Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 171: And when that greater Self comes sea-like down

கடலலையெனப் பெருகும் பெரும் பிரம்மம்

  • அழியும் நம் உருவத்தை அழியாமல் நிரப்ப
  • ஆனந்தம் அனைத்தையும் உட்கொள்ளும், திருவுருமாற்றம்
  • கனவிலெட்டாத பூரிப்பு அலைகள் கனவேகத்தில் உருளும்
  • மனமும், வாழ்வும், புலனும், சிரிப்பும் ஒளிமயமாகி
  • கடுமையான குறுகிய மனித நேரத்தைக் கடந்து
  • நரம்பும் தசையும் தெய்வீகமாகிப் புல்லரித்து
  • செல்லெல்லாம் செறிந்து ஒளிமயமாகி மாறி
  • காலத்தின் சிறு ஜீவன், நிழலெனும் ஆத்மா
  • இருண்ட ஆத்மாவின் ஜீவனுள்ள குட்டை மனித ரூபம்
  • அற்ப கனவெனும் ஆர்ப்பாட்டத்திலெழுந்து
  • மனிதனாக உருவாகி, அகந்தையெனும் முகம் பெற்று
  • அழியும் பொய்யுடலை அவிழ்த்தெறிந்து
  • களிமண்ணைப் பிசைந்து கடவுளாக உருவாக்கி
  • என்றும் உள்ள பெருமான் ரூபத்தில் புதியதாக உருவாக்கி
  • வெண்மை சக்தியின் மார்பகத்தில் பதித்து
  • சொர்க்கத்தின் ஸ்பரிசம் சொரேரென எழும்
  • ஆன்மீக இனிமை அருள் ரோஜாவாகக் கனிந்து
  • பெருமாறுதலின் சிவந்த முகம் தெறிக்கும் கனல்
  • விழித்து, நடுங்கி, பூரிப்பால் படபடத்து
  • மந்திரக்கட்டின் குறையை விலக்குவது போல்
  • இருளின் சூன்யத்திலிருந்து விடுதலை பெற்று
  • பாதாள இருளுக்குப் பணியும் பாங்கை விடுத்து
  • உள்ளுறை மகத்துவத்தை உள்ளபடி முடிவாக அறிந்து
  • துதிக்கும் இதயம் காணும் அற்புதம் பிடிபட்டு
  • குழந்தை தெய்வம் மண்டியிட்டு அரியாசனமேறி
  • அழகும், ஆனந்தமும், அன்பும் பாய்ந்து பரவி
  • ஆத்மா எழுவதை உயர்ந்து உணர்ந்து போற்றி
  • நம் சுபாவம் எழுந்த பாதாளத்தையறிந்து
  • ரூபத்தைக் கம்பீரமாய்க் கடந்த ஆத்மா
  • மனத்தின் மயக்கமான உறக்கத்தைக் கடந்து உயர்ந்து
  • இறைவனால் இதயத்தை இதமாக நிரப்பி
  • சூட்சும தெய்வம் விலங்கு மனிதனுக்குக் காட்சியளித்து
  • பொன்தழலின் தியாகத்தை எழுப்பி
  • பிரகாசமான லோகங்களின் பெரும் சக்தியை அழைத்து
  • அழியும் வாழ்வின் அவமானத்தை இழந்து

********

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதன் ஆத்மா. அதுவே பிரபஞ்சமும், பிரம்மமுமாகும். தன்னைக் கண்டு, பிரபஞ்சத்தில் விரிந்து, பிரம்மமாக உயர்ந்து, இவ்வுலகில், இவ்வுடலில், இதே உயிரில், இம்மனத்தில் வாழ்வது தெய்வீக வாழ்வு என ஸ்ரீ அரவிந்தம் கூறுகிறது.

*********



book | by Dr. Radut