Skip to Content

12.தணியாத நினைவு. தவறாத சமர்ப்பணம்

தணியாத நினைவு. தவறாத சமர்ப்பணம்

வியாசபகவான் மகாபாரதத்தை எழுத ஒருவரை நினைத்தபொழுது,விநாயகர் எழுத முன்வந்து, "நான் எழுதும் வேகத்தில் சொன்னால், நான் எழுதுகிறேன்'' என்றார். விநாயகர் தம் தந்தத்தால் எழுதும் வேகத்தில் எப்படி கவி எழும் என்று தயங்கிய வியாசர், "எழுதுவதைப் புரிந்துகொண்டு எழுதுவதானால், நீங்கள் எழுதும் வேகத்தில் நான் சொல்கிறேன்'' என வியாசர் கூறியதாகக் கதை.

அன்னையிடம் வருபவர்கள் நடக்கும் விஷயத்தைக் கண்டு பிரமிப்பார்கள். க்ஷணத்தில் வீட்டிலிருந்த அத்தனை பிரச்சினைகளும் மறைந்துவிடும். அது நம் கண்ணில் சில சமயங்களில் படும். பட்டாலும்,படாவிட்டாலும், வாழ்க்கை பிரமிப்பாகும். அது தொடர்ந்து நடக்கும்.வருமானம் 10 மடங்கு எதிர்பாராமல் நம்பமுடியாமல் உயர்ந்தபின் மனதில் எழும் முதல் எண்ணம், "இது வெளியில் தெரியக் கூடாது, தெரிந்தால் ஆபத்து' எனத் தோன்றும். நடப்பவை பிரமிப்பாக இருப்பது இயல்பு. அது நன்றியாக உடலில் மலர்ந்து உணர்வாகப் பூரித்தால், நடப்பது தொடரும், தொடர்ந்து விரியும். இது வெளியில் போகக்கூடாது என்பவருக்குப் பலிக்கும். அதைவிடச் சிறந்த நோக்கம் ஒன்றுண்டு.

படிப்படியாக நம் மனம் பிரமிப்பு, இரகஸ்யம், திருப்தி, பூரிப்பு,மிரட்சி, திகைப்பு எனப் பல கட்டங்களைத் தாண்டி வருவது, வந்தது நாம் அனுபவித்து அறிந்ததாகும். மனம் அதன்பின் பல விஷயங்களை ஆசைப்படும். மெதுவாக அவை பலிப்பதைக் காண்கிறோம். ஒன்றும் புரியாது. அடுத்த கட்டத்தில் நினைக்காதனவெல்லாம் நடக்கும், ஒன்றும் பிடிபடாது. அதற்கும் அடுத்த கட்டத்தில் நினைக்கமுடியாதனவெல்லாம் நடக்கும். அது நம் கற்பனையைக் கடந்த நிலை. அந்நிலையில்,

»அன்னை என்றும் இதேபோல் நினைத்தனவெல்லாம் நடத்துவாரா என மனம் நினைக்கும்.

»"நான் அப்படியே நடத்த விரும்புகிறேன். நான் தருவதைச் சமர்ப்பணத்தால் பெற்று, நன்றியால் அனுபவித்தால், நான் தொடர்ந்து அற்புதங்களை அன்றாட நிகழ்ச்சியாக்குவேன்" என அன்னை வியாசர்போலக் கூறுவதை நாம் கேட்பதில்லை.

*******



book | by Dr. Radut