Skip to Content

02. எரிச்சல்

எரிச்சல்

Non-reaction என்பதை எரிச்சல்படாத மனநிலை எனக் கூறலாம். 11 ஆண்டுகள் ஜீவனற்ற சர்வதேச ஸ்தாபனத் தலைவரின் எதேச்சாதிகாரத்திற்கு ஆளானவர் எரிச்சல்பட மறுத்ததால் கடந்த 11 ஆண்டுகள் சாதிக்காததை அந்த ஸ்தாபனம் 3 ஆண்டுகளில் சாதித்தது. எரிச்சல் படாமலிருந்தால் முடியாதது எனக் கருதியதும் முடியும் எனக் காணலாம்.

திருமணமான 18 ஆண்டுகட்குப்பின் தன் தங்கை திருமணத்தை கணவன் ஆட்சேபித்து வேறொரு மணமகனை அவள் மணக்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்து, மனைவியையும், அவள் தங்கை, தேர்ந்தெடுத்த புது மணமகனையும் அனைவரையும் திட்டினார். மாமியாரையும் கடிந்து பேசினார். மறுநாள் காலையில் மனைவி அவர் வீட்டை விட்டுத் தாய் வீட்டிற்குப் போக வேண்டும் எனக் களேபரம் செய்தவரின் சொற்கள் களேபரத்தை விடக் கசப்பானவை. தவறான சொற்கள், அவதூறு, மனைவி அவமானப்பட்டாள். அவருக்குப் பதில் கூற முடியாது. என்ன செய்வது என அறியாதவள் Non-reaction எரிச்சல்படாமலிருக்க முடிவு செய்து தூங்கப் போனாள்.

எதுவும் முடியாத நேரம் எதையும் சாதிக்கலாம் என அவள் அறிவாள். ஆனால் அந்த நேரம் எதையும் நினைக்க முடியவில்லை. அன்பர்கள் இதுபோன்ற நேரத்தில் அன்னை அடியோடு மறந்து போவதை அறிவார்கள். தூக்கம் இதுபோன்ற நேரம் வராது.

மறுநாள் கணவன் மனைவியிடம் அமைதியாகப் பேசினார். குரலும் தொனியும் மன்னிப்புக் கேட்பதாக அமைந்தது. “நான்” தவறு என்றார். மனைவியே ஏற்பாட்டை ஏற்றுக் கொள்ள அனுமதித்து, அதற்கு உதவி செய்வதாகக் கூறினார்.

மனைவிக்கு வியப்பு. இது ஓர் அதிசயம்.

*******



book | by Dr. Radut