Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/3. ஜீவனற்றதை உளமாரப் போற்றும் உலகம் டயானாவைப் பாராட்டுகிறது.

  • உலகம் உயர்ந்தோர் மாட்டே என்பது இலக்கிய நயம்.
  • உலகம் உணர்ச்சி வயப்பட்டு, தன்னை மறந்து பாராட்டுவதை அனைவரும் அறிவர், மனம் நாடுவது அதையே.
  • நடைமுறையில் எவர்சில்வர் சில்வரைவிட பளபளப்பானது. வேறுபாட்டை அறிவது எளிதல்ல.
  • சர்ச்சில் இங்கிலாந்தையும், உலகையும் காப்பாற்றியவர்.
    90-ஆம் வயதில் அவர் இறந்தபொழுது சவ ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
  • பள்ளி ஆசிரியை டயானா, இராஜகுமாரன் சார்லஸை மணந்து, விவாகரத்து செய்து AIDS போன்ற சர்வீஸ்களில் பங்கு கொண்டு, மறுமணம் செய்து, அளவுகடந்த பிரபலம் பெற்று, விபத்தில் இறந்தபின் அவள் சவ ஊர்வலம் சர்ச்சில் பிரபலத்தைக் கடந்தது.
  • இராமனுக்கும், சீதைக்கும் இல்லாத பிரபலம் இராமனாகவும், சீதையாகவும் நடித்தவர் பெற்றதை உலகம் அறியும்.
  • ஆண்டவன் எங்கும் நிறை பரம்பொருள். கண்ணில் பார்க்க முடிவதில்லை. Fashion என்பது உலகை ஆண்டவனைப்போல் எங்கும் நிரப்புகிறது. ஆண்டவனைக் காண முடியாமலிருக்கலாம். Fashion -ஐ அறியாமலிருக்க முடியாது.
  • கோகோ-கோலா உலகப் பிரசித்தி பெற்ற பானம். அவர்கள் இதுவரை செய்ததைவிட உயர்ந்த பானம் தயாரித்தனர்.
    ரசிகர்கள் எதிர்த்துப் போராட்டம் நடத்தி பழைய பானத்தை மீண்டும் கொண்டு வந்தனர்.
  • மன்னராட்சியை அழித்து, மக்களாட்சி கொண்டு வர 400 ஆண்டுகட்குமுன் முதலாம் சார்லஸ் தலை பறிபோயிற்று.
    மகன் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார். பிறகு அவரை வரவழைத்து இரண்டாம் சார்லஸ் எனப் பட்டம் சூட்டினர்.
  • மக்களாட்சி, democracyக்கு இங்கிலாந்து தாய் நாடு.
  • நாட்டில் அரசியல் இரண்டாகப் பிரிந்தது. மக்களாட்சி ஒரு கட்சி, மன்னராட்சி மறு கட்சி. நாடும், மக்களும் இரு பிரிவாயினர்.
  • ராஜாக்கள் பெயரைப் பிறந்த குழந்தைகட்கு வைப்பது உலகெங்கும் பரவிய பழக்கம். இங்கிலாந்தில் அந்த பழக்கம் மன்னரை அழித்தவரிடையே ஏராளமாக உண்டு.
  • நாட்டில் மன்னர் வந்த இடங்கள், தங்கிய வீடுகள், படுத்த படுக்கைகள், சாப்பிட்ட தட்டு, டம்ளர்கள் புனிதமாகக் கருதப்பட்டு போற்றப்படுவதுண்டு. மன்னரை அழித்த கட்சியினரிடம் அது அதிகம் என்பது இன்றைய நிலை.
  • செட்டிநாட்டு ராஜா மாளிகையில் அனைவரும் காணும்படி சுவரில் ஒரு சாப்பாட்டுத் தட்டு தொங்கும். அது மன்னர் அங்கு வந்த பொழுது அவர் சாப்பிட்ட தட்டு.
  • ஜீவனை வழிபடுவதுபோலவே ஜீவனற்றதையும் மக்கள் வழிபடுவது பொதுமக்களியல்பு.
  • உண்மை கண்ணுக்குத் தெரியாது.
  • உள்ளம் உயர்ந்த உணர்வை அறிவதானால் தெரிந்து கொள்ளும்.
  • புருஷன், பிரகிருதி என்பவை தத்துவத்தில் மனித இதயத்தில் வீற்றிருக்கும் இறைவனைக் குறிக்கும் — புருஷன் என அவனைத் தத்துவம் வர்ணிக்கும்.
  • மொழி வளரும்பொழுது கணவன் புருஷனானான்.
    கல்லானாலும் அவன் கணவனாகி, புருஷனாக மொழியால் நாட்டு வழக்கில் சிறந்து விளங்குகிறான்.

********



book | by Dr. Radut