Skip to Content

04.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                                      (சென்ற இதழின் தொடர்ச்சி....)            கர்மயோகி

861) இல்லாததை நம்புவது மூடநம்பிக்கை. இருப்பதை நம்ப மறுப்பதும், அழிய மறுப்பதை ஏற்க மறுப்பதும் மூடநம்பிக்கை. ஒரு முறை கண்ட அனுபவத்தை முடிவாகக் கொள்ளும் அறிவீனம் ஒன்று; எதிர்காலத்தை ஏற்க மறுக்கும் அறிவீனம் அடுத்தது.

இல்லாததை நம்புவதும், இருப்பதை நம்பமறுப்பதும் மூடநம்பிக்கை.

. ஊசி போட்டால் உடம்பு குணமாகும்.

. பட்டம் பெற்றால் நல்ல குணம் வரும்.

. தலைவர்கள் பெயரை குழந்தைக்கு வைத்தால், குழந்தை தலைவன் ஆவான்.

. சமஸ்கிருதம் படித்தவன் தெய்வ பக்தியுள்ளவன்.

. ஆங்கிலம் சரளமாகப் பேசுபவன் புத்திசாலி.

.ஞாயிற்றுக்கிழமையில் வேலை ஆரம்பித்தால் நாய் படாத பாடு படவேண்டும்.

. ஏழை மருமகள் அடக்கமாக இருப்பாள்.

. நாம் யாருக்கு உதவுகிறோமோ அவர் நன்றியுடனிருப்பார்.

. கம்பனி வளர பணம் உதவும்.

. சேவை செய்தால் மக்கள் ஓட்டுப்போடுவார்கள், என்பவை இல்லாதவை. பெரும்பாலோர் நம்புகிறார்கள்.

. வாடிக்கைக்காரரைத் திருப்தி செய்தால் வியாபாரம் வளரும்.

. அன்பாக வளர்ந்த குழந்தைகள் அடக்கமாக இருக்கும்.

. பண்பு தொழிலில் வெற்றி பெற உதவும்.

 . ஒரு தலைமுறை ஊழல், அடுத்த தலைமுறையை அழிக்கும்.

. ஒருவருக்கு நாம் செய்யும் துரோகம் பலர்மூலம் நம்மை நாடிவரும்.

. அழகான பெண் கர்வி.

. அழகாகப் பழகினால், அனைவரும் ஆதரிப்பார்கள்.

. திறமையிருந்தால் பிரமோஷன் தானே வரும்.

. கேட்காமலிருந்தால் அதிகம் பெறலாம், என்பவை உள்ளவை. பெரும்பாலோர் இவற்றை நம்புவதில்லை.

. ‘‘நம்பிக்கை என்பது அனுபவத்தால் வருவதில்லை.

. ‘‘தன்னம்பிக்கையுள்ளவனுக்கு நம்பவேண்டியதன் மீது நம்பிக்கை

வரும்.

. ‘‘தன்னம்பிக்கையில்லாதவனுக்கு எதுமீதும் நம்பிக்கை வாராது.

. ‘‘அறிவிக்கு ஆதரவாகப் பழகுபவர் சொல்வனஎல்லாம் சரிஎன நம்பிக்கை வரும்.

. ‘‘அறிவுள்ளவனுக்கு அறிவால் தெளிவு ஏற்படும். நம்பிக்கை வரும்.

. ‘‘அறிவுள்ளவன் அறிவைமட்டும் நம்பினால் நம்பவேண்டியதன்மீதும் நம்பிக்கை வாராது.

. ‘‘நம்பிக்கை ஆத்மாவுக்குரியது.

. ‘‘மூடநம்பிக்கை அனுபவமில்லாத அறிவிலிக்கு எழும் உணர்ச்சியின் இலட்சியம்.

. ‘‘பழக்கமற்றதை நம்பமுடியாதவன் physical manஉடலால் வாழும் ஜடம்.

. ‘‘செக்கை வாங்க மறுக்கும் பாங்க்கும் உண்டு.

****

862) ஒரு முறை கண்டதில் உடலில் ஏற்பட்ட உணர்வை அறிவது மூடநம்பிக்கை. நடைமுறையில் ஒரு முறை கண்ட நிகழ்ச்சியைப் பொதுவான சட்டமாக மனம் ஏற்பது மூடநம்பிக்கை.

குறிப்பானதைப் பொதுவானதாக அறிவது மூடநம்பிக்கை.

. ஒரு விஷயத்தின் உண்மையை அறிந்து ஏற்பது நம்பிக்கை.

. இல்லாததை நம்புவது தவறு.

. அறியாமையால் அப்படி நம்புவது மூடநம்பிக்கை.

. மூடநம்பிக்கை ஏற்படும் விதங்கள் பல.

. நேற்று மாலை கொல்லையில் நரியைக் கண்டால், இன்று மாலையும் அங்கு நரி வரும் என நம்புவது சரியன்று.

. சத்தியஜீவிய சக்திக்கும், மற்ற சக்திகட்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு.

. ‘‘கடையில் ஒரு பொருள் - சோப்பு - வாங்கினால், அடுத்த முறை

அதே கடைக்குப் போனால் அதே பொருளை வாங்கலாம். எத்தனை முறை போனாலும் அது உண்மை.

. ‘‘ஒருவர் பாடுவது நன்றாக இருந்தால், அடுத்து அடுத்து எத்தனை முறை அவர் பாடினாலும் நன்றாக இருக்கும்.

. ‘‘நல்லவர் எத்தனை முறை பேசினாலும் மெய் சொல்லுவார்.கெட்டவர் எத்தனை முறை பேசினாலும் பொய் சொல்லுவார்.ஒரு முறை பலித்தது, வாழ்வில், பல முறையும் பலிப்பது வழக்கம்.

. ‘‘சத்தியஜீவிய சக்தி ஒரு முறைபோல் அடுத்த முறை செயல்படாது. ஏனெனில் அது unique. ஒவ்வொரு முறையும் புதியதாக உருவெடுக்கிறது.

. ‘‘முதல் முறை பிரார்த்தனையால் பலித்தால், அடுத்த முறை மனமாற்றத்தால் பலிக்கும். மூன்றாம் முறை சமர்ப்பணத்தால் பலிக்கும்.பிரார்த்தனை திரும்பத் திரும்பப் பலிக்காது.

. முதற்பெண்ணிற்குத் தானாக நல்ல வரன் வந்தால், இரண்டாம் பெண்ணிற்கும் அதுவே வரும் என எதிர்பார்ப்பது நடக்காது.

. அப்படி ஏன் ஒருவர் எதிர்பார்க்கிறார்?

. உலகம் தெரிந்தவர் அப்படி எதிர்பார்க்கமாட்டார்.

. எதிர்பார்ப்பது - இதுபோல் எதிர்பார்ப்பது - அறியாமை.

. அறியாமை பலவிதமானது.

. ‘‘அனுபவமில்லாத அறியாமை.

. ‘‘படிப்பில்லாத அறியாமை.

. ‘‘அனுபவத்தால் பலன்பெறாத அறியாமை எனப் பலவகையான அறியாமையுண்டு.

. இது எந்த வகையானது?

. தமக்குக் காரியமாக உலகம் ஒத்துழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அறிவு அறியாமையாகும்.

. அதுவும் ஒரு முறை நடந்துவிட்டால், அப்படிப்பட்ட அறியாமையுள்ள மனம் அதை விடாது.

. மனம் அனுபவத்தால் அறிவு பெற்று - அறிவு அனுபவச் சாரம் - அறிவை ஏற்று அனுபவத்தைப் புறக்கணிக்கவேண்டும். அனுபவத்தையே அறிவுஎனக்கொள்வது அறியாமை.


 

தொடரும்.....

****

ஜீவிய மணி

பாதுகாப்பு பற்றாது. அடக்கம் தேவை.

ஸ்ரீ அரவிந்த சுடர்

சக்தியை முறைப்படுத்துதல் ஒருநிலைப்படுத்தலாகும். அப்படிக் கிடைத்த சக்தியால் உருவான செயலை இறைவனை நோக்கி அனுப்புதல் சமர்ப்பணம்.

சக்தியை முறைப்படுத்தி, செயலை உருவாக்கி, இறைவனை

நாடுவது சமர்ப்பணம்.


 


 


 


 


 


 book | by Dr. Radut