Skip to Content

06. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XVIII. Mind and Supermind
 
Avidya is the fall of mind from Supermind. Page No.167
The idea of real division originally Para No.13
proceeds from Avidya.
From where does this Avidya originates?
What exactly is the perversion of the Supermind?
It proceeds from the view of the individual soul.
It is a view from its own standpoint.
It excludes all others.
It proceeds from an exclusive concentration of
consciousness.
It is an exclusive self-identification of the soul.
It identifies with a particular action.
It is a particular action to Time and Space.
It is only a part of its own play of being.
It starts from the soul's ignoring all others.
It ignores all other action as its own action.
All other states of being are its own state of being.
18. மனமும் சத்தியஜீவியமும்
 
மனம் சத்தியஜீவியத்தை இழப்பது அவித்தை.
பிரிவினை என்ற எண்ணம் முதலில் அவித்தையிலிருந்து வருகிறது.
அவித்தையின் ஆரம்பம் எது?
சத்தியஜீவியம் குதர்க்கமாவது எப்படி?
அது ஜீவாத்மாவின் கண்ணோட்டத்திலிருந்து எழுகிறது.
ஜீவாத்மா உலகைத் தன் நோக்கில் காணும்.
அது மற்றவற்றை விலக்கும்.
ஜீவியம் தன்னில் நிலைப்பதால் அது வருகிறது.
ஆத்மா தன்னோடு தன்னை ஐக்கியப்படுத்தித் தீவிரமாதலால் அது எழுகிறது.
அது ஒரு செயலுடன் தன்னை ஐக்கியப்படுத்தும்.
அச்செயல் காலம், இடத்திற்குரியது.
அது ஜீவனின் லீலையின் பகுதி.
ஆத்மா அனைவரையும் மறப்பதால் அது வருகிறது.
பிறர் செயல்களை அது புறக்கணிக்கிறது. தன் செயலன்று எனக் கூறுகிறது.
மற்ற ஜீவனின் நிலைகள் தன் ஜீவனின் நிலையாகும்.
All other consciousness is its own consciousness.
It occupies one particular moment in Time.
It occupies one particular moment of Space.
It occupies one particular form.
It concentrates on the moment, field, the form, the
movement.
So, it loses all the rest.
It has then to recover the rest.
It does so by linking the succession of moments.
It also does so by linking the succession of points of Space.
The succession of forms in Time and Space are also linked.
The succession of movements in Time and Space are also so
linked.
It has thus lost the truth of the indivisibility of Time.
Force and Substance are also so indivisible.
There is an obvious fact.
It is all minds are one Mind.
It takes many standpoints.
All lives are one Life.
It develops many currents of activities.
All body and form are one substance of Force and
Consciousness.
It concentrates into many apparent stabilities of force of
consciousness.
We forget these obvious facts.
The truth is different.
All these stabilities are really one whorl of movement.
It repeats a form while it modifies it.
They are nothing more.
Mind tries to fix everything rigidly.
It becomes a rigid unchanging or unmoving external factor.
மற்றவர் ஜீவியம் தம் ஜீவியம்.
அது காலத்தில் ஒரு பொறியை ஏற்கிறது.
அது இடத்தில் ஒரு பொறியை ஏற்கிறது.
அது ஒரு ரூபத்தை ஏற்கும்.
அது ரூபத்திலும், அசைவிலும், அரங்கத்திலும், மணித்துளியிலும் நிற்கும்.
எனவே மற்ற அனைத்தையும் அது இழந்துவிடுகிறது.
இழந்ததைப் பெற வேண்டும்.
தொடரும் நேரத்தைத் தொடர்புபடுத்தி அதைச் செய்கிறது.
இடத்தையும் அப்படியே செய்யும்.
காலத்திலும் இடத்திலும் ரூபத் தொடர்புகளை அது பயன்படுத்துகிறது.
காலத்திலும் இடத்திலும் சலனத் தொடர்புகளை அப்படி அது
பயன்படுத்தும்.
இவ்வழி அது காலத்தின் முழுமையை இழந்துவிட்டது.
சக்தியும், பொருளும் முழுமையுடையவை.
இது தெளிவு.
எல்லா மனங்களும் ஒரே மனம்.
மனம் பல நோக்கங்களை ஏற்கிறது.
எல்லா உயிர்களும் ஒரே உயிர்.
அது பல செயல்களை உற்பத்திச் செய்கிறது.
எல்லா உடல்களும் ரூபங்களும் ஒரே சக்தியின் ஒரே ஜீவியத்தின்
பொருள்.
தோற்றத்தில் பல ஜீவிய சக்திகளாக அவை தங்களை நிலைநாட்டுகின்றன.
நாம் இவற்றை மறந்துவிடுகிறோம்.
உண்மை வேறு.
இத்தனி நிலைகள் எல்லாம் ஒரே பிரவாகத்தின் பல அசைவுகள்.
ஒரு ரூபத்தை மீண்டும் செய்யும்பொழுது ரூபத்தை அது மாற்றுகிறது.
அவை வெவ்வேறல்ல.
மனம் எல்லாவற்றையும் இறுக்கிப் பிடிக்கும்.
மாறாத, அசையாத புறச் செயலாகிறது அது.
Only the eternal Real-Idea is firm.
It maintains a certain ordered constancy.
The Mind vainly attempts to initiate it.
It does so by attributing fixity to that which is inconstant.
These truths Mind has to rediscover.
It knows them all the time.
It knows only in the hidden back of consciousness.
It is the secret light of its self-being.
And that light is to it a darkness.
Because it has created ignorance, it is dark.
Because the dividing mind has become the divided mind.
Because it has become involved in its own workings.
Those workings are its own creation.
The ignorance is further deepened. Page No.168
It is by his self-identification with the body. Para No.14
To us mind is determined by the body.
Mind is preoccupied with that.
Mind is devoted to its physical workings.
It uses it for its conscious superficial action.
Mind works in this gross material world.
Mind has developed the brain and nerves.
It did so in the course of developing the body.
Rather it is its own development in the body.
Still, it employs constantly that operation.
It is too absorbed in observing this machinery.
It knows what body gives to it.
It has to get back from it to its own proper workings.
These are to it mostly subconscious.
நிலையான முழு எண்ணமே உறுதியானது.
அது ஒழுங்கான, நிலையான ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
மனம் அதைப் பார்த்து, செயல்பட முயன்று தோற்கிறது.
நிலையற்றதை நிலையாக்கி, அதைச் சாதிக்க முயல்கிறது.
மனம் இவ்வுண்மைகளை மீண்டும் பெறவேண்டும்.
மனம் அவற்றையறியும்.
தன் ஜீவியத்தின் பின்னணியில் அது அறியும்.
தன் சுயஜீவனின் இரகஸ்ய ஒளி அது.
அவ்வொளி அதற்கு இருள்.
அது அறியாமையை சிருஷ்டித்ததால், அது இருட்டாக இருக்கிறது.
தன்னில் தன்னையிழப்பதால் அது இருட்டாக இருக்கிறது.
தன்செயலுள் தான் தன்னை மறந்ததால் அது நிகழ்கிறது.
அதன் செயல் அதன் சிருஷ்டி.
அஞ்ஞானம் ஆழ்ந்து கனக்கிறது.
உடலோடு உடலானால் அஞ்ஞானம் இருளாகும்.
உடல் மனத்தை நிர்ணயிப்பது நம் கருத்து.
அவ்வெண்ணம் மனத்தை ஆக்ரமித்துக் கொண்டுள்ளது.
மனம் கையால் செய்யும் வேலைகளைப் பாராட்டுகிறது.
விழிப்பாக மேலெழுந்த காரியத்தைச்செய்ய மனம் அதைப் பயன்படுத்துகிறது.
மனம் ஜடமான இவ்வுலகில் செயல்படுகிறது.
மனம் மூளையையும், நரம்பையும் வளர்த்துள்ளது.
உடலை வளர்க்கும்பொழுது இவற்றையும் செய்துள்ளது.
மனம் இவ்வகையாக உடலில் வளர்கிறது.
இருந்தாலும், இவற்றை எப்பொழுதும் மனம் பயன்படுத்துகிறது.
இந்த யந்திரம் செயல்படுவதைக் கவனிப்பதில் மனம் தன்னை இழக்கின்றது.
உடல் என்ன தருகிறது என மனம் அறியும்.
உடலிலிருந்து மனம் தனக்கேயுரிய செயல்களை நாடவேண்டும்.
இவை மனத்தைப் பொருத்தவரை ஆழ்ந்து அமிழ்ந்துள்ளன.
Still we can conceive a life mind.
Or a life being.
This absorption is an evolutionary necessity.
The life mind and being go beyond that.
It is able to see and experience itself assuming body after
body.
It knows it is not created separately in each body.
Nor does it end with it.
It is only the physical impress of the mind on matter.
It is only the corporeal mentality that is so created.
It is not the whole mental being.
This corporeal mentality is only our surface being.
It is a front that is presented to physical experience.
Ours is the terrestrial being.
Behind there is the other.
It is subconscious and subliminal to us.
It knows itself as more than the body.
It is capable of less materialised action.
To this we owe the action of our surface mind.
Its action is larger, deeper, forceful and dynamic.
We can become conscious of it.
Or, we can receive its impress on us.
It is our first idea of the soul.
It is our first realisation of our inner being.
It is the Purusha . pranamaya purusha.
This is life mentality. Page No.169
It may get free from the error of the body. Para No.15
It does not make us free from the error of mind entirely.
நாம் உயிருக்குரிய மனத்தைக் கருதலாம்.
அல்லது உயிருக்குரிய ஜீவனைக் கருதலாம்.
மனம் தன்னையிழப்பது பரிணாமத்திற்கு அவசியம்.
உயிரின் மனமும், ஜீவனும் அதைக் கடந்தவை.
உடலைவிட்டு உடல் மாறி அனுபவிப்பதை அதனால் காண முடிகிறது.
ஒவ்வோர் உடலிலும் தான் புதியதாகப் பிறக்கவில்லையென மனம் அறியும்.
அத்துடன் மனம் முடியவில்லை.
உயிரின் மனம் என்பது ஜடத்தில் மனம் எடுத்த அச்சு.
அப்படி உற்பத்தியானது உடன் சிந்தனை.
இது மனத்தின் முழு ஜீவனாகாது.
உடன் சிந்தனை மேலேயுள்ளது.
உடன் அனுபவம் பெற அதை முன்வைக்கின்றது.
நம் மனம் புவியின் ஜீவன்.
அதன்பின் வேறொன்றுள்ளது.
அது ஆழத்திலும் அடியிலும் உள்ளது.
அது உடலைவிடப் பெரியதுஎன அறியும்.
அது தன் ஜடத்தன்மையைக் குறைக்கும்.
மேல்மனம் செயல்படுவது இதனால்.
அகன்று, ஆழ்ந்து, தீவிரமாக, வேகமாக அது செயல்படும்.
நாம் அதை அறியலாம்.
நம்மில் அதன் சுவட்டைப் பெறலாம்.
ஆத்மா என நாம் முதல் அதையேயறிகிறோம்.
நம் உள்ளுறை ஜீவன் நமக்குச் சித்திப்பதின் முதற்கட்டம் இது.
இது புருஷன் - பிராணமயப்புருஷன்.
இது வாழ்வின் மனப்போக்கு.
இது உடன் குறையிலிருந்து தப்பிக்கலாம்.
அதனால் மனத்தின் குறையிலிருந்து முழுவதும் தப்பிக்க முடியும் எனக்
கூற முடியாது.
It is still subject to the original act of ignorance.
That ignorance makes the individual soul regard everything
from its own point of view.
It can see the truth of things only as an external
presentation.
It does so as they rise up to its view from its temporal and
spatial consciousness.
Its forms and results of past and present experience
determine that external view.
It is not conscious of its other selves.
It knows them by an outward indication.
It is not felt directly by the physical being.
They are indications of thought, speech, action, result of
action or subtler indications.
It is of the vital impact and relation.
Equally it is ignorant of itself.
It knows itself only through a movement of Time.
It knows by a succession of lives.
In them it has used variously embodied energies.
Our physical instrumental mind has the illusion of the body.
This subconscious dynamic mind has the illusion of life.
In that it is absorbed and concentrated.
By that it is limited.
With that it identifies its being.
Here we do not yet get back to the meeting place of mind
and Supermind.
That was the point at which they originally separated.
 
 
Contd....
இன்னும் அறியாமையின் ஆரம்பம் அதைப் பாதிக்கும்.
அவ்வறியாமை ஜீவாத்மா அனைத்தையும் தன் கோணத்தில் பார்க்கச் செய்யும்.
விஷயத்தின் சத்தியத்தை மனம் புறமாக, புறவெளிப்பாடாகக் கருதுகிறது.
காலம், இடத்தின் ஜீவியப் பார்வையிலிருந்து
தன் இடத்திற்கு அவை வருவதால் மனம் அப்படி நினைக்கிறது.
கடந்தகால, தற்கால அனுபவத்தின் ரூபங்களும் பலன்களும் அதன் புற
நோக்கை நிர்ணயிக்கும்.
மனத்தால் பிற ஜீவன்களை அறிய முடியாது.
அவற்றைப் புற நிகழ்ச்சிகளால் மனம் அறிகிறது.
உடலின் ஜீவனால் நேரடியாகப் பிறரை அறிய முடிவதில்லை.
எண்ணம், பேச்சு, செயல், செயன்பலன், சூட்சும அறிகுறிகள் மூலம் மனம் பிறரை அறிகிறது.
உயிரின் உணர்வு தொடர்பு கொள்வதாலும், பாதிப்பதாலும் அறிய முடிகிறது.
அதேபோல் மனம் தன்னையும் அறியாது.
காலத்தின் கதியால் அது தன்னையறியும்.
தொடர்ந்த பிறப்பால் மனம் தன்னையறிகிறது.
அப்பிறவிகளில் பலதரப்பட்ட சக்தி ரூபங்களை அது பயன்படுத்துகிறது.
உடலெனும் கருவி உடலே முடிவு என்ற மாயையில் திளைக்கிறது.
ஆழ்மனம் தீவிரமாகச் செயல்படும்பொழுது அது உயிரை அப்படி நம்புகிறது.
அவற்றுள் மனம் கரைந்து, செறிவு பெற்றுள்ளது.
அவற்றால் மனம் கட்டுக்கோப்புக்குள் அமைகிறது.
தன் ஜீவனை அத்துடன் இரண்டறக் கலக்கிறது.
இங்கு நாம் சத்தியஜீவியமும், மனமும் சந்திக்குமிடத்திற்கு வரவில்லை.
அவ்விடத்தில் மனம் ஆரம்பத்தில் சத்தியஜீவியத்தினின்று பிரிந்தது.
 
தொடரும்....

 

*****



book | by Dr. Radut