Skip to Content

05.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

 (சென்ற இதழின் தொடர்ச்சி....)

-கர்மயோகி

845) நம் இன்றைய திறமைகள், பண்புகள், அறிவாற்றல், நினைவாற்றல், கருத்தாற்றல் போன்றவை புனிதப்பட்ட நிலையிலும் அன்னையைச் சேர தடையாகும். அவற்றைப் போற்றிப் புகழ்வதே பெருந்தடையாகும்.

புனிதப்பட்ட ஆற்றல்களும் அன்னையை அடையத் தடை.

  • "நாம்" என்பது அகந்தை. அது அன்னைக்குத் தடை.
  • நம் உடல், உயிர், மனம் ஆகியவை அகந்தையின் பகுதிகள். அதனால் அவையும் அன்னையை அடையத் தடை.
  • நம் திறமைகள் நம் கருவிகளின் பகுதிகள். அவையும் தடை.
  • அறிவு மனத்தின் பகுதி. அறிவை நம்பாமல் ஆன்மாவை நம்பினால் அன்னையை அடையலாம்.
  • நினைவு அறிவின் பகுதி. அதனால் நினைவை நம்பும்வரை அன்னையை அடைய முடியாது.
  • இறைவனை நினைவு வைத்திருப்பது புனித நினைவு. நினைவு புனிதப்படுவதால் அது அன்னையை அடைய உதவும் என நாம் நம்பலாம். அது உண்மையில்லை.
  • Memory makes us insincere.

நினைவு நம்மைப் பொய்யாக்கும் என அன்னை கூறியுள்ளார்.

  • அன்னையை அடைய விழிப்பில் பரவசப்படவேண்டும்.
  • பரவசப்படுவதற்கு நினைவு எதிரி.
  • ஆற்றல் அகந்தையின் பகுதி என்பதால் அன்னைக்குத் தடை.
  • தடையான பொருள் புனிதப்பட்டால், தடைக்குப் பலம் வரும். தடை வலுப்படும்.
  • மனம் அழிந்தபின் அன்னையை அடையலாம்எனில் மனத்தின் பகுதிகள் வலுப்பட்டால் அன்னைக்குரிய தடை வலுப்படுகிறது.
  • எதிரியை நம்பலாம், மோசக்கார நண்பன் ஆபத்து. எதிரி என்பதால் உஷாராக இருக்கிறோம். நண்பன் என்பதால் நம்பிவிடுகிறோம். நம்பியவன் மோசக்காரனானால் நஷ்டமும், ஆபத்தும் அதிகம்.
  • புது உலகம் படைக்க பழைய கருவிகள் பயன்படா. சென்னையில் வெள்ளிப்பிடி போட்ட வில்வண்டி, வெள்ளிக் கொப்பியுள்ள காங்கேயம் மாடு பூட்டிய வண்டிகள் பயன்படா. வேலையைக் கெடுக்கும்.

----

846. நம் சரணாகதியைப் பூர்த்திசெய்ய நாம் பிரார்த்திக்கின்றோம். அது தம் கடமையா என அன்னை கேட்கிறார்.

பொதுவாக மனித ஆத்மா தன் சரணாகதியையும் அன்னைக்குச் சமர்ப்பிப்பது உன்னதமான நோக்கமாகும். நாமே இறைவன் என்ற நிலையை அன்னை நமக்களிப்பதால் சரணாகதி அதன் பகுதியாகிறது. அதன்பின், பழைய, தன்னை அறியாத நிலைக்குச் சென்று அதன்படி நடக்க முயன்றால், அந்த இடைவெளியில் நாமழிக்க முயலும் அகந்தை எழுகிறது.

சரணாகதி நம் பங்கு. அருள் அன்னையுடையது.

  • இந்தியாவுக்கு, பிரிட்டன் சுதந்திரம் கொடுத்தபின், அதனால் என்ன பிரயோஜனம்; பிரிட்டன் இந்தியாவை சுபிட்சமாக்கவேண்டும் என நாம் எதிர்பார்க்கவில்லை, எதிர்பார்க்கக்கூடாது. அது நம் பங்கு.
  • காலேஜில் இடம் வேண்டும் என்பவனுக்கு இடம் வாங்கிக் கொடுத்தால், அவரையே பீஸ் கட்டச் சொல்லி நாம் கேட்பதில்லை
  • தகப்பனாரை நாம் கேட்போம். அவரும் பணம் கட்டுவார். படிப்பது பையன் கடமை.
  • படிப்பு என்பது நம் மனம் பெறும் திறமை.
  • அதைப் பெற காலேஜில் சேர, பணம் கட்ட நாமே திறமை பெற வேண்டும்.
  • உதவி செய்பவர் இடம் பெற்றுத்தரலாம்.
  • பெற்றோர் பணம் கட்டலாம்.
  • படிப்பைப் பையனே படிக்கவேண்டும்.
  • அன்னையும் இடம் பெற்றுத்தருபவர் போல், பெற்றோர் போல் அளவோடு தான் செயல்படுவார்களா, கடைசிவரை என் பாடத்தை எனக்காகப் படிக்கமாட்டார்களா என கேட்பவருண்டு.
  • அன்னைச் சூழலிலிருந்தால் செல்வாக்குள்ளவர் இடம் பெற்றுத் தருவார்.
  • அன்னை வீட்டிலிருந்தால், பெற்றோர் மூலம் பணம் கட்டுவார். பணம் கட்ட பெற்றோருக்குப் பணம் பெற்றுத்தருவார்.
  • நாம் அன்னையை மனத்தில் ஏற்றால், மனம் நம் படிப்பை நமக்காகப் படிக்கும்.
  • கல்லூரியில் எங்குப் போனாலும் பாடச் சம்பந்தமான விஷயங்கள் காதில் விழும். படிப்பு எளிமையாகும்.
  • அன்னையை நினைவில் ஏற்றால், வகுப்பில் கேட்பது நினைவில் இருக்கும். அன்னை நமக்காகப் படிப்பார்.
  • அன்னையை வாழ்வில் ஏற்றால், வாழ்வுக்குரிய வேலையை வாங்கித் தருவார்.
  • எந்த அளவில் பலன் வேண்டுமோ அந்த அளவில் அன்னையை ஏற்க வேண்டும்.
  • ஓர் அளவில் அன்னையை ஏற்று, அடுத்த அளவில் பலனைக் கேட்க முடியாது.
  • சரணாகதி பூரணமானால், அன்னையே படிப்பார், வேலை பெறுவார்,சம்பாதிப்பார், நமக்காக ஆனந்தம் அனுபவிப்பார்.
  • பெற்றோர் பையனுக்காகப் படிக்க முடியாது. ஆனால் அன்னை பையனுக்காகப் படிப்பார். அன்னையைப் பையன் படிப்பில் ஏற்றுக்கொண்டால், அவன் படிப்பை அவரே பூர்த்திசெய்வார்.

தொடரும்.....

***** 

ஜீவிய மணி

பிறரால் வாழ்வது பிணக்கு.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்

சரணாகதி ஆன்மாவின் வெளிப்பாடு. அதனால் அதைப் பெறுவது சிரமம். கொஞ்சம் பெற்றாலும் அதன் பார்வை பட்டவுடன் அகந்தை கரையும். மனிதன் அகந்தையைக் கரைக்க எடுக்கும் முயற்சி அகந்தையினுடையது.

அகந்தை அழியும் சரணாகதி.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்

மரியாதை நாமறிவது, உடலுணர்வானால் மானம் ஆழ்மனத்திலுள்ளது. திருவுருமாற்றத்திற்கு அதிக சக்தி தேவை. அது அதிக சக்தியையும் தரவல்லது.

மானம், மரியாதையைக் கடந்த திருவுருமாற்றம்.

*****   

Comments

5.யோக வாழ்க்கை விளக்கம்

5.யோக வாழ்க்கை விளக்கம் V

 
846)
Para 1
Please move the following lines except the first line to a new paragraph.
Please remove the extra special characters at the end , just before 'தொடரும்.....'



book | by Dr. Radut