Skip to Content

13.Consultancy

 கன்ஸல்டன்சி

       வடநாட்டுக்காரர் ஒருவர் வெளிநாட்டில் புதியதாக வந்துள்ள இன்டர்நெட்டில் பழைய எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை e-காமர்ஸ் என்ற துறையில் கம்பெனி ஆரம்பித்துள்ளார். இது போன்ற கம்பெனிகள் திடீரென வானுயரும் அல்லது மறைந்து அழியும். ஏராளமான கம்பெனிகள் ஆரம்பிப்பதும், ஏராளமானவை மூடுவதும் தினசரி நிகழ்ச்சி.

       நம் அன்பர்கள் எலக்ட்ரானிக்ஸ் துறையிலுள்ளவர்கள். அத்துறை மீது அதிக அக்கறை கொண்டவர், இவ்வடநாட்டார் என்பதால் நம்மை அவர் கம்பெனியில் வேலை செய்ய அழைத்தார். நாம் வாடிக்கைக்காரர்களிடம் அன்னையைப் பற்றிப் பேசுவதில்லை. இவர் நம்மைப் பற்றி விசாரித்ததில் நாம் அன்னை பக்தர்கள் என அறிந்தார். நம் கன்ஸல்டன்சி முறைகளை இவர் எங்கும் கேள்விப்பட்டதில்லை. ஒரு நாள் நம் அன்பரை போனில் கூப்பிட்டு, எனக்கு இப்பொழுது கன்ஸல்டன்சியைப் பற்றிப் பேச விருப்பமில்லை. எப்படி இம்முறைகளை நீங்கள் கற்றுக் கொண்டீர்கள், அதைத் தெரிய ஆவலாக இருக்கிறேன் என்றார்.

       அடுத்த முறை இவர் கம்பெனியில் வேலை செய்த பிறகு அன்னைக்கும் கன்ஸல்ட்டிங்கிற்கும் என்ன தொடர்பு எனக் கேட்டு, தொழிலை விட அன்னையைப் பற்றியே அதிகமாகக் கேட்பார். இவர் போல் பலரும் e-commerce site இதே எலக்ட்ரானிக் துறையில் ஆரம்பித்துள்ளனர். புதுத் துறை, போட்டி அதிகம். சுமார் 7,8 மில்லியன் டாலர் செலவு செய்துள்ளார். மற்றவர்கள் 10, 15, 18 மில்லியன் டாலர் செலவு செய்துள்ளனர். தொழிலுக்குண்டான முறைகளைப் பேசி முடித்தபின் அன்னையை e-commerceஇல் எப்படிக் கொண்டு வரமுடியும் என்றார். நம் அன்பர், பதிலாக,

      1.அன்னையை தொழிலில் கொண்டுவர மனம் பரநலமாக selfless இருக்கவேண்டும். சேவையை மட்டும் மனம் நாடவேண்டும்.

     2. அன்னை மீது நம்பிக்கை வேண்டும். அன்னை உலகில் (Universe) எங்கும் பரவ வேண்டும் என்ற நோக்கம் உதவும் என்றார். e-commerce, internet மூலமாக அன்னையை உலகுக்களிக்க மனம் குதூகலமடைய வேண்டும் என்றார்

        வடநாட்டார் அதை ஏற்றுக்கொண்டார். கடைப்பிடித்தார். இந்த மாத சர்வேயில் இவருடைய கம்பெனிக்கு சர்வே செய்த பத்திரிக்கை முதலிடம் கொடுத்துள்ளது. இவருடைய siteக்கு இம்மாதம் 2-million hits வந்துள்ளது. அவருக்கே வியப்பு.

****

 



book | by Dr. Radut