Skip to Content

10.மகள் பெற்ற நம்பிக்கை

மகள் பெற்ற நம்பிக்கை

கணவனும் மனைவியும் நெடுநாளாக அன்னை பக்தர்கள். தவறாமல் மையம் வருபவர்கள். அன்னை கூறியவற்றைச் சொல்லாகவோ, கருத்தாகவோ கொள்ளாமல், சத்திய சொரூபமாகக் கருதுபவர்கள். நம்பிக்கையைக் கணவனும், மனைவியும் பூரணப்படுத்தியவர்கள் எனக் கூறலாம். பெண்ணின் தாயாருக்கு வயது 60; மூட்டுவலி; டாக்டரிடம் காண்பித்தார்கள். தாயார் தம் உடல் உபாதைகளை வெளியில் சொல்லும் பழக்கமில்லாதவர். வலிபொறுக்க முடியாத நிலையில் விஷயம் வெளிவந்தது. பெண் தாயாரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.ஜூன் 6, 7, 8 தேதிகளில் சோதனைகள் செய்தார்கள். டாக்டர்கள் கூறியவை,

-இது கான்சர், முற்றிய நிலை.

-சுமார் 10 நாட்களுக்குமேல் உயிருடனிருக்க மாட்டார்.

பெண் திகைத்துப்போனார். "அன்னை அருளில் கான்சரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். அது உண்மையாயிற்றே. அது உண்மையானால்,தாயாரை ஆஸ்பத்திரியில் சேர்த்த பிறகு டாக்டர்கள் கூறியதை நான் எப்படி நம்புவேன்? சொல்லியவர் கான்சர் ஸ்பெஷலிஸ்ட் ஆயிற்றே. எனக்கு ஆஸ்பத்திரியில் உள்ள தாயார் முக்கியம். "அன்னை அருளில்' கூறியுள்ளது முக்கியம். ஸ்பெஷலிஸ்ட் கூறியது எனக்கில்லை. நான் செய்யவேண்டியது பிரார்த்தனை. மனத்திற்குரியது நம்பிக்கை'' என முடிவு செய்து, தாயாரும், பெண்ணும், கணவனும் பிரார்த்தனையை மேற்கொண்டனர். வலி குறைய ஆரம்பித்தது.

இந்த நேரங்களில் பலரும் பல பேசுவார்கள். சமயத்தில் டாக்டரும் நம்மைப்போல் பேசுவார். "எதற்கும் இன்னொரு ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம்'' என ஆஸ்பத்திரியில் மற்றொரு டாக்டர் கூறினார். எடுத்துப் பார்த்தனர். கான்சரில்லை! ஸ்பெஷலிஸ்ட் வந்து, "நான் எடுத்த ஸ்கேன் இதோ இருக்கிறது. புதிய ஸ்கேனில் ஒன்றும் தவறில்லை. இது எனக்குப் புரியவில்லை. மாயமாயிருக்கிறது. எந்தச் சாமிக்குப் பிரார்த்தனை செய்தீர்கள்'' என்றார். முழு நம்பிக்கை முழுப் பலன் தரும்.

*******



book | by Dr. Radut