Skip to Content

08.அஜெண்டா

"Agenda"

I am witnessing the transformation of Nature.

இயற்கை திருவுருமாறுவதை நான் அனுதினமும் காண்கிறேன்.

- The Mother

குழந்தை வளர்வதைக் காணும் தாயாருக்குச் சலிப்பு ஏற்படாது. ஒவ்வொரு சொல்லைக் குழந்தை முதலில் சொல்வதையும் தாயார் கவனமாகக் கேட்பாள். அதேபோல் ஒவ்வொரு செயலைக் குழந்தை முதலில் செய்வதைத் தாயார் கவனித்து அறிவாள். வளரும் குழந்தை புது உலகில் நுழைவதைப்போல், அன்னை இயற்கை (Nature) திருவுருமாறி சத்தியஜீவியத்துள் நுழைவதைக் கண்ணுறுவதைக் கூறுகிறார்.

இன்று இந்தியா மாறுவதை உலகம் கண்டு வியக்கிறது. வறுமை வாழ்வு வளமான வாழ்வாக மாறும் சின்னங்கள் ஆயிரம்:

. தினமும் ரோட்டில் டிராபிக் அதிகமாவதைக் காண்கிறோம்.

. புதிய பள்ளிகள், கல்லூரிகள் எழுவதை நாம் காண்கிறோம். எந்தப் பத்திரிகையும் அவற்றை விளம்பரம் செய்கின்றன.

. பள்ளம், படுகுழியான ரோடுகள், புதுமை பெறுகின்றன.

. கடைத்தெருவில் கூட்டம் அதிகமாகிறது.

. வாடிய முகம் மாறி மக்கள் வளமாகத் தென்படுகிறார்கள்.

. சைக்கிள் இல்லாத வீட்டில் மோட்டார் பைக், கார் வருகிறது.

. பஸ், கடை, ஹோட்டல்களில் ஆங்கிலச் சொற்கள் காதில் விழுகின்றன.

. நாடு சுபிட்சமான பாதையில் நுழைந்து பவனி வருகிறது. பகவான் ஸ்ரீ அரவிந்தர் அவதரித்தபின், "இறைவன் வரும் தருணம்''உலகுக்கு வந்தது. அதை உலகம் அறியவில்லை. அவரே அறியவில்லை.அவர் மனம் சுதந்திரத்தை நாடியது. சுதந்திரத்திற்காக பகவான் யோகம் செய்தார். 1910இல் சூட்சும உலகில் சுதந்திரம் உருவாயிற்று.

. இறைவன் பகவானுக்கு அடுத்த பணியை ஜெயில் அளித்தார்.

"புதுவைக்குப் போ'' என அசரீரி கூறியது.

. சுவாமி விவேகானந்தர் சத்தியஜீவியத்தைப் பகவானுக்குக் காட்டினார்.

. 1910இல் ஜெயிலில் பகவான் சத்தியஜீவியத்தை எட்டி, நாராயண தரிசனம் கண்டார்.

. அவர் தவம் யோகமாக மாறி, 1956இல் சத்தியஜீவியம் புவியில் இறங்கியதை அன்னை பிப்ரவரி 29இல் கண்டார். பொன்னொளி பிரவாகமாக மனித வாழ்வில் புகுந்தது.

. உலகில் உள்ள தமஸ் அதை விழுங்கியது.

. நாளாக நாளாக Nature இயற்கை சத்தியஜீவியத்தை எதிர்ப்பதைக் கைவிட்டு, சத்தியத்துடன் ஒத்துழைக்க ஆரம்பித்தது. இதைக் கண்ட அன்னை மேற் கண்டவாறு கூறுகிறார்:

. இயற்கை அறியாமையாலும், பொய்யாலும் சூழப்பட்டு, கடுமை,கொடுமையை வெளிப்படுத்துவது மாறிவருவதை அன்னை காண்கிறார்.

. இதன் பலனாக உலகில் கொடுமை பலத்தை இழக்கிறது. தொழிலாளி,மருமகள், சிறுவர், ஊனமுற்றவரை உலகம் கொடுமைப்படுத்துவதைக் குறைத்து, அவர்கள் வாழ்வு மலர வேலை செய்கிறது.

. அறியாமை மாறி அறிவாக வெளிப்படுவதை நாம் கல்வி பரவுவதில் காண்கிறோம்.

. கொடுமை குறையும் முன் இடம் மாறுகிறது. மாமியார் கொடுமை, மருமகள் கொடுமையாகிறது. முதலாளி கொடுமை, தொழிலாளி கொடுமையாகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் இயற்கை திருவுரு மாறுவதைக் காட்டுகின்றன.

****


 



book | by Dr. Radut