Skip to Content

05.லைப் டிவைன் -கருத்து

 “லைப் டிவைன் -கருத்து”

P.16. Shrinking distances

          பெரிய உலகம் சுருங்கி இடமும், காலமும் மறைகிறது

       ஜடமும் ஆன்மாவும் ஒன்று என்பதே இந்த இரண்டாம் அத்தியாயம். அதன் கடைசிப் பாராவில், உலகம் சுருங்குகிறது. சுருங்கும் உலகம் இடம், காலத்தை அழிக்கும் எனக் கம்பியில்லாத் தந்தியை உதாரணமாகக் கூறி, ரேடியோவைக் குறிப்பிடுகிறார். ரேடியோ ரிசீவர், டிரான்ஸ்மீட்டர் அழியும் நேரம் வரும். அதன்பின் உள்ள ஒரே தடை அகந்தை என்றால், அகந்தை அழிந்தால்,

உலகம் ஒன்று என்பது நிரூபணமாகும்

என்று முடிக்கிறார். உலகம் ஒன்று என்றால், ஜடமும், ஆன்மாவும் வேறு வேறு ஆகாததன்றோ? சுருங்கும் உலகம் என்பதை விளக்கத் தேவையில்லை.

மனிதனை மனிதனிடமிருந்து பிரித்தது தூரம்.

நடந்து போய் தூரத்தை முதல் மனிதன் வென்றான்.

குதிரைச் சவாரி நடப்பதைவிட வேகமானது.

பிறகு சைக்கிள் வந்தது. தொடர்ந்து காரும், ரயிலும், விமானமும் வந்தன.

தூரம் சுருங்குகிறது. அதனுடன் காலமும் சுருங்குகிறது.

பூமி மட்டுமன்று, சூரிய மண்டலமும் சுருங்குகிறது.

ஒளி ஒரு செகண்டில் உலகை 7 தரம் சுற்றி வருவதை அதிகபட்ச வேகமாகக் கருதிய உலகில் அதையும் 300 மடங்கு வேகப்படுத்தலாம் எனவும் கண்டுள்ளனர்.

தபால், தந்தி, போன், e-mailசெய்தியைத் துரிதப்படுத்தி விட்டது.

டெலிபதி என்பது ஒருவர் மனத்தை அடுத்தவர் அறிவது, ஒரு சிலருக்கு இத்திறமையுள்ளது.

எல்லாப் பொருள்களும், எல்லா ஜீவராசிகளும் அணுக்களால் ஆனவை என்பதும் உலகம் ஒன்று என்று கூறுகிறது.

மனித சுபாவம் எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும் ஒன்றாகவே இருப்பதை சரித்திரம் கூறுகிறது.

உடலுறுப்புகள் மனிதனுக்கும், விலங்குகட்கும், மீன் போன்ற ஜந்துகட்கும் ஒன்றுபோல் செயல்படுவதை விஞ்ஞானம் கூறுகிறது.

உலகம் பல வகைகளிலும் ஒன்று என்றறிய போதுமான அறிவும், செய்திகளும் உள்ளன. நாம் ஏற்பது நம்மைப் பொருத்தது.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

நிகழ்கால நினைவு, சந்தோஷத்தை அளிக்கும். கடந்த காலத்தையோ, எதிர்காலத்தையோ நினைப்பது ஏமாற்றம் தரும். ஏமாற்றங்களெல்லாம் சந்தோஷத்தை உற்பத்தி செய்பவை. கட்டுப்பாட்டிற்குரிய கல்லூரிப் படிப்பு, பட்டத்தில் முடியும். ஆஸ்பத்திரி வாழ்வு உடல்நலத்தைத் தரும். சிறந்த எதிர் காலத்திற்காக அவற்றைப் பொறுத்துக் கொள்ளலாம். அதற்கு அடுத்த நிலையுண்டு. படிப்பில் ஊன்றி நிலைத்து அளவு கடந்த சந்தோஷத்தைக் காணலாம். ஆப்பரேஷனுக்கு பின் படும் வேதனையில் அதே சந்தோஷத்தைக் காண்பது முடியாது. எனினும் அங்கும் அஃது உண்டு. துரோகத்தால் வதையும் மனிதன், துரோகியின் கண்ணோட்டத்தில் பிரச்சினையை அறிய முயன்றால் துரோகத்திலும், துரோக மனப்பான்மையிலும் அதே பெருஞ்சந்தோஷத்தைக் காண முடியும்.

துரோகத்தின் தூய்மை.

 

 



book | by Dr. Radut