Skip to Content

05.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                                                   (சென்ற இதழின் தொடர்ச்சி....)     கர்மயோகி 

XIV. The Supermnd- As creator

Page No.125, Para No.8

14. சத்தியஜீவியம் - சிருஷ்டிகர்த்தா

There is the formula of the One.

அது ஏகனுடைய சூத்திரம்.

It is eternally stable and immutable.

அது நிலையானது, அழிவில்லாதது.

It is above.

அது மேலேயுள்ளது.

There is the formula of the Many.

அநேகனுக்கும் சூத்திரம் உண்டு.

It is eternally mutable.

அது காலத்திற்கும் மாறுவது.

It constantly seeks.

அது தொடர்ந்து தேடுகிறது.

It seeks a firm standpoint.

அது நிலையான நோக்கத்தைத் தேடுகிறது.

It must be firm and immutable.

அது அசைக்கமுடியாததாகவும், அழிவற்றதாகவுமிருக்கவேண்டும்

It seeks it amidst the flux of things.

அலை மோதும் கடலில் இதை அது தேடுகிறது.

But it hardly finds it.

ஆனால் அது கிடைப்பதில்லை.

This is below.

இது கீழேயுள்ளது.

The seat of all trinities is in between.

இடையே திருமூர்த்திகளின் உலகம் உள்ளது.

It is a seat of all this biune.

அங்கு இரட்டை இரண்டில் ஒன்றாக உள்ளது.

It is a seat of all that becomes Many-in-One.

ஒன்றில் பல உள்ள மையம் அது.

And yet it remains One-in-Many.

இருப்பினும் அது பலவற்றில் உள்ள ஒன்றாக உள்ளது.

It was originally One.

அதுவே ஆதியான ஏகன்.

It was the One that is always potentially Many.

அநேகனையுட்கொண்ட ஒன்று அது.

This is the intermediary term.

இதுவே இடைப்பட்ட நிலை.

It is the beginning and end of all creation and arrangement.

சிருஷ்டிக்கும், பிரபஞ்ச ஏற்பாட்டிற்கும் அதுவே ஆரம்பமும், முடிவுமாகும்

It is the Alpha and the Omega of creation.

"" முதல் "" வரை அதுவேயாகும்.

It is the starting point of all differentiation.

எல்லா மாறுபாட்டிற்கும் அதுவே ஆரம்பம்.

It is the instrument of all unification.

எல்லாவற்றையும் இணைக்கும் கருவியது.

These are realisable harmonies.

நாம் எட்டக்கூடிய சுமுகம் இது.

These are realised harmonies.

இதுவரை எட்டிய சுமுகமும் அதுவே.

It is originative of them.

அவற்றை ஆரம்பிப்பது இதுவே.

It is executive of them.

அவற்றைச் செயல்படுத்துவதும் இதுவே.

It is consummative of them.

அவற்றைப் பூர்த்திசெய்வதும் அதுவே.

It has the knowledge of the One.

அது ஏகனை அறியும்.

The One has its hidden multitudes.

ஒன்றில் ஆயிரம் ஒளிந்துள்ளது.

It is able to draw them out of it.

அதனின்று அவற்றை அதனால் வெளிக்கொணரமுடியும்.

It manifests the Many.

அது அநேகனைப் படைக்கும்.

It has differentiations.

அதற்கு மாறுபாடுகள் உண்டு.

It does not loste itself in them.

தன்னை அம்மாறுபாடுகளில் அது இழப்பதில்லை.

There is the ineffable unity.

சொல்லைக்கடந்த ஐக்கியம் அது.

We have a supreme perception of it.

அதை நாம் உச்சக்கட்டத்தில் அறிவோம்.

There is something beyond that.

அதைக்கடந்த ஒன்றுள்ளது.

The existence of the intermediary term tells us something.

இடைப்பட்டது அதைச் சுட்டிக்காட்டுகிறது.

It says that that Something exists.

அந்த ஒன்றிருப்பதை அது கூறுகிறது.

That is Something ineffable.

அது விவரிக்கவொண்ணாதது.

It is mentally inconceivable.

மனத்தால் நினைக்கமுடியாத ஒன்று அது.

It is not because of its unity.

அது ஐக்கியத்தால் அப்படியில்லை.

It is not because of its indivisibility.

பகுக்கப்படாதது என்பதாலன்று.

But it is because of it is free from these.

அவற்றினின்று அது விடுபட்டது என்பதால் அதை விவரிக்கமுடியாது.

These are formulations of the mind.

இவை நம் மனத்தின் சித்ரகூடங்கள்.

It is Something beyond Unity.

அது ஐக்கியத்தைக்கடந்தது.

It is also beyond multiplicity.

அது பிரிவினையைக்கடந்தது.

That would be the utter Absolute.

அது பிரம்மம்.

It would be the Real.

அது சத்தியம்.

We have our knowledge of God,.

நமக்கு ஆண்டவனைத் தெரியும்.

We also have our knowledge of the world.

நாம் உலகை அறிவோம்.

It justifies both.

அது இரண்டையும் ஏற்றுக் கொள்ளும்.

Page No.126, Para No.9.


 

These are large difficult terms.

இவை பெரிய தத்துவங்கள்.

It is difficult to grasp them.

நமக்கு இவை பிடிபடா.

Let us come to precisions.

நடைமுறைக்கு வருவோம்.

The One is Sachchidananda.

ஏகன் என்பது சச்சிதானந்தம்.

We speak thus.

நாம் இதைப் பற்றிப் பேசுகிறோம்.

We point three entities.

இங்கு மூன்றைக் கூறுகிறோம்.

It is its description.

அதுவே அதன் விளக்கம்.

We unite them.

நாம் அவற்றைச் சேர்க்கிறோம்.

Thus arrive at a trinity.

இணைத்து மூன்று தத்துவங்களை ஏற்படுத்துகிறோம்.

We say 'Existence, Consciousness, Bliss.'

சத், சித், ஆனந்தம் என அவற்றைக் கூறுகிறோம்.

And we say they are One.

அவை ஒன்று என்கிறோம்.

It is a process of the mind.

இது மனம் செயல்படும் வழி.

Sachchidananda is a unitarian consciousness.

சச்சிதானந்தம் ஐக்கியத்தாலான ஜீவியம்.

To it, it is inadmissible.

அதற்கு இப்பிரிவினை ஒத்துவாராது.

Existence is Consciousness.

சத் சித்தாகும்.

There can be no distinction between them.

அவற்றிடையே வேறுபாடில்லை.

Consciousness is Bliss.

சித் ஆனந்தம்.

They cannot be distinguished.

அவை ஒன்றே.

So, there can be no world.

அப்படியெனில், உலகமில்லை.

Because there is no distinction.

பிரிவினையில்லை என்பதால் உலகமில்லை.

Suppose it is the sole reality.

அது மட்டுமே சத்தியம் எனக்கொள்வோம்.

Then the world is not.

அது உண்மையானால் உலகம் இல்லை.

It never existed.

உலகம் ஏற்பட்டேயிருக்கமுடியாது.

It can never have been conceived.

சிருஷ்டியை நினைத்தேயிருக்கமுடியாது.

The world is division.

உலகம் பிரிவினையால் ஏற்பட்டது.

It is differentiation.

ஒன்றிலிருந்து அடுத்தது வேறுபட்டிருக்கவேண்டும்.

An indivisible consciousness cannot originate division.

ஐக்கியம் பிரிவினையை ஏற்படுத்தமுடியாது.

An undividing consciousness cannot originate differentiation.

பிரிக்கமுடியாத ஜீவியம் பிரிவினையை ஏற்படுத்தமுடியுமா?

But this is reductio ad absurdum.

இது அபத்தம்.

We cannot admit it.

நாம் இதை ஏற்கமுடியாது.

If we do so, our basis will be different.

நாம் ஏற்றால், நம் அடிப்படை மாறும்.

It will be an impossible paradox.

அடிப்படை நடைமுறைக்கு உதவாத முரண்பாடாகும்.

It will be an unreconciled antithesis.

சுமுகத்திற்கெதிரான முரண்பாடாக முடியும்.

Contd....

தொடரும்...

****

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒன்றை நாடினாலும், விழைந்தாலும் கழுத்தை நெறிக்கும் கைகளாகக் கடவுள் உன்னைத் தீண்டுகிறார்.

விருப்பின் விளைவு.

ஸ்ரீ அரவிந்த சுடர்

அனுபவிப்பதையே அறியமுடியும். அதனால் உணர்வு அறிகிறது.எனவே அது உணர்வின் சித்தி. மற்றவை சொல்லின் தெளிவு. மனம் கண்டது, அறிவுக்குரிய உண்மை; தத்துவம். நமக்கு லீலை விளங்க நாம் பரம்பொருளை உணர்வில் அறிய வேண்டும். இப்பொழுது பரம்பொருள் பரம்பொருளுக்கே விளங்கும் நிலையிலுள்ளது.இன்று லீலை, பரம்பொருளுக்குத் தெளிவு. நமக்குத் தெளிவானது உணர்வுமட்டுமே.

பரம்பொருள் உணர்வைத் தொட்டால்,

லீலை உணர்வுக்கு - நமக்குத் - தெளிவாகும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

எங்கிருந்தாலும் உயர்வை மனிதனால் காணமுடியும்.கண்டபின் தனக்கு அதை விட உயர்வுண்டு என்று தனக்கே நிரூபித்துக்கொள்வான்.

உயர்வைக் கண்ட மனிதன் மேலும் உயர்வான்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

உறுதி (will) அறிவை ஏற்றுக்கொண்டால் அபிப்பிராயம் ஏற்படுகிறது. உணர்வு மனத்தின் அபிப்பிராயத்தை ஏற்றுக் கொண்டால் நோக்கம் (attitude) ஏற்படுகிறது. உடல் நோக்கத்தை ஏற்றுக்கொண்டால் சக்தி (power) பிறக்கின்றது. ஆன்மாவின் அனுமதியுடன் ஜீவன், உடலின் (power) சக்தியை ஆமோதித்தால் உணர்வின் நோக்கமும், மனத்தின் அபிப்பிராயமும் அதற்குட்படும். அதற்குப் (value) பண்பு எனப் பெயர்.

உறுதி, அறிவு, உணர்வு, நோக்கம் சேர்ந்தவை பண்பு.


 


 



book | by Dr. Radut