Skip to Content

07.கிளன்டோமானுடைய புதிய கல்வி முறை

"அன்னை சுபிட்சம்"

கிளன்டோமானுடைய புதிய கல்வி முறை

பிலடெல்பியாவில் Glenn Domanஎன்ற டாக்டர் இராணுவத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றபின் பள்ளிக்கூடம் ஆரம்பித்தார். தலையில் அடிபட்டுவிட்டால், மனித வாழ்வு நிலை குலைகிறது. இராணுவத்திலிருந்தபொழுது அப்படி அவர்கள் அடிபட்டு பிறகு பிழைப்பதை டாக்டராகப் பணியாற்றியபொழுது கவனித்தவர் அவர்.மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளை நாம் புறக்கணிக்கிறோம். அதுபோன்ற குழந்தைகளைச் சாதாரணமான குழந்தைகளாக மாற்றும் முயற்சியை அவர் மேற்கொண்டு பெருவெற்றி பெற்றவர் அவர். மூளை வளர்ச்சியற்ற குழந்தை இந்த அளவு முன்னேற முடியும் என்றால்,சாதாரண குழந்தைகட்கு இம்முறைப் பெரும்பலன் தரும் எனக் கருதி அவர் பள்ளியில் அம்முறைகளைக் கடைப்பிடித்தார்.

. அம்முறைகள் அதிகப் பலன் தந்தன.

. 4 வயது குழந்தை எந்தப் புத்தகத்தையும் படிக்கிறது.

. 1½ வயதுக் குழந்தை வயலின் வாசிக்கிறது.

. 5ஆம் வயதில் குழந்தை மற்ற பள்ளிகளில் 10ஆம் வயதுக் குழந்தை அறிவதை அறிகிறது.

. போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு இல்லாமல் குழந்தைகள் வளர்கின்றன.

. விளையாடுவதைவிட, சாப்பிடுவதைவிட குழந்தைகள் கற்க ஆர்வப்படுகின்றன என கிளன்டோமான் கண்டுபிடித்தார்.

இம்முறையில் குழந்தைகட்கு எழுத்து சொல்லிக்கொடுக்குமுன் சொற்களைப் பயிற்றுவிக்கின்றனர். சொற்களைக் கார்டில் எழுதி குழந்தையிடம் கார்டுகளை வேகமாகக் காண்பிக்கிறார்கள். road, bus,tree, cake, food என்று கார்டுகளை 30 அல்லது 50 கார்டுகளை குழந்தையிடம் ஒன்றன்பின் ஒன்றாய் தினமும் காண்பித்து,காண்பிக்கும்பொழுது நாம் அதைப் படித்தால், 1 மாதமானபின் குழந்தை, கார்டைப் பார்த்தவுடன் road, bus, tree, cake, food, எனத் தானே படிக்கிறது. 1 வயது குழந்தை இதுபோல் 500 சொற்களைப் படிக்கிறது. மேலும் சிறு வாக்கியங்களை cat is running, It is a tall tree, My mother loves me ; என்பன போன்ற சிறு வாக்கியங்களையும், அவற்றைத் தொகுத்து எழுதும் மிகச்சிறிய கதைகளையும் குழந்தை இரண்டாண்டு நிறையும்முன் படிக்கக் கற்றுக்கொள்கிறது. எழுத்தைக் கற்பிக்காமல் படிக்கக் கற்கும் முறை இது.

. இம்முறையில் 3ஆம் வகுப்பு குழந்தை Junior Encyclopaediaவைச் சரளமாகப் படிக்கிறது.

. இரண்டாம் வகுப்பிலும் அதுபோன்ற சில குழந்தைகள் உண்டு.

. கிளன்டோமான் பள்ளிக்கு Philadelphiaவிற்கு வந்தவர் 4ஆம் வகுப்புக் குழந்தையைக் காட்டி, அதற்கு என்ன தெரியும் என்றார். அருகில் ஓர் புத்தகக் குவியலிருந்தது. "இதில் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுங்கள்'' என்றார். வந்தவர் ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரித்து அதில் ஒரு பாராவைப் படிக்கச் சொன்னார். குழந்தை படித்தபின் என்ன புரிகிறது என்றார். Ground swell என்ற சொல் நானறியாதது. மீதி எல்லாம் புரிகிறது என்றது குழந்தை. இம்முறையின் இரகஸ்யமென்ன? ஆசிரியர் குழந்தைக்குச் சொல்லித் தருவது நம் வழக்கம்.

. இம்முறை குழந்தையைச் சிந்திக்க வைக்கிறது.

. குழந்தை தானே புரிந்துகொள்வதால், அது மறப்பதில்லை.

. தானே புதிய விஷயம் புரியும்பொழுது மனம் சக்தியால் நிரம்பி புத்துணர்வு பிறக்கிறது.

. குழந்தை தொடர்ந்து கற்கும்பொழுது மனம் விசாலமடைவதால் போட்டி, பொறாமைக்கு வழியில்லை.

. 4 வயதுக் குழந்தை மைல்கணக்காக ஓடுகிறது.
 

. டோமான் குழந்தைகளைத் தரையில் படுத்து, ஊர்ந்து செல்லச் சொல்கிறார். உடல் வேலை செய்தால் மனம் புதிய திறமைகளைப் பெறுகிறது என அவர் கண்டுள்ளார்.

.நம் நாட்டில் இம்முறை சில இடங்களில் பின்பற்றப்படுகிறது. புதுவை, தஞ்சாவூர், கடலூர், நாகர்கோவில், திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் இம்முறையைப் பின்பற்றும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

. ஆசிரியர் குழந்தைக்கு முழுச் சுதந்திரம் தருவதும்;

. குழந்தையை adult வயதுவந்தவர்போல் சமமாக நடத்துவதும்;

. இம்முறைக்கு வலுவளிக்கும் சாதனங்கள்.


 


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

எந்த நிமிஷம் நமக்கு நிகழ்ந்தது - எதுவானாலும் - அருள் எனப் புரிகிறதோ, அதே நிமிஷம் மனத்திலிருந்து நாம் சைத்தியப்புருஷனை அடைகிறோம். கோபம் நம்மை மனத்திலிருந்து பிராணனுக்கு அழைத்துச் செல்கிறது. அதனால்தான் "கோபம் வரும்பொழுது, சிந்தனை செய்'' என்கிறார்கள். அடுத்தவரும் நம்மைப்போல் "பிரம்மம்' என்ற எண்ணத்தை ஏற்றுக்கொண்டவுடன், நேரடியாக சத்தியஜீவியத்தை நம் எண்ணம் தொடும்.

எதுவும் அருள் தரும் பிரம்மம் என்ற ஞானம் சத்தியஜீவிய ஞானம்.


 


 


 



book | by Dr. Radut