Skip to Content

சிறு குறிப்புகள்

நான் புடவை அணியக்கூடாதா?

- ஸ்ரீ அரவிந்தர்

சூட்சும உலகில் அன்னை ஸ்ரீ அரவிந்தரை 1959லிருந்து சந்திக்க ஆரம்பித்தார்.

  • பல அம்சங்களில் சூட்சும உலகம் நம் உலகம் போலிருக்கும். 
  • இது ஆவி உலகமன்று. ஆவி உலகத்திற்கு சூட்சுமம் (sublety) உண்டு என்பதால் ஆவியுலகிலுள்ளவர்களை இங்குக் காணலாம். நம் பாஷையில் நாம் ஆவியுலகம் என்பது ஆத்மாவும், ஆவியும் கலந்துள்ள உலகம்.
  • உயிரோடிருப்பவர்களையும் பொதுவாக இரவில் அன்னை இவ்வுலகில் சந்திப்பார்
  • இந்த சூட்சுமம் மனம், உடல், உணர்வுக்குண்டு.
  • பல அம்சங்களில் இவ்வுலகம் நமக்குப் புரியாது.
  • கனவில் சூட்சும லோகம் எளிதில் தெரியும்.
  • தியானத்திலும் தெரியும்.
  • சூட்சுமமானவர்க்குக் கண் விழித்திருக்கும்பொழுதே தெரியும்.

இவ்வுலகில் அன்னை ஸ்ரீ அரவிந்தரை ஒரு நாள் சந்தித்த பொழுது அவர் புடவை உடுத்தியிருந்தார். அன்னைக்கு சிரிப்பு வந்தது. "ஏன் நான் புடவை உடுத்தக் கூடாதா?' என்று கேட்டார். ஊதா நிற ஜார்ஜெட் புடவை அது. அது அன்னையின் புடவை. தங்க ஜரிகை போட்டது. ஸ்ரீ அரவிந்தருடைய முடியை அன்னை ஜடையாகப் பின்னுவது வழக்கம். அதுபோல் அப்பொழுது முடியைப் பின்னும்படிச் சொன்னார். அப்பொழுது அன்னை ஸ்ரீ அரவிந்தருடைய கழுத்துப்பாகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டார். பிரகாசம் என்பதும் சுயம்பிரகாசம் என்பவையும் வேறு வேறு, மேலே பளபளப்பாக இருப்பது பிரகாசம். உள்ளிருந்து ஒளி எழுவது சுயம்பிரகாசம். ஸ்ரீ அரவிந்தருடைய முடி அவருடலிருக்கும்பொழுது முழு வெண்மையாக இருந்ததில்லை. ஒருவகையான மஞ்சள் பளபளப்பிருக்கும், இப்பொழுது பொன்னிறமாக இருந்தது.

"அவருடைய முடி இங்குள்ளவருடைய முடியைப் போலில்லை. என் முடியைப் போலிருந்தது'' என்கிறார் அன்னை.

இக்காட்சியை நிஜமாக மாற இடந்தருவதில்லை. இந்நிலையில் காண்பவை எல்லாம் அற்புதமாக இருப்பதால், நாம் அனைத்தையும் ஏற்கிறோம். மாறவேண்டும் என்ற மனநிலையுள்ள இடமன்று அது. சிருஷ்டிக்குரிய சக்தியைக் கடந்த நிலையில் தெரியும் காட்சியிது. நம் நிலையில் நாம் மாறப் பிரியப்படுகிறோம். அது அவசியம். இது மேல் நிலை, அங்கு எல்லாம் பொன் போன்றவை. மாறவேண்டியது நம் பார்வை. சூழ்நிலையன்று என்கிறார் அன்னை.

ஸ்ரீ அரவிந்த சுடர்

எப்படிப் பார்த்தாலும் முதற்படி ஆசையை அழிப்பதாகும். ஆசையை முழுவதும் அழிக்க முடியவில்லை என்றால் ஒரு செயலில் ஆசையை அழித்து, தெளிவுபெற்று சைத்தியப் புருஷனை அச்செயலில் வெளிப்படுத்தவேண்டும். ஆசையழிந்த பின்னரே அடுத்தது.



book | by Dr. Radut