Skip to Content

02.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                           கர்மயோகி

16. சத்தியஜீவியத்தின் மூன்று நிலைகள்

     உலகை சிருஷ்டித்தவர் பிரம்மாபிரம்மா தெய்வீக மனம் (overmind) என்ற லோகத்திற்குரியவர்எனவே மனம் உலகை சிருஷ்டித்ததுஎன்பது மரபுஉலகைக் காலம் சிருஷ்டித்தது என்பாரும் உளர்உலகை சிருஷ்டிக்கும் திறன் மனத்திற்கில்லைஎன விளக்கும் பகவான் உலகை சத்தியஜீவியம் சிருஷ்டித்தது என்கிறார். "கடவுளை நாம் அறிவோம்; உலகை அறிவோம். கடவுள் உலகைப் படைத்தார் எனவும் அறிவோம்ஆனால் எப்படிப் படைத்தார்என அறியோம்அதை அவரைக் கேட்கும் உரிமை நமக்கில்லை'' என ரிஷிகள் கூறுவதை பகவான் முழுமையாக ஆமோதிக்கிறார்அதை உயர்ந்த விளக்கம்எனவும் கூறுகிறார்அவருடைய யோகம் மனத்தைக் கடந்து சத்தியஜீவியத்தை அடைந்ததுஇதுவரை செய்த எல்லா யோகங்களும் அகந்தை பெற்ற சித்தி, மேல்மனத்தில் செயல்பட்டவை என்கிறார்.   பகவானுடைய யோகம் மேல்மனத்தைக் கடந்து அடிமனத்திற்குப் போய், சைத்திய ஜீவனையடைந்து, அது வளர்ந்து சத்தியஜீவனாவது. அதனால் ரிஷிகள் அறியாததை அவரால் அறிய முடியும். இறைவன் எப்படி உலகை சிருஷ்டித்தார் என பகவான் அறிவார். மாயைஎன்ற 13ஆம் அத்தியாயத்திலாரம்பித்து தெய்வீக ஆன்மாஎன்ற 17ஆம் அத்தியாயம்வரை இறைவன் சிருஷ்டிக்கப் பயன்படுத்திய முறையை பலவாகப் பகுத்தும், தொகுத்தும் பகவான் கூறுகிறார்.

. முழுமையான பிரம்மம் தன் இச்சையால் அகம், புறம்எனப் பிரிய முடிவு செய்தது. இம்முடிவால் சிருஷ்டி ஏற்பட்டது என்கிறார். இதுவே சிருஷ்டிக்கு ஆதியான காரணம்; ஆரம்பம்.

. பிரம்மம் தன் இச்சையால் சத் என மாறியதுசத் என்பது உலகுக்கு ஆதி. அது ஒரு நிலைஅது ஜீவனாக மாறி சத் புருஷனாகவும் மாறுகிறது.

. சத்தியஜீவியம் காலத்தைக் கடந்தது, காலத்திற்குட்பட்டது என இரண்டாகப் பிரியும் பொழுது மனம் ஏற்பட்டது.  அதேபோல் பிரம்மம் சத்தாக மாறும் பொழுது சத்தியஜீவியம் உற்பத்தியாயிற்று.

. மனம் முழுமையைத் துண்டு செய்ய ஏற்பட்ட கருவி. சத்தியஜீவியமும் பிரிக்கும் கருவிஇரண்டிற்கும் ஒரு முக்கிய வித்தியாசம்ஒரு கட்டையைப் பல துண்டுகளாகப் பிரிப்பதுபோல் மனம் பொருள்களைப் பிரிக்கிறதுஒரு மனிதனைத் தகப்பனார், முதலாளி, வாக்காளர் எனப் பிரிப்பதுபோல் சத்தியஜீவியம் பிரிக்கிறதுகட்டையின் துண்டுகள் தனியானவை. மனிதனின் அம்சங்கள் பிரியும்பொழுது மனிதன் பிரிவதில்லை. சத் என்பதை சத்தியஜீவியம் சத், சித், ஆனந்தம் எனப் பிரித்தது.

. சிருஷ்டி பயன்படுத்தும் உபாயங்கள்:

(1) அகம், புறம் எனப் பிரிவது.

(2) இச்சையால் செயல்படுவது, தானே தன்னை அளவுக்குட்படுத்திக் கொள்வது, தன்னுள் தான் மறைவது.

(3) ஒன்று பலவாகப் பிரிந்து, மீண்டும் ஒன்றாவது.

(4) அறிபவன், அறிவு, அறியப்படுவது என ஜீவியம் மூன்றாகப் பிரிவது போல் பிரம்மம், அன்பு, ஆனந்தம் ஆகியவை பிரிவது.

அப்படி சிருஷ்டி கண்ட பல அனுபவங்கள்:

. பிரம்மம் சத்தானது.

. சத் - சத், சித், ஆனந்தமாகப் பிரிந்து சச்சிதானந்தமானது.

. சச்சிதானந்தம் புறமாகி சத்தியஜீவியமானது.

. சத் - அகம், புறமாகி காலம், இடமானது.

. ஒன்றான சத், பலவான ஜீவாத்மாக்களானது.

. பலவான ஜீவாத்மாக்கள் மீண்டும் சத்தில் ஒன்றாகக் கூடியது.

. மனம் ஜீவியத்தை ஞானம், உறுதியாகப் பிரித்தது.

. ஞானம் உறுதிமேல் செயல்பட்டு, வாழ்வுஎன்ற லோகம் உண்டானது.

. வாழ்வு சலனத்தையிழந்து ஜடமானது.

     ஞானம் உறுதிமேல் செயல்படும்பொழுது தன்னை முழுவதும் இழந்து ஜடமாயிற்று. சலனமான வாழ்வு, சலனத்தை இழந்து ரூபம் பெற்று ஜடமாயிற்று.

சுருக்கமாக இவற்றை பகவான் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

     புருஷன் சலனத்தால் நகர்ந்து, சுயஞானம் பெற்று, அதைச் செயலாக்கும் திறன் பெற்று, தன்னுள் உள்ள சில சத்தியங்களைக் கண்டு, அவற்றைக் காலத்தைக் கடந்த வித்தாக மாற்றி, காலத்தில் சித்திப்பது சத்தியஜீவியம் என்கிறார்.

     மேற்சொன்ன பல கட்டங்களில் இந்த அத்தியாயம் சத்திய ஜீவியம் இறைவன், ஜீவாத்மா, அகந்தை என்ற மூன்று நிலைகளை ஏற்ற வகையை மட்டும் விளக்குகிறதுஇந்த அத்தியாயத்தின் முக்கியக் கருத்துகள்:

1) இதை ஆரம்பிக்கும் முன் ஈஸ்வரனைப் - காலத்தைக் கடந்த சத்தியஜீவியத்தைப் - பற்றி இதுவரை நாம் அறிந்ததை நினைவு கூறுவோம்.

2) தன் செறிவான ஐக்கியத்தினின்று மாயை வழி ஈஸ்வரன் உலகை சிருஷ்டித்தான்.

3) நாம் சர்வமும் பிரம்மம்என்ற அடிப்படையுடையவர்.

. சத்தின் சுபாவம் ஜீவியம், ஆனந்தம்.

. சலனமற்ற செறிவில் புருஷன் ஆனந்தத்தைத் தன்னுள் கொண்டு உள்ளது. புருஷன் செயல்படுவது லீலை. செயலில் புருஷன் லீலையை அனுபவிக்கிறான்.

. அஞ்ஞானத்தால் நாம் மறந்த லீலையின் ஆனந்தத்தை பிரம்மம் நம்முள் ஆத்மாவாக அனுபவிக்கிறது.

4) ஐக்கியமான சச்சிதானந்தத்தை வலியுறுத்தினால், நமக்கு உலகம் வேண்டுமா, சொர்க்கம் வேண்டுமாஎன்று முடிவு செய்யும் கட்டாயம் உண்டு.

5) உலகை சொர்க்கத்திற்கும், சொர்க்கத்தை உலகுக்கும் எடுத்துரைப்பது இடைப்பட்ட சத்தியஜீவியம்.

. காரண காரியமெனும் சட்டம் காலத்தை இடத்துடன் இணைக்கிறது.

. காலத்தின் அசைவை இடத்தின் நிகழ்ச்சியாக்குவது சித்-சக்தி, ஞான-உறுதியெனப்படும். இதை நடத்தும்பொழுது மனம் ஐக்கியத்தை இழப்பதுபோல், சத்தியஜீவியம் இழப்பதில்லை.

6) சச்சிதானந்தம் தன் முதல் நிலையிலிருந்து அசைந்து வெளிப்படுவது பிரபஞ்ச சிருஷ்டிக்குக் கருவியாகும்.

. சலனம் சக்தி; சக்தி ரூபம்; ரூபம் கருவி. அவை பிரபஞ்ச சிருஷ்டியின் கருவி.

. சலனத்தை அடிப்படையாக்கி சச்சிதானந்தம் வெளிப்படுகிறதுஅதனுள் அது பாத்திரமாகிறதுஅது சக்தியின் ரூபம். அது சிருஷ்டியின் கருவி.

. பிரபஞ்ச வாழ்வின் சக்தியின் அம்சங்களாக ஜீவியமும், சக்தியும் உள்ளன.

. அந்த சக்தியின் ரூபங்கள் ஞானமும், உறுதியுமாகும்.

. காலம், இடத்தில் அவை தொடர்புகளை ஏற்படுத்துகின்றன.

. புருஷன் சலனத்தால் நகர்ந்து சுயஞானம் பெற்று, அதைச் செயலாக்கும் திறன் பெற்று, தன்னுள் உள்ள சில சத்தியங்களைக் கண்டு, அவற்றைக் காலத்தைக் கடந்த வித்தாக மாற்றிச் சித்திப்பது சத்தியஜீவியம் என்கிறார்.

. அது சுய-ஞானம், சத்தியஜீவியம், முழு எண்ணம், சுய-சக்தி.

7) இறைவன் என்பது என்ன?

     அனைத்தையும் தன் ஜீவனில் சிருஷ்டி செய்து, அவற்றின் பரிணாமத்தைத் தன் சுய-ஞானத்தால் ஆட்சி செய்பவன் இறைவன்.  அவன் எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன்.வாழ்வில் ஒருவர் செயல் அடுத்தவருடைய செயலுடன் மோதும்.  சத்தியஜீவியம் அவற்றைச் சுமுகமாகக் காணும்.

8) இறைவன், ஜீவாத்மா, அகந்தைஎன்ற மூன்று நிலைகளை சத்தியஜீவியம் ஏற்கிறது.

9) முதல் நிலை காலத்தைக் கடந்த சத்தியஜீவியம் (ஹிரண்யகர்ப்பம்டாக்டர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேர் தமிழ்ச்சொல் வைத்தியர் என்றாலும், "வைத்தியரை அழைத்து வா' எனில் நாட்டுவைத்தியர் வந்து நிற்பார்அதுபோல் பிரக்ஞா, ஹிரண்யகர்ப்பா, ஜீவாத்மா என்ற சொற்கள் பரம்பரைப் பொருள் தரும் என்பதாலும், அவர் கொள்ளும் பொருள் அடிப்படையாக மாறும் என்பதாலும், அவர் சமஸ்கிருதச் சொற்களை முக்கியமான இடத்தில் தவிர்க்கிறார். ஜீவாத்மா அழியக் கூடியது என்பது மரபு. அதுவே பரமாத்மாஎன்பது ஸ்ரீ அரவிந்தம். அதனால் பகவான் individual என்றே கூறுகிறார்). ஒன்றுள் பல, பலவும் ஒன்று என்ற இறைவன் நிலை இது.

10) இரண்டாம் நிலை ஜீவாத்மா.

11) மூன்றாம் நிலை அகந்தை - அஞ்ஞானத்தில் உள்ள ஜீவனின் பல்வேறு நிலைகள்.

12) அடுத்த கட்டத்தில் அஞ்ஞானம் ஏற்படும். அது தவிர்க்க முடியாததில்லை. பிரிந்து நின்று பெறும் இன்பம் செறிவு பெற ஐக்கியத்தின் இன்பம் அவசியம்.

13) இம்மூன்றும் ஒரே சத்தியத்தை அனுபவிக்கும் மூன்று நிலைகள்இவை காலத்தால் முந்தையது, பிந்தையது என்பதில்லை; ஜீவியத்தால் உண்டு. அநித்தியமான காலம் சுழன்று சுழன்று மீண்டும் வருவதால் நித்தியம் ஆகிறது.

14) நாம் பிரம்மத்தை வலியுறுத்துவதால் பிணக்கும், வாதமும் நமக்குத் தேவையில்லை.

Page142 / Para 1:

     பிரக்ஞா நாம் வாழும் உலகை விளக்கிக் கூறுகிறதுஅதைப் புரிந்துகொள்வது எளிது. அது விடுதலையடைந்த மனிதனுடைய ஆத்மா. மனித மனப்போக்கிலிருந்தும், அதன் குறைகளினின்றும் அது சுதந்திரம் பெற்றது. தெய்வீக சத்தியஜீவியத்தின் செயலில் கலந்துகொள்ளும் உரிமையை அது பெறுகிறதுஅதையறியுமுன் நாம் ஈஸ்வரனை அறிய வேண்டும்இறைவனின் ஜீவியம் ஈஸ்வரன். தன் மாயையால் ஈஸ்வரன் உலகை சிருஷ்டிக்கின்றான். தன் சிருஷ்டித் திறனால் அவன் அதை நிறைவேற்றுகிறான்அவனது செறிந்த ஐக்கியத்தால் அதைச் செய்கிறான். அதை நாம் அறிவது நல்லது.

PAGE 142 / PARA 2:

     நமக்கு பிரபஞ்ச வாழ்வு முழுவதும் சத்புருஷனாகும்அதனுடைய முக்கிய சுபாவம் ஜீவியம்அதன் செயல்படும் சுபாவம் சக்தி அல்லது உறுதிஇப்புருஷன் ஆனந்தமயமானவன்இந்த ஜீவியம் ஆனந்தமயம் ஆனதுஇந்த சக்தி அல்லது உறுதி ஆனந்தமயமானதுஇது இறைவன். இதுவே நாம்; நம் அடிப்படையான ஜீவன். இதைத் தோற்றத்தைக் கடந்த ஜீவன் எனலாம்இது நித்தியம். இது பிரபஞ்ச வாழ்வின் அகலாத ஆனந்தம்இது ஜீவியத்தின் ஆனந்தம்இது சக்தி அல்லது உறுதியின் ஆனந்தம்இது தன்னில் செறிவு பெற்றுச் சலனமற்றுள்ளதுஇது சிருஷ்டிக்கும் திறனுடையது; தீவிரமாகச் செயல்படக்கூடியதுசெறிந்துள்ள பொழுது அகலாத ஆனந்தம் பெற்று உள்ளதுஅடிப்படையான, நித்தியமான ஆனந்தம் இது. சிருஷ்டிக்கும் செயலில் அதற்கு லீலை கட்டுப்படும்; அல்லது அதுவே லீலையாகிறது.   அது லீலையின் ஆனந்தமாகிறது. அது பிரபஞ்ச வாழ்வின் லீலை ஆகிறதுஅது ஜீவியத்தின் லீலையாகிறது. அது சக்தி, உறுதியின் லீலையாகும்இந்த லீலை பிரபஞ்சத்திற்குரியதுஇந்த லீலையின் ஆனந்தமே பிரபஞ்ச வாழ்வின் ஒரே இலட்சியம். அதுவே நோக்கம்; அதுவே காரணம். தெய்வீக ஜீவியம் இந்த லீலையைப் பெற்றது.  அதன் விலக்க முடியாத ஆனந்தத்தை நிலையாகப் பெற்றதுஅதுவே நமது உண்மையான ஆத்மாநமது பொய்யான ஆத்மாவான அகந்தையால் அது மறைக்கப்படுகிறதுஅது மனத்தின் அகந்தை.அது தெய்வீக ஜீவியத்துடன் ஒன்றியிருப்பதால், அது வேறு வகையாக இருக்க முடியாதுநாம் தெய்வீக வாழ்வை நாடுகிறோம் . நம் உண்மையான ஆத்மாவை திரை மறைவினின்று கொண்டு வாராமல் அதைச் செய்ய முடியாதுஅதைச் சாதிக்க நம் போஆத்மாவான அகந்தையினின்று உயர்ந்து, உண்மையான ஆத்மாவை அடைய வேண்டும்ஆத்மா நம் உண்மையான உயர்ந்த ஜீவன். தெய்வீக ஜீவியத்துடன் ஐக்கியப்படுத்துவதால் அதைச் சாதிக்கலாம். நமக்கு அது எட்டாத உயரத்திலுள்ளது. அப்படியில்லையெனில் நாம் உயிர் வாழ முடியாது. நாமறிந்த மனப்பான்மை தெய்வீக ஜீவியத்தை இழந்து விட்டது.

PAGE 142 / PARA 2:

     Another Version of the same paragraph in my own words, not adhering to the text:

     இந்திய மரபு உலகை இறைவன் படைத்தான்என்பதுபகவான் ஸ்ரீ அரவிந்தர் இறைவன் தானே உலகமாக மாறினான் என்கிறார்."ஏன் உலகை இறைவன் படைத்தான்?'' என்ற கேள்வியை எழுப்பி,"இறைவன் ஆனந்தத்தை நாடி உலகை சிருஷ்டித்தான்'' என்று அவரே பதிலளிக்கிறார்பிரம்மம் இறைவன். இறைவன் ஆனந்தமயம்என்பது மரபுஸ்ரீ அரவிந்தம் அதையே கூறுகிறது. இறைவன் ஆனந்தமயம் ஆனவன் எனில், அவன் ஏன் ஆனந்தத்தைத் தேட வேண்டும்என்பது கேள்வி. ரிஷிகள் கண்ட பிரம்மம் பகுதியானது; அசைவற்றது. அதன் ஆனந்தம் (Bliss) முதல்நிலை ஆனந்தம். பகவான் கண்ட பிரம்மம் முழுமையானதுஅசைந்து உலகை சிருஷ்டிப்பதுஅதன் ஆனந்தம் (Delight) இரண்டாம் நிலை ஆனந்தம். முதல்நிலை ஆனந்தத்தில் உள்ள பிரம்மம் இரண்டாம் நிலை ஆனந்தத்தைத் தேடி உலகை சிருஷ்டித்தான் என்பது பகவான் ஸ்ரீ அரவிந்தர் விளக்கம்.

     உலகம் அஞ்ஞானத்துள்ளிருப்பதால் உலகம் ஆனந்தத்தை வலியாக அறிகிறது. உலகம் காலத்தைச் சார்ந்ததுகாலத்திற்கு ஆனந்தம் வலியாகத் தெரியும். காலத்தைக் கடந்த நிலையில் வலி ஆனந்தமாக (Bliss) மாறுகிறதுஇது முதல்நிலை ஆனந்தம். இரண்டாம்நிலை ஆனந்தம் காலத்துள் காலத்தைக் கடந்த நிலைக்கு உரியது. அதை பகவான் Simultaneous integrality of Time eternity and Timeless eternity என்கிறார்நாம் சுருக்கமாக அதை இரு காலமும் இணைந்த நிலை எனலாம்.

. இதுவரை செய்த யோகம் மோட்சம் பெற. இது காலத்தினின்று காலத்தைக் கடந்த நிலையை அடைகிறது.

. பகவான் யோகம் திருவுருமாற.

இது காலத்தினின்று இரு காலமும் இணைந்த நிலைக்குப் போகிறது.

. அசைவற்ற பிரம்மம் முதல்நிலை ஆனந்தம் பெறுகிறதுஇது பகுதியான பிரம்மம்.

. முழுமையான பிரம்மம் லீலையுள் உள்ள பிரம்மம், அசைவில் லீலையாகி, இரண்டாம் நிலை ஆனந்தம் பெற காலத்தினின்று இருகாலமும் இணைந்த நிலைக்கு உயருகிறது.

. இரண்டாம் நிலை ஆனந்தத்தை ஆழத்தில் புதைந்துள்ள வளரும் ஆன்மா அனுபவிக்கிறது. அகந்தை அதை அறிவதில்லை.

     செல்வம், செல்வாக்கு, பதவி என்பவை ஒன்றையடுத்து, அடுத்தது வரும். இவை மனித வாழ்வின் உச்சக்கட்டங்கள்உழைப்பால் செல்வமும், திறமையால் செல்வாக்கும், சூட்சுமத்தால் பதவியும் சேர்வது உலக அனுபவம்.- நடைமுறையில் இவை பலிக்க கடுமை, கொடுமை, வன்முறை, ஏமாற்றம் தேவை. நேர்மை, நாணயம், நியாயம், வாக்கைக் காப்பாற்றுவது, மானம், அன்பு, அழகு ஆகியவை விலகினால்தான் மேற்சொன்னவை பலிக்கும்இது முதல்நிலை வெற்றி. உழைப்பின் கடுமையின்றி செல்வம் வாராதுதிறமையின்றி செல்வாக்கு எழாதுசூட்சுமமின்றிப் பதவியைப்பெற முடியாது.   உழைப்பு பொறுமையாகி, திறமை அறிவாகி, சூட்சுமம் நேர்மையாகி, நாணயம், நியாயம், மானம், அன்பு, அழகால் செல்வம், செல்வாக்கு, பதவி வருவது உலகில் இல்லைது முழுமையானதுஇரண்டாம் நிலை வெற்றி.  முடிவான, முழுமையான, பூரண பிரம்மத்தின் வெற்றிஇன்று உலகிலில்லாததுஎன்றும் உலகம் அறியாதது. பகவான் தேடும் ஆனந்தம் இந்த இரண்டாம் நிலை வெற்றிக்கு ஒப்பாகும். ரிஷிகள் தேடிக் கண்டதை முதல் நிலை வெற்றிக்கு ஒப்பிடலாம்.

PAGE 143 / PARA 3:

      அரசாட்சி மாறி மக்களாட்சி ஏற்பட்டது அரசியல் புரட்சி.  அரசாட்சியில் அரசனுக்கு மக்கள் மனநிலையை அறிய முடியாது.மக்களாட்சியில் எலக்ஷன் வரும்.   அச்சமயம் மக்கள் மனநிலையை சர்க்கார் அறிய முடியும். சச்சிதானந்தம் ஐக்கியமானது. நம் மனம் துண்டுகளாலானதுஇவற்றிடையே எந்த ஒற்றுமையுமில்லைதுறவி காட்டில் உள்ளார்; உயர்ந்தவர். அவருக்கு ஜபம், நிஷ்டை, சமாதி உண்டுநமக்கு அவையெல்லாமில்லை. நமக்கு வீடு, கல்யாணம், திருவிழா உண்டுதுறவிக்கு அவையில்லை. துறவி வேறு; நாம் வேறு; தொடர்பில்லை. எலக்ஷன் மக்கள் மனநிலையை சர்க்காருக்கு எடுத்துச் சொல்வதுபோல் சத்தியஜீவியம் மனித மனத்திற்கும்,சச்சிதானந்தத்திற்கும் இடையேயிருந்து, ஒன்றை அடுத்ததற்கு எடுத்து விளக்கி, ஒன்றை மற்றதுடன் சேர்க்கிறதுஅது இல்லாவிட்டால் துறவறம், இல்லறம் போல் நாம் ஒன்றை ஏற்று, மற்றதை விலக்க வேண்டி வரும்அதுவே ரிஷிகள் செய்தது. இல்லறத்தை விலக்கித் துறவறத்தை மேற்கொண்டனர்ஸ்ரீ அரவிந்தம் முழுமையானது.  எதை விலக்கினாலும் முழுமை குறையும். முழுமைக்குக் குந்தகம் வரும்படி நாம் எதையும் செய்ய முடியாது.

     நாம் சச்சிதானந்தத்தை ஒரு புறமும், பகுதியான மனித மனத்தை மறுபுறமும் வற்புறுத்தினால், இவை எதிரானவை. ஒன்று மெய், அடுத்தது பொய்யாக வேண்டும்எதிரான இரண்டும் மெய்யாக முடியாதல்லவா? ஒன்றை ஏற்க, ஏற்று அனுபவிக்க, அடுத்ததை மறுத்து விலக்க வேண்டும்ஆனால் நாம் மனத்தாலும், மனம் ஏற்படுத்திய ரூபங்களிலும் வாழ்கிறோம்சொர்க்கத்தை எட்ட மனத்தையும், வாழ்வையும் அழிக்க முயன்றால், உலகில் தெய்வீக வாழ்வில்லைஎன்ற முடிவுக்கு வருகிறோம்நாம் பரமாத்மாவிலிருந்து வந்தவர்கள். மீண்டும் பரமாத்மாவை அடையவேண்டும்அதைச் செய்ய உலக வாழ்வை உதறித் தள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறோம். இடைப்பட்ட நிலையொன்று இல்லை எனில், இந்த முடிவு தவிர்க்க முடியாததுசச்சிதானந்தத்திற்கும், நமக்கும் இடையே ஒன்று இருந்தால், அது நம்மை சச்சிதானந்தத்திற்கும், சச்சிதானந்தத்தை நமக்கும் எடுத்துரைக்குமானால், உலகை உதறித்தள்ள வேண்டாம்.அது இருந்து, அப்படிச் செயல்பட்டால் சத், சித், ஆனந்தத்தை மனம், உயிர், உடல் அனுபவிப்பது சாத்தியம். அது தெய்வீக வாழ்வாகும்.

PAGE 143 / PARA 4:

     உலக வாழ்வை ஒரு கம்பனி வாழ்வுக்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.  பெரிய, பழைய கம்பனிகளில் முதலாளி வேறு, கம்பனி வேறு என்ற நிலை ஏற்பட்டுப் பிரிந்துவிடும்கம்பனிக்கு முதலாளி வந்து வருஷங்களாக இருக்கும். இருந்தாலும் கம்பனி ஓடும்இலாபத்திலும் ஓடும், நஷ்டத்திலும் ஓடும். எப்படி ஓடுகிறதுஎன எவருக்கும் தெரியாது.  இதுவே இன்றைய மனித வாழ்வு. மனிதனுக்குச் சச்சிதானந்தம் நினைவில்லைஎன்றாலும் சச்சிதானந்தம் மனிதனை மறக்கவில்லை.  மனித வாழ்வு இயங்குகிறதுஎனில், அது சச்சிதானந்தத்தால்தான் -கடவுளால்தான் - நடக்கிறதுநஷ்டத்திலும் கம்பனி உயிரோடிருக்கிறதுஎனில்இந்த மாதம் கொடுத்த சம்பளம் முதலாளியின் பணம். அதனால்தான் கம்பனி நடக்கிறதுகம்பனியின் முடிவுகள் Board போர்டின் தீர்மானமாகின்றனஅத்தீர்மானங்கள் கீழே order, rule சட்டமாக ஆபீசர்மூலம் வருகின்றனஅவை முதலாளியின் எண்ணத்தைப் பூர்த்தி செய்பவை. தொழிலாளி, அடுத்த டிபார்ட்மெண்ட்டுடன் போட்டியிடுவான்அது கம்பனியைப் பாதிக்கும்அதைப் பற்றி அவனுக்குக் கவலையில்லைமேலிருந்து வரும் தீர்மானமும், ஆர்டரும் முதலாளியின் எண்ணத்தைப் பாக்டரியில் பூர்த்தி செய்யும்தொழிலாளிக்கு அது தெரியாதுஅவன் போட்டி போட்டு உற்பத்தியைத் தடைசெய்வான்.

     உலகம் என்பது சச்சிதானந்தம் உற்பத்தி செய்ததுகடைசி கட்டத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை சச்சிதானந்தம் ஏற்கனவே முடிவு செய்துவிட்டது. அதன் முடிவுகளை உலகில் காலத்தால் இடத்தில் பூர்த்திசெய்ய வேண்டும்ஒரு குழந்தை பிறக்க வேண்டுமானால், அது 10 மாதம் தாய் வயிற்றிலிருக்க வேண்டும்; அவன் தலைவனாக வேண்டுமானால் 50 ஆண்டு வாழவேண்டும்; இது காலம். அவன் சாதிக்க வேண்டுமானால் ஊரில் செயல்பட வேண்டும், தொழில் செய்யவேண்டும், நிலம் பயிரிடவேண்டும்; இது இடம். சச்சிதானந்தம் உலகில் ஓர் எண்ணத்தை ஒரு தலைவன் மூலம் நிறைவேற்ற காலமும், இடமும் தேவை. சச்சிதானந்தம் பெற்றுள்ளது சித்-சக்தி. சித்-சக்தி காலம், இடமாகி, அதன் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் கருவி, அரங்கம், லோகம் சத்திய ஜீவியம். எண்ணம் மனத்தில் உதயமாகி, உலகில் செயல்படுகிறதுகாலத்தில் ஏற்பட்டது இடத்தில் பூர்த்தியாகிறதுஇதற்குரிய சட்டம் காரண-காரியம். சத்தியஜீவியம் காரண-காரியத்தால் காலத்தில் எண்ணத்தை உற்பத்தி செய்து, இடத்தில் பூர்த்தி செய்கிறதுமனம் இந்தச் சட்டத்தை அறியாது.

     இடைப்பட்டநிலை இருக்கிறதுநாம் அதை சத்தியஜீவியம் என்கிறோம்; அல்லது சத்தியம்-ஜீவியம் என்கிறோம்இது மனத்தை விட உயர்ந்த சட்டம். அது அடிப்படையான ஐக்கியம் என்ற சத்தியத்தால் இருக்கிறது; செயல்படுகிறது; நடக்கிறதுமனம் தோற்றத்தை அறியும்.  அதன்படி நடக்கிறது. நாம் அனைத்தும் இறைவன் என ஆரம்பித்ததால்,இறைவனுக்கும் உலகுக்கும் இடையே ஒருநிலை - சத்தியஜீவியநிலை - இருப்பது அவசியமாகிறதுசச்சிதானந்தம் காலத்தையும், இடத்தையும் கடந்த பிரம்மம்அது தன்னையறியும் ஆனந்தம்உலகம் எதிரானது. அது காலத்தால் இடத்தில் செயல்படுவதுஅது காலத்திற்கும், இடத்திற்கும் உள்ள தொடர்பால் ஏற்படும் வாய்ப்புகளைக் காலத்தில், இடத்தில் சாதிக்கிறதுமனத்தில் ஏற்படும் எண்ணம் காலத்தில் ஏற்படும் வாய்ப்புஅதை வாழ்வில் நிறைவேற்றுவது இடத்தில் பூர்த்தி செய்வதுஇதைச் செய்வது காரண-காரியம். காரண-காரியத்தின் உண்மையான பெயர் தெய்வீகச் சட்டம்அதன் சாரம் எண்ணம்தன்னுள் உள்ள எண்ணத்தை வாய்ப்பாக வளர்த்து, சாதிப்பது அச்சட்டத்தின் நோக்கம்இவை முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டன. அம்முடிவுகள் முடிவில்லாதவை; கணக்கிலடங்கா; அனந்தம்அதைச் செய்வது ஞானம் - உறுதி அல்லது சித்-சக்திஉலகம் என்பது பிரபஞ்சம். அது ஜீவியத்தின் லீலை. ஜீவியம் பிரபஞ்ச வாழ்வின் சுபாவம். ஞான-உறுதி இதைச் சாதிக்கிறது எனில், அது மனத்தின் ஞானம் இல்லை, மனத்தின் உறுதியில்லைஇந்தச் சட்டம் மனமறியாததுஇதை மனம் ஆளவில்லை; பெற்றிருக்கவில்லைஆனால் இச்சட்டம் மனத்தை ஆள்கிறதுமனம் தோற்றத்தில் உள்ளதுஅதன் வேரைத் தொடவில்லைஉலகைத் தனித்தனிப் பொருள்களாக, நிகழ்ச்சிகளாக மனம் காண்கிறதுஅவை வேரிலிருந்து உற்பத்தியானதை மனம் அறியாதுவேரைக் காண வீண்முயற்சி செய்கிறதுபெய்யும் மழையை மனம் "மழை' எனக் காண்கிறதுவேலை நிறுத்தத்தை, "வேலை நிறுத்தமாகக்' காண்கிறது. மனித மனம் வறண்டு போனால் மழை பெய்யாதுஎன மனம் அறியாது. மக்கள் மனம் நெகிழ்ந்தால் மழை பெய்யும்என மனம் அறியாதுநிர்வாகம் சரியாக இல்லாவிட்டால், தொழிலாளிக்குத் திறமையில்லாவிட்டால் வேலை நிறுத்தம் வரும் என்பதை அறியாத மனம் மழையை "மழை'யாகவும், வேலை நிறுத்தத்தை "வேலை நிறுத்த'மாகவும் கண்டு, காரணம் புரியாமல் திகைக்கிறதுமேலும் அனைத்தையும் உற்பத்தி செய்யும் ஞான-உறுதி ஐக்கியத்திற்குச் சொந்தமாக இருக்க வேண்டும்அந்த ஐக்கியத்தில் இருந்து துண்டுகளை உற்பத்தி செய்ய வேண்டும்மனத்திற்கு இந்த ஐக்கியமில்லைதுண்டுகளை அரைகுறையாக மனம் சமாளிக்கிறது.

PAGE 144 / PARA 5:

     சமூகம், சர்க்கார் ஆகியவை அதிகாரம் பெற்றவைநாட்டில் அந்த அதிகாரம் அமுல் நடக்கின்றதுஇது எப்படி நடக்கின்றது என்பது இறைவன் எப்படி உலகைப் படைத்தான் என்பதற்குச் சிறந்த உதாரணமாக அமையும்இறைவன் மனிதனை, மரத்தை, மற்ற பொருள்களை எப்படி சிருஷ்டித்தான்என்பது நம் கேள்விஅதை சத்தியஜீவியம் செய்ததுஎன்பது பகவான் பதில். நாம் சமூகத்தைக் காண்பதில்லை. சர்க்கார்என்பது கண்ணுக்குத் தென்படாதது.சர்க்கார் அதிகாரிகளும், கட்டடங்களும் தெரிகின்றன. சர்க்கார் அதிகாரம் செயலில் தெரிகிறது; அதிகாரம் தெரியவில்லை. சமூகத்தை பிரம்மமாகவும், சர்க்காரை சச்சிதானந்தமாகவும் கொள்ளலாம்சத்தியஜீவியம் நிர்வாகம். சர்க்கார் தன்னை நிர்வாகமாக மாற்றிக் கொண்டு செயல்படுகிறது.  ஒரு பாலம் கட்ட வேண்டுமானால் இன்ஜினீயர் கட்டுகிறார். இன்ஜினீயர் நமக்கு சர்க்கார்சர்க்கார் இங்கு இன்ஜினீயராகிப் பாலம் கட்டுகிறார். பாலம் கட்டுவதை அறிந்து, சர்க்கார் அதிகாரத்தைப் பெற்று, இன்ஜினீயர் பாலம் கட்டுகிறார்நமக்குப் பாலம் தெரிகிறது. இன்ஜினீயர் கண்ணுக்குத் தெரிவது இல்லை. மரம், மனிதன் தெரிகிறது; அதைப் படைத்த சத்தியஜீவியம் தெரிவதில்லை.

     மனத்தைவிட உயர்ந்த சக்தி ஒன்றிருக்க வேண்டும். மனம் செய்ய முடியாததை அது செய்ய வேண்டும்பாலத்தை மக்கள் கட்ட முடியாதுஇன்ஜினீயர் உத்தரவால் கட்ட முடியும். மனத்தைவிட உயர்ந்த சக்தி சச்சிதானந்தம்அது உண்டுஆனால் அது தூய்மையான, அனந்தமான, மாற முடியாத ஜீவியமான சச்சிதானந்தமில்லை.  அதிலிருந்து புறப்பட்டு வந்த சக்தி. அந்த சக்தி ரூபம் பெற்று சிருஷ்டிக்குக் கருவியாகிறதுஇது சத்தியஜீவியம். இன்ஜினீயர் சென்னையில் உள்ள சர்க்காரில்லை; டெல்லியில் உள்ள சர்க்கார் இல்லை; பாலம் கட்டும் அதிகாரத்தை மட்டும் பெற்று வந்த இன்ஜினீயர் சர்க்காராக வருகிறார். ஜீவியமும், சக்தியும் இரண்டு முக்கியமான சக்தியின் அம்சங்கள். அவை ஞானம், உறுதியாக மாறுகின்றனஅவை காலத்துள் செயல்பட்டு, இடத்தில் வெளிப்படு கின்றனஇந்த ஞானமும், உறுதியும் ஒன்றேஅது அனைத்தையும் தழுவும்; அனைத்தையும் உட்கொள்ளும்; அனைத்துக்கும் உருவம் தரும்; அனந்தமானது. இன்ஜினீயர் உதாரணத்தில் பாலம் கட்ட வேண்டிய படிப்பு, பயிற்சி, அனுபவம், பட்டம், பணம், காண்ட்ராக்டரை அதிகாரம் செய்யும் உத்தரவு, அனைத்தும் இன்ஜினீயருக்குண்டு.  இன்ஜினீயர் செயல்பட்டால் பாலம் உருவாகிறது. சத்தியஜீவியம் செயல்பட்டால் உலகம் உருவாகிறது.

. இறைவன் செயல்திறன் பெற்று, சுயஞானம் பெற்று, தான் தன்னில் கண்ட உண்மைகளை காலத்தில் செயல்பட வைப்பது சத்தியஜீவியம்.

. சர்க்கார் பாலம் கட்டும் திறன் பெற்று, அதற்குரிய ஞானம் பெற்று, அதைக் கட்டும் உண்மையைத் தன்னில் கண்டு, ஆற்றுக்குக் குறுக்கே பாலம் கட்டும் அதிகாரி - இன்ஜினீயர் - யாக வருகிறது.

     தன் ஜீவன் எதுவானாலும் அது சுய ஞானமாகிறது. அது சத்தியம்-ஜீவியம், முழு எண்ணம். சுய ஞானம் சுய சக்தி; அதனால் தன்னைக் காலத்தில் பூர்த்தி செய்துகொள்கிறது.

PAGE 144 / PARA 6:

     இதுவே தெய்வீக ஜீவியத்தின் சுபாவம். அதுவே அனைத்தையும் தன்னுள் சிருஷ்டிக்கிறது. தன் சித்-சக்தியின் அசைவால் அதைச் சாதிக்கிறதுஅவை வளர்வது சுய-வளர்ச்சி. அதையும் அதுவே நிர்வாகம் செய்கிறதுதன்னுடன் பிறந்த ஞான-உறுதியால் அதைச் செய்து முடிக்கிறதுஅது அதன் சத்தியம். அதை முழு-எண்ணம் என்கிறோம்இம்முழு எண்ணம் அதற்கு உருவம் தந்ததுஎந்த ஜீவன் இப்படித் தன்னையறியுமோ, அதை இறைவன் என்கிறோம். இறைவன் இக்காரணங்களால் எல்லாம் வல்லவன், எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்தவன்.

. ஒரு குடும்பத்தில் நடப்பவை அனைத்தும் தலைவரால் செய்யப்பட்டவை. அதனால் அவர், குடும்பத்தைப் பொருத்தவரை கடவுள்இறைவன் எனப்படும்.

. கடவுள் என்பது ஜீவியம், தெய்வீக ஜீவியம். அதன் சக்தி சித்-சக்தி.அதற்குச் சிருஷ்டித் திறனுண்டு. அது நகர்வது - சலனம் - சிருஷ்டிஅதன் அசைவு பரிணாமம்; சுயமான பரிணாமம். அதன் ஞானம் அதற்குப் பிறப்பில் ஏற்பட்டது. அதன் ஞானத்திற்கு உறுதியுண்டு. அதை முழுஎண்ணம் என்கிறோம்முழுஎண்ணம் அதன் சலனத்திற்கு ரூபம் தருகிறது.

தெய்வீக ஜீவியம் அசைந்து தன்னுள் உலகை சிருஷ்டிக்கிறது.அதுவே கடவுள், இறைவன் எனப்படும்.

     தெய்வீக ஜீவியம் - கடவுள், இறைவன் - தன் ஜீவனால், தன் சக்தியால் காலத்துள் அனைத்தையும் சிருஷ்டிப்பதால், அவன் எங்கும் நிறைந்தவன்அனைத்தும் அவன் வாழ்வில் வாழ்வதால், அவனால் ரூபம் பெற்று, அவனால் ஆளப்படுவதால், அவன் அனைத்தையும் அறிந்தவன். அனைத்தையும் பெற்ற ஜீவியம். அனைத்தையும் பெற்ற சக்தி என்பதால், அது அனைத்தையும் கூறும் உறுதிஎனவே அவன் எல்லாம் வல்லவன்இந்த உறுதியும், ஞானமும் பிணக்கொழிந்தவைநம் அறிவும், உறுதியும், மோதுவதுபோல் மோதுபவையல்லஅவை ஒரே ஜீவனின் இரு அம்சங்கள்என்பதால் அங்கு பிணக்கில்லைவெளியிலிருந்து வந்து அதை மறுக்கும் சக்தியோ, ஜீவியமோ, உறுதியோ இல்லை. இறைவனுக்குப் புறமாக எதுவும் இல்லைஎன்பதால் அது இல்லை. அதன் உள்ளேயுள்ள சக்தி, ரூபம், ஞானம் ஆகியவை அதற்குப் புறம்பானவையில்லை. அனைத்தையும் நிர்ணயிக்கும், அனைத்தையும் சுமுகமாக்கும் உறுதியின் லீலை அதுநம்மால் முழுமையைக் காணமுடியவில்லை என்பதால் பிணக்குத் தெரிகிறது. சத்தியஜீவியம் முழுமையானதுஅதன் சுமுகம் முன்கூட்டி நிர்ணயிக்கப்பட்டது; அது என்றும் உள்ளது. அதன் பார்வையில் பிணக்கில்லை.

     ஒரு திருமணத்தில் பெண் வீட்டார் மண்டபம் ஏற்பாடு செய்து, பிள்ளை வீட்டார் சமையல் ஏற்பாடு செய்து, பிள்ளை எவருக்கும் அடங்காதவன், பெண் அமெரிக்காவில் படித்ததால் அவளிஷ்டப்படி தான் போக வேண்டும், பெரிய மனிதர்கள் வருவதால் அவர்கள் சௌகரியப்படி பல விஷயங்களை மாற்றி அமைக்க வேண்டும்எனில் ஒரே தகராறு, குழப்பமாக இருக்கும். பெண், தங்கை மகள்; பிள்ளையின் தகப்பனார் செலவு செய்கிறார்; மண்டபம் அவருக்குச் சொந்தம்; சமையல்காரன் இவர்கட்குப் பல தலைமுறைகளாக வேலை செய்பவன்; வரும் பெரிய மனிதர்கள் எல்லோரும்வர பெருமைப்படுகிறார்கள் என்றால் பிணக்கு, தகராறு, குழப்பத்திற்கு வழியில்லை.

PAGE 145 / PARA 7:

     ஓர் இலாக்காவில் வேலை செய்பவர், அந்த இலக்காவை விட்டு அடுத்த டிபார்ட்மெண்ட்டிற்குப் போகமுடியாதுஅவர் செய்யும் வேலையை மாற்றும் அதிகாரமும் அவருக்கில்லை. IAS ஆபீசர் எந்த டிபார்ட்மெண்ட்டிற்கும் போகலாம்மனிதன் குறிப்பிட்டதுபோல் செயல்பட வேண்டும். ஏனெனில் அவனது ஜீவியம் சிறியது, குறிப்பிட்டது. சத்தியஜீவியம் அளவற்றது, பெரியது. அது எப்படியும் செயல்படும்.சிருஷ்டியில் சத்தியஜீவியம் மூன்று நிலைகளில் - இறைவன், ஜீவாத்மா, அகந்தை - செயல்படுகிறதுமகன் தகப்பனார் கம்பனியில் அவருக்குக் கீழே வேலை செய்கிறான், கிளப்பில் அவருடன் செஸ் விளையாடுகிறான் எனில், அவர் வீட்டில் தகப்பனார், கம்பனியில் அதிகாரி, கிளப்பில் சக விளையாட்டு ஊழியன் என்று மூன்று உறவுகளில் தகப்பனாரைச் சந்திக்கிறான். அதுபோல் சத்தியஜீவியம் மூன்று நிலைகளில் செயல்படுகிறது.

PAGE 146 / PARA 8:

     சத்தியஜீவியம் எந்த ரூபத்தை ஏற்றாலும், எந்த நிலையில் இருந்தாலும், சத்தியஜீவியம் தெய்வீக ஜீவியத்தின் - சச்சிதானந்தத்தின் சுபாவமாகவேயிருக்கும். சத்தியஜீவிய வாழ்வு பிரம்ம சிறப்புள்ளது (absolute).  அதன் நீட்சியில் அதன் சக்தியும் அதே பிரம்ம சிறப்புள்ளதாக இருக்கும்.

     (Perfect, absolute என்ற சொற்களைத் தமிழில் எழுதுவது கடினம். சிறப்புஎன எழுதலாம். சிறப்பு எனில் best எனக் கொள்வார். Perfect எனில் குறையற்றதுஎன்று பொருள்ஒரு மாணவன், சிறப்பான மாணவன்எனில் அவன் கெட்டிக்காரன், புத்திசாலி, தவறாமல் வகுப்புக்கு வருபவன், முதலாக வருவான், எவரும் அவன் மீது குறைகூற முடியாது என அறிகிறோம். He is a perfect student.அது எப்படி வருகிறது? தன் நேரமெல்லாம், கவனமெல்லாம்,ஆர்வமெல்லாம், நோக்கமெல்லாம் படிப்பிற்கும், நல்ல பெயர் எடுப்பதற்கும் செலவு செய்தால், அவன் perfect student ஆகிறான்.  He devotes himself absolutely to his studies எனலாம். Absoluteஆக இருந்தால் perfection வரும்பிரம்மம் என்பதை ஆங்கிலத்தில் Absolute என்பர். He is absolutely good; absolute goodness எனில் அவன் பேசினாலும், உதவினாலும், விளையாடினாலும், எந்தக் காரியம் செய்தாலும், அங்கு அவன் நல்ல குணம் நிறைந்திருக்கும். Absolute fool, absolute beauty, absolute resourcefulness என நாம் கூறுகிறோம்.  Absoluteஎன்பது பிரம்மம். எல்லா அம்சங்களிலும் absoluteஆக இருப்பது Absolute. அதிலிருந்து வரும் சக்தியும் absolute என்கிறார். அதை இங்கு பூரணச் சிறப்புஎன்று குறிப்பிட்டேன்).

     சத்தியஜீவியம் ஒருநிலையில் செயல்பட வேண்டும்என்ற அவசியமில்லைஎத்தனை நிலைகளிலும் செயல்படும்நாம் மனிதர்கள்.  தோற்றத்தில் உருவானவர்கள்நமக்குக் குறிப்பிட்டநிலை (poise) உண்டுஅது காலம், இடத்திற்குக் கட்டுப்பட்டது. அது மேல்மனத்திற்கு உரியது. அதுவே நாம். ஒரு சமயத்தில் ஒன்றையே செய்ய முடியும்.  ஓர் உருவம்மட்டுமே நமக்குரியதுஒருநிலை நம்நிலைநம் அனுபவக் கோவைகளில் ஒன்றே நம்முடையதுஅது மட்டுமே நம் வாழ்வுக்குரியது சத்தியம். மற்றவை உண்மையில்லை. அவை கடந்ததில் மறைந்தவை. எதிர்காலம் இன்னும் வரவில்லைதெய்வீக சத்தியமான சத்தியஜீவியம் அப்படி அளவுக்குட்பட்டதன்று. ஒரே சமயத்தில் அது பலவாக இருக்கும்என்றும் நிலைக்கும் ஒருநிலையையும் அது ஏற்க வல்லதுஉலகிற்கு அடிப்படையான ஜீவியமாக அதுபோன்ற மூன்று நிலைகளை நாம் சத்தியஜீவியத்தில் காண்கிறோம். முதல் நிலை விலக்க முடியாத ஐக்கியம்; அது இறைவன். அடுத்தது, அந்த ஐக்கியத்தை ஒன்றிலிருந்து பலவற்றை ஏற்படுத்தவும், பல ஒன்றில் உறையும்படியும் மாற்றியமைக்கிறது; அது ஜீவாத்மா. மனிதன் பல நிலைகளில் உலகில் அஞ்ஞானத்தில் செயல்படுவதை ஆதரிப்பது அடுத்தது; அது அகந்தை.

     முதல் நிலை சத்தியஜீவியம், இறைவன்நாம் படிக்க பள்ளியில், கல்லூரியில் சேர்கிறோம்பரீட்சை எழுதுகிறோம். பட்டம் பெறுகிறோம்.  இது மனித வாழ்வுபோல் குறிப்பிட்ட சாதனை; அளவுக்குட்பட்டதுகல்லூரி மாணவன் "கல்வி பரந்தது' என அறிந்து, கல்லூரியை விட்டு வெளியேறினால், வகுப்பில்லை, பரீட்சையில்லை, பட்டமில்லை.  அத்தனையும் கரைந்து, மறைந்துவிடும். அதுபோல் முதல் நிலை சத்தியஜீவியத்தின் பார்வை மனிதன் மேல் பட்டால், அவன் மனித நிலை கரைந்து பிரம்மநிலையை அடைவான்நியாயம் தேடி கோர்ட்டுக்குப் போனால், பிராது கொடுத்து, வக்காலத்து வைத்து, வக்கீல் மூலம் கேஸை எடுத்துச் சொல்லி, தீர்ப்பைப் பெற்று, டிக்ரி செய்து, நிறைவேற்ற வேண்டும்நான் கோர்ட்டுக்குப் போகமாட்டேன் என ஒருவன் சொன்னால், அல்லது கோர்ட்டில் உள்ள கேஸை வாபஸ் செய்தால், அங்கு கோர்ட், வாதம், தீர்ப்பில்லை; வாழ்க்கை கொடுப்பதை ஏற்கவேண்டும்அது தர்ம, நியாயப்படி நடக்கும். நம் கர்மம் பலிக்கும்நாம் - மனிதன் - என்பது அங்கிருக்காது.

     முதல் நிலை சத்தியஜீவியம் ஐக்கியமுடையது. அந்த ஐக்கியம் அதைவிட்டு விலக முடியாததுஅது சச்சிதானந்தமன்று. சச்சிதானந்தம் தூய்மையான, ஐக்கியமான ஜீவியம். எனினும் இந்நிலை சத்தியஜீவியம் காலத்தையும், இடத்தையும் கடந்த செறிவு உடையதுஇதுவும் சச்சிதானந்தத்தைச் சார்ந்தது. இங்கு சித்-சக்தி தன்னை சிருஷ்டியாக மாற்றுவதில்லை. அதனுள் பிரபஞ்சம் உண்டு. உண்டு எனில் காலத்துள், இடத்துள் நமக்கு விளங்கும் முறையில் பொருள்களாகவோ, ஜீவன்களாகவோ இல்லை; வித்தாக இருக்கின்றது.

     சீனுவாச இராமானுஜம் மேதை. அவருடைய கணித மேதைமை அவர் பரீட்சை எழுதிப் பாஸ் செய்யப் பயன்படவில்லை. பரீட்சையில் கேள்விக்குப் பதில் எழுதி மார்க் வாங்கும் அளவுக்கு அது விவரமாக இல்லை. அது மேதைமை genius என்ற அளவில் உள்ளதுஅது போல் இம்முதல் நிலை சத்தியஜீவியத்தில் - இறைவனில் - உலகம் நமக்குப் புரிவது போலில்லைஆனால், நாளை உலகில் வெளிப்படும் வித்தாக உள்ளதுசச்சிதானந்தம் அனைத்தையும் அறிவது, அனைத்தையும் பெற்றது, அனைத்து அமைப்பும் அதனுடையது. அப்படி சச்சிதானந்தம் மாறும்பொழுது இறைவனாகிறதுஇத்தனையும் ஒன்றே; பலவல்ல. தனிமனித ஜீவியத்திற்குரியது எதுவும் இங்கில்லைஇதன் சாயல் மனிதன்மீது பட்டால், அவன் உருவம், ஆத்ம ரூபம் கரைந்துவிடும். அனைத்தும் ஐக்கியத்தில் ஒன்றாக உருவாக்கப் பட்டதுஅனைத்தும் இந்த தெய்வீக ஜீவியத்தின் வாழ்வு ரூபமாக எழுந்தவைதனிப்பட்ட உருவமோ, உருவகமோ இல்லைநம் மனத்தில் எண்ணங்களும், ரூபங்களும் எழுபவை நாம் அல்லவா? அவை நம்மிலிருந்து பிரிந்து வேறானவையில்லை என்பதுபோல் இறைவனில் - இம்முதல் நிலை சத்தியஜீவியத்தில் - உலகத்தின் பொருள்களும், ஜீவன்களும் உள்ளன. இது தூய்மையான தெய்வீக எண்ணம். இது அனந்தனின் ரூபம்மனம் இல்லாததை உருவகப்படுத்துகிறது. சத்தியஜீவியம் இருப்பதை உருவகப்படுத்துகிறதுதெய்வீக ஆத்மா இந்நிலைக்கு உரியதுஅதற்கு புருஷனுடைய ஆத்மாவுக்கும், பிரகிருதியுடைய ஆத்மாவுக்கும் வித்தியாசமில்லைஏனெனில் சக்தி என்பது ஜீவியத்தின் செயல்அதற்கு ஜடத்திற்கும், ஆன்மாவுக்கும் வித்தியாசமில்லை. உலகில் அனைத்தும் ஆன்ம ரூபமன்றோ!

PAGE 146 /PARA 9:

     உலகில் ஒன்றான பரமாத்மா பலவான ஜீவாத்மாக்களாகி, மீண்டும் பரமாத்மாவை அடைவது சிருஷ்டி, பரிணாமம். அதை ஆதரிப்பது இரண்டாம்நிலை சத்தியஜீவியம்.

     இரண்டாம் நிலை சத்தியஜீவியம் சலனத்துடன் செல்லாது பின்தங்கி நிற்கிறது. அச்சலனமும் அதனுள் உள்ளது. அதை பிரக்ஞாவால் சித்திக்கிறதுஅதைப் பின்தொடர்ந்து, உள்ளுறைந்து, நிரப்புவது சத்தியஜீவியம்பார்வைக்கு அது தன்னைப் பல ரூபங்களில் விநியோகம் செய்வதாகக் காணப்படும்அப்படி எழும் ஒவ்வொரு பெயரிலும்ரூபத்திலும் அது - சத் புருஷன் - தன்னை சித்திக்கிறதுஎல்லாவற்றிலும் அதுவேயுள்ளதுஜீவாத்மா பரமாத்மாவாக எழுந்து செய்யும் லீலையை அது அங்ஙனம் ஆதரிக்கிறதுஎங்கும் ஆத்மாவில் ஒன்றான அந்த ரூபங்கள் மாறி மாறி வரும் ஆத்ம ரூபங்களாகும்இதை இறைவனின் தனி ரூபம் என்கிறோம். அதுவே ஜீவாத்மா. இது பிரபஞ்ச ஆத்மா இல்லை. அதனுள் உலகில்உள்ள அத்தனை ஜீவாத்மாக்களும் உள. அதுவன்று நாம் கூறுவது. பிரபஞ்ச ஆத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் முக்கிய வேறுபாடில்லைநடைமுறையில் மாற்றமுண்டு. மகனுக்கு வீட்டை வாடகைக்குக் கொடுத்தால் அவன் குடியிருப்பவனாகிறான். அதனால் மகனில்லை என ஆகாது. நடைமுறையில் மகன் வேறு, குடியிருப்பவன் வேறுபிரபஞ்ச ஆத்மா எல்லா ஜீவாத்மாக்களையும் தான்என அறியும். இருந்தாலும் ஒவ்வொரு ஜீவாத்மாவுடன் தனிப்பட்ட உறவை ஏற்படுத்திக்கொள்ளும்ஒவ்வொரு ஜீவாத்மாவும் பிற ஜீவாத்மாக்களுடன் தனித்த உறவை ஏற்படுத்த பிரபஞ்ச ஆத்மா உதவும்.  ஜீவாத்மா தன்னை ஒரு தனித்த ஆத்ம ரூபமாக அறியும். அது பரமாத்மாவின் ஆத்ம சலனமாகும். முதல்நிலைச் செயலால் ஜீவாத்மாக்களுடன் ஒருமையை அறியும்இரண்டாம்நிலையில் ஜீவாத்மாவின் ஒருமையையும், வேற்றுமையையும் அறியவல்லதுநம் தூய்மையான மனம் இந்த இரண்டாம்நிலையைப் பிரதிபலிக்கும்  அத்துடன் நமது ஆத்மா பரமாத்மாவுடன் ஒருமையை அதன் மூலம் அறியும்.  இது தவிர வேறு எந்தச் சந்தர்பங்கலிலும் சதியஜீவிய வாழ்வு மாற்றத்தைக் காட்டாது.  ஒரு மாற்றம் உண்டு; ஒன்று பலவாகி பல ஒன்றாவது லீலை.

     நாட்டில் பார்லிமெண்ட் ஏற்பட்டு, மந்திரி சபை அமைத்து, நிர்வாகம் நடக்கிறது. பார்லிமெண்ட் ஏற்படுவது முதல்நிலை; மந்திரி சபை அமைப்பது இரண்டாம்நிலை; நிர்வாகம் மூன்றாம்நிலைமுதல் நிலைக்குரிய அதிகாரம் எலக்ஷன் கமிஷனிடம் உள்ளதுஇரண்டாம் நிலைக்குரிய அதிகாரம் ஜனாதிபதிக்குத் தரப்பட்டுள்ளது. பிரதமருக்கு மூன்றாம்நிலை அதிகாரம் உண்டு. சத்தியஜீவியத்தின் மூன்று நிலைகளுக்கும் இவற்றை உதாரணமாகக் கூறலாம்.

PAGE 147 / PARA 10:

     பையனைக் கல்லூரிக்கு அனுப்பினால், அவன் படிக்க வேண்டும்.தினமும் அவனுடன் உட்கார்ந்து படிக்கும் தகப்பனாரும் உண்டு. பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்தால் அவள் குடும்பம் நடத்துவாள். அவள் வீட்டில் போய், பெண் நடத்தும் குடும்பத்தைத் தானே எடுத்து நடத்தும் தாயாரும் உண்டு விலகி நின்று செயல்பட வேண்டியவர் வேலையில் கலந்துகொள்வது உண்டு. அதுபோல் பின்னாலிருக்க வேண்டிய ஆத்மா வேலையுள் நுழைந்து ஈடுபடுவதும் உண்டு.

     மூன்றாம்நிலை சத்தியஜீவியத்தில் ஆதரவு தரும் ஜீவியம் பின்னாலிருப்பதில்லை. அது செயலுள் நுழைந்து, அங்கு உறைந்து, ஓர் அதிகாரத்துடன் செயலுள் கலந்துகொள்கிறதுஇங்கு செயலின் தரம் மாறும்ஜீவாத்மா பிரபஞ்ச ஆத்மாவுடன் கொள்ளும் தொடர்பும், மற்ற ஜீவாத்மாக்களுடன் கொள்ளும் தொடர்பும் அடிப்படையான ஐக்கியத்தை இரண்டாம்பட்சமாக அனுபவிக்கும். உயர்ந்த நிலையில் ஐக்கியஉணர்வு அடிப்படையாக அமையும். இம்மூன்றாம்நிலை ஆனந்தமயமான இரட்டை வாழ்வாகும்இங்கு ஐக்கியம் இரண்டாம் பட்சமாக இருக்காதுவக்கீல் கட்சிக்காரன் வழக்கை நடத்துவதற்கும், தானே வாதியாகித் தன் வீட்டு வழக்கில் வக்கீல் பேசுவதற்கும் உள்ள வித்தியாசம்தன் வழக்கில் வக்கீல் முழுவேகத்துடன் பேசுவார்.பிரபஞ்ச ஆத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் உள்ள மாறுபாட்டை நிலைநிறுத்துவதே இவ்விரட்டை வாழ்வாகும்.
 

PAGE 148 / PARA 11:

     கம்பனி முதலாளியுடையது. தொழிலாளிக்கு சம்பளம் உண்டு எனில், தொழிலாளி மனத்தளவில் கம்பனியைவிட்டுப் பிரிந்து விடுகிறான்அகந்தை பிரபஞ்சத்தைவிட்டு இதுபோல் விலகி தனித்திருக்கிறதுமாறாக தொழிலாளி கம்பனியைத் தன் கம்பனியாகக் கருதி வேலை செய்வது அதிகப் பலனையும், அதிக சந்தோஷத்தையும் தரும்பிரிந்து நின்று, கூடி வாழ்வது பெரிய இன்பம் தரும்அதையே இந்நிலை காண்கிறதுபிரிவது, கூடி வர வழிபிரிந்து, கூடுவது அதிக சந்தோஷம் தரும்மகனிடம் பெட்டிச் சாவியைக் கொடுத்தால் மரியாதை போகும், சண்டை வரும்என்பது பலருடைய அனுபவம்அது தவிர்க்க முடியாதது இல்லைமகன் நிர்வாகத்தை எடுத்து நடத்துவது கம்பனிக்கு அதிக இலாபம் வரும்.மனம் வளர்ந்தபின் மகன் உறவு ஆழ்ந்து இனிக்கும்.

இதன் முதல் விளைவு அறியாமைஎனக் கூறத் தோன்றும். ஜீவாத்மாக்களை உண்மை எனவும், பரமாத்மா ஜீவாத்மாக்களின் தொகுப்புஎனவும் அவர்கள் கருதுவார்கள். தொகுப்புக்கு எண்ணிக்கையுண்டு; அதிகாரமிருக்காது. உண்மையில் அத்தவறு நடக்காது; நடக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் ஜீவாத்மா தான் பரமாத்மாவின் சிருஷ்டிக்கும் சக்தியிலிருந்து எழுந்ததை அறியும். பரமாத்மா காலத்தைக் கடந்ததுஜீவாத்மா காலத்தில் ஏற்பட்டது. காலத்துள் பரமாத்மா காலத்தைக் கடந்துறையும் வகையில் ஏற்பட்டதுஎன்பதை ஜீவாத்மா அறியும்ஒரு கம்பனியில் வேலை செய்யும் தொழிலாளிகள் ஓட்டுப் போடும் உரிமையை கம்பனிக்குத் தருவதில்லைஅவ்விஷயத்தில் அவர்கட்குச் சுதந்திரம் இருப்பதுபோல் - நாட்டுக் குடிமகனாக இருப்பது - ஜீவாத்மா தனி மனிதனில் உறைந்தாலும், பரமாத்மாவுடன் தனக்குரிய தொடர்பை அறுத்துக்கொள்வதில்லை. மேலெழுந்தவாரியான பிரிவையும், அடிப்படை ஐக்கியமும் இணைந்த அமைப்பு பரமாத்மா-ஜீவாத்மா. இவை மேலும், கீழும் உள்ள இருதுருவங்கள். எந்த அளவுக்கு மேலே பிரிந்துள்ளதோ, அந்த அளவுக்கு அஸ்திவாரம் அதிக சந்தோஷத்தை அனுபவிக்கும்.

PAGE 148 / PARA 12:

     ஒரே சந்தோஷத்தை மூன்று வகைகளாக அனுபவிப்பதே இம்மூன்று நிலைகள்சந்தோஷம் ஒன்று; அனுபவிப்பவரும் ஒருவர்; அனுபவிக்கும்வகை மூன்றுஜீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளி வந்து, மீண்டும் பரமாத்மாவை அடைவதை ரிஷிகள் கண்டு, "ஜீவாத்மா அழியக்கூடியது' என முடிவு செய்துவிட்டனர்பகவான் ஸ்ரீ அரவிந்தர் ரிஷிகள் கூறியதற்கு மாறாகக் கூறுகிறார்:
 

பரமாத்மா நித்தியம், ஜீவாத்மா அநித்தியம்

- ரிஷிகள்


 

பரமாத்மா ஒன்று, ஜீவாத்மாக்கள் ஆயிரமாயிரம்.


 

பரமாத்மாவே ஜீவாத்மா

பரமாத்மா ஒன்று, ஜீவாத்மாவும் ஒன்று.

பரமாத்மாவும் நித்தியம், ஜீவாத்மாவும் நித்தியம்.

பகவான்

ஸ்ரீ அரவிந்தர்

     ரிஷிகள் ஏற்கும் வகையில் தம் கொள்கையை பகவான் எடுத்துக் கூறுகிறார்மீண்டும் மீண்டும் ஜீவாத்மா எழுவதால் காலத்தைக் கடந்த நித்தியம் காலத்தில் நித்தியமாகிறதுஎனவே ஜீவாத்மாவும் அழிவற்றது எனக் கூறுகிறார்ஜீவாத்மா அழியக் கூடியதானால், அது மீண்டும் ஜனிக்க முடியாதுஅழிவது ஜீவாத்மா இல்லை; ஜீவாத்மாவின் ரூபம்.

     இந்த மூன்று நிலைகளும் ஒரே சத்தியத்தை அனுபவிக்கும் மூன்று வழிகளாகும்அனுபவிக்கப்படும் சத்தியம் ஒன்றே. அனுபவிக்கும் முறைகள் வேறு. வாலிபால், டென்னீஸ், புட்பால் விளையாடினால் மூன்றும் விளையாட்டே. வெவ்வேறு வகைகளான விளையாட்டுகள். அனுபவிக்கும் ஆத்மாவின்நிலை வேறு.  T.V. பார்ப்பது, விருந்து சாப்பிடுவது, டூர் போவது, மூவகைகளான அனுபவங்கள்.  T.V. யை அனுபவிப்பது கண்; விருந்தை அனுபவிப்பது நாக்கு; டூர் போவதை அனுபவிப்பது உடல். அனுபவம் ஒருவருடையதே. அனுபவிக்கும் நிலைகள் வேறு. ஆனந்த ரூபங்கள் மாறுகின்றன. அனைத்தும் சத்தியஜீவியத்தின் மாறுபட்ட நிலைகளே. எங்கும் அஞ்ஞானமோ, பொய்யோ எழவில்லை. இவற்றின் அடிப்படையில் ஏற்பட்ட மதங்கள் பிற மதங்களைப் பொய் என்கின்றன. அது உண்மை இல்லை. இரண்டாம்நிலை, மூன்றாம்நிலைகள் முதல்நிலையில் உள்ளதையே தங்கள் நிலைக்கேற்ப மாற்றி அனுபவிக்கிறார்கள். M.A., B.E., M.B.B.S.ஆகியவை கல்விகல்வி என்ற முதல் நிலையை பட்டம்என்ற அடுத்தநிலைக்கு மாற்றும்பொழுது கணிதம், இன்ஜினீயரிங், மருத்துவம்என மாறுகிறது. ஒன்று மெய், மற்றவை பொய் எனக் கூற முடியாது. மாயைஎனவும் கூற முடியாது. உபநிஷதங்கள் உயர்ந்த பண்டைய ஆன்மீக இலக்கியம். அவை தெய்வ வாழ்வைப் பற்றிப் பேசும்பொழுது, அது மனித வாழ்வில் வெளிப்படுவதைப் பற்றிப் பேசும்பொழுது, இம்மூன்றுநிலைகளும் உண்மை எனக் கூறுகின்றனர்எது முந்தையது எனக் காலத்தால் நிர்ணயிக்க முடியாது; ஜீவியத்தால் கூறலாம்ஜீவாத்மா, பரமாத்மாவை நம்பியது என்பதை வேதாந்தம் எப்பொழுதும் மறுக்கவில்லைகாலத்துள் ஜீவாத்மா நித்தியமாகத் தோன்றவில்லைபரமாத்மாவிலிருந்து எழுந்து வந்து, மீண்டும் பரமாத்மாவை அடைவதாகத் தோன்றுவதை ரிஷிகள் ஜீவாத்மா அழிவதாகக் கொண்டனர்இன்று தமிழ்நாடுஎனப்படுவது அன்று சென்னைமாகாணமாக இருந்ததுஇன்று சென்னை மாகாணமில்லை. அதனால் தமிழ் மக்கள் அழிந்துவிட்டனர்எனப் பொருளில்லை; பெயர் மாறிவிட்டதுரயில் ஓடும்பொழுது தந்திக் கம்பம் ஓடுவதாகத் தெரிகிறது; ஓடவில்லை; ஓடுவது ரயில்.

PAGE 149 / PARA 13:

     மனம் ஒரு பக்கத்தை வலியுறுத்தி, அடுத்தது பொய் என்பதால், மதங்கள் வேறுபட்டுப் பூசல் எழுகின்றதுசச்சிதானந்தத்தை மட்டும் ஏற்பவர் ஐக்கியத்தை வலியுறுத்துகின்றனர்அது ஐக்கியத்தின் லீலை. நம் மனம் அதை வேறுபாடாகக் காண்கிறதுஅதனால் சச்சிதானந்தம் மெய், வாழ்வு பொய்என நினைக்கிறோம். உயர்ந்த கொள்கை இரண்டையும் ஏற்றுக்கொள்ளும்நாம் அதை மறுத்து லீலையை மாயை என்கிறோம்மீண்டும் பரமாத்மா ஜீவாத்மாவில் வெளிப்படுவதை ஏற்கிறோம்இதை இரண்டாம்பட்சம் ஐக்கியமாக ஏற்கிறோம்.  அதனால் ஜீவாத்மாவை ஆத்மரூபமாக ஏற்கிறோம்ஆனால் சச்சிதானந்தத்தின் உண்மையை மறுக்கிறோம்மீண்டும் லீலையை ஏற்று, லீலையைவிட உயர்ந்த ஆத்மீக அனுபவத்தை மறுக்கிறோம்.  நமக்கு இவையெல்லாம் வீண்வாதங்கள்; தேவையற்றவைஇவை மிகைப்படுத்தப்பட்ட வாதங்கள், மறுப்புகள்; நமக்குத் தேவையில்லைநாம் பிரம்மத்தை ஏற்கிறோம். பிரம்மத்தின் பூரணச் சிறப்பை நாம் அறிவோம்நம் கொள்கைக்கு ஐக்கியமும் புறம்பன்று; லீலையும் புறம்பானதன்று; இரண்டையும் உட்கொண்ட உயர்நிலையும் புறம்பானதன்று. சச்சிதானந்தம், பரமாத்மா, ஜீவாத்மா, அனைத்தும் நமக்கு ஏற்புடையதாகும்நாம் இவ்வாதங்களை ஏற்பது அவசியமில்லை.

٭٭٭٭

பாராவின் கருத்துகள்:

143/1: மனம், உயிர், உடலைப் பற்றியறியுமுன் ஈஸ்வரனை அறிய வேண்டும்.

143/2: உலகம் பிரம்ம மயமானதுபிரம்மத்தின் லீலை உலகம்நம் ஆத்மா லீலையை அனுபவிக்கிறதுஅகந்தை அதை அறியவில்லை.

143/3: நாம் சொர்க்கம், உலகம்என்பதில் ஒன்றை ஏற்று, அடுத்ததை மறுக்க வேண்டும்.

144/4: சத்தியஜீவியம் இடைப்பட்டது. சித்-சக்தி, ஞான உறுதி காலத்தில் உலகை வெளிப்படுத்துகிறது.

144/5: சத்புருஷன் சுயஞானம் பெற்று, தன்னுள் உள்ள சத்தியத்தை காலத்தில் சிருஷ்டிப்பது சத்தியஜீவியம்.

144/6: இதைக் கடவுள் என்கிறோம். கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர், எல்லாம் வல்லவர்.

145/7: சத்தியஜீவியத்தில் பரமாத்மா, ஜீவாத்மா, அகந்தை என்ற 3 நிலைகள் உள.

146/8: முதல்நிலை சத்தியஜீவியம் கடவுள்.

146/9: இரண்டாம்நிலை சத்தியஜீவியம் ஜீவாத்மா.

147/10: மூன்றாம்நிலை சத்தியஜீவியம் அகந்தை.

148/11: அகந்தைக்கு அறியாமை இன்றியமையாததில்லை. பிரிந்த நிலை ஆனந்தம் பிரிய முடியாத ஆனந்தம்.

148/12: இவை மூன்றும் ஒரே சத்தியத்தை மூன்று வகைகளில் அனுபவிப்பது ஆகும்ஜீவாத்மா அழியக்கூடியதன்று; நித்தியமானது.

149/13: நாம் பிரம்மத்தையும், அதன் முழுமையான லீலையையும் ஏற்பதால் மதப் போராட்டங்கள் நமக்கு உதவா.

٭٭٭٭


 

 



book | by Dr. Radut