Skip to Content

08. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

96. கடந்ததை மாற்ற முடியாது

  • அது கர்ம வினை என்பது உலகம் அறிந்தது.
  • ஒருவர் வாழ்வில் கடந்தகால கர்மம் இன்று பக்தியால் மாறினால் அவருக்குப் பூரண யோகம் பலிக்கும்.
  • M.A. English Literature-இல் சேர விரும்பும் மாணவன் B.A.-இல் ஆங்கிலத்தில் பெயிலானவன். எப்படிச் சேர்வது. புரொபசரிடம் போனான். டிகிரியைப் பார்த்து விட்டு முகம் சிவந்தது. நீ எப்படி பாஸ் செய்வாய் என்றார். மேலிடத்து சிபாரிசு.
    முன்னிரு பரிட்சைகளிலும் இங்கீலிஷில் பெயிலானது புரொபசர் கோபத்தை உயர்த்தியது. சிபாரிசால் சேர்த்து விட்டார்.
  • மாணவன் அன்பனில்லை. அன்பருக்கு மாணவன்மீது அக்கறை. சேர்ந்து ஒரு வாரம் ஆனபின் M.A.-இல் உள்ள 60 மாணவர்களும் இந்த மாணவனைப்பற்றியே பேசினர். விஷயம் புரொபசருக்குப் போயிற்று. மாணவனை வரச் சொன்னார்.
    40 ஆசிரியர்களும், 60 மாணவர்களும் பெயிலான இந்தப் புது மாணவனை மேதை என்கின்றனர். அது உண்மை எனக் கண்டு புரொபசர் மனம் மாறி அவனைப் பாராட்டினார்.
    கடந்த காலம் மாறியது. கர்மம் அழிந்தது.
  • இது அன்னை அன்பர் மாணவன்மீது கொண்ட பற்றுதலால் நடந்தது.
  • அந்த அன்பர் யோகம் செய்தால் பலிக்கும்.
  • அந்த மாணவன் யோகம் செய்தால் பலிக்கும். இது, பூரணயோக வாயில் திறப்பது.
  • சுயநலமியின் சுயநலத்திற்கு அளவில்லை, வெட்கமில்லை, எல்லையில்லை.
    அடுத்தவரை அணுகி அவர் சொத்தை தனக்குத் தருமாறு கேட்கிறான்.
    அவர் இசைந்தார். நடக்கவில்லை.
  • சில மாதங்களில் சுயநலமியின் பெரிய சொத்து பறி போயிற்று.
    கர்மம் செயல்படுகிறது, எப்படித் தப்பிக்க முடியும், முடியாத காரியம்.
  • சுயநலமி எவர் சொத்தைக் கேட்டானோ அவரிடமே உதவிக்குப் போனான். சில நாட்களில் எதிர்பாராமல் சொத்து காப்பாற்றப்பட்டது.
    கர்மம், கடந்த கால நிகழ்ச்சி கரைக்கப்பட்டு, நிலைமை மாறியது.
  • அன்பர்கள் வாழ்வில் இதுபோன்ற காரியங்கள் நடக்கத் தவறுவதில்லை.
  • அதன் பொருள் கர்மம் கரைவதில்லை.
  • அதன் பொருள் யோகம் பலிக்கும் அறிகுறி.
  • அன்பர் அனைவருக்கும் யோகம் பலிக்கும் எனக் கூற முடியாது.
  • அன்பர் வாழ்வில் நடப்பவை அதற்கான வாய்ப்பிருப்பதைக் காட்டும்.
  • வாய்ப்பைப் பின்பற்றினால் யோகம் பலிக்கும் எனக் கூற முடியாது. யோகம் செய்யும் வாய்ப்பு தொடர்ந்து எழும்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனிதன் பல நிலைகளில் வாழ்கிறான். ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்லும் வாய்ப்பு அருளாகும். அடுத்த நிலைக்குச் செல்லும் முயற்சி அருளைக் கொண்டுவரும்.
 

********



book | by Dr. Radut