Skip to Content

06. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V                                                               கர்மயோகி

840) சக்தி (force) தன்னை அறிவது (becoming conscious)நடைமுறையைத் தலைகீழாக மாற்றுகிறது. ஒருவருக்கு ஏற்படும் மாறுதல் மற்றவரையும் மாற்ற முடியுமானால், அவர் அன்னையின் கருவியாகிறார்.

ன்னையின் கருவியின் மாற்றம் அடுத்தவரையும் மாற்றும்.

மனிதன் செய்யப் பிரியப்படாதது மாறுவது. அதற்கு ஏராளமான சக்தியும், முயற்சியும் தேவை. என்றும் இருப்பதைப் போலவே அவன் இருக்க விரும்புகிறான். பள்ளிக்கூடம் வந்தபொழுது குழந்தைகட்குப் படிப்பு சிம்மசொப்பனமாயிற்று. வேட்டையாடியவன் விவசாயம் செய்ய மாறியபொழுது, அவன் ஆர்வமாக மாறவில்லை. முன்னோடி ஆர்வமாக மாறினான். மற்றவர்க்கு அது தலைவலி.

மாறுபவர் முன்னோடிகள். நம் உடல் செயல்படுவது உடலின் சக்தி, உயிரின் சக்தி. புத்திசாலிக்கு மனத்தின் சக்தி செயல்படும். தலைவனுக்கு சமூகத்தின் சக்தி செயல்படும். அன்னையின் சக்தி செயல்பட அவன் அன்னைக்குரியவனாக இருக்க வேண்டும். எந்தப் புதிய சக்தி நம்முள் செயல்பட்டாலும், அது செயல்படும் அளவு நம்மைப் பொருத்தது. பள்ளியில் படிப்பைப் பெறுபவன்,

1. தான் பாஸ் செய்யும் அளவில் பெறலாம்.

2. முதல் மார்க் வாங்கும் அளவில் பெறலாம்.

3. மற்ற மாணவர்க்குத் தன் பாடம் பயன்படும் அளவிலும் பெறலாம்.

4. எதிர்கால ஆசிரியராகப் பெறலாம்.

5. எதிர்கால எழுத்தாளராகப் - text book writer - பெறலாம்.

அதற்கு மேலும் பல நிலைகள் உள்ளன.

அன்னை சக்தியைப் பெறுபவர் முதல் நிலையில் பலன் பெறுகிறார்.பலனை மட்டும் பெற்றால், சக்தி அவரில் தங்காது. பலனைப் பெறுவதன்று முக்கியம்; சக்தியைப் பெறுவதே பலன் என்பது சிறப்பு.பெறும் பலன் நம்முள் தங்குவது, நாம் சக்திக்குக் கருவியாவோம்.நாம் சக்திக்குக் கருவியானால், அடுத்தவர் நம்மால் மாறுவார்.

கிளண்டோமான் பள்ளி 50 ஆண்டுகளாகியும், அந்த ஊரில் வேறு எந்தப் பள்ளியையும் மாற்றவில்லை.கிருத்துவப் பள்ளிகள் 200 ஆண்டுகளாக நம்மூரில் செயல்படுகின்றன.அப்பள்ளி மாணவர்கள் அடுத்த பள்ளிகளில் ஆசிரியரானால் அப்பள்ளிகளின் திறன் அங்கு வருவதில்லை.150 ஆண்டுகளாக ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்டபோதிலும் அவர்களுடைய punctuality உண்மை பேசும் தன்மை, நேர்மை, உழைப்பு, திறமை நமக்கு வரவில்லை.

நாம் பெற்றுக்கொள்ளவில்லையா, அவர்கள் கொடுக்கவில்லையா என்பது வேறு. பலனில் தெரியவில்லை.

கருவியின் மாற்றம் அடுத்தவரையும் மாற்றுவது,

1. பெறுபவரையும், 2. கொடுப்பவரையும் பொருத்தது.

அமெரிக்க நாகரீகம் எவருடைய வற்புறுத்தலுமில்லாமல் இன்று தானே பரவுகிறது.


 

தொடரும்.....

*******

ஜீவிய மணி

அழிவும் ஆக்கல் ஆகும்


 


 


 


 


 



book | by Dr. Radut