Skip to Content

07.சாவித்ரி

சாவித்ரி

P.60 For his abode below the Thinker's sight.

முனிவரின் பார்வைக்குட்பட்ட லோகம்.

. நெறியான சத்தியத்தை நேர்மையாக ஏற்கமுடியாத மனம்.

. இருளில் வதியும் ஒளியோடுள்ள உறவு.

. இறைவனின் மாயை எனும் அசம்பாவிதமான அதிர்ஷ்டம்.

. அருகிலுள்ள ஆனந்தத்தைத் தேடும் நெடிய யாத்திரை.

. உலகம் எனும் ஆர்ப்பாட்டமான கனவுலகமான அரங்கம்.

. கரும் இராட்சசன்மீது நிறுவப்பட்ட தங்கமயமான விமானம்.

. இயற்கையன்னையின் இதயத்தில் செயல்படும் இறைவனின் சக்தி.

. சிருஷ்டியின் மேடையில் செயல்படும் கரிய உடையணிந்த கருமை.

. ஜனிக்காத கடவுள்களின் களிமண் உருவங்கள்.

. தவிர்க்கமுடியாத எண்ணத்தின் கர்த்தா.

. விதியை நம்பி விலங்கிட்ட மனம்.

. மெல்ல நகரும் காலனின் சுவடுகளைப் பொறுமையுடன் காணும் காவலன்.

. விதிக்கப்பட்ட திரையிட்ட ஆழ்ந்த நிலைகளை முன்கூட்டி அறியும் மனம்.

. கண்மூடிய பிளவுகளின் ஊமைக்கனவுகள்.

. சிகரம் காணும் சித்திக்குப் பலன் தரும் சிந்தனை.

. பரிணாம உலகின் முதற்குரல்.

. முரட்டுத்தனமான மூர்க்கத்தனம் ஜோதியை உள்ளிட்டது.

. உச்சியின் வெற்றி உலகை நாடிவருவதை உள்ளூற அறிபவன்.

. ஆத்மாவின் ஆழ்ந்த எழுச்சியின் எச்சரிக்கையான எழுச்சி.

****

. தனித்து இயங்கும் தோற்றமுடைய உலகம்.

. பரமாத்மாவின் பக்குவமான சின்னங்கள்.

. அவனருளாலே அசைபவை; அவன் மூச்சு அவர் உயிர்.

. அறியாத போக்கை அமைக்கும் புலப்படாத புனிதம்.

. அன்னையின் அகிலம் தவழும் ஆட்டத்தில் ஆடுபவன்.

. சுழலும் மாயபூமியின்மீது வந்த அவன்.

. அவனிடமிருந்து தப்பி மறையும் சக்தியின் ரூபம்.

. ஜடநித்திரையின் இரகஸ்யமான ஜமதக்னி.

. குரலற்ற கோஷம், ரூபமற்ற சக்தி.

. உலகம் செப்பனிடுமுன் இங்கு வந்து உறைபவன்.

. மனம் பிரகாசம் பெறுமுன், உயிர்மூச்சு விடுமுன்,

. சிருஷ்டியின் நடிப்புக்கு உடந்தையானவன்.

. தோற்றத்திற்கு ஜீவன் அளிப்பவன்.

. சத்தியமும், சின்னமும் சமமாகும் நிலை.

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பண்புகள் மூலமே பிரபஞ்சத்தை நாம் அறிகிறோம் என்கிறார் பகவான். இன்று உலகம் என நாம் அறிவது, நம் பண்புகளால் நிர்ணயிக்கப்படுபவை. முழுபிரபஞ்சத்தை நாம் இன்று அறிவதில்லை. முழுபிரபஞ்சத்தை அறிய, அதற்குரிய பண்புகளை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். முதற்படியாக இன்றுள்ள பண்புகளுக்கு அடுத்த நிலை பண்புகளை ஏற்றுக்கொண்டால் நம் உலகம் சற்று விரிவடையும்.

உயரும் பண்பு விரியும் பிரபஞ்சம்.


 


 



book | by Dr. Radut