Skip to Content

09. அஜெண்டா

அஜெண்டா

பயம் என்பது செய்யும் காரியம் பெரியது

P.206, Vol.IV

பொதுவாக நம் பெரியவர்கள் நல்லதைப் பாராட்ட வேண்டும் என்பார்கள். கெட்டதை விலக்க வேண்டும்என்பது அவசியமாதலால், நாம் அதை வலியுறுத்துகிறோம். சூட்சுமத்தில் கெட்டதை ஆழ்ந்து நினைக்கும்பொழுது - விலக்குவதற்காக நினைத்தாலும் - கெட்டது நம்முள் வந்து அதன் வேலையைச் செய்யும். அதனால்,

கெட்டதை விலக்குவதைவிட நல்லதை ஆழ்ந்து

நாட வேண்டும் என்பது நம் மரபு பெற்ற விவேகம்.

1956க்குப்பின் நரகம் அழிந்துவிட்டது.
1973க்குப்பின் சொர்க்கம் பூமிக்கு வந்துவிட்டது.

உலகப் போருக்குமுன் பூமியின் சூழல் இருண்டு, தாழ்ந்து இருந்தது. அப்பொழுது சூழலில் ஆபத்து ஏராளமாக இருந்தது. இளைஞர்களில் பாதிப்பேருக்கு மேல் தவறான பாதையில் சென்றார்கள். அவர்களில் பெரும்பாலோர் அழிந்தனர். இன்று அந்த இருள் இல்லை. தவறாகப் போனவர் அழியும் சூழல் 1940க்குமுன். அந்தநாளில் எந்தஊரிலும் விரைவாக முன்னுக்கு வந்த இளைஞர்களைப் பற்றிக் கேள்விப்பட முடியாது. அரிபொருள். இன்று நல்ல சூழல் மலிந்து, விரவி, செறிந்திருப்பதால் (positive) முன்னுக்குவரும் அநேக இளைஞர்களைப் பற்றிக் கேள்விப்படு- கிறோம். இது உலகத்திற்குப் புதியது. இந்தியாவிற்குப் புதியது. நமக்கும் புதிய அனுபவம். அன்று இளைஞர்கள் பயத்தால் வளர்க்கப்பட்டார்கள். "நாலு பேருக்கு பயந்து குடும்பம் செய்ய வேண்டும்'' என்பது சொல். சிறுவன் துடியாக இருந்தால் பாராட்டமாட்டார்கள். "கொஞ்சமாவது பயமிருக்கிறதா?'' எனக் கண்டிப்பார்கள்.

  • அன்று பயம் வளர்க்கப்பட்டது.
    பயம் உலகை அழித்தது.
    அதில் முக்கியமான பயம் "நரகம்''.
    தைரியமானவரும் பயப்படுவது நரகத்திற்கு.
  • பெரிய மதபீடங்களில் நரகம் முக்கியக் கருத்து.
    ஆனால், அம்மதத் தலைவர்கள், "நரகம்என ஒன்றில்லை. அதற்குத்தான் பொதுமக்கள் பயப்படுவார்கள்”என்று கருதினார்கள்.
  • இன்று மக்களுக்குத் தைரியம் வந்துவிட்டது.
    கம்பனி வேலைக்குப் போகும் பெண்ணின் மகன் இன்ஜினீயரிங் படிக்கிறான்.
    அந்த நாளில் கற்பனையும் செய்ய முடியாது.
  • நாட்டில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டது எனில், அது தைரியமாகத் தென்படுகிறது.
    1960 வாக்கில் இந்தப் புதிய தைரியம் ஸ்டிரைக்காகக் கல்லூரிகளிலும், பாக்டரிகளிலும் பரவியது. 1 மாதம் நடந்த கல்லூரியும் உண்டு. ஓராண்டில் ஒரு மாதம் நடந்தால் என்ன செய்ய முடியும்? அந்த நாளில் தொழிற்பேட்டைகளில் 1/3 பாகம் கம்பனிகள் மூடப்பட்டன. இன்று நிலை மாறியுள்ளது.
  • பயம் அழிந்து, தைரியம் வருவது வறுமை அழிந்து, சுபிட்சம் வருவதாகும்.
  • பயம் நம் வாழ்வில் அடியோடு அழிய வேண்டும்.

    அது அழிந்ததற்கு நிச்சயமான அடையாளம் சந்தோஷம், காரணமற்ற சந்தோஷம்.

******



book | by Dr. Radut