Skip to Content

03.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                                               (சென்ற இதழின் தொடர்ச்சி....)          கர்மயோகி

XIV. The Supermind – As Creator

Page No.131, Para No.18

14. சத்தியஜீவியம் - சிருஷ்டிகர்த்தா

Thought is not self-divided.

எண்ணம் தானே தன்னைப் பகுப்பதில்லை.

Force is not self-divided.

சக்தியும் அப்படியே.

Being is not self-divided.

ஜீவன் தன்னைப் பிரித்துக்கொள்ளவில்லை.

In the mind they are self-divided.

மனத்தில் அவையெல்லாம் பிரிந்து காணப்படுகின்றன.

In the Supermind they are not divided.

சத்தியஜீவியத்தில் அப்பிரிவினையில்லை.

They are not broken.

அவை உடையவில்லை.

They are not separated from each other.

ஒன்று மற்றதிலிருந்து

வேறுபட்டதில்லை.

The Supermind is Vast.

சத்தியஜீவியம் பரந்தது.

It starts from unity.

அதன் அடிப்படை ஐக்கியம்.

It does not start from division.

பிரிவினையிலிருந்து

ஆரம்பிக்கவில்லை.

It is comprehensive.

அது பூரணமானது.

It is its primary trait.

அதுவே அதன் அடிப்படைக் குணம்.

Differentiation is secondary there.

மாறுபாடு அடுத்த விஷயம்.

A truth of being is expressed.

ஜீவனின் சத்தியத்தை வெளிப்படுத்துகிறோம்.

The idea corresponds to it exactly.

எண்ணம் அதைச் சரியாகப் பிரதிபலிக்கிறது.

The will-force too corresponds with it.

 

(Force is only power of consciousness.)

சித் சக்தியும் அப்படிப்

பிரதிபலிக்கிறது.

(சக்தி ஜீவியத்தின் திறன் வெளிப்பாடு).

No idea clashes with another idea.

எந்த எண்ணமும் அடுத்த எண்ணத்துடன் மோதுவதில்லை.

No will or force clashes with another will or force.

சக்தியோ, செயலோ அடுத்த சக்தியுடன் மோதுவதில்லை.

In man they clash.

மனிதனில் அம்முரண்பாடுண்டு.

In the world they clash.

உலகில் அம்மோதல் உண்டு.

There is one vast Consciousness.

ஓர் பரந்த ஜீவியம் உண்டு.

It contains and relates all ideas in itself as its own ideas.

அனைத்தையும் தன்னுட்கொண்டு, எல்லா எண்ணங்களையும் தழுவி தன் எண்ணமாக்குகிறது.

There is one Vast Will.

ஒரு பரந்த உறுதியுண்டு.

It contains all energies.

அது எல்லா சக்திகளையும் தன்னுட்கொண்டது.

It relates all energies as its own energies.

எல்லா சக்திகளுடனும் தொடர்புகொண்டு அவற்றைத் தன் சொந்த சக்தியாக்குகிறது.

It holds back this.

ஒன்றை மறைத்து வைக்கிறது.

It advances that other.

மற்றதை முன்னிலிருத்துகிறது.

It acts according to its own preconceiving Idea-Will.

தான் முன்கூட்டி முடிவு செய்தபடி அது செயல்படுகிறது.

Page No.131, Para No.19

 

Omnipresence, Omnipotence, Omniscience are current religious notions of the Divine Being.

எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன் என ஆண்டவனை மதங்கள் கூறுகின்றன.

The above justifies them.

நாம் மேற்கூறியது இதைச் சரியெனக் கூறும்.

They are not irrational imagination.

அவை அர்த்தமற்ற கற்பனையில்லை.

They are perfectly rational.

அவற்றிற்குப் பூரண அர்த்தம் உண்டு.

They do not contradict logic.

அவை தர்க்கத்திற்குப் புறம்பானவையல்ல.

Nor is the experience against them.

அனுபவமும் அதற்கெதிரானதன்று.

There is one error.

ஆனால் ஒரு தவறுண்டு.

It is to separate God and man, Brahman and the world.

மனிதனையும், ஆண்டவனையும் பிரிப்பது தவறு. பிரம்மத்தையும் உலகையும் பிரிப்பது தவறு.

It makes the differentiation into division.

அது மாறுபாட்டை வேறுபாடாக்கும்.

We shall speak of this later.

இதைப் பற்றிப் பிறகு பேசுவோம்.

Now we arrived at one idea.

இப்பொழுது நாம் ஒன்றைக் கண்டோம்.

It is a conception of the Supermind.

அது சத்தியஜீவியம்.

There being, consciousness, will delight are one.

அங்கு ஜீவன், ஜீவியம், ஆனந்தம், செயல் ஒன்று.

Yet it is capable of infinite differentiation.

இருப்பினும் அது அனந்தமாகப் பிரியவல்லது.

Still it does ot destroy unity.

பிரிந்தாலும் ஐக்கியம் அழிவதில்லை.

There Truth is the substance.

சத்தியம் பொருளாகும்.

Truth rises in the Idea.

சத்தியம் எண்ணத்தில் எழுகிறது.

Truth comes out of the form.

சத்தியம் ரூபமாக எழுகிறது.

There is one truth of knowledge and will.

ஞானமும், உறுதியும் ஒன்று என்று அறிகிறோம்.

There is one truth of self-fulfillment and delight.

ஆனந்தம், ஆத்மதிருப்தியாகிறது.

Self-fulfillment is the satisfaction of the being.

ஜீவன் பெறும் ஆனந்தம் ஜீவானந்தம்.

In all mutation there is a harmony.

பிரிவினையில் சுமுகமுண்டு.

It is self-existent and inalienable.

சுமுகம் அழியக்கூடியதில்லை, சுயமானது.

It is equally so in all combinations.

இணைவதிலும் சுமுகம் அப்படியே.

The End

முற்றும்.

****

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

சாஷ்டாங்க நமஸ்காரம், சரணாகதியை உடலால் வெளிப்படுத்துகிறது.

அடுத்தவன் வலிமையையும், உயர்வையும் ஏற்றுக்கொள்வதால் சரணாகதி உணர்வில் வெளிப்படுகிறது.

மற்றவரின் எல்லாக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை - மனம் சரணாகதியை ஏற்றுக்கொண்டதாகும்.

ஏதும் அறியேன் என்பது வழக்கு மட்டுமன்று; சத்தியம் என்று தெளிவுற நம்புவது அடக்கம். அடுத்தவரின் நிலை எதுவானாலும் அதற்கு உயர்ந்த மதிப்பை உள்ளபடி கொடுத்து மனதால் ஏற்றுக்கொள்வது நடைமுறையில் உண்மையான சரணாகதியை வெளிப்படுத்தும் அடக்கமாகும்.

ஏதுமறியேன் என்பது சரணாகதிக்குரிய அடக்கமாகும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

மேலெழுந்த நிலையிலுள்ள மனத்திலிருந்து ஆழத்திற்குச் செல்ல பல வழிகளுண்டு. ஆழ்ந்து பார்த்தால் அவை அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான முறைகள் எனலாம்.

(1) சமாதி நிலையை நோக்கிப் போகும் நிஷ்டை.

(2) எண்ணத்தையும், உணர்வையும், செயலாற்றும் திறனையும் விட்டுவிட முடிவு எடுப்பது.

(3) எண்ணத்தையோ, உணர்வையோ, உடலசைவையோ ஒருமுகப்படுத்தி ஒரு நிலைப்படுத்துவது.

(4) மௌனம்.

(5) பெரிய திட்டங்களைக் கைவிடுவது.

(6) மன உறுதியை அதிகபட்ச நிலைக்குக் கொண்டு போவது அல்லது கரைப்பது.


 



book | by Dr. Radut