Skip to Content

05.சுயநலமான வெற்றி

சுயநலமான வெற்றி

  • அன்னையிடம் வந்தபின் அனைவருக்கும் வெற்றியுண்டு.
  • நல்லெண்ணம் என்பது பரநலம். அதுள்ளவர்க்குரியது பரநலமான வெற்றி.
  • முழுச் சுயநலம் ( low consciousness) தாழ்ந்த ஜீவியம்.
  • சுயநலம் தீவிரமானதால் அதற்குப் பெரு வெற்றியுண்டு.
  • எது சுயநலம், எது பரநலமான நல்லெண்ணம் என அறிவது எப்படி?
  • சுயநலம் தன்னையறியும்.
  • சுயநலத்திற்கு 99% வெற்றி கிடைக்கும். மீதி 1% மிக முக்கியமான இடமாக இருக்கும். அங்குப் பிரார்த்தனை நகராது. அத்துடன் இந்த 99% வெற்றியை ஈடுகட்டுவதுபோல் ஒருவர் - நமக்கு முக்கியமானவர் - எதிராக, பொய்யாக, கடுமையாக, அசிங்கமாக நடப்பார்.
  • சுயநலத்தின் வெற்றிக்கு எதிரானதுண்டு.
  • நல்லெண்ணம் பரநலமாகயிருந்தால் 100% வெற்றியுண்டு, எதிர்ப்பு இருக்காது.

ஆனால்,

சுயநலம் உச்சியை எட்டும்பொழுது பரநலம் அதன் வாழ்வுக்குட்பட்டு வெற்றி பெறும்.

  • சுயநலம் பகுதி, பரநலம் முழுமை.
  • முழுமையான பரநலம் தன் பர்சனாலிட்டிக்குத் தகுந்தவாறு முழுமையான வெற்றி பெறும்.
  • சுயநலமானவர் தம்மைச் சுயநலம் என அறிவது திருவுருமாற்றத்தின் முதற் செயல்.

சுயநலத்தின் வெளிப்பாடுகள்: பணம் முக்கியம், பிறர் குறை தெரிவது, பிறர் பெருந்தன்மை தெரிய முடியாதது, கடுமை, கொடுமை, அபாண்டப் பொய், அளவுகடந்த சூது, தீராத வாது, தன்னையே ஏமாற்றும் கபடு, திருட்டை உரிமையாக நினைப்பது.

சுயநலத்தின் அன்னை படம் கறுப்பாக இருக்கும்;

பக்தியுள்ள இடத்தில் படம் பளிச்சென இருக்கும்.

 

*******

Comments

05.சுயநலமான வெற்றி Please

05.சுயநலமான வெற்றி

 
Please move the following line to a new line
 
-முழுச் சுயநலம் ( low consciousness) தாழ்ந்த ஜீவியம்



book | by Dr. Radut