Skip to Content

14.வழி நடத்தும் ஜோதி

     சூட்சுமப் பார்வையுள்ளவர்க்கு அன்னையை நேரில் தரிசனம் செய்யும் பொழுது அவர் முகம் சரஸ்வதியாக மாறுவது, ஸ்ரீ அரவிந்தராக மாறுவது, அவர் பாதங்களில் திடீரென பொன்னொளி எழுவது, அன்பர்கள் வீட்டினுள் பிரகாசம் தெரிவது, அன்பர்கள் வீட்டின் மேலே ஒளிப்பிழம்பு தெரிவது உண்டு.

     அடிக்கடி - தினமும் - அன்பர்கள் பிரயாணம் செய்யும் பாதையில் கோடுபோல் ஒளி தெரிந்தது ஒருவருக்கு. நாம் புதிய ஊருக்குப் போனால், போகும் இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போவது வழக்கம். வாயிலிருக்கிறது வழி என்பது பழமொழி. மேல்நாடுகளில் புது ஊருக்குப் போனால் அந்த ஊர் map கையில் தருவார்கள். வழி கேட்க வேண்டிய அவசியமில்லை.

     அன்பர் ஒருவர் நண்பர் ஊருக்கு காரில் போக வேண்டியபொழுது ஏற்கனவே நண்பரிடமிருந்து பெற்ற mapயை எடுத்துப் போனார். அவருடன் வந்தவரும் அன்பர். அவர் தாம் போக வேண்டிய பாதையில் அன்னையை மானஸீகமாக அனுப்பிவிட்டார். காரில் பேசிக்கொண்டே போனதால் போகும் வழியும், அனுப்பிய அன்னையும் மறந்து பேச்சு சுவாரஸ்யத்தில் தங்களை இழந்தனர்.

     ஒரு ரோட் ஜங்ஷனுக்கு வந்தபொழுது காரை ஓட்டுபவர் இடதுப்பக்கம் திரும்பினார். அன்னையை அனுப்பிய அன்பர் ரோடு பிரியும் இடத்தைக் கவனித்தார். ஓர் ஒளி வலப்பக்க ரோடு வழியாகப் போவதைப் பார்த்தார். பேச்சில் தாம் கண்டதைப் பொருட்படுத்தவில்லை. சுமார் 2 மைல் போனபின் பாதை தவறியதைக் கண்டு mapஐ சரி பார்த்து திரும்பி பழைய ஜங்ஷனுக்கு வந்து, வலப் பக்கமாகப் போய் நண்பர் வீட்டை அடைந்தார்.

ஓட்டுபவர் வழி தவறலாம், முன்னே அனுப்பிய

அன்னை சரியான வழியைக் காட்டத் தவறுவதில்லை.

 



book | by Dr. Radut