Skip to Content

மனித சுபாவம் III

கர்மயோகி

 

நீண்ட நாளாக உனக்குப் பேரும் புகழும் வாங்கிக் கொடுத்த திறமைகளையும் அளவுகடந்து அபிவிருத்தி செய்யலாம்.

******

கருவி செயலின் சிறப்பை உயர்த்தும். தெளிவு அறிவின் உயர்வைப் பரிமளிக்கச் செய்யும். நயம், அழகை மேலும் அழகாகக் காட்டும். இனிமையான சொல், சுவையான உணவுக்குச் சுவை கூட்டும். பிரியம் கடமையை இனிக்கச் செய்யும்.

புகழ் பெற்ற பேராசிரியர். அவர் வகுப்புக்கு மாணவர்கள் ஆர்வமாக வருவார்கள். அவரைப்போல் எதிர்காலத்தில் தாம் வரவேண்டுமென நினைப்பார்கள். அவருடைய சொற்பொழிவுகளுக்கு, அவர் படித்த சிறப்பான புத்தகங்களிலிருந்து அழகான பகுதிகளை இணைத்தால் நல்லது எனத் தெரிந்து, அதைச் செய்தவுடன் வெறும் டிவி, கலர் T.V. ஆனதுபோல் வகுப்பு மாறியது. பேராசிரியருக்குப் பேரானந்தம். என்ன நடக்கிறது என்று அறியாமல் மாணவர்கள் தேன் குடித்த நரிபோலானார்கள்.

பேச்சைக் கருத்து உயர்த்தும், செயலை அறிவு உயர்த்தும், நட்பை விஸ்வாசம் உயர்த்தும். கருத்து, முறைமை, பிரியம், இனிமை, இதம், இங்கிதம், கருவி, திறமை ஆகியவை பாதியோ, கால் பாகமோ இருந்தால் புகழ் பெறமுடியும். குறைவானதை நிறைவுபடுத்தினால் தரம் உயரும். ஒன்று முழுமையாக இருந்தால், அடுத்த அம்சத்தைச் சேர்த்தால், அழகும் பெருமையும் கூடும். எதையும் உயர்த்த முடியும். ஏனெனில் எந்த உயர்விலும் உயர்வுக்குரிய அம்சம் ஒன்று தானிருக்கும். அதுவும் குறைவாக இருக்கும்.

 

உன்னதமான திறமையும், அடுத்த உயர்ந்த நிலையிலிருந்து பார்த்தால், பலமடங்கு உயரக்கூடியது எனத் தெரியும்.

********

சிறப்பான கிராம வாழ்வில் நகர வாழ்வின் அம்சங்களைச் சேர்த்தால் ஏற்படும் மாற்றம் பெரியது. 20 வருஷமாகத் தொழில் செய்து 18பேருக்குத் தொழில் வைத்துக் கொடுத்தவருக்குத் தம் திறமை பற்றிப் பெருமையுண்டு. 75வருஷ வியாபாரத்தில் முதலாளியே பாக்டரியில் நாள் முழுவதும் நின்று வேலை வாங்குகிறார். திறமைக்கும் சிக்கனத்திற்கும் பேர் போன இடம். அவர்கள் திறமையை மெச்சாதவரில்லை. நாட்டிலே முதல் 15 பேரிலுள்ள ஸ்தாபனம். பனியாக்கள் நடத்துவது. 1ரூபாய் அதிகச் செலவு செய்துவிட்டால் சேர்மன் முதற்கொண்டு வந்து விடுவார். சிக்கனத்திற்கு அம்மாநிலத்தில் உதாரணமாக அவர்களைச் சொல்வார்கள். இவர்களிடம் போய் 'உங்கள் கம்பனியில் விரயத்தை விலக்க உதவுவோம்' என்றால் அவர்கள் சிரிக்கிறார்கள். 42000 ரூபாய்க்கு வந்த வேலையை 30நாள் பேரம் செய்து 21,400க்கு முடித்தவர் தம் திறமையை வியந்து கொண்டார். அவர் கூட்டாளி  அதைக் குறைக்கலாம் என்றது அவரைச் சிரிக்க வைத்தது. இவையெல்லாம் உயர்ந்த திறமைகளே.

கிராமத்தில் வாய்க்கணக்குப் போடுபவர்கள் பிரபலமாக இருப்பார்கள். அவர்கள் திறமையை அகிலம் புகழும்.அடுத்த உயர்ந்த நிலை கால்குலேட்டர். எந்த வாய்க்கணக்குப் புலியும் கால்குலேட்டருடன் போட்டியிட முடியாது. இது அடுத்த உயர்ந்த நிலை. வேலைகளைச் செய்யும் முறையுண்டு. முறைகள் பல நிலைகளில் அமைந்துள்ளன. இன்றிருப்பதை இதே முறையில் உயர்த்த முடியாது என்பது உண்மை. அடுத்த உயர்ந்த முறையைப் பயன்படுத்தினால் அளவு கடந்து உயர்த் தலாம் என்பது உண்மை, உயர்வு கருவியைப் பொருத்தது. வாயால் கூவுபவன் ஒலிப் பெருக்கியுடன் போட்டியிட முடியாது. அதேபோல் மேற்சொன்ன தொழிலதிபர்களை அணுகிப் பேசியபொழுது அவர்கள் நம்பவில்லை. ஏதோ ஒரு வழியாகக் கொஞ்சம் அவர்கள் இடம் கொடுத்தபொழுது நடந்தது வேறு:-

- ரூ.6000 வியாபாரத்தில் தினமும் 100ரூபாய் மிச்சப்படுத்த முடியாது என்றவர்  தினமும் ரூ.1100 மிச்சப்படுத்தினார்

- விரயமே இல்லை என்றவர் தம் மாத வருமானமான ரூ. 2 லட்சத்தை             விரயத்தை அழித்து 2 3/4 லட்சமாக்கினார்

- பனியா தம் கம்பனியில் சிக்கனம் செய்ததால் 1 1/2 கோடி அதிக லாபம்                வந்ததைக் கண்டார்.

- 42 ஆயிரத்தை 21,400ஆகக் குறைத்துப் பேசியவர் கூட்டாளி அதிலும் 400 ஐக் குறைத்தார் என்று ஆச்சரியப்பட்டார். 21 ஆயிரத்தை 8 ஆயிரமாக்கிய அனுபவமுள்ளவர் கூட்டாளி என அவருக்குத் தெரியாது.

உணர்வால் ஏற்பட்ட உறவைப் பொருளால் பூர்த்தி செய்தால் அது பரிமளிக்கும்.

********

அறிவால் நட்பு ஏற்படுவதுண்டு. உணர்வே நட்புக்குப் பிரதானம். ஆனால் பொருளே இவற்றிற்கு அஸ்திவாரம். அஸ்திவாரமில்லாமல் மேல் மட்டத்தில் ஏற்படும் நட்பு அது ஏற்பட்ட சந்தர்ப்பம் விலகியவுடன் மறைந்து போகும். உணர்வு மறையும். பொருளால் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் உணர்வு மறையும்பொழுது பொருள் உறவை மீண்டும் உயிர்ப்பிக்கும்.

சென்ற நூற்றாண்டில் அரச குடும்பங்கள் எதிரியை வெல்லும் முறைகளில் முக்கியமாகக் கையாண்ட முறை சம்பந்தம் செய்வது. ஓர் அரசனின் பெண் எதிரியின் மருமகளாய்விட்டால் எதிர்ப்பு மறைகிறது. பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, ஹாலண்ட், இத்தாலி ஆகிய நாடுகள் இக்கொள்கையைப் பயன்தரும் வகையில் பல நூற்றாண்டு பின்பற்றின.

நண்பர்கள் வேறு ஊருக்குப் போய்விட்டால் நட்பின் தீவிரம் குறைகிறது. வியாபாரத் தொடர்போ, அதிகாரத் தொடர்போ, பலன் பெறும் மற்ற தொடர்போ இருந்தால் நட்புக் குறைவதில்லை. நெருக்கமாகவுமிருக்கும். நட்பு உயர்ந்தது. வெறும் நட்பு நெடுநாளைக்குத் தீவிரமும் இனிமையும் குறையாமல் இருப்பதுண்டு. ஆனால் அது அரி பொருள். பொருள் செறிவானது. வளமானது.நட்புக்கும் உயிர் கொடுப்பது. உயிருக்கும் திறனளிப்பது. நட்பு மிளிரும்.பொருள் புதைந்த நிலையிலும் மிளிரும் நட்புக்கு அஸ்திவாரமாக ஆதரவளிக்கும்.

நீ ஊதாரியாகி உன் சொத்தையெல்லாம் அழித்தவன் என்றால் கடுமையாக உழைக்க நீ முடிவு செய்தால் உழைப்பால் நீ உயரலாம் என்பதை அறிய வேண்டும்.

********

அருணகிரி நாதரும் விப்ரநாராயணரும் தாசி வீடே கதியாக இருந்தவர்கள். அடிப்படையான மாற்றம் ஏற்பட்டு அடியாராகவும், ஆழ்வாராகவுமானார்கள். இதை எல்லோரும் செய்ய முடியாது என்பது உண்மை. அடிப்படையில் மாற வேண்டும் என முனைபவரால் முடியும்.  'நான் இத்தனை வருஷம் இப்படியே இருந்துவிட்டேன், இனிமேல் மாற முடியுமா?' என்று மனம் தளர்பவரை நோக்கி 'மாற முடியாது என்று நம்பினால் மாற முடியாது. முடியும் என்று முயன்றால் முடியும்' என்று ஆயிரம் உதாரணங்கள் சொல்கின்றன. அழிந்து போன பதினாயிரம் பேரைப் பின்பற்றுவதா, மாறிய ஆயிரம் பேரை உதாரணமாக எடுத்துக் கொள்வதா என்பதுதான் பிரச்சினையே தவிர முடியுமா என்பது கேள்வியில்லை.

அநேகமாக எந்த ஊரிலும் அழிந்து போனவர் அநேகம் பேரிருப்பார்கள். திருந்தியவர் ஓரிருவர் உண்டு. திருந்தியவர் 'முடியும்' என்பதைத் தம் வாழ்க்கையால் விளக்குகிறார்.

உன் கம்பனி ஆபீசர் எல்லாம் ஒரு வருஷத்தில் உன்னை விட்டுப் போய் விட்டார்கள் எனில் (inter-personal relationship) உயிருள்ள உறவுக்குரிய பயிற்சியை நீ மேற்கொண்டால் உன்னைவிட்டு இனி ஒருவரும் போகமாட்டார்கள்.

*******

பயிற்சி என்பது 15வருஷ அனுபவத்தை, 30வருஷ அனுபவத்தை ஓரிரு வருஷத்தில் தருவது. ஒரு மாதத்திலும் தரக்கூடியது. அது பயிற்சியின் தரத்தைப் பொருத்தது. மார்க்கட்டிங் என்பதை அனுபவத்தால் செய்கின்ற கம்பனியில் அதற்குரிய பயிற்சியைப் பெற்றால் வசூல் அதிகமாகும், விற்பனை அதிகமாகும். அதிகமாகும் எனில் இருமடங்காகும். விரயம் குறையும். இப்பயிற்சியை ஒரு முக்கியமான ஆபீசருக்கு - Marketing manager-ஒரு மாதத்தில் கொடுக்கிறார்கள். மேல் நாட்டில் இரண்டு நாளில் தருகிறார்கள்.

ஆபீசர்களிடம் எப்படிப் பழகுவது என்பதைப் பயிற்சியால் பெறா விட்டால், கம்பனியில் ஒருவருமிருக்க மாட்டார்கள். பயிற்சி பெற்றால் ஒருவரும் போக மாட்டார்கள். பயிற்சிக்கு அந்த முக்கியத்துவம் உண்டு.

பேசவோ, எழுதவோ வருவதில்லை.100 நாளில் பேச, எழுத இதைப் பல நாடுகளில் பயிற்சியாகத் தருகிறார்கள். அது பயிற்சிக்குரிய சிறப்பு.

நீ எவரோடும் ஒரு நாளைக்கு மேல் பழக முடியவில்லை என்றாலும், உன் போக்கை மாற்றிக் கொள்ள முடியும் என்றால் நூறு நண்பர்களும் ஏற்படுவார்கள்.

******

நண்பர்கள் எப்படிச் சேருகிறார்கள், எப்படி விலகுகிறார்கள் என்பது முக்கியமான விஷயம்.

(Leadership) தலைமையுள்ளவனைச் சுற்றிப் பலர் இருப்பார்கள்.

(Pleasant personality) இனிமையானவரை அனைவரும் நாடுவார்கள்.

பணம், அந்தஸ்து, திறமையுள்ளவர்க்குப் பல நண்பர்களிருப்பார்கள்.

இவை குறிப்பான சந்தர்ப்பங்கள்.

இரகஸ்யத்தை வைத்துக் கொள்ள முடியாதவன், கோள் சொல்பவன், நம்பிக்கையில்லாதவன், அதிக பயமுள்ளவன், தாழ்ந்த குடும்பத்துப் பையன், எந்தத் திறமையுமில்லாதவன் போன்றவரை விட்டு நண்பர்கள் உடனே விலகுவார்கள்.

ஒன்று உச்ச கட்டம், அடுத்தது தாழ்ந்தது.

இவை பெரிய விவாதத்திற்குரியவை.

இவை இரண்டும் போகப் பெரும்பாலும் ஒரே தகுதியுள்ள இருவரில் ஒருவருக்கு ஏராளமான நண்பர்களும், அடுத்தவர்க்கு நண்பர்களேயில்லை என்பதும் உண்டு நண்பர் இல்லாதவர் பல நண்பர்களைப் பெறும் வழியுண்டா? உண்டு.

கீழ்க்கண்டவற்றை அவரால் பயில முடியுமானால் அது நடக்கும்.

  1. எவர் பேசும் பொழுதும் குறுக்கே பேசக்கூடாது.
  2. யாருடைய கருத்தையும் மறுத்துப் பேசும்பொழுது கருத்திற்கு மாற்றம் தெரிவிக்கலாம். அதனால் கருத்துடையவரைக் குறைத்துப் பேசக்கூடாது. நாம் பிறரைக் குறைவாக நினைக்கக்கூடாது.
  3. பிறருடைய குடும்பம், ஜாதி, சொந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ளவே கூடாது.
  4. காரசாரமான விவாதத்தில் கருத்து வேற்றுமையிருக்கலாமே தவிர விவாதம் மற்றவரைத் தீண்டக்கூடாது. அரசியல், வழிபாடு, பணம் ஆகியவற்றில் விவாதம் செல்லாவிட்டால் அந்தச் சங்கடம் வாராது.
  5. பிறர் பேசுவதில் உள்ள நல்ல கருத்தை நம் மனம் ஏற்க வேண்டும். சந்தர்ப்பப்பட்டால் அதைச் சொல்ல வேண்டும்.
  6. பொறாமைக்கு இடம் இல்லை.
  7. நம் நண்பர்களைப் பற்றிப், பிறர் சொல்வதை ஏற்கக் கூடாது. எதையும் நேரடியாகப் பேச வேண்டும்.
  8. நண்பர்களிடம் மறைக்க வேண்டிய காரியங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  9. நண்பர்களை நினைத்தால் மனம் இதமாக இனிக்க வேண்டும்.
  10. போலி நட்பு, உபசாரம், உறவு ஆகியவற்றை விலக்க வேண்டும். அறவே விலக்க வேண்டும்.

உன் திறமைகளை நீ அறிவதுபோல், உன் குறைகளை நீ அறிந்தால் உனக்குப் பெரு முன்னேற்றமுண்டு.

********

M.A. படித்து வேலையில்லாமலிருப்பவனுக்கு வேலை தேடிக் கொடுக்கப்போனால் சாதாரணமாக அன்று (1978) தனியார் துறையில் இவன் போன்றவர்க்கு ரூ.100 சம்பளம் என்பதை மறந்து தன் நண்பன் சர்க்காரில் பெறும் சம்பளம் தான் பெற வேண்டுமென நினைத்து அதையே அவன் மனம் நாடியது. நாட்டின் நிலையில் இவன் வேலை தேடி ஓர் அரசியல்வாதிக்குப் பெரிய தொகையைக் கொடுத்து ஏமாந்ததுதான் மிச்சம். வேண்டியவர்கள் இருந்ததால் ரூ.250 சம்பளம் கிடைத்தது.

இளைஞன் நாணயமானவன். இட்ட வேலையைச் செய்யும் பாங்குடையவன். ஆனால் தானே பொறுப்பேற்று ஒரு சிறிய வேலையையும் செய்யும் திறமை இல்லாதவன். நல்லவர்களிடம் வேலை செய்ததால் இவனுக்கு இருந்த இடமெல்லாம் மார்க்கட் ரேட்டை விட இரண்டு, மூன்று மடங்கு சம்பளம் என 250இலிருந்து 5000 வரை இன்று உயர்ந்தது. கடந்த 15 வருஷமாக இவன் வேலை செய்த இடங்கள் பல எங்குமே நாணயமானவன் என்று பெயரெடுத்திருக்கிறானே தவிர திறமைசாலி எனப் பெயர் வாங்கவில்லை. அத்துடன் இந்த நாளில் முக்கியமாகத் தேவைப்படுவது லேபர் மேனேஜ்மெண்ட். இவனுக்கு அது வராது. இராசியோ, இவன் போகுமிடமெல்லாம் ஸ்டிரைக் வரும். முதலாளியிடம் விஸ்வாசமில்லாதவன் எனப் பெயர். வேலை என்று செய்தால் எவ்வளவு செலவாயிற்று, எவ்வளவு வந்தது, இலாபமா, நஷ்டமா எனக் கணக்குப் போடுவதில்லை. பொதுவாக வேலை செய்யத் தெரியும். பலனைக் கொண்டு வரமுடியாது என்றால் இவன் சூப்பர்வைசராக இருக்க முடியாது, தொழிலாளியாகவே இருக்க முடியும், இருப்பதோ மானேஜர் பதவி.

எந்தக் கம்பனியில் வேலை செய்தாலும் அங்குத் தன்னை முதலாளி ஸ்தானத்தில் மனதால் வைத்துக் கொள்வான். கம்பனியில் நடக்கும் அவ்வளவு வேலைகளையும் தானே செய்ததாகச் சொல்வான். எவர் ஒரு வேலையைச் செய்தாரோ அவரிடமே தான் அந்த வேலையைச் செய்ததாகப் பேசுவான். பதினைந்து வாக்கியம் பேசினால் 'நான்' 20 முறை வரும். இவனுக்குச் சில திறமைகள் உண்டு, சில குறைகள் உண்டு. தன் திறமைகளைக் கருதுவதுபோல் தன் குறைகளைக் கருதினால் அவற்றை விலக்க முன் வந்தால், இன்று இவனே ஒரு முதலாளியாயிருக்கலாம், அல்லது இவனுக்கு ஏற்பட்ட தொடர்புகளால் இதைப் போல் இருமடங்கு சம்பளம் பெறலாம்.

நான் M.A. படித்தவன்.

நான் நாணயமானவன்.

நான் கெட்டிக்காரன்.

என் நண்பர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

நான் அந்த வேலைக்குப் போனால் ஏராளமாகச் சம்பாதித்திருப்பேன்.

நான் உழைப்பாளி.

எனக்கு அதிகம் கொடுக்க வேண்டும்.

நான் மட்டுமே இங்கு உழைக்கின்றேன் (என்று இவன் நினைக்கும்பொழுது இதற்குப் பதிலாக),

நான் போன இடமெல்லாம் ஸ்டிரைக்.

நான் எடுத்த காரியம் எதுவும் முடியவில்லை.

நான் முடித்த காரியம் எதுவும் இலாபம் தரவில்லை.

மானேஜருக்குரிய தைரியமில்லை.

லேபர் மானேஜ்மெண்ட் எனக்கு வாராது.

திட்டமிட்டு (planned work) வேலை செய்ய எனக்குத் தெரியாது.

என்னை எந்தப் பெரிய கம்பனி முதலாளியும் பார்த்தபொழுது பிரியப்படவில்லை.

நான் ஓர் இடத்தில் 3000ரூபாய் பெற்றுச் செய்ய முடியாததை 1500ரூபாய் சம்பளக்காரன் அழகாகச் செய்கிறான் எனச் சிந்தித்தால் M.A. படிப்பிருப்பதால் இவனுடைய குறைகள் அனைத்தையும் விலக்க முடியும். குறைகளை விலக்கலாம்.  Attitude மனப்போக்கு, குறையை அறியாதது, தன்னை முக்கியமாகக் கருதுவது.

சூட்சுமம் திறமையில் இல்லை, மனப்போக்கில் உள்ளது.

ஒரு சட்டத்தைக் கடுமையான முறையில் அமுல் செய்யாவிட்டால் நடைமுறையையே சட்டமாக மனம் கருதும். அது விவரமில்லாதவர் செயல்.

********

போன் பில் கட்டாவிட்டால் ஓரிரு நாள் தாமதித்தும் பெற்றுக் கொள்வார்கள். நிலத்திற்கு வரி (வாய்தா)நேரத்தில் கட்டாவிட்டாலும் ஓரிருமாதம் கழித்தும் பெற்றுக்கொள்வார்கள். பள்ளியில் மாணவனுக்கு 75% வருகையில்லாவிட்டாலும் பரீட்சைக்கு அனுமதிப்பார்கள். நடைமுறையில் சட்டத்தைத் தளர்த்துவது இதுபோல் பல்வேறு இடங்களிலும் நடப்பதுண்டு. இதையே ஒரு "சட்டமாக'' மனம் நினைப்பது சராசரிக்குக் கீழேயுள்ள மனிதன் மனநிலை. படித்தவர், உயர்ந்தவர், முன்னேற்றத்தை விரும்புபவர், முன்னோடியாகத் தம்மைக் கருதுபவர், இலட்சியவாதி ஆகியவருக்கு இம்மன நிலை சரி வாராது. அவர்களைச் சராசரி மனிதராக்குவதுடன் மேலும் கீழே கொண்டு போகும்.

எந்த நிலைக்குரிய நடைமுறையை உன் மனம் ஏற்கிறதோ அந்நிலையை நீ அடைவாய் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

உன் வலிமை எது என்று அறிந்து அதைப் பாராட்ட வேண்டும். உன் பலஹீனம் எது என அறிந்து அது வெளிப்படும் திட்டங்களை நீ விலக்க வேண்டும்.

*********

நிர்வாகத் திறமையில்லாதவர் மேனேஜராகப் போவது, பேசத் தெரியாதவர் ஆசிரியராகவோ, வக்கீலாகவோ, அரசியல்வாதியாகவோ போவது சரியில்லை என எவரும் அடுத்தவருக்குச் சொல்ல வேண்டாம் என்றாலும், பேசத் தெரியாத வக்கீல், நிர்வாகத் திறமையில்லாத மேனேஜர் பலரை நாம் அறிவோம்.

முதல் ராங்க் வாங்கியவருக்குத் தம் திறமை தெரியாமல் குமாஸ்தா வேலைக்குப் போனார். முதல் ராங்க்கிற்குள்ள மரியாதையை எடுத்துச் சொன்ன பிறகு பேராசிரியர் வேலைக்குப் போய் பிரபலமானார். இவருடைய தொழிலில் உள்ள சிறப்பெல்லாம் இவரைத் தேடி வந்தது. இவர் தேடிப் போனால் கிடைத்தது. தம் திறமையைத் தாம் அறியாதவர். இவர் தொழிலில் சிறப்பு வந்த பின் இவருக்கு ஒரு யோசனை வந்தது. தொழில் செய்யப் பிரியப்பட்டார். அன்று தம் திறமையை அறியாததுபோல் இன்று தம் குறையை அறியவில்லை. தகப்பனார் வாழ்நாள் முழுவதும் கடனில் கழித்தவர். வாங்கிய ஓர் இடத்திலும் திருப்பிக் கொடுத்ததில்லை. பாட்டனார் கடன் பெற்றுத் திவாலானார். தம் குடும்பத்திற்குக் கடன் குறை, அதனால் தமக்குக் கடன் வாங்கும் விஷயம் குறையாகும் என அறிய முடியவில்லை. கடன் பெற்று தொழில் ஆரம்பித்து, கடன் மலையாகப் பெருகி, கர்மம் தன் வலிமையை நிலை நாட்டியது.

இவர் படித்ததற்கு மேல் படிக்க முடியாது. இவர் படும் கஷ்டத்திற்கு மேல் கஷ்டப்பட முடியாது. இவ்வளவு அனுபவம், படிப்பிருந்தும் இந்தச் சாதாரண விஷயங்கள் நடைமுறையில் விளங்குவதில்லை என்பதே நாம் பார்ப்பது

இந்தக் கண்ணோட்டத்தில் நாம் நம் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால், இப்படிப்பட்ட உண்மைகள் வெளிவரும். எளிமையாக எல்லோரும் அறிந்த உண்மை எனப்பட்டாலும் நடைமுறையில் பெரும்பலன் தரக்கூடியது.

விஷயமில்லாத அதிகாரத்தை வற்புறுத்துவது எதிர்காலத்தில் தோல்விக்கு வித்தாகும்.

**********

பெற்றோருக்குப் பிள்ளைகள் மீதும், முதலாளிக்குத் தொழிலாளி மீதும், அதிகாரிக்குச் சிப்பந்தி மீதும், பாங்க்குக் கடன் பெற்றவர் மீதும் அதிகாரம், உரிமையுண்டு. அவற்றை எல்லா இடங்களிலும் எல்லா அளவுகளிலும் செலுத்த முடியாது. செலுத்த முயலாமலிருப்பவர் குறைவு. செலுத்துபவருக்கு எதிர்காலத் தோல்வி நிச்சயம்.

ஹாஸ்டலுக்குப் போகும் பையனைப் படிக்கச் சொல்லி புத்திமதி சொல்லலாம். தினமும் 3மணி படிக்க வற்புறுத்தலாம். எப்படி அதை நிறைவேற்ற முடியும்? நிறைவேற்ற முடியாத ஓர் உரிமையை அளவு கடந்து வற்புறுத்தினால் பையன் பொய் சொல்ல ஆரம்பிப்பான். அதனால் பிள்ளைக்கு வெறுப்பு வரும். தகப்பனாருக்கு எதுவும் புரியவில்லை என்பது, அவனுக்குப் புரிந்து விடும்.

சர்க்கார் தொழில் அதிபர்களை உண்மையான கணக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லலாம். வற்புறுத்தினால் எப்படி அதை நிறைவேற்றுவது? நடைமுறையில் கோடிக்கணக்காக இலாபம் சம்பாதித்து ஆயிரக்கணக்காக வரி கட்டுபவர் தப்பித்துக் கொள்வார்கள். இலட்சக்கணக்கில் வியாபாரம் செய்து ஆயிரக்கணக்காகச் சம்பாதிப்பவன் வருமானவரி ஆபீஸுக்கு ஆயிரம் நடை நடக்க வேண்டியிருக்கும்

இலங்கை அகதிகளை வேலைக்கு வைத்துக் கொண்டால் தலைக்கு இவ்வளவு எனக் கடன் கொடுப்பதாக ஒரு பாங்க் திட்டம் கொண்டு வந்தது. திட்டத்தின் நிபந்தனைகளில் ஒன்று, கடனைத் திருப்பிக் கொடுத்த பின்னும் அகதிகளை நிரந்தரமாக வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது. கடனைத் திருப்பிக் கொடுத்த பின் பாங்க் எப்படி இந்த நிபந்தனையை அமுல் செய்யும்? ஏன் இல்லாத அதிகாரத்தைச் செலுத்த முயல்கிறார்கள்? நடந்தது என்ன? இந்தப் பாங்கில் கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் அகதிகளைக் கொஞ்ச நாளைக்குத்தான் வேலையில் வைத்திருந்தார்கள்.அகதிகளே ஓடி விடுவது வழக்கம். தொழில் அதிபர்கள் பணம் வந்தவுடன் அகதிகளைத் துரத்தி விடுவதும் வழக்கம்.

இல்லாத அதிகாரத்தைச் செலுத்த முயன்றால் இருக்கும் வசதியும் போய்விடும்.

இந்த ஒரு குணத்தை அழிப்பது திறமையானவர் உயர்ந்த அளவுக்கு நம்மை உயர்த்தும். குமாஸ்தா ஆபீசராகலாம், குத்தகைக்காரன் நிலம் சொந்தமாக வாங்கலாம்.

********

எந்தக் குறையை அகற்றினாலும் முன் வரலாம். ஆனால் இந்தக் குணத்தை அழித்தால் அதிகமாக முன்னுக்கு வரலாம். ஏனெனில் இது ஒரு வக்கிரமான குணம். முழு வக்கிரம் இல்லை என்றாலும் வக்கிரம் (perversity) கலந்தது. வக்கிரபுத்தி சராசரிக்குக் கீழுள்ளது. நமக்கு எத்தனைத் திறமையிருந்தாலும் இதுபோன்ற ஒரு குறையிருந்தால் நாம் அதிகபட்சம் சாதிப்பதை இக்குறை நிர்ணயிக்கும். அதாவது இக்குறை மட்டுமிருந்தால் என்ன சாதிக்க முடியுமோ அதையே சாதிக்கலாம். இதை அழித்தால், மற்ற எல்லாத் திறமைகளுக்கும் உயிர் வந்து விடும். நம் பொதுவான நிலையுயரும்.

ஒரு பிரச்சினை வரும் பொழுது அதற்குரிய தீர்வு நமக்கு ஏற்கனவே தெரியுமா என யோசிக்க வேண்டும். தீர்வு ஏற்கனவே தெரிந்திருக்கும்.

**********

 

பாங்குகளில் புதிய திட்டம் ஒன்று வந்தது. இது இந்தியாவுக்குப் பெரும்பலன் தரும் என நினைத்தோம். இதன் விவரம் அறிய பழைய நிதிமந்திரியைக் கலந்தாலோசித்தோம். ரிஸர்வ் பாங்க் கவர்னரைக் கேட்டால் எல்லா விவரங்களும் தெரியுமல்லவா? ஏன் அவரை நேரில் போய்க் கேட்கக்கூடாது என்றார் நண்பர். Banking பாங்க் நடைமுறைப் பாடப் புத்தகங்களில் இது இருக்கலாம். அமெரிக்க பாங்க்கிங் பேராசிரியரைக் கேட்கலாம், அவர்கள் தெளிவாகச் சொல்வார்கள் என்றார். அந்தப் புத்தகங்கள் சென்னை லைப்பிரரியில் இருக்கும் என்று தோன்றியது. இவை புதிய திட்டமானாலும் பாங்க்குகள் இவற்றை 50 ஆண்டாக அறியும். இப்பொழுதே நடைமுறைக்கு எடுத்துக்கொண்டன என்பதால் கடந்த 50 ஆண்டுகளில் வெளிவந்த எந்த பாங்கிங் புத்தகத்திலும் இது இருக்கலாம் என ஒருவர் சொன்னார். அப்படியானால் என்ஸைக்குளோப்பீடியாவில் பார்க்கலாம் என்று வேறொருவர் சொன்னார். பார்த்தபொழுது விவரங்கள் அனைத்தும் விளக்கமாகப் பக்கம் பக்கமாக எழுதியிருந்தது. என்ஸைக்குளோபீடியா என் எதிரில் உள்ளது. என் பக்கத்தில் உள்ள புத்தகத்திலிருப்பதை அறிய முடியாமல் மனம் நாடெங்கும் சஞ்சாரம் செய்கிறது.

எந்தப் பிரச்சினை வந்தாலும் பெரும்பாலும் நமக்கு முக்கால் பங்கு தீர்வு தெரிந்திருக்கும் வாய்ப்புண்டு. யோசனை செய்தால் பலன் தரும்.

வந்த விஷயம் பிரச்சினையானது, அதற்குத் தீர்வில்லை என்பதாலில்லை. அவ்விஷயத்தை நாம் கூர்ந்து கவனிக்காததால் அது பிரச்சினையாயிற்று என்று பொருள். அது போன்ற பல பிரச்சினைகளிருப்பதால் நமக்கே தீர்வு தெரிந்திருக்கும் வாய்ப்புண்டு.

முதலாளி ஸ்தாபனம், சந்தர்ப்பம் நமக்கு அளவு கடந்த சுதந்திரம் கொடுப்பதுண்டு. அதை நம் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும். அட்டூழியம் செய்யக்கூடாது.

********

ரூ.100க்கு சில்லரை கேட்டால் 101ரூபாய் கொடுக்கும் சந்தர்ப்பம் உலகில் இல்லை. இதை விளக்கும் வகையில் உள்ள பழமொழி 'வினை விதைத்தவன் வினையறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்'. 25 நிமிஷத்தில் வேகும் அரிசியை 24 நிமிஷத்தில் எடுத்துவிட்டால் அது அரிசியாக இருக்கும். 26நிமிஷத்தில் எடுத்தால் சாதம் களிபோலிருக்கும். நாலு பேர் பேசும்பொழுது ஒருவருக்குக் கிடைக்கும் மரியாதை இதேபோல் அவர் கொடுக்கும் மரியாதையால் துல்லியமாக நிர்ணயிக்கப்படுகிறது. சற்று அதிகமாகவோ குறை வாகவோ இருக்கும் அமைப்பு வாழ்வில் இல்லை.வாளால் மரத்தை அறுப்பவன் 3மணி நேரம் வேலை செய்த பின் மரம் முடிவாக அறுபட ஒரு நிமிஷம் இருக்கும்பொழுது நிறுத்தினால் அவன் மீண்டும் வந்து அந்த ஒரு நிமிஷ வேலையைப் பூர்த்தி செய்தால்தான் மரம் பிளவு படும். வாழ்க்கை அமைப்பு மயிரிழையும் விட்டுக் கொடுப்பதாக இல்லை.

எந்த ஸ்தாபனத்திலும் சுதந்திரம் கொடுப்பது அதாவது இடம் கொடுப்பது என்பதில்லை. 5மணிக்கு ஆபீஸ் முடிந்தால் 3நிமிஷம் முன்னதாக வெளியே போக முடியாது. சுதந்திரம் ஒருவருக்குக் கிடைக்கிறது எனில் அதை அன்னை "அருள்' என்கிறார். ஒவ்வொரு வேளையும் சொந்த வீட்டில் சாப்பாட்டைக் கேட்டுச் சாப்பிட வேண்டியவருண்டு. யாசகமாகப் பெறுவதுபோல் பெறும் வீடுண்டு. அன்பாகத் தேடி அளிப்பதுண்டு. வீட்டிலிருப்பவருக்கு உணவு, தின்பண்டம், இனிப்பு, பக்ஷணம் கொடுப்பதை ஓர் இனிமையான கடமையாக ஏற்றுக் கொண்டு யாருக்கு எது பிடிக்கும், எப்பொழுது எது தேவை எனக் கவனித்து, கேட்காமல் அளிக்கும் குடும்பம் உண்டு, குடும்பத்தில் இதுபோன்ற கவனிப்பும், அதனால் ஏற்படும் சுதந்திரமும் பார்க்கலாம்.

வேலை செய்யுமிடத்தில் இதே சுதந்திரத்தைக் காண்பதரிது. அது அமைவது அருள். அருளைத் தன் ஆன்மாவின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உபயோகப்படுத்த வேண்டும். தான் நலம் பெறப்பயன் படுத்துவது சரி. இது ஆயிரத்தில் ஒருவருக்குண்டு. இதை அனுபவித்தவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். நல்ல முறையில் பயன் படுத்தியவர்களை நான் கண்டதில்லை. அட்டூழியம் செய்தவர்களையே கண்டேன். இப்படிப்பட்டவர்கள் சிலர் செய்தவை:

 

  • அன்னையின் காலடியிலிருந்துகொண்டே பகிரங்கமாகத் தொழில் செய்து சொந்தமாகச் சம்பாதித்தார் ஒருவர்.
  • 15 வருஷம் பகலும், இரவும் படுக்கையில் வாழ்க்கையை சோம்பேறியாகக் கழித்தார் ஒருவர்.
  • வீட்டு வேலைக்காரி 20 நாள் மாதத்தில் வருவதில்லை.
  • முதலாளிக்குத் துரோகம் செய்தவரொருவர்.
  • வேலை செய்யுமிடத்தைவிட்டு காலை 6மணிக்குப் போய் இரவு 8 1/2 மணிக்கு வருவதே அன்றாடக் கடமையாகக் கொண்டவர் ஒருவர்.
  • முதலாளிக்கு எந்த எந்த வகையில் நஷ்டம் ஏற்படுத்தலாம் என்று யோசனையை மேற்கொண்டு நிறைவேற்றியவர் ஒருவர்.
  • காரிலேயே ஏறாதவர், சந்தர்ப்பம் வந்தவுடன் தினமும் 6மணி காரில் கழித்தார்.
  • பிரம்மச்சரியத்தை மேற் கொண்டவர் பெண்களை நாடினார்.
  • குருவுக்கு மிஞ்சிய சிஷ்யரானார்.
  • தம்மை உயர்த்தியவர் தமக்கு அடங்கவேண்டும் எனக் கருதினார்.
  • முதலாளியிடம் தினம் ஒரு மணி உபதேசம் செய்தார்.
  • தினசரி 50 பொய்களைச் சுதந்திரமாகப் பேசினார்.

அன்னை இந்தச் சுதந்திரத்தை அனைவருக்கும் அவரறியாமல் அளிக்கிறார். அதை அறிந்து அதை நம் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டியது நம் கடமை

தொடரும்.

********

 

ஜீவிய மணி

 

தூய்மையான மனம், தூய்மையான ஆன்மா  மூலம் இறைவனை அடையும்.

Comments

10th HEADINGPara No.4 -

10th HEADING

Para No.4 - between 5th and 6th lines extra space is there.

12th HEADING

Between the heading and 1st paragraph extra space is there.

13th HEADING

Para No.1 - between 2nd and 3rd lines extra space is there.

 Para No.2 - Line No.5 - வேண்டிய வருண்டு - வேண்டியவருண்டு

Para No.3 - Line No.2 - முன்னேற்றத் திற்குப் - முன்னேற்றத்திற்குப்

ஜீவிய மணி - ஆன்மாமூலம் - ஆன்மா மூலம்

8th HEADINGPara No.1, Line

8th HEADING

Para No.1, Line No.3 - பள்üயில் - பள்ளியில்

Para No.1, Line No.6 - நினைப் பது - நினைப்பது

between last line and 9th heading extra space is there.

9th HEADING

****** not in the right space

In para No.1 - 1st , 4th and 5th lines are beginning with extra space.

Para No.1, Line No. - அரசியல்வாதியா கவோ - அரசியல்வாதியாகவோ

Para No.4 - between 2nd and 3rd lines, extra space is there. 

 

7th HEADINGPara No.2, Line

7th HEADING

Para No.2, Line No.7 - பெயரெடுத்திருக் கிறானே-பெயரெடுத்திருக்கிறானே

Para No.2, Line No.8 - நாüல் - நாளில்

Extra space between 14th and 15th lines.

Para No.3, Line No.5 - "நான்'  - "நான்" 

Para No.3, Line No.9 - முதலாüயாயிருக்கலாம், - முதலாளியாயிருக்கலாம், 

Bullet Points -

Extra space is there in between 14th and 15th points.

Point No. 16 Line No. 4 - ஆற்ற்ண்ற்ன்க்ங் - Attitude

4th HEADINGPara No.1, Line

4th HEADING

Para No.1, Line No.8 - "மாற முடியாது என்று நம்பினால் மாற முடியாது.முடியும் என்று முயன்றால் முடியும்"

Para No.2, Line No.2 - "முடியும்"

5th HEADING - in between 2nd and 3rd lines extra space is there.

6th HEADING

நண்பர்கள் எப்படிச் சேருகிறார்கள், எப்படி விலகுகிறார்கள் என்பது முக்கியமான விஷயம்

(Leadership) தலைமையுள்ளவனைச் சுற்றிப் பலர் இருப்பார்கள்.

(Pleasant personality) இனிமையானவரைஅனைவரும் நாடுவார்கள்.

பணம், அந்தஸ்து, திறமையுள்ளவர்க்குப் பல நண்பர் களிருப்பார்கள்

3rd point - நண்பர் களிருப்பார்கள் - நண்பர்களிருப்பார்கள்

between 4th and 5th points extra space is there

கீழ்க்கண்டவற்றை அவரால் பயில முடியுமானால் அது நடக்கும்.

  1. * * * * 

     2nd point - Line No.2  - குறைத் துப் - குறைத்துப்

  between 8th and 9th points extra space is there.

In the above article there is

In the above article there is no space in between the sentences after the full stops.

2nd heading 

Para No.1,  Line No. 7, பனி யாக்கள் - பனியாக்கள்

Para No.2, Line No.10 and 11 - extra space in between the lines

3rd heading

**** missing

In between 2nd and 3rd paragraphs extra space.

 

 



book | by Dr. Radut