Skip to Content

08.அஜெண்டா

“Agenda”

Here I have everything except lions.

Lions too are there invisible.

Lions smile on Mother like children.

சிங்கம் தவிர மற்ற எல்லாம் இங்கிருக்கின்றன.

சிங்கங்களும் இங்கு கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்றன.

குழந்தைகள்போல் சிங்கங்கள் அன்னையைப் பார்த்துச் சிரிக்கின்றன.

. அன்னை தம் அறையைப் பற்றி மேற்கண்டவாறு பேசுகிறார்.

. இறைவனின் கருணைக்கு, சிங்கத்தின் பலம் வந்தால் அது குழந்தை போலாகும்.

. அசுரச் சூறாவளியில் வீடுகள் 3, 4 நிமிஷத்தில் நொறுங்கிய பொழுது அன்னையின் சூழல் ஒரு வீட்டைக் காப்பாற்றியதை அறிந்த அன்பர்கள் இந்தச் சிங்கங்களின் பலத்தை அறிவார்கள்.

. அன்னையின் அருளுக்குச் சிங்கத்தின் பலம் உண்டு.

. அது பலத்தால் கனிந்து குழந்தையுள்ளம் பெறும்.

. எளிமையான அருளுக்கு வலிமை மிகுந்தால், அது சூட்சும லோகம் அடையும்.

. சூட்சும லோகம் அடைவதால் கண்ணுக்குத் தெரியாது.

. கண்ணுக்குத் தெரியாத பலம் கடவுளின் வலிமை.

. அன்னை அருளுக்குப் போர்முனையும் குடும்பச் சூழலும் ஒன்றே.

. அருளால் வாழ அன்பர் விரும்பினால்,

. அதிகாரம் செய்து அடக்க வேண்டியவரை,

. அன்பால் அரவணைக்க முடியும் என்றறிய,

. மனம் அதிகாரத்தையும், காரத்தையும் கைவிட்டு,

. அன்பையும், பிரியத்தையும், பொறுமை, நிதானத்துடன் நாடினால்,

. நாடியது நம்மைத் தேடிவந்து நெஞ்சை அடைந்தால்,

. சிங்கம் உள்ளே வரும், குழந்தைபோல் சிரிக்கும்.

. நமக்குச் சிங்கத்தின் பலமிருப்பதை நம் உலகம் அறிந்து ஏற்கும்.

. உலகில் அடாவடிக்காரன், போக்கிரி, நம்மைவிட்டு ஒதுங்கிப் போவான்.

. அவனை எதிர்கொள்ளும் நிலை வந்தால், அவனுக்குத் திராணி இருக்காது.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

அகம் புறத்தை நிர்ணயிப்பதை ஆன்மா தன் பிரச்சினைகளை மறப்பதென்கிறோம். ஆன்மா பிரச்சினையால் பீடிக்கப்பட்டது, புறம் அகத்தை ஆளும் நிலையாகும்.

புறம் அகத்தை நிர்ணயித்தால் ஆன்மாவுக்குப் பிரச்சினையுண்டு.

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆசையை அடக்குவது நடத்தை. ஆசையைப் புரிந்து அழிப்பது பண்பு. பீறிடும் சக்தியை மனதால் அடக்குவது நடத்தை.உணர்வின் பக்குவம் பண்பு. ஆசையின் ஆன்மாவை எழுப்பி திசையை மாற்றுவது திருவுருமாற்றம்.

நடத்தையும், பண்பும் திருவுருமாற்றத்தில் முடியும்.


 


 


 


 



book | by Dr. Radut