Skip to Content

1. பேதையும் பதரே

பேதையும் பதரே

‘தன் ஆயுதமும் தன் கைப்பொருளும் பிறன் கையில் கொடுத்த பேதையும் பதரே’ என்ற தமிழ்ச் சொல் பொன்னானது. நடைமுறையில் இதுவே வேத வாக்கு. இதற்கு மாற்றான அனுபவம் வாழ்விலில்லை. நண்பனிடம் கொடுத்த முதல், மனைவியிடம் கொடுத்த பெட்டிச் சாவி, கணவனிடம் கொடுத்த மனைவியின் சொத்து பெற்றவருக்கே பயன்படும். சமர்ப்பணம் இந்த பழம் பெரும் உண்மையைக் கடந்தது. பேதையையும், பதரையும் மனிதனாக்குவது சமர்ப்பணம்.

ஸ்தாபனத் தலைமைக்குக் கொடுத்த முழு அதிகாரம், கூட்டாளியிடம் வாய்மொழியாகச் செய்த ஒப்பந்தம், ஏமாற்றுபவரிடம் கொடுத்த பெருமுதல் போன்ற நிகழ்ச்சிகளில் தமிழ் நாட்டுப் பழம் பெரும் அனுபவம் உண்மை என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறது. நிகழ்ச்சிகள் சமர்ப்பணம் வந்தால் நிலைமை மாறும் என்பது உண்மை.

ஸ்தாபனத் தலைவர் முழு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவேன் என்று கூறியவர், சமர்ப்பணத்தால் நிலைமை மாறியதால், தன் தலைமைப் பதவியை இராஜினாமா செய்தார்.

சமர்ப்பணம் பெரியது. பேதையையும், பதரையும் மனிதனாக்கும். ஏமாற்ற முயன்ற கூட்டாளியும், மனம் பெற்ற நம்பிக்கைக்குப் பாத்திரமில்லாதவரும் தங்களை மீறி, தங்கள் சுபாவத்தை மீறி, சமர்ப்பணத்திற்கு உட்பட்டது அன்பர் வரலாறு.

*******



book | by Dr. Radut