Skip to Content

01. சமர்ப்பணம்

சமர்ப்பணம்

சமர்ப்பணம் தவறுவதில்லை. தொடர்ந்து சமர்ப்பணம் தவறாமல் பலிக்கும்பொழுது நம்பிக்கை சமர்ப்பணத்தின்மீது எழுவதற்குப் பதிலாக “நான் செய்யும் சமர்ப்பணம் தவறாது” என்று மாறுவதுண்டு. அப்படி மாறினால் “நான்” முக்கியமாவதால் சமர்ப்பணம் தவறும். என்ன செய்வது? சமர்ப்பணம் செய்யும் ஆர்வத்தைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும். அதனால் “நான்” விலகி மீண்டும் சமர்ப்பணம் உயிர் பெறும். விவசாய அன்பரின் சமர்ப்பணம் பவர்கட் விஷயமாகப் பலிக்கவில்லை. 8 மணி பவர்கட் சமர்ப்பணத்திற்கு அசையவில்லை. எதிராக 10 மணி 12 மணி ஆயிற்று. அவர் சமர்ப்பணம் செய்வதை விட்டு “நான்” என்பதை விட்டு அகல முயன்றார். எதுவும் பலனில்லை. சில நாட்கள் சென்று பக்கத்து ஊருக்கு பாக்டரி வருவதால் 24 மணி பவர் சப்ளை பாக்டரிக்கு ஆர்டர் ஆகியது. அது தண்ணீர் சம்பந்தமான பாக்டரி. ஏராளமான தண்ணீர் பாக்டரியிலிருந்து வெளி வரும். இதன் விளைவாக

  1. அத்தண்ணீர் விவசாயத்திற்கு இனாமாக வந்தது.
  2. அவர்கள் பயிரிடும் பொருள்களை வாங்கும் ஏற்பாடும் வந்தது.
  3. நிலம் விலை உயர்ந்தது.

ஆனால் பவர்கட் போகவில்லை. பவர்கட்டால் வந்த பிரச்சனைகள் தீர்ந்தன. “நான் சமர்ப்பணம் செய்கிறேன். என் சமர்ப்பணம் தவறாது” என்ற மனநிலை மாறும்வரைசமர்ப்பணத்தைத் தொடர்ந்து

 

“நான்” சமர்ப்பணமானால்

பவர்கட்டும் முழுமையாக விலகும்.

சமர்ப்பணம் தவறாது. சமர்ப்பணம் செய்யும் மனிதன் தவறுவான்.

மனிதன் “நான்” என்ற அகந்தை.

**********



book | by Dr. Radut