Skip to Content

அன்பர் உரை

பாஸிட்டிவ் மனோபாவம் - வாழ்க்கையை என்றும் பசுமையாகவும், ஏறுமுகமாகவும் வைத்திருக்கும் நெகட்டிவ் மனோபாவம் - வறட்சியாகவும், இறங்குமுகமாகவும் வைத்திருக்கும்

(சென்னை ரிஷி இல்லத் தியான மையத்தில் 28.11.99 அன்று திருமதி உஷா ராம்தாஸ் நிகழ்த்திய உரை)

ராஜா, பிச்சைக்காரன் என இருபாத்திரம் உண்டானால், நாடகத்தைப் பொருத்தவரை அவை நடிப்புதான்.இருந்தாலும் எவரும் ராஜாவாக நடிக்கப் பிரியப்படுவார்கள், பிச்சைக்காரனாக இருக்கப் பிரியப்பட மாட்டார்கள்.

பாஸிட்டிவ், நெகட்டிவ் என்பவை இரு பகுதிகளே.இரண்டும் அவசியம் என்றாலும் நம் மனம் பாஸிட்டிவாக இருப்பதையே விரும்புகிறது.பாஸிட்டிவ் வாழ்வைப் பசுமையாகவும், நெகட்டிவ் வறட்சியாகவும் வைத்திருப்பது உண்மை.நம்மைப் பொருத்தவரை நாம் பாஸிட்டிவாக இருக்கப் பிரியப்பட்டால், அதன் மூலம் அன்னை எப்படிச் செயல்படுகிறார் என்று காண்போம்.

ராஜாஜி வேப்பிலை மரத்தைப்பற்றி ஒரு கதை எழுதினார். கருவேப்பிலையை அனைவரும் நாடுகின்றனர், தன்னை அனைவரும் ஒதுக்குகின்றனர் என வேப்பிலை மரம் குறைபட்டு ஆண்டவனை வரம் கேட்டபொழுது, வரம் கிடைத்தது.அதிலிருந்து அனைவரும் வேப்பிலை மரத்தை நாடினர்.அதுவரை துளிர்த்து, பூத்து, காய்த்து, பழுத்து குலுங்கிய மரம் வருபவர்கள் தன் இலையைக் கிள்ளுவதைக் கண்டது.இலையாகவே அத்தனைபேரும் எடுத்துப் போவதால் மரம் மொட்டையாகிவிட்டது.காய்க்க, பழுக்க முடியவில்லை.வரம் பலித்த பின்தான் வேப்பிலை மரத்திற்கு தன் முந்தைய செழிப்பே தேவலை எனத் தோன்றியது.

 மனித மனத்தின் நிலைகளை தீயசக்தி, தீமை, நெகட்டிவ், பாஸிட்டிவ் எனப் பிரிக்கலாம்.மோசமான மனிதன் நெகட்டிவாக இருக்கிறான்.அதைவிட மோசம் எனில் அவனிடம் தீமை evil இருக்கும்.கடைசி கட்டம் தீய சக்தியாக இருப்பது.அன்னையிடம் வர பாஸிட்டிவாகவும், நன்மையாகவும், தெய்வசக்தி பொருந்தியுமிருப்பது சிறந்தது.

ஆபீசில் நண்பரைப் பார்க்கிறோம்.பேசுகிறோம்.அவரைப்பற்றி மேலதிகாரி பாராட்டிப் பேசினார் என்பதை அவரிடம் முதலில் நாம் கூறப் பிரியப்படுகிறோம்.மேல் அதிகாரி அவரைப் பற்றிக் குறையாகப் பேசியிருந்தால் நாம் அதை அவரிடம் கூறப் பிரியப்படுவதில்லை. நல்ல செய்தியை எடுத்துவரவே நாம் பிரியப்படுகிறோம். கொலைக்குற்றம் செய்தவனை விசாரிக்கிறார்கள்.குற்றம் ருசுவாகிறது.ஜட்ஜ் அவனுக்குத் தூக்குத் தண்டனை தரவேண்டும் எனில் "எனக்கேன் இந்த நிலைமை'' என்றே ஜட்ஜ் நினைக்கிறார். கொலைத் தண்டனையை தம் கையால் எழுத ஜட்ஜ் பிரியப்படுவதில்லை.தம் கையால் நல்லது செய்யவே எவரும் பிரியப்படுவார்கள்.அவர்கள் மனம் நல்லதாக இருக்கும்.அன்னை அவர்கள் மூலம் அருளாக செயல்படுவார்கள்.அப்படிப்பட்டவர் வாழ்வு தொடர்ந்து ஏறுமுகமாகவும், பசுமையாகவுமிருக்கும்.

ஏன் ஒருவர் பாஸிட்டிவாகவும், அடுத்தவர் நெகட்டிவாகவுமிருக் கிறார்.நெகட்டிவானவர் அதற்குமுன் நிலையான தீமையைக் கடந்தவர்.பாஸிட்டிவானவர் நெகட்டிவ் நிலையைக் கடந்தவர்.

நெகட்டிவான குணங்களில் சில:

  • 1.காலையில் எழுந்தவுடன் இன்று ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு வீட்டிலிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
  • 2.காலேஜுக்குப் போனவுடன் ஏமாந்த பையன் வருகிறான்.உடனே அவனை மட்டமாகப் பேசுகிறோம்.
  • 3.புதியதாக T.V. வந்திருக்கிறது.பிரித்துப் பார்க்க ஆசை.பிரித்தால் கெட்டுவிடலாம் என்றாலும் பிரித்துவிடுகிறோம்.ரிப்பேராகிறது.
  • 4.எதிர்வீட்டுக்காரர் வருகிறார்.மாதக்கடைசி என்பதால் கடன் கேட்பார்.என்ன சொல்லிதவிர்க்கலாம் என மனம் நினைக்கின்றது.
  • 5.வழியில் பார்த்த நண்பர் ஜவுளிக்கடை ஆரம்பித்ததாகச் சொன்னவுடன், கடன் கேட்கிறோம்.
  • 6.மேலதிகாரி அடுத்த சீட்காரர் பணம் திருடுவதாகக் கூறியதை அவரிடம் சொல்ல மனம் துடிக்கிறது.
  • 7.ஹைதராபாத் நண்பர் வந்திருக்கிறார்.அவரிடம் தெலுங்கர்கள் மக்கு என்று கூறினால் மனம் புண்படுவார்.அதனால் புண்படுத்தி வேடிக்கைப் பார்க்கிறோம்.
  • 8.எதிரி வேறு விஷயத்தில் தண்டனை பெற்றவுடன் கைதட்டிச் சிரிப்பது.
  • 9.மேடையில் பேசுபவரை கூட்டம் ஆரவாரமாகப் பாராட்டுகிறது.குறுக்குக்கேள்வி கேட்டால் அவர் திணறுவார்.கேட்கிறோம்.
  • 10.நிமிர்ந்து பல்பைப் பார்த்தால், கம்பால் தட்டி உடைக்க மனம் நினைப்பது.

அவற்றிற்கெதிரான பாஸிட்டிவான செயல்கள், எண்ணங்கள்.

  1. ½ மணி முன்னால் ஆபீசுக்குப் போனால் அதிக வேலை செய்யலாம் எனப் போவது.
  2. கல்லூரியில் எல்லோரும் கேலி செய்யும் மாணவனைக் கண்டபொழுது, அவனிடம் இதமாக, ஆறுதலாகப் பேசுவது.
  3. பக்கத்து வீட்டில் T.V. வேலை செய்யவில்லை என்றால், நாம் போய் ரிப்பேர் செய்து தருவது.
  4. எதிர்வீட்டுக்காரருக்கு மாதக்கடைசி எனத் தெரியும்.அவர் கேட்பதற்கு முன் பணஉதவி அளிக்க முன்வருவது.
  5. நண்பன் புதியதாக ஜவுளிக்கடை ஆரம்பித்திருப்பதால் நமக்குத் தெரிந்த பாங்க் மேனேஜரிடம் அவரை அறிமுகப்படுத்தி பணம் பெற்றுத் தர நினைப்பது.
  6. மேலதிகாரி அடுத்த சீட்காரர் பணம் திருடுவதாகக் கூறியபொழுது உண்மையை அவரிடம் சொல்லி தவறான எண்ணத்தை அழிப்பது.
  7. ஹைதராபாத் நண்பரிடம் தெலுங்கை, பாரதி சுந்தரத்தெலுங்கென்றார் எனக்கூறிச் சந்தோஷப்படுத்துவது. 
  1. எதிரிக்குப் பரிசு கிடைத்தபொழுது போய்ப்பார்த்துப் பாராட்டுவது.
  2. மேடையில் பேசுபவரை கூட்டம் கேலி செய்யும்பொழுது கூட்டத்தைக் கட்டுப்படுத்தி பேசுபவரை ஊக்குவிப்பது.
  3. நிமிர்ந்து பல்பைப் பார்த்தவுடன் அதன் மீதுள்ள தூசைத் துடைப்பது.

கட்சிக்காரர் வக்கீலிடம் வந்து பத்திரம் எழுதும்படிக் கேட்டார். நாட்டில் ரூ.50/- பீஸ் வழங்கும் பொழுது வக்கீல் 800/-ரூபாய் கேட்டார்.400ரூபாய்க்கு ஒத்துக்கொண்டார்.பத்திரம் எழுத யாரும் வக்கீலிடம் வருவதில்லை.பெட்டிஷன் ரைட்டரிடம் போவார்கள்.அவர் 20ரூபாய் வாங்கிக்கொண்டு எழுதிக் கொடுக்கும் காலம்.பெரிய சொத்து என்பதாலும், பத்திரத்தை இங்கிலீஷில் எழுதவேண்டும், பின்னால் தப்பு வரக்கூடாது என்பதால், நிலம் வாங்குபவர் பெரிய வக்கீலை அணுகி பத்திரம் எழுதச் சொன்னார்.இதுவே அந்த வக்கீல் எழுதும் முதல் கிரயப்பத்திரம்.இந்த வக்கீல் அந்நிலத்தை விற்கும் பார்ட்டிகளில் ஒருவருக்கும் வக்கீல்.அந்தப் பார்ட்டிக்கு உயில் உள்ளது.400ரூபாய் பீஸும் கேட்டுவிட்டு, பத்திரம் எழுதும்பொழுது அந்த உயிலைக் கட்டுப்படுத்தி எழுதும்படியான சொல்லைப் பயன்படுத்தினார் வக்கீல்.இது நெகட்டிவான குணம். வாங்குபவர் விவரம் தெரிந்தவர்.பத்திரத்தைப் பார்த்தவுடன் அந்த வார்த்தையைக் கண்டார்.வக்கீல் விஷயம் புரிந்துவிட்டது.வக்கீலை விளக்கம் கேட்டார்.வக்கீலால் பதில் சொல்ல முடியவில்லை.

கட்சிக்காரர் செல்வாக்குள்ளவர்.வேறு வக்கீலிடம் போய்விட்டார்.இந்த வக்கீல் கட்சிக்காரர் பத்திரத்தை எழுதிக் கொடுத்தார்."பீஸ் வேண்டாம் நீங்கள் பொதுச் சேவை செய்பவர் அல்லவா?'' என்றார்.கட்சிக்காரருக்கு உள்ளூர் நிலவரம் தெரியும்.

வக்கீலாக நியமிக்கச் சொல்லியிருக்கிறேன்'' என்றார்.இவர் நியமனம் பெற்றார்.குதர்க்கமான வக்கீல் செய்துவந்த வேலை என கட்சிக்காரருக்குத் தெரியாது.குதர்க்கம் நெகட்டிவ்.50ரூபாய்க்குப் பதிலாக 800ரூபாய் கேட்பதும், துரோகமனப்பான்மையும், இருந்த பாங்க் வக்கீல் பதவிக்கு ஆபத்தைக் கொண்டு வந்தது.பொதுச் சேவை செய்பவருக்கு உதவி செய்யும் பாஸிட்டிவ் மனப்பான்மை 4 மடங்கு பீஸும், புதிய வேலையையும் கொண்டு வருகிறது.

கம்பனியை மூடப்போகிறார்கள் என மானேஜர் கேள்விப்பட்டார். மானேஜர் 25,000 சம்பளம் வாங்குபவர்.கம்பனியை மூடுவது மானேஜருக்குப் பொறுக்கவில்லை.தனக்குத் தெரிந்தவர்களை கலந்து ஆலோசித்தார்.50,000ரூபாய் கொடுத்தால் மூடுவதைத் தடுக்கலாம் என ஒருவர் கூறினார்.மானேஜருக்கும் கம்பனி மீது விஸ்வாசம்.முதலாளிக்குத் தெரியாமல் தாமே 50,000ரூபாய் கொடுத்து தன்னாலானதை முயன்று பார்த்தார்.கம்பனியை மூடவில்லை.மானேஜர் தாம் செலவு செய்ததைப் பொருட்படுத்தவில்லை.சந்தோஷப்பட்டார்.சம்பளம் 5000ரூபாய் உயர்ந்தது.செய்த செலவு 10 மாதத்தில் வந்துவிட்டது.

அடுத்த ஆண்டு நிலைமை மாறியது.புதிய ஏற்பாட்டின்படி மானேஜருக்கு இலாபத்தில் சம்பளம் போக பங்குண்டு என்று முடிவு செய்தார்கள்.முதல் மாதம் 1 லட்சம் அதுபோல் வந்தது.

எந்த மானேஜரும் தான் செலவு செய்து கம்பனியைக் காப்பாற்ற முன்வருவதில்லை.இதைவிடப் பாஸிட்டிவான குணமில்லை.

பாஸிட்டிவான குணத்திற்கு வாழ்வும், அன்னையும் பரிசு கொடுக்கும்பொழுது அது பரிசாக இருப்பதில்லை.பரிவான ஆதரவாக அமைகிறது.இந்த கம்பனிக்கு வாடிக்கைக்காரர் ஒருவர் கம்பனியில் 1/3 ஷேர் வாங்கியிருந்தார்.மானேஜருடைய பொறுப் புணர்ச்சியைப் பாராட்டி தன் ஷேரில் ஒரு பாகத்தை மானேஜருக்கு இனாமாகக் கொடுத்தார்.அதன் மதிப்பு 10 இலட்சம்.கம்பனி சிறப்பாக இருந்தால் அதன் மதிப்பு இருமடங்கு.இதே வாடிக்கைக்காரர் அதே அளவு பரிசை அடுத்த ஒரு மானேஜருக்கும் கொடுத்தார்.

அன்னையின் ராஜ்யத்தில் நடப்பவை இதுவரை உலகத்தில் நடக்காததாகவும் இருப்பதுண்டு.

************



book | by Dr. Radut