Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 156: He sees in all things strangely fashioned here

இங்கு சிருஷ்டித்த அனைத்திலும் அவன் காணும்

  • ஏமாற்றும் சக்தியின் ஏற்கக் கூடிய கேலி
  • மாயை கூறும் கதை, அவள் பெற்ற வலிமை
  • பெரும் இடையறாத சலனம் கெட்டியாகப் பிடித்தது
  • புதிரான மாற்றமறியாத மாற்றம்
  • காலமென நாம் கூறும் தொடர்ந்த சிருஷ்டி
  • மீண்டும் மீண்டும் எழும் தன்னைத்தானே புதுப்பிக்கும் சக்தி
  • இவ்வசைவின் சுழற்சிகள், பெரும் சலனத்தின் சிறு சட்டங்கள்
  • பிரபஞ்ச நடன லீலையின் நிலையான இப்பொருட்கள்
  • சக்தியின் தானே எழும் அலைகள்
  • தவநிலை சூன்யத்தின் சக்தியான ஆத்மா தொடரும்
  • வாழ்வு, புலன், விழித்த மனத்தை எதிர்பார்த்து
  • கல்லென சமைந்தவன் கனவுலகம் மாற மறுத்தது
  • ஜடம் இருளாக செய்யும் நாணயமான வேலை நயமாக முடிந்தது
  • ஊழிக் கால சட்டம் இஷ்டப்படி நடப்பதை இடையூறு செய்தது
  • இயற்கையின் இயல்பான லீலை செயல்படும் அமைப்பு எழுந்தது
  • அசைவையிழந்த ஆத்மாவின் ஊமை உணர்வு அசைந்தது
  • மறைந்த சக்தி வாய்மூடி உடைந்து, மெதுவாக வெளிவந்தது
  • ஜடத்தின் இதயத்தில் வாழ்வெனும் கற்பனைக்கு வழி ஏற்பட்டது
  • இருண்ட ஜடம் தூசியாகி, விழித்து, உறுதி பெற்றசைந்தது
  • ஜீவனின் மின்னல் தெறிப்பு வெற்றிடமான காலத்தைத் திடுக்கிட வைத்தது
  • பிரம்மம் காலியாகி நீர்க்குமிழாயிற்று
  • இறந்த அனந்தத்தின் அணுவான சிறு கண்டம்
  • இறந்த ஜட ரூபம் அளித்த சூட்சும சுவாசம்
  • உலகம் வாழும் ஒழுங்கான ஸ்வரம் விழித்தெழும் குரலையெழுப்பியது
  • சொரணையற்ற சக்தி பாம்பெனப் பின்னி நின்றது
  • ஜீவனற்ற பரப்பில் ஜீவன் துளிகளாக எழுந்தது
  • ரூபமற்ற காற்றில் வாழ்வின் மணிகள் உருவாயின
  • ஜட சட்டத்தை ஏற்கும் வாழ்வு பிறந்தது
  • அதன் நோக்கத்தை அறிய முடியாத சுவடுகள்
  • நிலையற்றது, எனினும் மாறாத நிலையுடையது
  • தான் ஜனித்த முரண்பாட்டைத் தானே கூறியது
  • அமைதியையிழந்து, நிலையற்ற நிலை பெற்று
  • காலமெனும் நதியின் ஓட்டத்தில் தவறாது திரும்பித் திரும்ப வந்தது
  • சிந்தனையற்ற ரூபங்களில் இலட்சியமான செயல்கள்
  • சிறைப்பட்ட உறுதியின் உந்தியெழும் மூச்சு

********



book | by Dr. Radut