Skip to Content

ஸ்ரீ அரவிந்தம் லைப் டிவைன்

கர்மயோகி

VIII. The Methods of Vedantic Knowledge

Page No: 69

Para No: 15

Human reason is demanding.

It asks for its own method of satisfaction.

In later days speculation began.

They were rationalistic.

Indian philosophers respected the past.

The past brought a heritage.

Therefore they took a double attitude.

They sought the Truth thus.

They recognised the Sruthi.

It is the earliest result of Intuition.

They called it inspired Revelation.

It was an authority.

It was superior to Reason.

They started from Reason.

They tested its results.

Verified with the supreme authority.

Accepted those sanctioned by it.

Metaphysics has a besetting sin.

8. வேதாந்த ஞானம்

 

மனிதன் தன் பகுத்தறிவை வலியுறுத்துகிறான்.

தன் போக்கில் தன்னைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பது

அவன் கொள்கை.

பிற்காலத்தில் வாதம் எழுந்தது.

அவை பகுத்தறிவுக்குரியவை.

இந்திய ஞானிகள் கடந்ததைப் போற்றினர்.

கடந்தது உயர்ந்தது.

எனவே ஞானிகள் இரு வழிகளை நாடினர்.

சத்தியத்தை நாட அவர்கள் பின்பற்றிய உபாயமிது.

சுருதியை அவர் ஏற்றனர்.

நேரடி ஞானம் முதலில் உற்பத்தி செய்தது அதுவே.

அதை ஞானோதயம் என்றனர்.

அது முடிவான சாஸ்த்திரம்.

அறிவைவிட அது உயர்ந்தது.

வேதாந்த ரிஷிகள் அறிவை ஏற்றனர்.

அதன் முடிவைச் சோதித்தனர்.

முடிவான சாஸ்திரங்களுடன் அதை ஒப்பிட்டனர்.

அது ஏற்றதை அவர் ஏற்றனர்.

தத்துவம் குதர்க்கமானது.

It is a battle in the clouds.

It deals with words.

They treat words as imperative facts.

Words are really symbols.

We must scrutinise the words.

We must restore the original sense.

Thus, they avoided the pitfalls.

They did speculate.

They chose the highest experience.

It was the profoundest experience too.

That kept them at the centre.

They sought the consent of Intuition.

They also sought it from Reason.

To them, both were great authorities.

Reason subordinated sometimes.

It dominated at other times.

The natural trend was to assert itself.

The supremacy of Reason triumphed.

So, conflicts arose.

Several schools arose.

They sought support in the Veda.

Its texts were used against the others.

Intuitive Knowledge is the highest.

It sees things in the whole, in the large.

To it, details are only sides of the whole

அது விதண்டாவாதம்.

பதப்பிரயோகம் அதற்கு முக்கியம்.

சொற்களை அவர்கள் புனிதமாகக் கருதுகின்றனர்.

சொல் என்பது ஓர் அறிகுறி.

நாம் சொற்களை ஆராயவேண்டும்.

மூலத்தின் புனிதத்தைக் காண வேண்டும்.

இவ்வழியாக அவர்கள் தவற்றை விலக்கினர்.

அவர்கட்கும் யோசனை எழுந்தது.

முடிவான அனுபவத்தை நாடினர்.

அது உச்சகட்ட அனுபவம்.

அதை மையமாக்கினர்.

அதற்கு ஞானத்தின் உத்தரவை நாடினர்.

அறிவு சொல்வதையும் கேட்டனர்.

இரண்டும் முக்கியமே.

சில சமயங்களில் அறிவு தோற்றது.

மற்ற நேரம் அறிவு வென்றது.

வெற்றியே வென்றது.

முடிவாக அறிவு தன் வெற்றியை நிலைநாட்டியது.

எனவே, பிணக்கெழுந்தது.

பல கட்சிகள் பிறந்தன.

வேதத்தை ஆதரவுக்காக நாடினார்.

வேத சூக்தங்களை ஒருவருக்கெதிராக அடுத்தவர் பிரயோகம் செய்தனர்.

ஞானம் முடிவானது.

அது முழுமையானது.

விவரங்கள் அதற்கு இரண்டாம்பட்சம்.

It tends to synthesize.

It seeks unity of knowledge.

Reason proceeds by analysis.

It divides and assembles its facts.

It tries to form a whole.

The assemblage is an assortment.

There are opposites.

Anomalies abound.

Logical incompatibilities come in.

Reason affirms some.

It negates the others.

It tries for a system.

It aims at a flawless, logical one.

The original unity of knowledge is broken up.

It was intuitional knowledge.

The logicians had an ingenuity.

They discovered devices of value.

Methods of interpretation arose.

Standards of varying value were there.

The logicians denied the inconvenient ones.

They acquired a certain freedom.

Metaphysics came into its own.

Page No : 70

Para No : 16

The main conceptions of Vedanta remained.

They were parts of the new systems.

முழுமையையே எப்பொழுதும் நாடுவது அதன் வழி.

ஞானத்தின் முழுமையை நாடிப் போனார்கள்.

அறிவு ஆராய்கிறது.

அது பிரித்தும், சேர்த்தும் பார்க்கிறது.

ஒரு முழுமையை அதுவும் நாடுகிறது.

அதன் முடிவு அர்த்தமற்றது.

அதனுள் பொருத்தமில்லாதவை, எதிரானவை, தர்க்கத்திற்கு ஒவ்வாதவை கலந்துள்ளன.

அறிவு சிலவற்றை ஏற்கிறது.

மற்றவற்றை எதிர்க்கிறது.

ஓர் ஒழுங்கை ஏற்படுத்த முயல்கிறது.

தவறற்ற, தர்க்கரீதியான முடிவை நாடுகிறது.

என்றாலும், ஆரம்பமுழுமை சிதைந்துவிட்டது.

அது ஞானம்.

தர்க்கவாதி கெட்டிக்காரன்.

வலுவான மார்க்கங்களை அவன் கண்டான்.

முறைகள் எழுந்தன.

பல நிர்ணயங்கள் வந்தன.

சரிவாராததை தர்க்கம் ஏற்கவில்லை.

எனினும், தங்களுக்கு ஒரு சுதந்திரம் ஏற்படுத்திக் கொண்டனர்.

தர்க்கம் முடிவாக வென்றது.

வேதாந்தக் கரு உயிருடனிருந்தது.

 

அவை புதிய தத்துவங்களால் ஓரளவு ஏற்கப்பட்டன.

புதியவர் வந்தனர்.

Fresh efforts always arose.

They tried to combine these parts.

They were true to the original catholicity.

It was of the intuitional thought.

Thoughts were variously presented.

Purusha, Atman, Sat Brahman, the Pure Existent were the

original conceptions.

They were fundamental.

They all survived in some form.

Their reality was inexpressible.

It was its old burden.

The new presentation was a rationalised one.

Becoming is the world.

It is a movement.

Existent is an absolute unity.

What is their relationship?

Is ego generated by the becoming?

Has ego created the world?

How can it return to the Self?

Self is Divinity or Reality.

Vedanta declares these truths.

Indian thought was occupied by these questions.

Sometimes there were speculations.

At other times these were practical.

 

The end.

இப்பகுதிகளை ஒன்று சேர்க்க முயன்றனர்.

ஆரம்பப் புனிதத்தைத் தாங்கி வருபவை அவை.

அவை ஞானத்திற்குரியவை.

தத்துவங்கள் பல ரூபங்களில் பவனி வந்தன.

புருஷன், ஆத்மா, சத் பிரம்மம் ஆகியவை ஆரம்பத்திற்கு உரியவை.

அவை அடிப்படையானவை.

ஏதோ ஒரு வகையில் அவை நிலை பெற்றிருந்தன.

சத்தியம் சொல்லுக்குப் புலப்படவில்லை.

அதுவே பழைய பல்லவி.

புதிய தத்துவங்கள் அறிவுக்குரியவை.

உலகம் பிரகிருதி எனும் இயற்கை.

அது சலனம்.

சத் முழுமையானது.

இவற்றிடையேயுள்ள தொடர்பெது?

அகந்தையை உலகம் சிருஷ்டித்ததா?

அகந்தை பிரகிருதியை சிருஷ்டித்ததா?

எப்படி அகந்தை சத் புருஷனை அடைய முடியும்?

சத், சத்தியம், தெய்வம் என்பவை அடிப்படை.

வேதாந்தம் இவற்றை உலகுக்களித்தது.

இக்கேள்விகள் நம் முன் இருந்தன.

சில சமயங்களில் அவை வாதங்களாக இருந்தன.

மற்ற நேரங்களில் இவை உண்மையாக இருந்தன.

 

முற்றும்.



book | by Dr. Radut