Skip to Content

14.கறுத்த முகம்

 கறுத்த முகம்

       அன்னை நினைவு, தியானம், ஸ்ரீ அரவிந்தர் நூல்களைப் பயில்வது முகத்திற்கு தேஜஸ் தரும். முகத்தில் ½அங்குல முன் பிரகாசம் தெரிவதும் உண்டு. பிரச்சினை, பயம், கவலை முகம் கருவடையச் செய்யும்.

      “இன்று உங்கள் முகம் மிகவும் கறுத்துள்ளது” என்றார் அன்பரைக் காண வந்தவர். சிலருக்கு முகமாறுதல்கள் தெரியாது. மற்றவர்க்கு பிறர் முக மாறுதல்கள் தெரியும். இந்த அன்பருக்குத் தன் முகம் தவிர மற்றவர் முகம் எப்படியிருக்கிறதெனத் தெரியும். முகம் கறுத்துப் போக பல காரணங்களுண்டு. எதனால் எனத் தெரியவில்லை. என் முகம் கறுத்ததும் எனக்குத் தெரியவில்லை என்று பதில் கூறினார். இரண்டு நாள் கழித்து அதே நபர் வந்து அதே அன்பரைக் கண்டு உங்கள் முகம் இன்று பிரகாசமாக இருக்கிறது என்றார். எனக்கு கறுத்ததும் தெரியவில்லை, மாறியதும் தெரியவில்லை. ஆனால் அதற்குரிய காரணங்களை நான் அறிவேன். எக்காரணம் இன்று செயல்படுகிறது எனத் தெரியவில்லை என்றார்.

       அன்று மாலை கடிதம் வந்தது. அன்பருக்கு எழுதப்பட்டது. அதில் நேற்றைய தியானத்தில் நான் உங்களைப் பார்த்தேன். உருவம் தத்ரூபமாக இருந்தது. முகம் ஓரளவு பளிச்சென்றிருந்தது. திடீரென வயிற்றிலிருந்து கரும்புகை வெளிவந்தது. வந்த புகை மண்டலம் கோரமான அசுரனாக மாறியது, நான் மதர், மதர் என தியானத்தில் ஓலமிட்டேன். அசுரன் கரைந்து மறைந்து போனான். நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? என்று எழுதியிருந்தது.

       1.முகம் கறுத்திருந்ததும், பிறகு பளிச்சென்றாகியதையும் தியானக் காட்சி வலுப்படுத்தி ஊர்ஜிதப்படுத்துகிறது.

       2.நீண்ட நாள் முன்பு இந்த அன்பர் தியானத்தில் வயிற்றுள் மண்டை ஓடு, எலும்பு தெரிந்தது. அதுவரை அவர் வாழ்ந்த வாழ்வில் அவருடைய நண்பர்கள் அளித்த பரிசு அது.

      3. அன்று 25 ஆண்டுகள் முடிந்ததால் - அந்த வேதனைக்குரிய விழா - மண்டை ஓடு விலகியதாக அன்பர் புரிந்து கொண்டார்.

    ****



book | by Dr. Radut