Skip to Content

03. “ஸ்ரீ அரவிந்தம்” - லைப் டிவைன்

 

IX.The Pure Existent

P. No. 75

Para 8

If this Existence is, it is absolute

இது சத் என்றால், அது தூய்மையானது

It is indefinable, infinite, timeless, spaceless

விவரிக்கவொண்ணாத, முடிவற்ற, காலத்தைக் கடந்த இடத்தைக் கடந்தது

It is pure absolute.

இது தூய்மையான தூய்மை

It then is necessary

இது அவசியமாகிறது.

Being absolute it has no quality.

தூய்மை என்பதால் குணங்களில்லை.

Nor has it any quantity

அதனால் அளவில்லை

It cannot be thus summed up

எதனாலும் இதைக் கூற முடியாது.

Nor can it be said to be a combination of qualities

பல குணங்கள் சேர்ந்தது எனவும் சொல்வதற்கில்லை.

It is not an aggregate of forms.

ரூபங்களின் தொகுப்புமில்லை

It is not a formal substratum of forms

ரூபங்களின் அஸ்திவாரமுமில்லை

When all these go, it would remain.

 

It is above forms, qualities and quantities.

குணம், அளவு, ரூபம், அடிப்படை போன பின்னும் இது இருக்கும்

அவற்றையெல்லாம் கடந்தது.

  

It is so conceivable

அப்படி நாம் இதைக் கூற முடியும்.

Rather it can only be conceived so.

அப்படி மட்டுமே கூற முடியும்.

It is so, as it is behind the phenomena.

நிகழ்ச்சிகளின் பின்னணி என்பதால் இது இப்படியாகிறது

Thus, it exceeds them

எனவே அவற்றை இப்படிக் கடந்து நிற்கிறது.

That is why it is without them.

அதனால்தான் அவையின்றித் தோன்றுகிறது

They all pass into it and cease to be form, etc.

அத்தனையும் இதனுள் நுழைந்து மறையும்.

They emerge out of it as form, etc.

அதனுள்ளிருந்து மீண்டும் எழும்

They do not pass away into one form.

அவை ஒரு ரூபத்தினுள் அழிவதில்லை

Nor do they do so into one quality or one quantity

ஒரு குணம், ஒரு அளவிலும் அவை மறைவதில்லை.

This is the basis for all the rest. 

(For there is none such)

எல்லாவற்றிற்கும் அடிப்படை இதுவே. (வேறு அடிப்படைகளில்லை)

They all pass into something.

அனைத்தும் ஒன்றில் மறைகின்றன.

It cannot be defined by any of these forms.

வேறு சொற்களால் விவரிக்கக் கூடியவை அல்ல அவை.

The movement creates all things.

Some express conditions

சலனம் அனைத்தையும் உற்பத்தி செய்கிறது.

சில நிபந்தனைகளை விளக்கும்.

Others denote appearances.

மற்றவை தோற்றத்தைத் தோற்றுவிக்கும்.

All these pass into That

அனைத்தும் அதனுள் - பிரம்மத்தினுள் - மறைகின்றன.

All these have come out of that.

அனைத்தும் அதனின்று - பிரம்மத்தினின்று - எழுந்தவை.

They all exist for some time

அவை கொஞ்சகாலம் இருக்கின்றன.

During that existence, they cannot be described.

அக்காலத்தில், அவற்றை விவரிக்க இயலாது.

There are no terms in the movement fit for description.

அவற்றை விளக்கும் சொற்களைச் சலனம் உற்பத்திசெய்யவில்லை.

Therefore Existence is Absolute

எனவே சத் புருஷன் பிரம்மம்.

It is unknowable by thought

எண்ணத்தால் அதை அறிய முடியாது.

But we can go back to it.

ஆனால் நாம் அதை அடைய முடியும்.

It can be done in a supreme identity.

உயர்ந்த ஐக்கியம் அதைச் சாதிக்கும்.

That identity transcends knowledge

இவ்வைக்கியம் ஞானத்தைக் கடந்தது

The movement is relative.

Its field is in our sphere

சலனம் உலகம்.

அதன் உலகம் நம் அரங்கம்.

We have a definition of the relative.

உலகத்தை நாம் விளக்கமுடியும்.

All things in the movement contain the Absolute.

சலனத்திலுள்ளவை பிரம்மத்தைக் கண்டவை

They are contained in the Absolute. All things are the Absolute.

அவை பிரம்மத்தினுள்ளிருப்பவை

This is identity in difference.

ஐக்கியத்தில் பேதம் எனப்படும் நிலையிது

Vedanta gives the illustration of ether

வேதாந்தம் ஆகாயத்தை உதாரணமாகக் கூறுகிறது.

Ether contains the phenomena of Nature. Ether constitutes them

பொருள்கள் ஆகாயத்தாலானவை.

Yet ether is so different from them.

இருப்பினும் ஆகாயம் பொருள்களினின்றும் மாறுபட்டது.

Entering into ether they cease to be what they are.

பொருள்கள் ஆகாயத்தினுள் நுழைந்தால் மறைகின்றன.

This example most nearly represents this identity

ஐக்கியத்திற்கு வெகுவான பொருத்தமான உதாரணமிது.

The Absolute and relative have this relation

பிரம்மமும் உலகமும் இதுபோன்ற தொடர்பையுடையன

Here we speak of uncommon things.

வழக்கத்திற்கு மாறானவற்றைப் பற்றி இங்கு பேசுகிறோம்.

We came from something.

நாம் ஒர் ஆதியிலிருந்து வந்தோம்.

We pass back into it.

மீண்டும் அதனுள் நாம் புகலாம்.

This is our language

நாம் பேசுவது மனிதனுக்குரிய மொழி

It is a language of human consciousness

மனித ஜீவியத்தின் வழக்கத்திற்குரிய மொழி இது.

It generates illusions

இதனால் மாயை எழும்.

It is inevitable.

அது தவிர்க்கமுடியாதது

We must guard ourselves against it.

அத்தவறு நடக்காவண்ணம் பாதுகாக்கவேண்டும்

The immutable is eternal.

அசைவற்றது ஆதியும் அந்தமுமில்லாதது.

It is an eternal phenomenon.

காலத்தைக் கடந்த நிலையின் நிகழ்ச்சியாகும்.

The movement emerges from that eternity.

அசைவு அசைவற்ற நிலையிலிருந்து எழுகிறது

It is beginningless

அதற்கு ஆதியில்லை

It is endless.

அதற்கு அந்தமுமில்லை

It is an ever-new movement.

என்றும் இளமை பெற்ற இதயத்தையுடையது

This is the eternity of the Timeless.

காலத்தைக் கடந்த ஆதியும் அந்தமுமற்ற சட்டம் இது.

We live in a temporal eternity.

நாம் காலத்தின் கதிக்கு உட்பட்டவர்கள்.

It is an eternity of Time

இது காலத்தின் முடிவற்ற போக்கு

It is of successive duration.

ஒன்று மற்றதின் பின் ஒழுங்காக ஒழுகும் நியதியாகும்.

Beginning, middle and end belong to it.

ஆரம்பம், மையம், முடிவு இதன் கூறுகள்.

These are ideas of human eternity.

மனிதனின் காலம் முடிவற்று நீள்வதால் எழும் கருத்துகள்.

We are attached to them.

நாம் பற்றியுள்ள பற்று இவை.

This is our notion of life

வாழ்வை மனிதன் வகுத்தது இவ்வழி

Our perceptions are of this plane.

மனித வாழ்வின் அரங்கை மனம் கண்டு ரசிக்கும் பாங்கு இது

We cannot conceive of the Timeless.

காலத்தைக் கடந்த நிலை மனித நிலையைக் கடந்த நிலை.

We are compelled to place the Timeless in Time.

அதனால் காலத்தைக் கடந்தவனைக் காலத்தால் வர்ணிப்பது நமக்கு அவசியம்

 

தொடரும்....

Comments

03. “ஸ்ரீ

03. “ஸ்ரீ அரவிந்தம்” - லைப் டிவைன்

2nd line - tamil translation - repetion of the first line

line 12 - tamil translation is not in correct opposite line.

line 23 - tamil translation is not in correct opposite line. 

line 26 - Some express conditions - Separate line.

line 33 - உற்பத்திசெய்யவில் லை. - உற்பத்திசெய்யவில்லை.

line 40 - tamil translation is not in correct opposite line.

line 43 -பிரம்மத்தினுள்ளிரு ப்பவை - பிரம்மத்தினுள்ளிருப்பவை

line 47 & 48 - ஆகாயத்தாலான வை. - ஆகாயத்தாலானவை.

line 49 - பொருள்களினின்று ம் - பொருள்களினின்றும்

line 52 - தொடர்பையுடைய ன - தொடர்பையுடையன

line 60 - பாதுகாக்கவேண்டு ம்  - பாதுகாக்கவேண்டும்

line 66 - இதயத்தையுடைய து - இதயத்தையுடையது  



book | by Dr. Radut