில் visa இல்லை என்றாகிவிட்டது. தாய்நாடு திரும்பினார். புது visa கேட்டார். அதற்குரிய documents ஐயும், வேறு சிபார்சையும் எடுத்துப் போனார். மனம் அன்னையை நம்பவில்லை. இவர் உதவியால் visa பெற்ற நம்பிக்கையுள்ள அன்பர் இவருக்காகப் பிரார்த்தனை செய்ய முன்வந்தார். இவர் மனம் அதையும் நம்பவில்லை. ஆனால் மனத்தின் அவநம்பிக்கையால் அதை எதிர்ப்பதில்லை என முடிவு செய்தார். அமெரிக்காவில் 3 மாதத்தில் visa கிடைக்கும் என நம்பினார். visa ஆபீசுக்குப் போனார். Documentsஐ எடுத்தார். ஆபீஸ் documentsஐப் பெற மறுத்தது. வேண்டாம் என்றனர். 2 மணி கழித்து வரச் சொன்னார்கள். கையில் visaவைக் கொடுத்தனர்!!!

நம்பிக்கையில்லாதவரும், அவநம்பிக்கையை வலியுறுத்தாவிட்டால் அருள் ஏதாவது ஒருவகையாக நிச்சயமாகச் செயல்படும். 

********

ஜுரம்

நான்கு வருஷமாகத் தேங்கிய சரக்கு இனி விலை போகாது என முடிவு செய்தபின், முதலாளியிடம் "உங்கள் பாக்டரியை 2 1/2 வருஷமாகப் பெருக்கவில்லை. முதற்காரியமாக அதைச் சுத்தம் செய்ய வேண்டும். சரக்குக்கு "கவனம்'' செலுத்த வேண்டும் ''என்று கூறியதை அவர் ஏற்று ஓரளவு அதன்படிச் செயல்பட்டார். 40 லட்ச சரக்கில் 4ஆம் நாள் 1.65, 1.70, 5.00, 8.0 லட்சமென 9 லட்சத்திற்கு மேல் சரக்கு விற்றபொழுது, முதலாளியோ மற்றவர்களோ, இது எப்படி நடந்தது எனக் கேட்கவில்லை. சௌகரியமாக நினைக்கின்றனர். நம்மை வேரோடு அழிக்கப் பிரியப்படுபவரை உலகமே இவரை ஒதுக்கியுள்ளது என்பதையும் மீறி நாம் விரும்பி சேர்த்துக் கொண்டாடும் பொழுது, நம் வீடு அழிய வேண்டும் என தினமும் இவர் செய்த பிரார்த்தனை பலித்து வீட்டில் கோரம் நடந்தபொழுது, ஏன் அன்னை நம்மைக் காப்பாற்றவில்லை என விஷத்தை விரும்பியவரே கேட்கிறார்கள். தவறாதும் கேட்கிறார்கள். தம் செயல் புரிவதில்லை.

Liver ஈரல் கெட்டுப்போனால் மீண்டும் செயல்படாது என்பது தெரிந்த விஷயம். எல்லாச் சட்டங்களையும் மீறிச் செயல்பட்டது. B.P. 190 ஆனால் படுக்கையில் உட்காரவும் முடியாது என்பதை மறுத்து ஒரு பர்லாங் நடந்து ஒருவர் ஆஸ்பத்திரிக்குப் போனார். Sugar 460 ஆனால் ஆம்புலன்ஸ் வேண்டும். அன்பர் மாறான நிலையைக் கண்டார்.

Brain tumorஆப்பரேஷன் வெளிநாட்டில் வயதானவர்க்கு நடந்தது. முடிந்தபின் ஜுரம் வந்தது. அது வரக்கூடாது. வந்தால் டாக்டரோ, மருந்தோ செய்வதற்கு ஒன்றுமில்லை. பெண் அன்னையை அறிவாள். பக்தரல்லாத பிறர் அறிவுரையால் பெண்ணும், அவர் கணவனும் அடுத்த அறையில் உட்கார்ந்து அன்னையை அழைத்தனர். அழைப்பு முடிந்து வந்தபொழுது ஜுரமில்லை என நர்ஸ் கூறினார். பெண் சந்தோஷப்பட்டாள். டாக்டர் நர்ஸ் கூறியதை நம்பவில்லை. தாமே வந்து டெம்பரேச்சர் பார்த்தார். ஜுரமில்லை. அவரால் நம்பமுடியவில்லை.

டாக்டருக்கு புரியாமலிருக்கலாம். பேஷண்ட் பக்தராக இல்லாமலிருக்கலாம். அழைப்பு தவறாது. நடக்காது என்பது நடக்கும் என்பது அன்பர்கள் அனுபவம்.

மனதில் கெட்ட எண்ணமிருந்தாலும், நம் மீது கெட்ட எண்ணமுள்ளவர் மீது நல்லெண்ணமிருந்தாலும் தவறாது என்ற அருள் தவறும். நம் நல்லெண்ணம் எதிரியின் கெட்ட எண்ணத்தை வலுப்படுத்தி நடக்கக்கூடாத ஆபத்தை விளைவிக்கும். உடனுள்ளவர் துரோகம் செய்தால், தொடர்ந்த அவர் தொடர்பு ஆபத்தை வரவழைக்கும்.

*******

Comments

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்
 

Para  1   -   Line 5   -  இவருக்கு    -    இவருக்கு 10  ஓட்டும் வாராது என்றனர் 

Para 22   -  Line 2    -  வெளி யில் -   வெளியில் 


 
மனம்  எதை  நம்புகிறது?
 
Para  1  -    Line 2   -  க்ர்ஸ்ரீன்ம்ங்ய்ற்ஐயும்  -   documentஐயும்
Para  1  -    Line 3   -  டியவில்லை               -   முடியவில்லை
Para  8  -    Line 1   -   எனவும்                      -   1 1/2 வருஷம் பாண்டி,சென்னை,டெல்லி  என இவரது file  போவதும், உண்டு எனவும் 

 

motnir



book | by Dr. Radut