Skip to Content

06. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

கர்மயோகி

19. வாழ்வு

173/1: மனம் எனில் என்ன என்று கண்டோம். ஆதியில் அது இறைவனுடைய கருவி. மனம் சத்தியஜீவியத் தொடர்புள்ளதால் அதற்கு இறைவனின் அம்சமுண்டு. மனித வாழ்வு மூன்று லோகங்களாக - தத்துவங்களாக - உள்ளது. அவை அஞ்ஞான லோகங்கள். அவற்றுள் உயர்ந்தவன் மனிதன். சச்சிதானந்தம் குறிப்பாக, விசேஷமாகச் செயல்படுவதால் ஏற்பட்டது மனம். சிருஷ்டியின் கடைசி கட்டம் மனம். புருஷனுக்கு பல சக்திகள், பல ரூபங்களுண்டு. அவை அவனே. புருஷன் இந்த ரூபங்களினின்று பிரிந்து நிற்க உதவுவது மனம். அந்த ரூபங்களையும் மனம் பிரித்து விலக்குகிறது. தோற்றத்தில் வேறுபாட்டை ஏற்படுத்துவது மனம். ஜீவாத்மா இத்தோற்ற வேறுபாட்டை உண்மையான வேறுபாடாகக் கருதுகிறது. ஜீவாத்மா சத்தியஜீவியத்திலிருந்து விலகியதால், இது வேறுபாடாகக் காண்கிறது. பிரிவினைஎன்பதன் உற்பத்தி ஸ்தானம் இதுவே. அதிலிருந்து முடிவுவரை நாம் காணும் எல்லாப் பிரிவினைகட்கும் தாய் இதுவே. நாம் இவற்றை முரண்பாடு, எதிர்ப்பு, இரட்டைஎனக் கொள்கிறோம். ஆத்மா அஞ்ஞானத்துள் வந்தபின் ஐக்கியம் இப்படித் தெரிவது இயற்கை. மனம் சத்தியஜீவியத்தினின்று பிரியும் அவசியமில்லை. பிரபஞ்சத்தில் உள்ள வேறுபாடு, நம் கண்ணில் மாறுபாடாகத் தெரிகிறது. மனம் சத்தியஜீவியத்தினின்று பிரிந்தவுடன் ஐக்கியம் அழிகிறது. வேறுபாட்டைப் புலன் குதர்க்கமாக அறிகிறது.

173/2: மனம் பிரபஞ்ச சிருஷ்டிகர்த்தா. நாம் மனத்தை இப்படி ஏற்பதில்லை. நம் மனம் அறிவது வேறு. மனம்என்பது பொருள்களை அறியும் கருவி. சக்தி சிருஷ்டித்தப் பொருள்களை அறிவது மனம். சக்தி ஜடத்தில் செயல்படுகிறது. எனவே, நாம் மனத்தை சிருஷ்டிகர்த்தாஎன ஏற்கிறோம். மனம் இரண்டாம் கட்டத்தில் சிருஷ்டிப்பதாகக் கொள்கிறோம். ஜடம் சிருஷ்டித்த ரூபங்களை மனம் இணைத்துப் புதியதாக சிருஷ்டிப்பதாகக் கொள்கிறோம். விஞ்ஞானம் புதிய விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது. ஜடத்துள் ஆழ்மனம் உள்ளதாக விஞ்ஞானம் கூறுகிறது. சக்தியுள் ஆழ்மனத்தை விஞ்ஞானம் காண்கிறது. இது நமக்குப் புதியதன்று. நாமிழந்த பழைய ஞானமிது. இது கண்டுபிடிப்பன்று, இழந்ததை மீண்டும் காண்பது. எனவே, மனம் வெளிப்படும் பொறுப்பு அதனுடையது. முதலில் மனம் வாழ்வின் ரூபங்களாக வெளிவருகிறது. அடுத்தாற்போல் மனம் மனத்தின் ரூபங்களாக வெளிவருகிறது. முதலில் மனம் தாவர வாழ்வில் உணர்வின் ஜீவியமாக வெளிவருகிறது. அதேபோல் வளர்ச்சி குன்றிய விலங்குகளிலும் மனம் தோன்றுகிறது. இரண்டாவதாக மனிதனிலும் வளர்ந்த விலங்கிலும் வெளிப்படுகிறது. அங்கு எப்பொழுதும் மனப்பான்மை உருவானபடியிருக்கும். ஏற்கனவே, ஜடம் சக்தியின் பொருளுருவம் எனக் கண்டோம். ஜடசக்தி மனத்தின் சக்தி ரூபம்எனக் காண்போம். ஜடசக்தி ஆழ்மன உறுதியின் செயலாகும். உறுதி நம் ஒளியில் செயல்படுகிறது. நாம் ஒளியெனக் கருதுவது இருளும் ஒளியும் கலந்ததாகும். ஜடசக்தி செயல்படுகிறது. அது இருளில் செயல்படுகிறது. நமக்கு அது இருள். நாத்திகவாதிக்கு அது இருளில்லை. அது இருளில் செயல்படுகிறது — அது அஞ்ஞான இருள். நாத்திகவாதி செயல்படும் முறையான அரங்கு அது. அங்கு அவன் ஒளியைத் தேடுகிறான். உண்மையிலும், சாரமான அடிப்படையிலும் அது இருள். நாத்திகவாதம் அதுவே தனக்குரிய அரங்கம்என எப்பொழுதும் கருதுகிறது. ஆன்மீக ஞானம் சிகரத்திலிருந்து செயல்படுகிறது. நாத்திகவாதி இன்று கண்டுபிடித்ததை ஆன்மீகம் அன்றே கண்டுபிடித்துவிட்டது. எனவே, நாம் கீழ்க்கண்டவாறு கூறலாம். பிரகிருதி இந்த ஜட உலகைச் சிருஷ்டித்தது. பிரகிருதி இயற்கை செயல்படும் சக்தி. ஆழ்மனம் இந்த சக்தியாக வெளிப்படுகிறது. நாம் அதை புத்தி எனலாம்.

174/3: மனம் சுயமானதன்று, சுதந்திரம் பெற்றதுமில்லை. இதை நாம் இப்பொழுது கண்டோம். சத்தியஜீவியத்தின் முடிவான செயல் மனம். சத்தியம்-ஜீவியம்என்பது சத்தியஜீவியம். எனவே, மனமுள்ள இடங்களிலெல்லாம் சத்தியஜீவியம் உண்டு. மீண்டும் சத்தியஜீவியம் என்றால் சத்தியம் ஜீவியம் பெற்றதாகும். ஆதலால் பிரபஞ்ச வாழ்வை உண்மையில் சிருஷ்டித்தது சத்தியஜீவியமே. சில சமயங்களில் மனம் அதன் மூலத்தினின்று பிரிந்து நிற்கும். இருந்தாலும் சத்திய ஜீவியத்தின் பெருஞ்சலனம் மனத்திலிருக்கும். சரியான உறவை முறையாக நிலைநிறுத்தும்படி மனம் வற்புறுத்தும். மனத்தின் சலனத்துள் தவிர்க்க முடியாத பலன்கள் உண்டு. அவற்றைப் பரிணாமத்தால் வெளிவரும்படி மனம் கட்டாயப்படுத்தும். விதை, மரம் எனில் சரியான விதையிலிருந்து உரிய மரம் எழுவதை அது கண்காணிக்கும். முரட்டு ஜடத்தையும் முறையாகச் செயல்படும்படி மனம் கட்டுப்படுத்தும். ஜடம் உயிரற்றது. அது இருண்ட ஜடமான சக்தி. கட்டாயத்தால் சட்டம் எழும். சட்டத்திற்குட்பட்ட உலகம் உருவாகும். மனம் பிரபஞ்சத்திலில்லாவிட்டால், பிரபஞ்சம் குழப்பம் நிறைந்ததாகும். இது முடிவான சிறப்பான சட்டமாகாது. அது செயல்படுமிடத்திற்குத் தேவையான சட்டமாக இருக்கும். உதவும் சந்தர்ப்பத்தால் நிர்ணயிக்கப்பட்டதாகும். உயர்ந்த, உச்சகட்ட சட்டமோ, நியாயமோ இல்லை. மனம் சத்தியஜீவியத்தினின்று பிரியாவிட்டால் உயர்ந்த சட்டம், நியாயம் உற்பத்தியாகும். இது இடத்திற்கேற்பட்ட ஏற்பாடு. மனத்தின் செயலுக்குரிய பலனை நிர்ணயிக்கும் சட்டமிது. மனம் பிரிக்கும் தன்மையுடையது. எதிராகப் பிரிந்து நிற்கும் நிலையை உற்பத்தி செய்வது மனத்தின் சிருஷ்டி. ஒரே சத்தியத்தின் முரணான எதிர்த்திருக்கும் பிரிவினையிது. பிரம்ம ஜீவியம் முரண்பாட்டைக் கருதி தானே முரண்பாடாக முடிவு செய்தது. தன்னைப் பாகுபாடு செய்து வெளிப்படுத்த முடிவு செய்தது. அதைச் செயலில் வெளிப்படுத்த முடிவு செய்தது. அம்முரண்பாட்டிலிருந்து முழுஎண்ணத்தைக் கண்டுபிடிக்கிறது. வாழ்வின் பொருளில் அதையே எதிர்த்திசையில் காண்கிறது. சத்திய ஜீவியம் பின்னால் செயல்படுவதால் மனம் இப்படிச் செயல்பட முடிகிறது. பல்வேறு உறவுகளின் சத்தியம் தாழ்ந்த சத்தியம். இது தவிர்க்க முடியாதது. தர்க்கத்தாலும், அதன் எதிரான முறையாலும் மனம் இதைச் சாதிக்கிறது. இதுவே சட்டத்தின் இயல்பு அல்லது உலகில் உலவும் சத்தியம். இது நியாயமான நிலைமை. ஜீவனில் புதைந்துள்ளதை இச்செயல் வெளிக் கொணரும். அதன் மூலத்தில் உள்ள சாரம் இதைத் தாங்கி வருகிறது. இதுவே அதன் இயல்பு, சுபாவம். சுயமான சட்டம், சுயமான ஜீவனில் இவை புதைந்துள்ளன. சுபாவம், சுதர்மம், தெய்வீகஞானம் இதைக் காணும். உபநிஷத சுலோகங்களில் இது உண்டு. சில சொற்களில் இச்சூத்திரம் உலகையடக்கும். சத்புருஷன் ரிஷி, முனிவராகும். எங்கும் நாம் காண்பது அவனே. யுகாந்தகாலமாக தன்னுள் அனைத்தையும் சரியாகச் செயல்படும்படி ஏற்பாடு செய்துள்ளது. அவற்றின் உள்ளுறை சத்தியத்திற்கேற்ப இதைச் சத்புருஷன் செய்கிறது.

175/4: மனம், உயிர், உடலெனும் திரிலோகம் நம் உலகம். இது பரிணாமம் சாதித்த திரிலோகம். மேற்சொன்னதின் முடிவு இது. வாழ்வு ஜடத்துள் மறைந்துள்ளது. மறைந்து அதன் அமைப்புடன் கலந்து கரைந்துள்ளது. அது சிந்தனையாக வெளிவருகிறது. மனம் உயிரில் விழித்த வாழ்வது. மனம் உள்ள இடத்தில் சத்தியஜீவியம் உண்டு. அதுவே உயிருக்கும், ஜடத்திற்கும் உண்மை. இம்மூன்றின் ஆதி சத்தியஜீவியம். சத்தியஜீவியம் அவற்றை ஆட்சி செய்கிறது. அதனால் மனம் பரிணாமத்தால் வெளிவரும் பொழுது சத்திய ஜீவியமும் வெளிவரும். உலகின் அடிப்படையில் நாம் தேடுவது புத்தி. நாமறிந்தவற்றில் உயர்ந்தது புத்தி. புத்தி ஆட்சி செய்வதாக நாம் நினைக்கிறோம். நம் செயல்களையும் சிருஷ்டியையும் புத்தி நமக்கு எடுத்துரைக்கிறது. பிரபஞ்சத்தில் ஜீவியம்என்று ஒன்றிருந்தால், அது புத்தியென நினைக்கிறோம். புத்தி மனத்தின் ஜீவியம். புத்தி அறியும், சிந்திக்கும், பயன்படுத்தும். சத்தியத்தின் ஜீவனாக இருக்க முடியுமளவுக்கு புத்தி செயல்படுகிறது. தன்னைவிட உயர்ந்தது. அதன் பின்னால் ஒரு சக்தியுண்டு. அது ஜீவியத்தின் மற்றோர் உயர்ந்த சக்தியாகும். அது சத்தியத்திற்குரியது. அதனால் நாம் இன்று ஏற்றுக் கொண்ட கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆழ் மனத்தையோ, புத்தியையோ நாம் முடிவாகக் கருதக் கூடாது. அவற்றுள் மறைந்து, கலந்து, கரைந்துள்ள சத்தியஜீவியமே முடிவு. அது மனத்தை முன்வைக்கிறது. உடனே நாம் நேரடியாகச் சந்திக்கும் ஞான-உறுதி அது. அதன் சக்தி ஆழ்மனத்திற்குரியது. அது ஜட சக்தியையும், ஜடத்தின் உறுதியையும் பயன்படுத்தும். ஜீவனின் பொருளில் அது ஆழ்மனமாகும். அது பிரகிருதி. புருஷனின் செயலாற்றும் சக்தி. அது இந்த ஜடவுலகைச் சிருஷ்டித்தது.

175/5: நாம் வாழ்வுஎன இங்குக் கூறுவது உண்மையில் மனம். சக்தி குறிப்பாக சிறப்பாக வெளிப்படுவது மனம். வாழ்வுஎனில் என்ன? அதற்கும் சத்தியஜீவியத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? சத்தியஜீவியம்என்பது சச்சிதானந்தத்தின் உயர்ந்த உன்னதமான திருமூர்த்திகளின் அம்சம். முழு எண்ணத்தாலும், சத்தியம்-ஜீவியத்தாலும் சிருஷ்டியை சுறுசுறுப்பாக அது தொடர்கிறது. இம்முன்றில் எந்த அம்சத்திலிருந்து வாழ்வு எழுகிறது? வாழ்வு பிறக்கும் அவசியம் என்ன? வாழ்வு தெய்வீகமானதா? எதிரானதா? இது சத்தியமா? மாயையா? காயமே இது பொய்யடா, சேலை கட்டிய மாதரை நம்பாதேஎன நாம் தொன்றுதொட்டு கேட்கிறோம். வாழ்வு மாயை, அது ஜன்னி, பைத்தியம் என்கின்றனர். நாம் வாழ்வை விட்டகன்று, பிரம்மத்தில் சாந்திபெற வேண்டும்என்றனர். இது உண்மையானால், ஏன் இது உண்மை? ஏன் பிரம்மம் இந்த பாவத்தை மேற்கொண்டு மனித குலத்தை அதற்கு உட்படுத்தியது? பிரம்மம் தன்னையே தான் தண்டித்துக் கொண்டதாகாதா? அவனுடைய சிருஷ்டிக்கு அவன் செய்யும் பாதகமில்லையா இது? உலகையே ஆட்டிவைக்கும் மாயையின் செயலா இது? அல்லது இதில் தெய்வ தத்துவம் உண்டா? அல்லது இப்படி வாழ்வாக வெளிப்படுவது எது? பிரம்மம்என்று ஒன்றுண்டா? அவனுக்கு இப்படியெல்லாம் செயல்பட முடியுமா? அது உண்மையானால், அவன் காலம், இடமாக வெளிப்பட வேண்டும். கோடிக்கணக்கான ரூபங்கள் வெடித்தெழுவது இவ்வுலகம். பிரபஞ்சத்தின் ஏராளமான உலகங்களை அவை நிரப்புகின்றன.

176/6: வாழ்வு உலகில் செயல்படுவதை நாம் ஆராயலாம். அதன் அடிப்படை ஜடம். பிரபஞ்ச சக்தியின் ஒரு முக்கிய ரூபம் வாழ்வு என நாம் காண்கிறோம். இது தீவிரமான ஆற்றோட்டம். அதன் ஓர் ஓடை எனவும் கூறலாம். இது நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். இது தொடர்ந்த செயல், சக்தியின் லீலை. இது ரூபகர்த்தா. ரூபங்களைத் தொடர்ந்து தூண்டுவதால் அவற்றிற்குத் தொடர்ந்த சக்தியை இது அளிக்கிறது. இவ்வாழ்வை அழிவுமூலம் நிலைநிறுத்துகிறது. அவ்வழிவு இடைவிடாமல் செயல்படுவது. உடலின் பொருளைப் புதுப்பிப்பதுமூலம் வாழ்வு நீடிக்கிறது. நாம் வாழ்வையும், மரணத்தையும் எதிரானவையாகக் காண்கிறோம். இது நமக்கு இயல்பு. இது நம் மனப்பான்மையின் தவறுஎன்பதை விளக்கும். இது பொய்யான எதிர்ப்புகளில் ஒன்று. (அகத்தின் உண்மையில் இது பொய். இது மேலெழுந்த நடைமுறை அனுபவத்திற்கு உண்மை.) தோற்றம் ஏமாற்றுகிறது. பிரபஞ்ச ஐக்கியம் தொடர்ந்து வெளிப்படும். மரணம் உண்மையில்லை. அது வாழ்வின் வளரும் வண்ணம். மரணம் என்பது வாழ்வு விரைவாக அழிவது. ரூபம் பெற்ற அனுபவம் மாறுவது அவசியம். அந்த அவசியத்திற்கு மரணம் உட்பட்டது. உடல் மரணமடைகிறது. அங்கும் வாழ்வு நிற்பதில்லை. ஒரு ரூபத்தின் பொருள் சிதைகிறது. அடுத்த ரூபத்திற்கு அது பொருளாகிறது. இயற்கையின் சட்டங்கள் எங்கும் ஒன்றுபோன்றவை. உடலில், அது பெற்ற ரூபத்தில், மனோ சக்தியின் வடிவம் ஒன்றுள்ளது. அது சைத்தியபுருஷனின் சக்தி. அதையும் இயற்கை அழியவிடுவதில்லை. ஒரு ரூபத்தினின்று அது அடுத்த ரூபம் பெறுகிறது. மாறும் மனோதத்துவத்தால் அது நிகழ்கிறது. உடலுக்கு புத்துயிராக ஆத்மாவைத் தருவது அது. எல்லாம் தன்னைப் புதுப்பிக்கின்றது, எதுவும் அழிவதில்லை.

176/7: உலகத்தை ஊடுருவும் வாழ்வுள்ளதுஎனக் கூறலாம். அது தீவிரச் செயலாற்றும் சக்தியாகும். (இது ஜட அம்சம். இது அதன் புறச்சலனம்.) அது இந்த ஜடப் பிரபஞ்சத்தின் அத்தனை ரூபங்களையும் சிருஷ்டிக்கிறது. இது அழியாத வாழ்வு, அமரவாழ்வு. பிரபஞ்சமே அழிந்தாலும், இது அழியாது. அதனிடத்தில் புதிய பிரபஞ்சத்தை உற்பத்தி செய்யவல்லது. அதை இழுத்துப் பிடித்து நிறுத்தினாலன்றி, அது சிருஷ்டித்தபடியிருக்கும். சலனமற்ற சக்தி, இதைவிடப் பெரிய சக்தியால் மட்டும் அதை இழுத்துப் பிடிக்க முடியும். அப்படியானால் உலகில் ரூபங்களை உற்பத்தி செய்யும் சக்தி வாழ்வு. வாழ்வு இந்த ரூபங்களை ஆதரிக்கவும் செய்யும். அழிக்கவும் செய்யும். பூமியாக வெளிப்படும் வாழ்வது. இது தாவரத்திலும், விலங்கிலும் ஒரே சக்தியாக உள்ளது. விலங்கு, தாவரம் வாழ உதவுகிறது. விலங்கு தாவரத்திலுள்ள சக்தியைச் சாப்பிடுகிறது. தாவரம் விலங்கிலுள்ள சக்தியால் ஆதரிக்கப்படுகிறது. வாழ்வு என்பதெல்லாம் பிரபஞ்சவாழ்வு. வாழ்வு ஜடமாக உருவாகிறது. வாழ்வின் வளரும் வண்ணம் ஜடத்தின் வாழ்வில் மறைந்துளது. மனத்திற்குட்பட்ட உணர்ச்சியாகவும், மனமான உயிராகவும் அது வெளிவருகிறது. இருப்பினும் வாழ்வு அதே சிருஷ்டிக்கும் சட்டமாகும்.

177/8: நாம் வாழ்வெனக் கூறுவது இது இல்லை. நாமறிந்த பிரபஞ்ச வாழ்வின் குறிப்பிட்ட ஒரு சக்தியை நாம் வாழ்வென்கிறோம். அது விலங்கிலும், தாவரத்திலும் மட்டும் வெளிப்படுகிறது. கல், வாயு, உலோகத்தில் அது இல்லை. அது விலங்கின் செல்லில் செயல்படுகிறது. ஆனால் ஜடத்தின் செல்லில்லை. எனவே வாழ்வில் இச்சக்தி செயல்படுவதற்கு ஜீவனற்றவற்றுள் செயல்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நாமறிய வேண்டும். அப்பொழுது நாம் செய்வது நமக்குத் தெளிவு தரும். இந்த வித்தியாசம் குறிப்பாக எப்படி வெளிப்படுகிறதுஎன்பதே கேள்வி. உயிரற்ற பொருள்களை நாம் ஜீவனற்றவைஎனலாம். இவ்விரண்டிலும் இச்சக்தி செயல்படுவதில் வித்தியாசமுண்டு. நாம் அதைக் கண்டுபிடிக்க வேண்டும். புவியில் அப்படிப்பட்ட லோகங்கள் மூன்று. விலங்கினம், தாவரம், ஜடம் ஆகியவை அவை. இது பழைய பாகுபாடு. நாம் விலங்கினத்தைச் சேர்ந்தவர்கள். நமக்கு உயிர் உண்டு. தாவரத்திற்கு உயிர் உண்டு. அவற்றிற்குள்ள வித்தியாசம் என்ன? மேற்கொண்டு என்ன வித்தியாசமுள்ளது? அது வாழ்வுக்கும் ஜீவனற்றதற்கும் உள்ள வித்தியாசம். பழைய மொழியில் அதை உலோகம், கனிப்பொருள் என்கிறோம். விஞ்ஞானம் ரஸாயன உலகைக் கண்டுள்ளது.

177/9: வாழ்வு எனில் நமக்கு விலங்கின் வாழ்வு வாழ்வாகும். நாம் குறிப்பிடுவது இதுவே. வாழ்வு மூச்சு விடும், சாப்பிடும், அசையும், ஆசைப்படும். தாவரத்தில் உயிர் உள்ளதுஎன்கிறோம். இது ஓர் உருவகம். இதற்கு உண்மையில்லை. தாவரத்தில் உயிர் உண்டு. இது ஜடம்என நாம் கருதுகிறோம். இதை தாவரத்தைப்போலவோ, விலங்கைப்போலவோ நாம் கருதுவதில்லை. உயிர்எனில் மூச்சுவிட வேண்டும். நாம் அதை வாழ்வின் மூச்சுஎன்கிறோம். எல்லா மொழிகளிலும் உள்ள நயம் இச்சொல். நம் கருத்தை மாற்றினாலும் சூத்திரம் உண்மை. அதையே வாழ்வின் மூச்சு என்கிறோம். இயல்பாகச் சாப்பிடுகிறோம், நடக்கிறோம், மூச்சு விடுகிறோம். இவை வாழ்வு எழும் வண்ணங்கள், வாழ்வன்று. பட்டம் படிப்புக்கு அடையாளம், படிப்பன்று. இவை சக்தியைத் தூண்டும் முறைகள். இவை தொடர்ந்த இடைவிடாத செயல்கள். இது நம் உயிர். அழிவதும், அழிந்து புதுப்பிப்பதும் உண்டு. இவை நாம் உடலில் வாழ்வதற்கு உறுதுணை. அவை நம் உயிர் வாழும் வகை, உயிர் வளரும் பாணி. இவற்றை வேறு வகைகளால் நடத்திக் கொள்ளலாம். மூச்சு விடுவது மட்டும் உயிரின் வளர்ச்சியன்று. அதுவே நமக்கு, நம் உடலுக்கு உணவளிக்கவில்லை. மூச்சு விடுவதும், இதயத் துடிப்பும் உயிர்வாழ இன்றியமையாதவையெனக் கருதப்படுகின்றன. மற்ற நிபந்தனை- களும் உண்டு. அவற்றைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். இருந்தாலும் உடலில் உயிரிருக்கும். முழுமையாக அது ஜீவியமாகும். இதை நிரூபித்துள்ளனர். இதற்குப் புதிய சாட்சியங்கள் எழுகின்றன. தாவரம் மனத்தால் அறிந்து செயல்படவல்லதன்றென என நாம் நினைக்கிறோம். அதன் வாழ்வு ஜடவாழ்வு. அதன் வாழ்வும், நம் வாழ்வும் ஒன்றே, எந்த மாறுபாடுமில்லை. எல்லா வகைகளிலும் இரண்டும் ஒன்றாகும். நம் வாழ்வு அமைந்தது போலவே தாவரத்திற்கும் அமைந்துள்ளது. தோற்றத்தில் அமைப்பு வேறாகத் தோன்றுகிறது. இதையும் நிரூபித்ததாகக் கொள்வோம். அது உண்மையானால், நாம் நினைப்பனவெல்லாம் அடிப்படையில் மாறும். பழைய நினைவுகள் அர்த்தமற்றவை, பொய்யானவை. அடையாளத்தைக் கடந்து அறிவைச் செலுத்தவேண்டும். அடையாளம் புறம். நாம் பிரச்சினையின் ஆணி வேரைக் காண வேண்டும்.

178/10: சமீபத்தில் செய்த சோதனைகளின் பலன் வந்துள்ளன. இதை நாம் ஏற்கலாம். ஜடத்தில் உயிரிருக்கிறதாஎன்பதைப் பிரதானமாக விளக்கும் சோதனைகள் இவை. ஒரு பெரிய இந்திய விஞ்ஞானி, தாவரத்திற்கு உயிருண்டு என்கிறார். அவற்றால் உணர்ச்சிக்குப் பதிலளிக்க முடியும்என்கிறார். உயிரிருப்பதைத் தடையின்றி அறிவிக்கும் நிரூபணம் அது. குறிப்பாக இது தாவர வாழ்வின் தனி அம்சம். அவர் கண்ட சோதனைப் பலன்கள் இதை விளக்குகின்றன. அதன் எல்லா சூட்சுமச் செயல்களிலும் உயிருண்டு என்ற அறிகுறியுண்டு. இது மறுக்க முடியாத அடிப்படை உண்மையென்பதை நாம் மறக்கக் கூடாது. உயிரிருப்பதற்கு இது நிரூபணம். உணர்ச்சியை ஏற்றுச் செயல்படுவது நிரூபணம். உயிருள்ளதுஎன்பதை இரு வகைகளாகவும் இது நிரூபிக்கிறது. மரணம் எதிரான அறிகுறி. இரண்டையும் இவ்விஞ்ஞானி நிரூபித்துள்ளார். இதை உலோகத்திலும், தாவரத்திலும் அவர் நிலைநிறுத்தினார். இவை இயற்கையின் இயல்பான கருவிகள். இவை நுட்பமான கருவிகள். அவற்றைக் கண்டுபிடிக்கலாம். தாவரமும், உலோகமும் ஒன்றாகச் செயல்படும் இடங்கள் பல. அவற்றையும் இக்கருவிகள் காட்ட முடியும். பெரும் அளவில் நிரூபணம் கிடைக்காமலிருக்கலாம். வாழ்வின் ஸ்தாபன அமைப்பை அதனால் விளக்க முடியாமற்போகலாம். அவையிரண்டும் ஒன்றென நம்மால் காணமுடியும். அப்படியில்லாமலிருக்கலாம். ஒரே அமைப்பு இரண்டிலும் இல்லைஎன அது காட்டலாம். அல்லது எந்த அமைப்புமேயில்லையென அது காட்டலாம். இருந்தாலும் உயிரின் ஆரம்பம் தெரியும். உலோகத்திற்கு உயிருண்டு. அது ஆரம்பக் கட்டத்திற்குரியதாக அமையலாம். இப்பொழுது இதை நாம் ஏற்க வேண்டும். அது மறைந்திருக்கலாம், ஆரம்ப நிலைக்குரியதாக இருக்கலாம். வாழ்வு புவியில் அதன் அடிப்படை அமைப்பாக இருக்கலாம். அல்லது மற்ற ஜட வாழ்வுக்குள்ளிருக்கலாம். அது உலோகம்போல் அமையலாம். நம் ஆராய்ச்சியைத் தொடர்வோம். முடிவுக்குமுன் முடிக்க வேண்டிய அவசியமில்லை. ஆரம்பச் சோதனைகள் தவறினால் நாம் ஆராய்ச்சியை நிறுத்துவோம். இயற்கை மாறாத அனுபவம் தருகிறது. ஆராய்ச்சியைத் தொடர்ந்தால் தாவரத்திற்கும் உலோகத்திற்குமிடையே இடைவெளியில்லையென நிரூபணமாகும். மண்ணுக்கும், உலோகத்திற்கும் இடையே தெளிவான பிரிக்கும் எல்லையென எதுவுமில்லை. அதேயெல்லை தாவரத்திற்கும் உலோகத்திற்குமிடையேயுண்டாவென தொடர்ந்து ஆராயலாம். அணுவுக்கும், அடிப்படைக்கும் இடையே எந்த எல்லையுமில்லை. அவை மண்ணையும், உலோகத்தையும் நிரப்புகின்றன. உலோகமும், மண்ணும் அவற்றை நிரப்புகின்றன. இது படிப்படியான அமைப்பு. ஒவ்வொரு படியும் அடுத்ததைத் தயார் செய்கிறது. அடுத்தாற்போல் வரவேண்டியது முந்தையதினுள் உண்டு. வாழ்வு சர்வத்திலும் வியாபித்துள்ளது. அது இரகஸ்யமாகவோ, வெளிப்படையாகவோ இருக்கிறது. மறைந்திருக்கலாம், பரிமளிக்கலாம். வித்தாகவோ, முறைப்படுத்தப்பட்டோ பிரபஞ்சம் எங்கும் ஊடுருவி, அழியாமல் அமைந்துள்ளது. ரூபமும் அமைப்பும் மாறுகின்றன.

179/11: தொடுஉணர்ச்சிக்குப் பதிலுண்டுஎன விஞ்ஞானம் நிரூபிக்கிறது. இது புறத் தோற்றம். மூச்சு, நடை போன்றவை அவை. சோதனை செய்தவர் ஒரு சிறந்த உணர்ச்சியை உற்பத்தி செய்தார். அதற்குத் தெளிவான பதில் கிடைத்தது. அது அப்பொருளுக்கு உயிரிருக்கிறதுஎனக் காட்டுகிறது. அவை உயிரிருப்பதன் அடையாளம். தாவரம் அளவுகடந்த தூண்டுதலுள்ள சூழலில் உள்ளது. அவை தொகுப்பாக உள்ளன. செடி தொடர்ந்து அவற்றுடன் செயல்படுகிறது. சூழலில் தொடர்ந்து சக்தி செயல்படுகிறது. தாவரத்தின் உயிர் அதை ஏற்றுப் பதிலளிக்கவல்லது. சக்தி சூழலிலின்று எழுகிறது. பதில் சக்தியின் வெளிப்பாடு. இந்தச் சோதனைகள் தவறு என்கின்றனர். சோதனை தாவரத்தின் உயிரைப் பாதிக்கும் எனக் கூறுகின்றனர். உணர்ச்சி, தொடு உணர்ச்சி என்பது வேகம் நிறைந்த சக்தி. இதைச் செடிக்கு அளிக்கிறோம். தீவிரமான செயலின் வெளிப்பாடு இது. இது உணர்ச்சி நிறைந்த செயல்பாடு. அவ்வதிர்ச்சிக்குத் தாவரம் பதிலிறுக்கும். உணர்ச்சியை மலர்ந்து ஏற்றுப் பதில் கூறும். வளரும்முனைப்பு, வாழும் துடிப்பாக இருக்கிறது. இது மனத்திற்குக் கீழ்ப்பட்ட செயல். உயிர்-உடலுக்குரிய அமைப்பிது. ஜீவனின் ரூபத்தில் மறைந்துள்ள சித்-சக்தியாகும் இது. பிரபஞ்சத்தில் தொடர்ந்த தீவிரமான சக்தி செயல்படும். ஜட உலகில் இது பல ரூபங்களை ஏற்கிறது. இது சூட்சுமமாகவும், ஜடமாகவு- மிருக்கும். எல்லா ஜடப்பொருள்களிலும் இது உண்டு, எல்லாப் பொருள்களிலும் உண்டு. உலோகம், தாவரம், விலங்கில் இது உண்டு. இவை ஒரே சக்தி. தீவிரமானது. இது சேமிக்கப்பட்டு, சுறுசுறுப்பாகச் செயல்படும். இதுவே உண்மை. இவையிடையே ஒரு பரிமாறுதல் உண்டு. அதுவே தோற்றம். அத்தோற்றம் வாழ்வு. நாம் அதை வாழ்வென அறிகிறோம். இது வாழ்வின் சக்தியின் செயல். அதை நாம் அப்படி அறிகிறோம். இது வாழ்வின் சக்தியால் தீவிரமாகத் துரிதப்படுத்தப்படுகிறது. லோக சக்திக்கு மூன்று தோற்றமுண்டு. அவை மனோசக்தி, வாழ்வின்சக்தி, ஜடசக்தி.

180/12: ரூபம் அழியலாம், சக்தி அழியாது. சக்தி வித்தாக இருக்கிறது. உயிருள்ள அதன் செயல்கள் - வழக்கமாக நடப்பவை - நிறுத்தப்பட்டுள்ளன. அவை முடியும் தருவாயிலிருக்கலாம். இறந்தவரை உயிர்ப்பிக்கலாம். அது ஒரு வரையறைக்குள் முடியும். வழக்கமான செயல்களைப் புதுப்பிக்கலாம். சுறுசுறுப்பான சக்தி தொடர்ந்து உடலெங்கும் செயல்படுவதை மீண்டும் பெறலாம். நாம் உயிர் - வாழ்வு - எனக் கூறுவது இனியும் உடலில் உள்ளதுஎன அறியலாம். அது பழக்கத்தில் வித்தாக இருந்திருக்கிறது, செயலில் வெளிப்படவில்லை. அவை அவற்றின் வழக்கமான உடலின் செயற்கூறுகள். அது உணர்ச்சியின் லீலை, பதில். விழிப்பான அறிவு விலங்கில் பதிலிறுக்கும் பழக்கம் அவை. வாழ்வு என்று தனிச் சிறப்புள்ள ஒன்றிருப்பதாகக் கூறுவது சிரமம். அது உடலைவிட்டு முழுமையாக வெளியேறிவிட்டது. அது விரும்பும்பொழுது மீண்டும் உடலுக்குள் வரும். புறரூபத்தைத் தூண்டினால் அது ஏற்படும். (உடலோடு தொடர்பு ஏற்படுத்த எதுவுமில்லாததால், அதை எப்படிச் சாதிப்பதுஎன்பது கேள்வி.) வலிப்பு உதாரணம். இங்கு புறத் தோற்றமான அடையாளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வாழ்வின் செயல் நிறுத்தப்பட்டது. ஆனால் மனப்பான்மை இருக்கிறது. அது விழிப்பானது, தன்னையறியும். வழக்கமாக உடல் செயல்படுவதைச் செய்யும்படி நிர்ப்பந்திக்க முடியாது. உடல் மரணமடைந்து, மனம் உயிரோடுள்ளதுஎனக் கூறமுடியாது. உடலிலிருந்து உயிர் வெளியே போய்விட்டது. ஆனால், மனம் உயிரோடு உடலிலுள்ளதுஎனக் கூற முடியாது. வழக்கமான உடலின் செயல்கள் நிறுத்தப்பட்டன. மனம் இன்னும் சுறுசுறுப்பாக இருக்கிறது.

180/13: சமாதியில் சில வகைகளுண்டு. இங்கு உடலின் செயல்களும், வெளிப்படும் மனமும் நிறுத்தப்படும். அவை பிறகு செயல்பட ஆரம்பிக்கும். புறத்தூண்டுதல்மூலம் சில சமயங்களில் அது நடக்கும். உள்ளிருந்து எழும் அசைவால் இயல்பாக மீண்டும் செயல்படலாம். மேல் மனத்தின் சக்தி இப்பொழுது ஆழ்மனத்துள் அடங்குகிறது. மேலுள்ள பிராணசக்தி வாழ்வுக்குக் கீழேபோய் அடங்குகிறது. இவ்வழி முழுமனிதனும் ஆழ்மன வாழ்வுக்குள் சென்று அடங்கும். அல்லது அவனது வாழ்வு மேலிருந்து ஆழ்மனத்துள் சென்று மறைகிறது. அதே சமயம் அவனது உள்மனம் பரமாத்மாவை அதே போல் நாடுகிறது. இதுவே முக்கிய கட்டம். அதாவது சக்தி தன் புறச் செயல்களை நிறுத்திக் கொள்கிறது. இச்சக்தியே உடலின் தீவிர சக்தியைக் காப்பாற்றுகிறது. இருந்தாலும், ஸ்தாபனப் பொருளுக்கு இச்சக்தி உறுதுணையாகும். ஒரு கட்டத்தைக் கடந்தால், பிரிந்த உயிரை மீட்க முடியாது. உறுப்பின் சிதைவு தடையாகலாம். இப்பாதகம் உடலை பயனற்றதாக்கும். அல்லது உடல் பழக்கமான செயல்களை மீண்டும் ஏற்க முடிவதில்லை. இது வேறு வகையாகவும் நடக்கலாம். உயிரின் செயலைப் புதுப்பிப்பது சக்தியே. சூழலின் சக்தியை அறிய முடியாதபடி சொரணையை இழக்க நேரிடும். அது உணர்ச்சியைத் தூண்டும் பெருந்தொகுப்பு, பொதுவாக சக்தி சூழலுடன் தொடர்ந்து பரிமாறும். இப்பொழுது அது முடிவதில்லை. அப்படியும் உடலில் உயிரிருக்கும். அவ்வுயிர் உடலின் அழிவுக்குமட்டும் பயன்படும். ரூபம் பெற்ற பொருளை அது அழிக்கும். இதன் வழி மனிதன் பஞ்ச பூதங்களிலிருந்து தப்புகிறான். புதியதாக அது பிறக்கிறது. பிரபஞ்சசக்தியில் உறுதியுண்டு. அது ரூபத்தைக் கட்டிப் பிடிக்கிறது. இப்பொழுது அப்பிடியைத் தளர்த்துகிறது. மாறாக இதே சக்தி எதிரான செயலான அழிவை ஆதரிக்கிறது. அதுவரை மரணம் உறுதிப்படாது.

181/14: பிரபஞ்சத்திலொரு சக்தியுண்டு. அதன் லீலை தீவிரமானது. அந்த லீலைக்கு வாழ்வுஎனப் பெயர். வாழ்வில் உள்ள ஜீவியம் மனத்தின் ஜீவியம். அதில் பிராணனுக்குரிய உயிரும் உண்டு. ஏதோ ஒரு ரூபத்தில் அவை வாழ்விலும் உண்டு. சாஸ்திரத்திற்காகவாவது அது உண்டு. அவை வாழ்வு பிறக்கும்பொழுதே ஏற்பட்டவை. எனவே அவை நம் உலகில் உதிக்கின்றன. ஜடம்என்ற ரூபத்தை அவை ஸ்தாபனமாக ஏற்கின்றன. இந்தசக்திக்கு வாழ்வின் லீலையுண்டு. அதன் வெளிப்பாடு ஒரு பரிமாறுதலாக அமையும். தூண்டுதல், பதிலாக முடிவது அப்பரிமாறுதல். பல்வேறு ரூபங்களின் உறவால் ஏற்படும் தூண்டுதல் அவை. அவற்றால் கட்டப்பட்ட கட்டடம் அது. அதன் இடைவிடாத தீவிர உணர்ச்சியலைகள் அவற்றை நடத்துகின்றன. ஒவ்வொரு ரூபமும் கொடுத்துப்பெறுகின்றன. இது இடைவிடாது நடைபெறுகிறது. இது தீவிரமான அலைபாயும் சலனம். பொதுசக்தியுடனும், மூச்சுடனும் அது அப்படிச் செயல்படுகிறது. ஒவ்வொரு ரூபமும் அதன்மூலம் வாழ்கிறது. பலவகைகளாக அவை தம் உணவுச்சத்தைப் பெறுகின்றன. அது நேரடியாகவோ, மறைமுகமாகவோ நடைபெறுகிறது. வேறு ரூபங்களை ஏற்பதாலும் இது நடைபெறும். அந்த ரூபங்களுள் சக்தி குவிந்து உறைகிறது. தீவிர சக்தி வெளிப்படுவதால் அதை கிரகிப்பதன் மூலம் இது நடக்கிறது. வெளியிலிருந்து வெளிப்படும் சக்தியை அது பெறுகிறது. இவை வாழ்வின் லீலை. பல இடங்களில் இவ்வமைப்பு, போதும். நமக்கு அது எளிதில் புரியும். புறச்சலனங்களை நாம் காணலாம். அவற்றின் ராசி சிக்கலான சிறப்பு. பிராணசக்தியின் உயிருக்குரிய உருவமிது. அது நம் ஸ்தாபன அமைப்பைப் போன்றது. தாவரத்தில் உயிரிருப்பதன் தெளிவான தோற்றமுண்டு. அதனால் தாவரத்திற்கு உயிருண்டுஎன நம்மால் ஏற்க முடிகிறது. தாவரத்திற்கு நரம்பு மண்டலம் உண்டெனக் காட்ட முடியும். அது நமது நரம்பு மண்டலத்தினின்று வேறுபட்டதில்லை. நரம்புக்குரிய அறிகுறிகள் அதற்குண்டு. அது நாம் தாவரத்தின் உயிரை ஏற்பதை எளிதாக்குகிறது. (மண்ணிலும், உலோகத்திலும் அதை நாம் ஏற்க மறுக்கிறோம். ரஸாயன அணுவில் அது உள்ளது. நமக்குப் புலப்படுவதில்லை. இங்கு அது தெளிவாகத் தெரிவதில்லை. சிரமப்பட்டால் அதைக் காண முடியும்.)

182/15: இது மாறுபாடு, வேறுபாடில்லை. இதை நம் கருத்தால் வேறுபாடாக்கலாம். அது சரியா? நமக்கு உயிருண்டு. தாவரத்திற்கு உயிருண்டு. இவையிரண்டிற்கும் என்ன வித்தியாசம்? அவை வேறுபடுவதை நாம் காண்கிறோம். நாம் நடக்கிறோம். நடப்பதற்கும் உயிரிருப்பதற்கும் தொடர்பில்லை. நமக்கு நாம் அறியும் உணர்ச்சியுண்டு. அது தாவரத்தில் உற்பத்தியாகவில்லை. நம் நரம்பு மண்டலம் பதிலிறுக்கிறது. நாம் அறியும் உணர்ச்சி அதன் மூலம் வெளிப்படும். பெரும்பாலும் இது உண்மை. எப்பொழுதும் அப்படியிருப்பதில்லை. அவை மனத்தின் பண்பு. நரம்பு மண்டலப் பண்பாகவும் அது உண்டு. நரம்பின் செயலால் உடல் பதைக்கும். தாவரத்தில் நரம்பு மண்டலம் உணர்ச்சியிருப்பதுபோல் தோன்றும். நமக்கு இன்பதுன்பமுண்டு. நாம் விழித்திருக்கிறோம், தூங்குகிறோம். களைப்பு, மந்தம், ஆர்வம் நமக்குண்டு. இவை நரம்புணர்ச்சியின் அடையாளங்கள். செயல்படும்பொழுது உடல் உள்ளுற நரம்பு மண்டலத்தால் படபடக்கும். மனம் அறியும் உணர்ச்சி வேறு. அதை நாம் தாவரத்தில் காண்பதில்லை. அது இருப்பதின் தெளிவான அறிகுறி எதுவுமில்லை. உணர்ச்சி ஜீவியத்தின் ஓர் உருவம். அது மனம் அல்லது உயிராக இருக்கும். உணர்ச்சி என்பது உணர்ச்சியே. உணர்ச்சியுள்ள தாவரம் சுருங்கும். தொடுஉணர்ச்சியை அது சுருங்கி விலக்குகிறது. அதன் நரம்புமண்டலம் பாதிக்கப்படுகிறது. ஏதோ ஒன்று அதனுள் தொடுவதை விரும்பவில்லை. தொடும் பொருளிலிருந்து அது விலகுகிறது. சுருங்கச் சொன்னால் அது ஆழ்மன உணர்ச்சி. அது தாவரத்திற்குரியது. நம்மில் அவை ஆழ்மனச் செயல்களாகும். இரண்டும் ஒன்றே. இவை ஆழ்மன உணர்ச்சி, ஆழ்மனம் அறிவால் உணர்வதாகும். இதை மேல் மனத்திற்குக் கொண்டு வரலாம். மனித உடலுக்கு இது முடியும். செயல் முடிந்து நாளானபின்னும் இதைச் செய்யலாம். நரம்பு மண்டலத்தை அது பாதிக்காத நிலை வரலாம். ஆழ்மனம் நம்முள் பரந்தது. நாம் அறிவால் விழிப்புடன் காணும் மனத்தைவிடப் பெரியது. இதன் உண்மையை எடுத்துக் கூறும் நிகழ்ச்சிகள் ஏராளம். அவை மறுக்க முடியாதவை. இதை இன்று உலகம் ஏற்கிறது. இந்நிலை வளர்ந்து பெருகுகிறது. தாவரத்தின் மேலெழுந்த செயல்களில் மனம் உஷாராக இல்லையென்பது தெளிவு. அதன் ஆழ்மனச் செயலின் உணர்வு பயன்படுவதை மனம் விழித்து அறியும். அவற்றுள் வித்தியாசமில்லை. இது என்ன நிகழ்ச்சியென நாம் அறிய விரும்புகிறோம். அதற்கு இது தேவையில்லை. அது வாழ்வின் எளிமையான செயல். இது ஆழ்மனப் புலனுணர்வு. அது உலோகத்தில் காணப்படுகிறது. அது இருப்பதன் வாய்ப்பு பெரியது. உலோகத்தின் உடல் உணர்வால் பாதிக்கப்படுவதில்லை. அது நரம்புமண்டலம் போன்றது. உடல் அசைவில்லைஎன்பது உண்மை. இவற்றுள் முக்கியமான வேற்றுமையில்லை. உயிரிருப்பதற்கு இது அவசியமில்லை. நடமாடும் திறன் தாவரத்திலில்லை. அதனால் தாவரத்திற்கு உயிரில்லைஎனப் பொருளாகாது. உலோகம் செயல்படும் விதம் இது போன்றது.

183/16: மனம் ஆழ்மனமாகிறது. ஆழ்மனம் மனமாக மாறுகிறது. இந்த மாறுதல்களில் என்ன நடக்கிறது? ஓர் உண்மையான மாற்றம் உண்டு. விழிப்பான மனோசக்தியை கிரகிப்பது அம்மாறுதல். செயலில் ஒரு பகுதி அதைச் செய்கிறது. தனிப்பட்ட குறிப்பான நிஷ்டை அது. நிஷ்டைக்குப் பல ரூபங்களுண்டு. நாம் அதை மனப்பான்மையென்- கிறோம். இங்கு பிரக்ஞை விழிப்பாக செயல்படுவதில்லை. பிரக்ஞை என்பது அகம் புறமாவது. இருப்பினும் உடலின் செயல்கள் இயல்பாக நடக்கின்றன. நரம்பு மண்டலமும், புலன்களும் அதே போல் இயங்குகின்றன. அவை இடைவிடாமல் சிறப்பாகச் செயல்படுகின்றன. இவ்வழி மனம் ஆழ் மனமாகிறது. ஒரு செயலில் மனம் ஒளிமயமாகச் செயல்படுகிறது. அது தொடர்ந்த செயலாகவுமிருக்கும். பகவான் ஸ்ரீ அரவிந்தர் எழுதும்பொழுது அது கையின் செயல். கை எழுதுகிறது. இது பெரும்பாலும் ஆழ்மனத்தால் நடைபெறுகிறது. சில சமயம் இது முழுமையாக இருக்கும். உடலில் நரம்புமண்டலம் செயல்படுகிறது. இது தன்னையறியாத செயல். மனம் எண்ணத்தை அறியும். மனம் எண்ணத்தால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. முழு மனிதனும் ஆழ்மனத்துள் அமிழ்ந்து விடுவான். இருந்தாலும் பழக்கமான செயல்கள் தொடரும். அவையும் மனத்தால் இயங்குபவை. பலவகையான உறக்கத்தில் அவை நிகழும். அல்லது மனம் பரமாத்மாவை அடையும். இருந்தாலும், மனிதன் சுறுசுறுப்பாக இருப்பான். அப்படி அவனுள் சுறுசுறுப்பாக செயல்படுவது அடிமனம். அது உடலைச் சேர்ந்தது. சில வகைகளான சமாதிகளில் அது நடக்கும். அதை யோக சமாதிநிலையென்போம். நம் உணர்ச்சிக்கும், தாவரத்தின் உணர்ச்சிக்கும் வித்தியாசம் உண்டு. பிரபஞ்சத்தில் சித்-சக்தியுண்டு. தானே அது தன்னை சிருஷ்டியாக வெளிப்படுத்தும். அது ஜடத்துள் உறங்குகிறது. தாவரத்தில் அது முழுமையாக உறக்கத்தினின்று விழிக்கவில்லை. பரமாத்மஞானம் அதன் ஆதி, அல்லது மூலம். செயலாற்றும் சக்தியை நாம் உணர்கிறோம். அது ஜடத்துள் மறைந்துள்ளது. அப்படி கிரகிக்கப்படுவதால் செயலாற்றும் சக்தியினின்று அது பிரிக்கப்படுகிறது. எனவே அதை ஆழ்மனத்தால் செய்யவேண்டியிருக்கிறது. உண்மையில் அது மனத்திற்குரிய செயல். மனிதனில் அது வெளிவருகிறது. இங்கு அது விழிக்க முயல்கிறது. அந்நிலையிலும் அது மறைமுகமாகச் செயல்படுகிறது. தன் ஞான ஆத்மாவை அது அறிவது மறைமுகமானது. இரண்டிலும் நடப்பது ஒன்றே. ஆனால் வேறுவேறு வகையாக அது நடைபெறுகிறது. அதன் பாங்கு வேறு. ஜீவியத்தின் நோக்கில் அவை வேறு, வேறு.

183/17: அணுவில் ஒன்றுள்ளது. அது நம்முள் உறுதி, ஆசையாகிறது. அதை நம்மால் இப்பொழுது கருத முடியும். நம்முள் ஒரு விருப்பு வெறுப்புண்டு. இது நம் கவர்ச்சியாலும், மறுப்பாலும் எழுவது, அவை தோற்றத்தால் வேறுபட்டாலும், அடிப்படையில் ஒன்றே. நாம் அதை ஆழ்மனம், ஜட இருள் என்கிறோம். இயற்கையில் இது எல்லா இடங்களிலும் உண்டு. இது உறுதி, ஆசையின் சாரம். இதுவரை இதைப் போதுமான அளவு நாம் அறியவில்லை. அது ஆழ்மனத்தைக் குறிக்கிறது. அதனுடன் சம்பந்தப்பட்டது இது. இது ஜடஇருளில் உள்ளதுஎனவும் கூறலாம். இது நம்முள் கரைந்து மறைந்துள்ள புத்தி, அல்லது புலன் எனலாம். அவை நம்மை ஊடுருவியுள்ளன. எல்லா அணுக்களிலும் அது உள்ளது. அணுவால் செய்யப்பட்ட அனைத்திலும் இது காணப்படும். சக்தியிலிருப்பதால், அது அணுவில் காணப்படுகிறது. அதுவே அணுவின் ஸ்தாபன அமைப்பைக் கட்டிக் காக்கிறது. சக்திஎன்பது அடிப்படையில் வேதாந்தம் கூறும் சித்-சக்தி, சித்-தமஸ். இது ஜீவியம்-சக்தி. அது சத்புருஷனின் சித்-சக்தியாகப் பிறப்பிலேயே காணப்படுகிறது. இது பிராண சக்தியாக வெளிப்படுகிறது. தாவரத்தில் இது மனத்திற்குக் கீழ்ப்பட்ட புலனாகச் செயல்படுகிறது. ஆரம்பநிலை விலங்குகளில் இது புலனாசை, புலனுறுதியாகக் காணப்படும். வளர்ந்த விலங்குகளில் இது தன்னையறியும் புலனாக, தன்னையறியும் சக்தியாகக் காணப்படும். மனிதனில் அது மனோ உறுதி, ஞானமாகும். இது மற்ற அனைத்தையும் கடந்தது. வாழ்வுஎன்பது பிரபஞ்ச சக்தியின் படிப்படியான நிலை. அது ஜட இருள் விழிப்பாகும் பாதை, இது இடைப்பட்ட சக்தி. ஜடத்தில் இது ஆழ்ந்து புதைந்து, மறைபொருளாகயுள்ளது. தன்வேகத்தால் இது தன்னை மனத்திற்குக் கீழ்ப்பட்ட ஜீவனில் விடுதலை செய்யும். முடிவாக பரிணாம வளர்ச்சி பெறும் மனத்தால் விடுதலை பெறும். அப்பொழுது அது தன் தீவிரத்தின் முழு வாய்ப்புள் எழும்.

184/18: நாம் கருதவேண்டியவை பல. அவற்றைக் கடந்து தர்க்கரீதியான அவசியம்என ஒன்றுண்டு. நாம் மேலே வந்த முடிவு அப்படி நம்மைக் கட்டாயப்படுத்துகிறது. மேல்மன வாழ்விலும் அது தெளிவாகவுள்ளது. அங்கு சக்தி ஒளியாக எழுகிறது. இது பரிணாமத் தத்துவம். தாவரத்திலும், விலங்கிலும் வாழ்வுஎன்பது ஒன்றே. தாவரத்தில் வாழ்வு செயல்படும்விதம் விலங்கில் செயல்படுவதின்று வேறுபடுகிறது. இருந்தாலும், இரண்டும் ஒரே சக்தி. பிறப்பு, வளர்ப்பு, மரணம் அதன் முத்திரை. அதற்கு வேறுபல அம்சங்களுண்டு. விதையிலிருந்து உயிர் எழுவது, அழிவால் மரணம் வருவது, வன்முறையாலும், வியாதியாலும் அது கிட்டுவது ஆகியவை சில. உணவுச்சத்தை புறத்திலிருந்து உள்ளே கிரகித்து உயிர் வாழ்வது ஓர்அம்சம். உயிர்வாழ ஒளியும், சூடும் அவசியம். இனவிருத்தி செய்வது, தன் உயிரைக் காப்பது என்பவையும் அது போன்ற அம்சங்கள். அதற்கு விழிப்பும், தூக்கமும் உண்டு. அதன் செயல்படும்வகை சோர்வு பெறும். புத்துணர்ச்சி பெறும். குழவிப்பருவத்தினின்று வளர்ந்து முதிர்ச்சி பெறும். மேலும் தாவரத்துள் வாழ்வின் சாரமுண்டு. அக்காரணத்தால் தாவரம் விலங்குக்கு உணவாகிறது. விலங்கு தாவரத்தாலும், அதில் உள்ள சக்தியாலும் வாழ்கிறது. அதற்கு நரம்புமண்டலம் உண்டு. தொடுஉணர்ச்சிக்குப் பதிலிறுக்கும். நாம் இவற்றையெல்லாம் ஏற்கலாம். இவை உயிரின் புலனறிவின் ஆரம்ப நிலை. அல்லது இவை வாழ்வின் மறைபொருளான சக்தி. இதை மனத்திற்குக் கீழ்ப்பட்ட புலனறிவுஎனலாம். இவை தாவரத்திற்கும் விலங்கிற்குமுள்ள ஐக்கியத்தை நெருங்கச் செய்யும். என்றாலும், இவை பரிணாமத்தில் ஒரு கட்டமே. இது இடைப்பட்ட கட்டம். விலங்கின் வாழ்விற்கும் "ஜீவனற்ற'' ஜடத்திற்கும் இடைப்பட்ட நிலை. வாழ்வு ஜடத்திலிருந்து பரிணாமத்தால் எழும் சக்தியா? பரிணாமம் மனத்தில் முடிகிறதா? அப்படியெனில், நாம் இதை மட்டுமே எதிர்பார்க்கலாம். இதுவே உண்மையாக இருக்கலாம். இது நம்மை ஒரு முடிவுக்கு வரச் செய்யும். அதாவது வாழ்வு ஏற்கனவே ஜடத்துள் புதைந்துள்ளது. ஜடத்தின் ஆழ்மனத்திலும், ஜட இருளிலும் வாழ்வு ஏற்கனவே மறைந்துள்ளது. வேறு எங்கிருந்து அது வர முடியும்? பரிணாமம் உண்டெனில் சிருஷ்டி இருக்க வேண்டும். ஜடத்திலிருந்து வாழ்வு எழுவது உண்மை. நாம் ஒரு புதிய சிருஷ்டியை எதிர்பார்க்கலாம். அது மந்திரம் போல் விளக்க முடியாததாக இருக்கும். அது உண்மைஎனில் இதை இயற்கையுள் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். சிருஷ்டி சூன்யத்திலிருந்து எழ வேண்டும். அல்லது ஜடம் செயல்படுவதால் உண்டான பலனாக இருக்க வேண்டும். நாம் காணும் செயல்களில் அதற்கு விளக்கமில்லை. இதனுடன் சம்பந்தப்பட்ட எதுவும் இதை விளக்கவில்லை. இவற்றைக் கருதும்பொழுது வாழ்வு மேலிருந்து வந்ததுஎனலாம். ஜட வாழ்வைக் கடந்த லோகத்திலிருந்து வாழ்வு வரலாம். அல்லது ஜடஉலகுக்கு மேற்பட்ட உலகமாக இருக்கலாம். முதலிரண்டு கொள்கைகளை நாம் கருதவேண்டிய அவசியமில்லை. அவை அர்த்தமற்றவைஎன்பதால் விலக்க முடியும். முடிவானதை ஏற்கலாம். இது நம் கருத்திற்கு ஒத்து வரும். சூட்சுமக் கோணத்தில் இது உண்மை. ஜட உலகுக்கு மேற்பட்ட உலகிலிருந்து உந்தும் சக்தியுண்டு. வாழ்வு எழுவதை அது நிர்ணயித்துள்ளது. இதனால் வாழ்வு ஜடத்திலிருந்து எழுகிறதுஎன்பதை மறுக்கும் அவசியமில்லை. வாழ்வு அடிப்படையான அவசியமான செயலாகும். வாழ்வின் உலகம் இருக்கலாம். வாழ்வு ஒரு லோகமாக இருக்கலாம். அது ஜடத்திற்கு மேலே அமையலாம். அதனால் பரிணாமத்தால் வாழ்வு எழும் எனக் கூறும் அவசியமில்லை. வாழ்வு லோகம் உருவம் பெறும் கட்டமாக இருக்கலாம். ஜீவன் பல கட்டங்கள் மூலம் அல்லது பல சக்திகள் மூலம் இறங்கி வருவதில் ஒரு கட்டமாக இருக்க முடியும். அது ஜட இருளை நோக்கிப் போகலாம். இதன் விளைவாக சிருஷ்டி ஏற்படும். அதற்கு ஜடத்தில் எல்லா சக்திகளும் உண்டு. அவை பரிணாமத்தால் பிறகு வெளிவரும். இப்படி மறைந்துள்ள வாழ்வின் அடையாளம் நம்மால் கண்டுபிடிக்க முடியாதவையாக இருக்கலாம். இவை ஆரம்ப நிலைக்குரியதோ முறைப்படாததோஎனக் கூறலாம். அவை ஜடத்துள் இருக்கலாம். அடையாளமே இல்லாமலிருக்கலாம். மறைந்த சக்தி முழு உறக்கத்திலிருப்பதால் இப்படி அமையலாம். இது முக்கியமில்லை. ஜடசக்தி சேர்க்கும் திறனுடையது. இது உருவம் பெற்று அழிகிறது. அங்கும் அதே சக்தி வேறு கட்டத்தில் அமைகிறது. இதுவே வாழ்வின் சக்தி, தன்னை பிறப்பு, வளர்ப்பு, மரணத்தில் வெளிப்படுத்துகிறது. புத்தியாக இது சூன்ய மயக்கத்தில் செயல்படுவது போல் செயல்படுகிறது. அது ஆழ்மனம். இதுவும் அதே சக்தியே. இதன் வேறொரு கட்டம் மனம். தன்னுள் இது வாழ்வை வைத்திருப்பது அதன் சுபாவம். அதன் பாணி நாம் அறியும் வகையில் இல்லாமலிருக்கலாம். இதுவரை வெளிவாராத மனம், வாழ்வை அவை தன்னகத்தே கொண்டுள்ளன.

186/19: வாழ்வு எங்கும் ஒன்றே. அணுவிலிருந்து மனிதன்வரை வாழ்வு ஒன்றேயாகும். அணுவில் ஆழ்மனப்பொருள் உள்ளது. அதில் ஜீவனின் சலனம் உண்டு. இரண்டும் விலங்கில் வெளிப்படுகிறது. தாவர வாழ்வு இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளது. அது பரிணாமப்பாதை. சித்-சக்தியின் பிரபஞ்சச் செயல் வாழ்வாகும். ஜடத்தில் வாழ்வு ஆழ்மனம் மூலம் செயல்படுகிறது. அனைத்தையும் செய்வது இச்சக்தி. இது உடலையும் ரூபத்தையும் சிருஷ்டித்து, பாதுகாத்து, அழித்து, மீண்டும் சிருஷ்டிக்கிறது. இது நரம்பு சக்தியால், அதன் லீலைமூலம் இதைச் சாதிக்க முயல்கிறது. தூண்டும் சக்தி பரிமாறும் ஓட்டத்தால் இது நடைபெறுகிறது. உடலில் இது விழிப்பான புலன் உணர்வை உண்டுபண்ணுகிறது. இச்செயலில் மூன்று கட்டங்கள் உள. ஜடத்தின் உறக்கம் கடைசி கட்டம். அதன் அதிர்வுண்டு. இது முழுவதும் ஆழ்மனத்திற்குரியது. இது இயல்பான செயலாகத் தோன்றுகிறது. மனத்திற்குக் கீழ்ப்பட்ட பதில் இடைப்பட்ட கட்டம். அங்கும் பதில் கூறும் திறனுண்டு. அது ஜீவியத்தின் எல்லை. விழிப்பான மனப்பான்மை உயர்ந்தது. வாழ்வு அதை வளர்க்கிறது. அது புலனுணர்வாகத் தோன்றும். அதன் மனம் உணர வல்லது. இது மாறும் நிலை. இது முன்னேற்றத்தின் அடிப்படை. புலனறிவும், புத்தியும் இதன்மூலம் வளர்கின்றன. இந்த இடைப்பட்ட கட்டத்தில் நாம் வாழ்வைப் பிடிக்கலாம். வாழ்வு மனம், ஜடத்திலிருந்து வேறுபட்டது. உண்மையில் எல்லாக் கட்டங்களிலும் வாழ்வு ஒன்றே. எங்கும் வாழ்வு மனத்திற்கும் ஜடத்திற்கும் இடையே காணப்படும் வாழ்வு ஜடத்தாலானது. அதில் மனம் உண்டு. சித்-சக்தியின் செயல் வாழ்வு. அது உருவம் பெறும் பொருள்மட்டுமன்று. அது மனத்தின் செயல் மட்டுமன்று. ரூபமும், பொருளும் அதன் புறத் தோற்றம். சத்-புருஷனை ஜீவனுள்ளதாக்குவது வாழ்வு. பொருள் உருவாகும் காரணமும், அதன் ஆதரவுமாகும். இது இடைப்பட்ட நிலை. இது மூலமாகவும் ஆதரவாகவும் உள்ள நிலை. விழிப்பான மனம் புறத்தில் செயல்படுவது இதன் ஆதரவைப் பெறுகிறது. புலனின் செயலில் வாழ்வு வெளிப்படுகிறது. புருஷனின் சக்தி பெறும் இடைப்பட்ட நிலையாக அது செயல்படுகிறது. புலனின் செயலுடன், எதிர்ப்புமுண்டு. வாழ்வின் சிருஷ்டித்திறனின் ரூபமிது. இது ஆழ்மனம் அல்லது ஜட இருளால் செயல்படும். தன் பொருளால் இது கிரகிக்கப்படுகிறது. இது செயலை ஆதரித்து வெளிப்படுத்துகிறது. வாழ்வின் புற வெளிப்பாட்டை அது நடத்துகிறது. அதை நாம் மனம் என்கிறோம். தீவிரமான கருவியாக மனம் இதைச் சாதிக்கிறது. தன் ரூபங்களை இதனால் மாற்ற முடியும். வாழ்வு, ஜட ரூபங்களிலும் அது செயல்படும். வாழ்வு அவற்றை இணைக்கும் இடைநிலையாகச் செயல்படும். இவ்விரண்டிற்கும் - மனம், ஜடம் - வாழ்வு தூதன். வாழ்வு அதன் கருவி. வாழ்வின் ஓட்டம் தொடர்கிறது. இது துடிக்கும் நரம்புணர்ச்சி. ரூபத்தின் சக்தியை வாழ்வு புலனுணர்வாகத் தாங்கி வரும். இது மாற்றும். மனத்தின் சக்தியை உறுதியாக இது கொண்டு வரும். இது ஜடத்தை மாற்றும். இந்த நரம்பின் சக்தியை நாம் வாழ்வென்கிறோம். இது பிராணன். இந்தியர் கூறும் வாழ்வின் சக்தியிது. விலங்கில் நரம்பு சக்தியாவது வாழ்வின் ரூபம். எல்லா ரூபங்களிலும், இதே பிராண சக்தியுண்டு. இது அணுவரை செல்லும். மூலத்தின் சாரத்தைக் கருதினால் இது எங்கும் ஒன்றே. எங்கும் இது சித்-சக்தியின் செயலாகும். தன் ரூபங்களின் அடிப்படை வாழ்வில் இது வாழ்வின் ஆதரவைப் பெறுகிறது. இச்சக்திக்கு புலனும், மனமும் உண்டு. இது இரகஸ்யமாகச் செயல்படுகிறது. முதலில் இது ரூபத்துள் புதைந்துள்ளது. வெளிவர தன்னை ஆயத்தம் செய்கிறது. முடிவாக இது மறைவிலிருந்து வெளிவருகிறது. இதுவே வாழ்வின் முழு முக்கியத்துவம். இது எங்கும் நின்று நிலவுகிறது. ஜடமான பிரபஞ்சத்தில் அது வெளிப்பட்டு, அதனுள் வாழ்கிறது.

வாழ்வு:

173/1: மனம் இறைவனில் உற்பத்தியானது.
புருஷனுக்குப் பிரகிருதியுண்டு.
பிரகிருதி புருஷனுடைய பல்வேறு செயல்பாடுகள்.
அவை பிரபஞ்சத்திற்குரியவை.
அஞ்ஞானத்தை ஏற்ற ஆத்மாவுக்கு பிரகிருதி முரண்பாடு, இரட்டைஎனத் தெரிகிறது.

173/2: மனம் ஆழ்மன உறுதி.
ஜடமான உலகம் ஆழ்மனத்தால் சிருஷ்டிக்கப்பட்டது.

174/3: சத்புருஷன் ரிஷியாக, முனிவராக உலகில் தன்னைத் தன்னுள் வெளிப்படுத்த முனைந்து யுகாந்த காலமாக அனைத்தையும் அதனதன் சத்தியப்படிப் பரிமளிக்கச் செய்வது சிருஷ்டி.

175/4: உலகை ஆழ்மனம் சிருஷ்டிக்கவில்லை, சத்தியஜீவியம் சிருஷ்டித்தது.

175/5: வாழ்வு என்றால் என்ன? ஏன் அது தீமையைப் படைத்தது?

176/6: தீவிரமாகத் தானே செயல்படும் சக்தி வாழ்வு.
அழிவைத் தொடர்ந்து நாடி வாழ்வு வளர்கிறது.
மரணத்திலும் வாழ்வின் ஓட்டம் நிற்காது.

176/7: பூமியை அழித்த பின்னும் பிரபஞ்சத்தை ஊடுருவும் சக்தியாக வாழ்வு நிலைத்து விளங்கும்.

177/8: தாவர, விலங்கு வாழ்க்கைக்கும், நம் வாழ்வுக்கும் என்ன மாறுபாடு?

177/9: வாழ்வின் வளரும் வண்ணங்களை வாழ்வுஎனக் கொள்வது தவறு.

178/10: தாவரத்திலும், உலோகத்திலும் உயிரிருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது.
எல்லா இடங்களிலும் வாழ்வு என்பது ஒன்றே.

179/11: தாவரத்தில் உயிர் இருப்பதாக ஒரு பிரபல இந்திய விஞ்ஞானி நிரூபித்துள்ளார்.

180/12: உடலின் உறுப்புகள் சிதையாவிட்டால், ஓர் அளவுக்குள், பிரிந்த உயிரை மீண்டும் புதுப்பிக்கலாம்.

180/13: பிரபஞ்ச உறுதி உடலிலிருந்து விலகுவது மரணம்.
விலகியது அழிவை ஆதரித்தால் மரணம் எழும்.

181/14: தீவிரமான சக்தியான வாழ்வை தாவரத்தில் காண்பது போல் எளிதில் உலோகத்தில் காண முடியும்.

182/15: தாவரத்தில் பிராணனைக் கண்டபடி உலோகத்திலும் காணலாம்.

183/16: விழிப்பான சக்தி தன்னைச் செயலிலிழந்தால் மனம், ஆழ்மனமாகும்.
அதே சக்தி பரமாத்மாவை எட்டினால், ஆழ்மனம் மனமாகும்.

183/17: ஜடஇருள் பரிணாமத்தால் ஜீவியமாகும் அரங்கம் வாழ்வு.

184/18: ஜடத்திலிருந்து வாழ்வு பரிணாமத்தால் எழ, அது ஏற்கனவே ஜடத்துள் கரைந்து மறைந்து கலந்திருக்க வேண்டும்.
புருஷன் படிப்படியாக மாறி உருவாகும் சக்தியாக ஜடத்துள் மறைந்திருக்க வேண்டும்.

186/19: வாழ்வு ஜடஉணர்ச்சியை மனத்திடம் சமர்ப்பித்து மனோ உறுதியாக அதை மாற்றி, அதற்கு ஜடத்தைக் கட்டுப்படுத்துகிறது.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனிதன் ஆசையால் நிர்ணயிக்கப்படும் செயலால் கட்டுண்டுள்ளான். அவனால் சச்சிதானந்தத்தைக் கடந்து ஆதியை அடைய முடியும். செயலைத் திருவுருமாற்றம் செய்து சத்தியஜீவியத்தின் மூலம் இதை நிறைவேற்றலாம். செயலைத் தவிர்த்து அதன் சாரமான ஆன்மாவின் மூலம் தெய்வலோகத்தின் வழியாகவும் இதை அடைய முடியும். நம் கரணங்களுக்குரிய புருஷன் ஒன்றின் மூலமாகவும் இதைச் சாதிக்கலாம்.
 
செயலைத் தவிர்த்தும், திருவுருமாற்றியும் பிரம்மத்தையடையலாம்.

*******



book | by Dr. Radut