Skip to Content

02. எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்ப வாழ்வில் யோக தத்துவங்கள்:

முதற்பகுதியில் வாழ்க்கை முறைகளை யோகச் சூழலில் ஓரளவு விளக்கினோம். யோகமும் வாழ்வும் முடிவில் ஒன்றானாலும், முடிவு வரும் வரை அவை பிரிந்திருக்கும். யோகம் என்றும் சிரேஷ்ட புருஷர்கள் (cream of society) அனுஷ்டிப்பது. வாழ்வு மக்களுக்குரியது. இந்தியா ஜகத்குருவாக அதனுடல் பிளவுபட்டது மீண்டும் ஒன்றாகவேண்டும். அதற்குள் மற்றொரு காரியம் முடிந்திருக்கவேண்டும். இந்தியா ஆன்மீக நாடு. ஆன்மீகத்திற்கொத்தவாறு 1000 ஆண்டுகட்கு முன் நாடு வளம் கொழித்தது. அதற்குரிய organisations ஸ்தாபனங்கள் அன்றிருந்தன. அவை இன்றும் பயன்படும் என்றாலும் இன்றைய உலகுக்குரிய மாறுதல்கள் தேவை. ஸ்தாபனங்கள் அழியாவிட்டாலும், அவற்றை ஆண்ட பண்புகள், முக்கியமாக சத்தியம், நேர்மை இன்றில்லை. புது உலகுக்குரிய அளவில் ஸ்தாபன அம்சங்கள் மாறுவதுடன் ஸ்தாபனத்திற்குரிய பண்புகள் நாட்டுப் பண்புகளாக உருவாக வேண்டும். அவை அன்பர்கள் வாழ்வில் எழுதல் தேவை. இக்குடும்பத்தில் அப்பண்புகள் உருவாக வேண்டிய சந்தர்ப்பங்களையும், அவற்றிற்குத் தடையான விஷயங்களையும் இவ்விரண்டாம் பாகத்தில் கருதுவோம்.

சத்தியம் அடிப்படை. அது பலமானது. அது வாழ்வில் மட்டும் காலை ஊன்றியிருக்காது. சத்தியத்தின் அஸ்திவாரமாக இருக்கும் தெம்பு வாழ்வுக்கில்லை. வாழ்வுக்கடிப்படையான ஜடத்திற்கும், அதன் பிரதிநிதியான உடலுக்கும் உண்டு. உடல் இருள்மயமானதால், உடலுக்கும் அவ்வலிமையில்லை. எந்த ஜோதி இருளாயிற்றோ அந்த ஒளிக்கு அத்திறனுண்டு.

  • நம் செயல்கள், சத்தியமான சொற்கள், உடலுள் உள்ள - இருளில் மறைந்துள்ள - ஜோதியை வெளிப்படுத்துமாறு அமைய வேண்டும்.
  • இக்குடும்ப வாய்ப்புகள் அச்சத்தியத்தால் பலிப்பதும், அதன் எதிரான செயலால் கெடுவதும் நம் ஆராய்ச்சிக்குரியது.
  • புறத்தின் வாய்ப்புகளை விட அகத்தின் மனநிலைகள் நமக்குரியன.
  • தாயார் அதிர்ஷ்டத்தை நாடுவதை மாற்றி அருளை நாடவேண்டும்.
  • குடும்பத்தினர் இருளை நோக்கிப் போவதற்குப் பதிலாக அருளை நோக்கிச் செல்லும் இலட்சியத்தை ஏற்க வேண்டும்.
  • எந்த ஒரு செயலிலும், அருளின் நோக்கில் இவ்வெளிப்பாடுகளை எடுத்துக்கூறினால், அதே முயற்சியை மேற்கொள்ளும் அன்பர்கள் மனத்தில் அவை அன்னையின் சுவடுகளாக அமையும்.
  • எந்தச் செயலையும் செயலாகவோ, அருளாகவோ, திருவுள்ளமாகவோ, சமூக நியதியாகவோ, இயற்கையின் மாறாத சட்டமாகவோ காணலாம்.
  • பிரம்மஜனனமாகக் காண்பது நம் நோக்கம். அப்படிக் காண்பது வேறு, அப்படி மாற்ற முயல்வது வேறு. மாற்ற முயலாதிருப்பது பிரம்ம ஜனனமாகும்.

அதிர்ஷ்டத்தை நாடும்பொழுது சமர்ப்பணத்திற்குக் காரியம் கூடி வருவதை எதிர்பார்ப்போம். சமர்ப்பணத்தின் பல்வேறு நிலைகளை முதற்பகுதி விவாதித்தாலும், யோக தத்துவமாக வாழ்வில் சமர்ப்பணம் வெளிப்படுவதை காரியத்தின் மூலம் இதுவரை விளக்கவில்லை.

  • சமர்ப்பணம் காரியத்தில் வெளிப்படுவது பிரம்மஜனனம்.
  • காரியம் பெரியதாகக் கூடிவருவது பலன்.
  • பலன் எவ்வளவு பெரியதானாலும், பிரம்மஜனனத்தின் இதர அம்சங்கள் - மௌனம், ஜோதி, ஞானம், சத்தியஜீவியம், சத்தியம், ஜீவியம், ஆன்மா - வெளிப்படுவது நம் கண்ணில் படுவதில்லை.
  • கண்ணில் படாவிட்டாலும், அவை எப்படியிருக்கும் என ஓரளவு எடுத்துக்கூறலாம். அவை தெரிந்தால், நாம் காரியம் கூடிவரும்பொழுது அவற்றைத் தேடலாம்.
  • சமர்ப்பணமும், சரணாகதியும் சத்தியஜீவியத்தை நோக்கிப் போகும் பாதைகள்.
  • நாம் அப்பாதையை அறிவோம்.
    • உள்மனம் போவது.
    • அடிமனம் போவது.
    • சைத்தியப்புருஷனை அடைவது.
    • முனிவர் மனம் போவது.
    • ரிஷி மனத்தைத் தொடுவது.
    • யோகி மனத்தில் ஞானத்தை எட்டுவது.
    • தெய்வலோக ஞானம் பெறுவது.
    • சத்தியஜீவியம் அடைவது.
  • உள்மனம் சாட்சிப்புருஷனுக்குரிய மௌனத்திற்குரியது. இம்மௌனம் Static Silence அசைவற்ற மௌனமானால், சாட்சிப்புருஷனுடன் யாத்திரை முடியும். பிரம்மஜனனம் சிருஷ்டியின் அசைவிலுள்ளது. அதனால் சலனத்திலுள்ள மௌனம் தேவை. அதாவது சலனத்தால் கலையாத மௌனம் தேவை.
  • இம்மௌனம் நிஷ்டையால் வாராது, சமர்ப்பணத்தால் வரும்.
    • சிந்தனையை விட மௌனம், சிந்தனைக்குக் கருவான மௌனம் சமர்ப்பணத்திற்குரியது என மனம் ஏற்றால், அம்மௌனம் எழும்.
    • கவர்னர்பார்ட்டிக்கு புதுடிரஸ் வேண்டும் எனப் பெரியவன் கேட்பது நிகழ்ச்சி. இதை ஏற்கலாம், மறுக்கலாம். இரண்டும் சமர்ப்பணமில்லை. என்ன பதில் கூறலாம் என சிந்திப்பதும் சமர்ப்பணமாகாது. என்ன பதில் சொல்வது என்று சிந்திப்பதைவிட, அப்படிச் சிந்திக்காமல் இருப்பது - மௌனம் - பெரியது என நம்புவது சமர்ப்பணத்திற்கு உதவும்.
    • அது அடிமனத்திற்கு எடுத்துச் செல்லும். அடிமனம் செல்லும்பொழுது அடிமனம் பிரபஞ்சத்திற்குரியது என்பதால் மனம் பிரபஞ்சத்தை நோக்கி விரியும். சிந்திக்காத மௌனத்தால் மனம் பரந்து விரிவது நாம் அடிமனத்தை அடைவது. "ஜில்" என்றிருந்தால் சைத்தியம் தீண்டுவதாகப் பொருள்.
    • சைத்தியம் தீண்டியபின் மேலெழுந்து முனிவர் மனத்தை எட்ட வேண்டும்.
    • நாம் இந்நிலையில் எட்டும் முனிவர் மனமும், முனிவருள்ள மனமும் வெவ்வேறானவை.
  • முனிவர், ரிஷி, யோகி உலகைத் துறந்தவர்கள். அவர்கள் நிஷ்டையில் காலத்தைக் கடக்கிறார்கள். பிரம்மஜனனம் அதையும் கடந்து காலத்துள் செயல்படுவது.
    • முனிவர் மனத்தில் உள்ள மௌனம் முனிவர் அறிந்த அசைவற்ற மௌனமல்ல. சலனத்தில் செயல்படும் பிரம்மஜனனத்திற்குரிய சைத்தியப்புருஷனுடைய மௌனம் அது.
    • இவ்விரு மௌனங்கட்குமுள்ள வேறுபாட்டை எப்படி அறிவது?
    • கவர்னர் நம் வீட்டு விருந்துக்கு வருவது முனிவர் அறியும் மௌனம்போல். கவர்னருக்குரிய ஜபர்தஸ்துபோல் மௌனத்திற்குரிய உயர்வு தெரியும். நம் வீட்டுப் பையன் கவர்னராகிய பின் வீட்டிற்கு வருவது பிரம்மஜனனத்திற்குரிய மௌனம் போன்றது. இங்கு ஜபர்தஸ்திருக்காது, அந்தஸ்து இருக்கும். அது உறவில் வெளிப்படும்.
    • ரிஷியின் ஜோதியும், யோகியின் ஞானமும், அதுபோல் பிரம்மஜனனத்திற்குரிய ஜோதியாகவும், ஞானமாகவுமிருக்க வேண்டும்.
    • கவர்னர்பார்ட்டிக்குப் பெரியவனுக்குப் புதுடிரஸ் தேவை என்பது சமர்ப்பணமானால், பழைய டிரஸ்ஸுக்குப் புதுடிரஸ்ஸின் கௌரவமிருக்கும். புது டிரஸ் தானே வரும். அந்த டிரஸ் பெரியவனை அசைக்காது, ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்காது, நிதானம் தரும். கவர்னர்பார்ட்டியில் மற்றவர்களைவிடப் பெரியவனுக்குக் கவனம் அதிகமாக இருக்கும். டிரஸ்ஸுக்குண்டான பொலிவு முகத்திலிருக்கும்; டிரஸ் மட்டும் பொலிவைத் தாராது.
    • கவர்னர்பார்ட்டிக்கு அழைப்பு வந்ததுபோல் சமர்ப்பணம், பார்ட்டியில் பெரியவனுக்குக் கவனம், அந்தஸ்து, சந்தர்ப்பம், வளர்ச்சியைத் தரும். பெரியவனே சமர்ப்பணத்தை ஏற்றாலும், தாயார் சமர்ப்பணம் பெரியவனைத் தீண்டினாலும் இப்பலன்களும், வெளிப்பாடுகளும் தெரியும்.
    • சமர்ப்பணம் குறைவானாலும், சத்தியம் நிறைவானாலும் ஓரளவு அது உண்டு.
    • பெரியவன் புருவ மையத்தில் அன்னை ஒளி அல்லது அன்னையே தெரிவது பிரம்மஜனனத்திற்குரிய ஜோதியாகும்.
    • யோகி மனத்திற்குரிய பிரம்மஜனன ஞானம் பெரியவனில் வெளிப்பட்டால், அவன் idea எண்ணத்தை கவர்னர் பார்ட்டிக்கு வந்தவர்கள் அனைவரும் ஏற்பார்கள். அது நாடெங்கும் பரவும்.
    • மனத்தையும், அகநிகழ்ச்சிகளையும், புறவெளிப்பாடுகளையும் அப்படி இக்குடும்ப விஷயத்தில் சோதனை செய்தால், பலன் பெரியதாக எழுந்தாலும், சமர்ப்பணத்திற்குரிய அம்சங்கள் அதிக அளவில் வெளிவரவில்லை என்பது தாயார் அறிந்த செய்தி.
    • பிரம்மஜனனத்திற்குரிய மௌனம் குதூகலமானது. உலகை நிரப்ப வல்லது. 1956இல் பொன்னொளி இறங்கியதை உலகின் தமஸ் விழுங்கியதைப் போல் சமர்ப்பணத்தால் வெளிப்படும் பிரம்மஜனன மௌனம், அதன் கலகலப்பான குதூகலம், குடும்பத்தின் தமஸால் விழுங்கப்பட்டு ஓரளவே மிஞ்சுகிறது.
    • எந்த நிகழ்ச்சியிலும் தாயார் பலனைவிட இது போன்ற இதர அம்சங்களைக் கண்டு தம்மையும், குடும்பத்தையும் கணிக்கிறார். கணக்கிடுவது முதலில்; அடுத்தது, கணக்கெடுப்பால் தம் நிலையை உயர்த்த முன்வருவது.
    • உடலில் தெம்பில்லாத பொழுது சமர்ப்பணம் முடியாது. ஆனால் அந்த நேரமும் அன்னை நினைவு இருப்பது அவசியம். நினைவுக்கும் தெம்பு வேண்டும். நினைவுக்கும் தெம்பில்லாதவர் அன்பராக முடியாது. அன்னையை அறிவது பாக்கியம், நினைவு கூர்வது அருள் என்பதன் கருத்து அதுவே. பகவான் ஸ்ரீ அரவிந்தர் பாமர மக்களுக்கில்லை என அன்னை கூறுவது அதனால் தான்.
    • அன்பர் அன்னையிடமிருந்து பெறுவது எதுவும் பிரம்மஜனனத்திற்கு உரியது. சாதகருடைய எந்தச் சாதனையும் பிரம்மஜனனத்திற்குரிய திருஷ்டியாகும். உலக வாழ்விலுள்ள எவரும், எந்தத் துறையிலிருந்தாலும், அவர் அன்பருக்கு நிகரில்லை என்பது அன்பரறிய வேண்டிய உண்மை. அதை மறந்தவர் அன்பர் என்ற தகுதியை இழப்பவர்.
    • இக்குடும்பத்தில் தாயாருக்கு மட்டுமே இக்கண்ணோட்டமுண்டு. பார்ட்னருக்கு சற்று விளங்க ஆரம்பிக்கிறது. மற்ற எவருக்கும் இந்நிலை மனத்தைத் தொடவில்லை. அன்பர் சாதிப்பது அன்னைஜீவியத்தில் சாதிப்பது. உலக வாழ்வின் சாதனைக்கு அந்தத் தகுதியில்லை. நாம் அதைப் பெரும்பலன் என நினைப்பது பொருத்தமாகாது.
    • உலகம் மனத்துள்ளிருப்பதால், மனம் சாதிப்பது உலகம் சாதிப்பதாகும். பெரியவன், "சொல்லுங்கம்மா, நான் செய்கிறேன்" என்பது அவனை ஒத்தவர் அன்னையை ஏற்பதாகும். கணவர் கம்பனியில் பார்ட்னராவது உத்தியோகஸ்தர் அனைவருக்கும் தொழிலதிபர் தகுதி வந்ததாகப் பொருள். வீட்டுவேலை செய்த பெண் வெளிநாட்டு வரனைப் பெறுதல், எல்லா வேலைக்காரிகளுக்கும் அத்தகுதி வருவதைக் காட்டுகிறது. அன்பர் அன்னையின் அரங்கம். சாதகர் அன்னையின் கருவி.
    • இக்குடும்பத்தின் - எந்த அன்பர் குடும்பத்தையும் - எந்த நிகழ்ச்சியையும் நாம் அக்கோணத்தில் காணவேண்டும். குடும்பத்தினர் மனம் ஊசலாடுவது உலகம் அன்னையை ஏற்கத் தயங்குவதாகும்.
      • அன்பராவது சர்க்கார் உத்தியோகஸ்தராவது போல. குமாஸ்தாவில் இருந்து கவர்னர் வரை வேலை விரிவுபடும்.
      • நமக்கு சர்க்கார் வேலைக்குரிய இதர சௌகரியங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன. அது பரிதாபம்; அர்த்தமற்றது.
      • சௌகரியங்கள் வேலைக்குட்பட்டவை. வேலை சௌகரியங்களால் வாராது.
      • சமர்ப்பணம் மனிதனை பிரம்மமாக்க வல்லது. சொர்க்கமும், மோட்சமும் அதற்குரியவை.
      • பிரம்மமே முதல், பிரம்மமே முடிவு. ஞானமும், சொர்க்கமும் பிரம்மத்திற்கு அர்த்தமற்றவை. அவை பகுதி. மனிதன் முழுமை. பிரம்மத்தின் முழுமை அவனுக்குரியது என்பதை அன்னை அவனுக்கு வழங்குகிறார்.

இதுவரை நடந்தவை, இப்பொழுது நடப்பவை, இனி நடக்கப்போகும் நிகழ்ச்சிகளை இக்கண்ணோட்டத்தில் காண்பது இப்பகுதியின் நோக்கம். அது புரிய சமர்ப்பணமும், சரணாகதியும் நன்றாகப் புரியவேண்டும். அடிமையாக வாழும் கூலிக்காரனுக்கும், பெண்ணுக்கும் ஆண்டவனிடம் அளவில்லாச் சுதந்திரத்தை வழங்குவது அன்னை. அதைப் பெற முன்வருபவர் குறைவு. நல்ல முறையில் பெற முன்வருபவரில்லை எனவும் கூறலாம். அகந்தையின் ரூபங்களில் இரண்டு அப்படி வெளிப்படும்.

  1. "நான் அப்படிப்பட்ட அதிகப்பிரசங்கியில்லை'';
  2. "எனக்கு அத்தகுதியுண்டெனில், அனைவரும் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும்''.

இவ்விரண்டு நோக்கங்களால், அகந்தை அகந்தையாகவே இருக்கப் பிரியப்படுகிறது. அவை அன்னையை விலக்கும் மார்க்கம்; ஏற்கும் மார்க்கமில்லை. 30 வருஷமாக வாராத மகசூல் வறட்சியான வருஷத்தில் வருகிறது என்பது மகசூலை நிர்ணயிப்பது மழையில்லை, நம்பிக்கை என அன்பர் அறியவேண்டும்.

  • பலன் அன்னைசெயல், சூலிழன் செயல்.
  • பலன் உலக நிபந்தனைக்குட்பட்டதன்று.
  • பலன் நிபந்தனைக்குட்படாதது என்பது வாழ்வு கர்மத்திற்குட்படாதது என்பதாகும்.
  • பலன் தருவது ஞானம், அன்னை ஞானம்.
  • அன்னை ஞானம் தருவது அதன் முழுமையான அன்னையின் திறன்.
  • அன்னையின் திறன் அன்னையைத் தரும் knowledge leads to power which is Mother.
  • தாயாருக்கு இந்தத் தெளிவு இருந்தாலும், அவர் பகுதியான அதிர்ஷ்டத்தை நாடுகிறார்.
  • அன்பருக்குரியது முழுமையான அன்னை; பகுதியான பலனோ, ஞானமோ, திறனோயில்லை.
  • கம்பனியும், power projectம் அதிர்ஷ்டமன்று; அன்னையை அடையும் வாழ்வின் பாதைகள். இது அன்பருக்குரிய அஸ்திவாரம்.
  • அஸ்திவாரத்தைக் காண்பது அன்னையைக் காண்பது.
  • அதே காரணத்தால் தான் ஆபத்தை அன்பர் வாய்ப்பாகக் காண வேண்டும்.

தாயார் தமக்கு ஆதாய மனப்பான்மையிருப்பது தடையென அறிவதில் ஒரு விசேஷம் உண்டு. ஆதாய மனப்பான்மை மட்டும் இருப்பது உண்மையானால் பெரியது எதுவும் பலித்திருக்காது. சிறியதும் பலித்திருக்காது. ஆதாய மனப்பான்மை அதிர்ஷ்டத்திற்குத் தடையென மனம் உணரும் வரை எதுவும் பலிக்காது. தாயாருக்குப் பெரிய அம்சம், ஆத்மாவின் அம்சமிருப்பதால்,

  • அவருக்கு அன்னை தெரியவந்தது; அந்த அம்சமில்லாதவருக்கு அன்னை காதில் விழாது.
  • அன்னை தெரியவந்து, அவர் ஏற்றதால் குடும்பம் 3ஆம் நிலையிலிருந்து 15ஆம் நிலைக்கு வந்தது ஆத்மாவின் அம்சம் இருப்பதால் தான்.
  • பெரிய அம்சமும் சிறிய மனநிலையும் கலந்துள்ளது.
  • தாயாருக்குத் தன் குறை மட்டும் தெரியும், நிறைவு தெரியவில்லை.
  • குறையை நிறைவாக்குவது எப்படி?
  • குறையை மனம் கவனித்தால் குறை வலுவடையும்.
  • குறையிருப்பதை ஏற்றால் குறை நிறைவடையும், போகவே போகாது.
  • குறையிருப்பதைக் கண்டு, அதைவிட்டு விலகி, நிறைவில் நிறைந்தால் குறை கரையும், மறையும். இது தாயார் அறியாதது.
  • குறையை ஏற்காதது, வலியுறுத்தாதது, குறையைச் சமர்ப்பணம் செய்வதாகும்.
  • குறையைச் சமர்ப்பணம் செய்வதில் எண்ணம், உணர்வு, உடலுணர்வு என்ற 3 நிலைகள் எல்லாச் சமர்ப்பணங்களுக்கும் உள்ளதுபோல், உள்ளன.
  • எண்ணம் சமர்ப்பணமாக எண்ணமற்றுப் போகவேண்டும்.
  • எண்ணம், எந்த ரூபத்திலிருந்தாலும் - எரிச்சல், விருப்பு, நினைப்பு - நாம் எண்ணத்திற்குச் சமமாக இருப்பதால் எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்ய முடியாது.
  • எண்ணத்தைவிட்டு விலகாமல் எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்ய முடியாது.
  • எண்ணத்தை விட்டு விலகினால், மனம் மௌனமாகும்.
  • மௌனம் மனத்தின் மௌனமாகவோ, ஆத்மாவின் மௌனமாகவோ இருக்கலாம்.
  • மௌனம் மனத்திற்குரியதானால் நல்லது; எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்யப் போதாது.
  • ஆத்மாவுக்குரிய மௌனம் எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்யும்.
  • அது நம்மை உள்மனத்திற்கு இட்டுச்செல்லும்.
  • வளரும் ஆன்மாவுக்குரிய மௌனம் - சைத்தியப்புருஷன் - அடிமனத்திற்கு அழைத்துச்செல்லும்.
  • எப்படி மனத்தின் மௌனத்தை, வளரும் ஆன்ம மௌனமாக்குவது?
  • மனத்தின் மௌனத்தில் censor எச்சரிக்கை மனம் பின்னணியில் இருக்கும்.
  • ஆத்மாவின் மௌனத்தில் எச்சரிக்கை மௌனம் அமைதியாகும்.
  • வளரும் ஆத்மாவின் மௌனத்தில் நன்றியறிதல், குதூகலம், பூரிப்பு எழும்.
  • கேள்வி: எப்படி மனத்தின் மௌனத்தை ஆத்மாவின் அல்லது வளரும் ஆத்மாவின் மௌனமாக்குவது?
  • நம்மை முக்கியமாகக் கருதினால் மனம் செயல்படும்.
  • அமைதியை முக்கியமாகக் கருதினால் ஆத்மா செயல்படும்.
  • இறைவனின் லீலையை முக்கியமாகக் கருதினால் சைத்தியப்புருஷன் செயல்படும்.
  • சுயநலம் இறைவனின் நலமான பரநலமானால் மனத்தின் மௌனம் வளரும் ஆன்மாவின் மௌனமாகும். அதுவே சமர்ப்பணத்திற்கு ஈடாகும்.
  • இதுவரை கூறியது தத்துவம்.
  • கணவர் கம்பனியில் பார்ட்னரானவுடன் பரபரப்புடன் செய்தியைக் கொண்டுவந்தார்.
  • இந்நிகழ்ச்சியில் மேற்சொன்ன சட்டங்களைத் தாயாரிலும், மற்றவரிலும் விவரிப்பது குடும்ப வாழ்வில் யோக அம்சங்களை விளக்குவதாகும்.
  • கணவர் பரபரப்பாகச் செய்தியைக் கொண்டு வரும்பொழுது தாயாருக்கு இருக்கக்கூடிய நிலைகள்,
    • தாமும் பரபரப்படைவது.
    • கணவர் பரபரப்பாக இருப்பதை எண்ணமாக அறிவது.
    • அந்த எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்ய தாயார் மனம் மௌனமாகி, மௌனம் நன்றியறிதலால் நிலைப்பது.
    • அது சமர்ப்பணம்.
    • அது சில நிமிஷமே நிலைக்கும், அதிகபட்சம் ½ மணி நிலைக்கும்.
    • கொஞ்ச நாழி பலிப்பதை நிலையாக்க நிதானமான முயற்சி தேவை.
    • அதற்கு அவசரப்பட்டால் வந்ததும் போகும்.
    • பரபரப்பைச் சமர்ப்பணம் செய்தது போல் மற்ற நிகழ்ச்சிகளையும் சமர்ப்பணம் செய்ய முயலவேண்டும்.
    • அதை நிதானமாகச் செய்வது ஆத்மாவின் முயற்சி; அவசரமாக செய்வது மனத்தின் முயற்சி.
    • நிதானமாக முயல்வதை, சமர்ப்பணம் செய்வது சைத்தியப்புருஷன் செயல்படுவது.
    • இது பலிப்பது அதிகபட்சம்.
    • அதிகபட்ச முயற்சியை நிதானமாக நீட்டிப்பது அதிகபட்சம்.

தாயார் அதை ஒரு நாள் செய்தவுடன் கணவரும், பிள்ளைகளும் அமைதியாக, அன்பாக முகமலர்ந்து அருகே வந்து அமர்ந்தனர். அனைவர் முகங்களும் புன்னகையால் நிரம்பியது. இது மற்றவருடைய receptivity ஏற்புத்திறனை மெதுவாக வளர்க்கும். தாயார் குடும்பத்திற்கு அதிகபட்சம் செய்யக்கூடியது அது. It is personal. Better make it impersonal. அது சுயநலமில்லாவிட்டாலும் பொதுநலமாகாது; குடும்ப நலமாகும். தாமோ, குடும்பமோ பெறுவதை உலகம் பெறவேண்டும் என நினைப்பது பரநலம், பொதுநலம். தம் குடும்பத்திற்காகச் செய்வதை அன்னைக்காகச் செய்வது பரநலத்தைக் கடந்த பிரபஞ்ச நலமாகும். இந்தக் கோணத்தில்,

  • இனி வரும் செயல்களை ஏற்பதும்,
  • இதுவரை நடந்தவற்றைச் சிந்தித்து, சமர்ப்பணம் செய்வதும் தாயாருக்குரியது.
  • தாயாருக்கு இந்தத் தெளிவில்லாததால் காரியம் பெரிய அளவில் நடந்தாலும், மனம் குழப்பமாக இருக்கிறது.
  • இத்தெளிவு மனத்தில் எழுந்தவுடன் பெரியவன் கம்பனியில் அன்னைமுறைகளை அமுல்படுத்த முனைகிறானென்று செய்தி வந்தது.
  • பார்ட்னர் டெய்வானில் பாங்க் consultancyயை ஏற்பதை மனம் வருமானமாகக் கருதலாம். உலகுக்கு அன்னைமுறைகளை அறிமுகப்படுத்துவதாகக் கருதலாம்.
  • இரண்டாம் மனநிலையைத் தாயாரும், பார்ட்னரும் ஏற்றால், அவற்றைக் குடும்பம் அழகாக ஆமோதித்தால், டெய்வான் வேலை வரும்.
  • தாயார் அதை இப்பொழுது அறிவார்.
  • செய்வாரா?
  • செய்தால் எப்படிச் செய்வார்?
  • அவர் குடும்பத்திற்கு வந்துள்ள வாய்ப்புகளில் இது மலை போன்றது.மனம் மலைபோல் அசையாமலிருக்குமா?
  • நன்றியறிதலால் பூரிக்குமா?
  • சமர்ப்பணம் தவிர உலகில் வேலையில்லை என ஏற்குமா?
  • ஏற்றால் சந்தோஷம் பொங்கிவருமா?
  • சந்தோஷமே சகலமும்என அறியுமா?
  • பிறர் சந்தோஷம் பிரம்மனின்ஆனந்தம் என உதிக்குமா?

இம்மனநிலையில் தாயார், பெரியவனை அடியாட்கள் தேடியதை, எப்படிப் புரிந்துகொள்வது; அதற்கு இப்பொழுது என்ன செய்வது என யோசனை செய்தார்.

  • இந்த யோசனைக்குரிய சமர்ப்பணம் எல்லாப் பதில்களையும், எல்லாப் பலன்களையும் தரவல்லது.
  • சமர்ப்பணம் பலிக்கும் நேரம் தாயார் சமர்ப்பணத்தைக் கடந்து யோசனையை நாடுவதில்லை. அதற்குரிய பலன் உடனே பெரியவனில் தெரிகிறது.
  • குடும்ப நிலை உயரும் பொழுது assertion தன் பெருமையை நிலை நாட்ட விரும்பும் எண்ணம் தன் மனதிலிருப்பது பெரியவனுக்குப் பேச்சு சூடாக வருவதாகத் தாயார் கண்டார்.
  • அந்த நோக்கம் அவனுக்கு ஆபத்தைக் கொண்டு வந்தது.
  • தவறு என செயலிலில்லாவிட்டாலும், மனம் தவற்றை நாடியபொழுது, வாழ்வு அதற்குரியதை அருகில் கொண்டுவந்தது.
  • தாயாருக்கு "குடும்பம் உயரவேண்டும்" என்பது தவறு என எடுத்துக்கொள்ள முடியவில்லை. உயர்வு உள்ளே ஜீவியத்தில் (consciousness) வந்து, அந்தஸ்தைப் பிறர் ஏற்க வேண்டுமே தவிர நாமே உயர்த்தக்கூடாது எனப் புரிய நாளாயிற்று.
  • புரிந்ததை ஏற்க அதிக நாளாயிற்று.
  • ஒரு நாள் மனம் அதை ஏற்றவுடன் கம்பனியிலிருந்து வந்த செய்தி பெரியவனின் பெருந்தன்மையைப் பாராட்டியது - அது இல்லாத பெருந்தன்மை.
  • அன்னை அதிக மகசூலை வறட்சியிலும், எழுதாத பரீட்சைக்கு II கிளாஸும், கொட்டகை வீட்டிற்கு கவர்னர் வருவதும், எளிய வாழ்வுக்கு எட்டாத புகழையும் தருவார் என்பதைத் தாயார் பெரியவனின் "பெருந்தன்மை"யில் கண்டார்.
  • சமர்ப்பணம் பதிலுடன் பலனையும் தந்தாலும், ஒரு நாளில் ½ மணி நேரம் அத்தனைக் காரியங்களையும் சமர்ப்பணம் செய்ய முடியவில்லை.
  • பெரியவனின் "பெருந்தன்மை" ஏற்கப்பட்டவுடன், பெரியவன் அதை உண்மையிலேயே பெறவேண்டும், அதற்குச் சமமாக தாம் எதைப் பெறவேண்டும் எனத் தாயார் யோசனை செய்தபொழுது "சமர்ப்பணமே சர்வமும்" என்பதைத் தாம் ஏற்கவேண்டும் எனப் புரிந்தது.
  • இனிப் புரிந்தது செயல்படவேண்டும்.
  • சிறியவனைக் கேலி செய்யாமலிருக்க முடியவில்லை என்பது பெரியவன் நிலைமையானால், தம் நிலை என்ன?
  • குடும்பம் முன்னுக்கு வரவேண்டும் என்பதை உள்ளே ஜீவியம் உயரவேண்டும் என மாறவேண்டும் என்பது தாயாருக்குத் தெளிவான பின்பும், மனம் முன்போலவே இருப்பது தெரிந்தது. அப்படி நினைக்கவே ஆசையாக இருக்கிறது.
  • Valueless ciphers அர்த்தமற்ற சூன்யங்கள் என அன்னை கூறியவர்கள் ஆத்மா, உயிர், உடமை, உழைப்பு ஆகியவற்றுள் ஒன்றைப் பூரணமாக அன்னைக்குக் கொடுத்தவர்கள். நமக்கு அர்த்தமற்ற சூன்யம் என்ற தகுதியும் கிடைக்கவில்லை.
  • அன்னைக்கு உண்மையான குழந்தைகள் true children of the Mother என்பதை நாம் ஏற்க இடைப்பட்ட நிலையில் அர்த்தமற்ற சூன்யமாக வேண்டும் என்பதில்லை என்று இப்பொழுது தாயாருக்குப் புரிகிறது. புரிவது, புரிவதுடன் நிற்கிறது. செயல்படுத்தினால் பலிக்கும் என மனம் நம்புகிறது. செயல் எழவில்லை.

அம்சமும், அலட்சியமும்

தாயாருக்கு அன்னைஅம்சமுண்டு. குடும்பம் அன்னையை அலட்சியப்படுத்துகிறது. இது உள்ளது. எத்தனை கோணங்களில் இருந்து இதை விமர்சிக்கலாம்?

  1. தாயார், அம்சமிருந்த பொழுதும் தமக்கு யோகமில்லை என நினைப்பதால் - அலட்சியப்படுத்துவதால் - குடும்பம் அன்னையை அலட்சியப்படுத்துகிறது.
  2. அன்னையை அறியும் பாக்கியம் பெற்றவர் தன்னையறிந்தால் அன்னை அவரை அதிகமாக அறிவார்.
  3. தாயார் தம்மை இதர மக்கள் போல அறிவதால், அன்னை எதிர்பார்ப்பது போல் அறியாததால், குடும்பம் இப்படியிருக்கிறது.
  4. அன்னை தருவதைப் பெறுபவர், அன்னையைப் பெற மறுக்கிறார்.
  5. நதி கடலில் சங்கமமாவது போல் அன்பர்கள் இருக்கிறார்கள். கடலில் சங்கமமாகுமுன் நதி ஆயிரக்கணக்கானவர்க்குப் பயன்படலாம். அன்பர்கள் சுயநலம் பயன்படாத நதிபோல் உள்ளது.
  6. புறநோக்கு அலட்சியம், உள்நோக்கு அம்சத்திற்குரிய அதிர்ஷ்டம்.
  7. அன்னையை தெய்வமாக வழிபட்டால், ரிஷி பெற்ற பலனைப் பெறலாம். காலத்துள் மலரும் கடந்த நிலைக்குரிய பிரம்மமாக அன்னையை அறிவது அணுவில் அனந்தன் வெளிப்படுவதாகும். தாயாருக்கு ரிஷியின் மனநிலை.
  8. ரிஷியை மக்கள் பின்பற்ற முடியாது. ஜனகன் - வளரும் ஆன்மாவின் மலர்ச்சி - வாழ்ந்த வாழ்வு உலகை உய்விக்கும். தாயாருக்கு ஜனகன் அம்சமுண்டு. அவர் ரிஷியாக வாழ நினைக்கிறார்.
  9. தாயாருக்கு ஊரும், உலகமும் அடங்கும். அவர் கம்பனி, குடும்பம்வரை அக்கறைகொண்டுள்ளது, மற்றதை அலட்சியப் படுத்துவதாகும்.
  10. தமக்குரிய அன்னைஅம்சத்தைத் தாயார் முழுமையாகப் பாராட்டாதது போல், குடும்பம் தமக்குரிய அதிர்ஷ்டத்தைப் பொருட்படுத்தவில்லை.

கங்கையோ, காவிரியோ உற்பத்தியாகும் இடத்தில் பார்ப்பவர் அவை இவ்வளவு பெரிய நதியாக வரும்என நினைக்க முடிவதில்லை. அம்சமுள்ளவர் தம் குடும்ப வாழ்வைக் கருதினால், அம்சம் வெளிப்பட்டபின் வாழ்வு எப்படி மலரும் என்பதை அறிய முடியாது. அதை அறிவது ஆத்மவிழிப்பு. தாயார் கணவரோ, பிள்ளைகளோ எவ்வளவு முன்னுக்கு வரலாம் என்று நினைக்கிறாரோ, அதுபோல் தாம் எந்த அளவுக்கு ஆத்மாவில் முன்னேறலாம் என அறிய முடியவில்லை.

  • அன்னையை அறிவது அதிர்ஷ்டம்;
  • அகத்திலுள்ள அன்னையை அறிவது அருள்

என்பதில் தாயார் முதற்கருத்தை அறிவார். அடுத்ததை அறியமாட்டார். பேரருள் அதற்கும் அடுத்தது. அதைப் பலவாறு கூறலாம்.

பேரருள் இக்குடும்பத்தில்,

  • குடும்பம் தாயாரை அறிந்து ஏற்பது.
  • தாயாருக்குத் தம் அன்னை அம்சம் தெரிந்து நிறைவேற்றுவது.
  • அகத்திலுள்ள அன்னை புறத்தின் செயலில் வெளிப்படுவது.

தாயாரிடம் அன்னையைப் பொருத்தவரை தாம் எதையும் ஆரம்பிப்பதில்லை. சர்வ ஆரம்பப் பரித்தியாகி என்ற இலட்சியம் அவர் வாழ்வுக்குப் பொருந்தும்.

  • ஆரம்பிப்பது அகந்தை.
  • அகந்தை, ஆண்டவன் உத்தரவு இன்றி வேலைகளை ஆரம்பிக்கின்றது.
  • நாம் செய்யும் எல்லா வேலைகளும் அப்படிப்பட்டவை.
  • சமர்ப்பணம் பலித்தபின் நாமாக - அகந்தை - எதையும் ஆரம்பிக்கக் கூடாது.
  • இது தாயார் கடைப்பிடிக்கும் கொள்கை.
  • பெருங்காரியங்கள் குடும்பத்தில் நடப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம்.
  • இதற்குரிய சந்தர்ப்பமும், காரணமும் இரண்டு.
    1. பெண் என்பதால் தாயார் கம்பனி விஷயங்கள், வெளி விஷயங்களில் செய்வதற்கு ஒன்றுமில்லை.
    2. ஆரம்பிக்கும் நிலையிலுள்ளவர் ஆரம்பிக்காதது பரித்தியாகம். ஆரம்பிக்க முடியாத நிலையிலுள்ளவர் ஆரம்பிக்காதது விசேஷமில்லை.
  • சந்தர்ப்பமிருந்தாலும், இல்லாவிட்டாலும், மனம் பதைத்து, அதைச் செய், இதைச் செய் என்பவர்போல் அவரில்லை என்பது உண்மை.
  • கம்பனி, பாக்டரி போன்றவற்றை இவர் ஆரம்பிக்க முடியாவிட்டாலும், வந்தபின் அவசரப்படாமலிருப்பது ஒரு discipline, கட்டுப்பாடு. இது ஒரு negative discipline தொந்தரவு செய்யாத குணம் என்றாலும் இதுவரை நடந்தவை இந்த உயர்ந்த குணங்கட்கே நடந்தன. அதுவும் தாயாருக்குச் சரிவரத் தெரியாது.
  • நாம் அருளுக்கு இடைஞ்சலாக இல்லாவிட்டால் பெரிய காரியங்கள் நடக்கும் என்பதற்கு power project, consultancy ஆகியவை நல்ல உதாரணம்.
  • இந்த விஷயம் தாயாருக்குத் தெரியாது என்பதால், எப்படி positive discipline இந்தச் சந்தர்ப்பத்தில் அன்னைக்கு உகந்தவராகத் தாயார் நடந்து கொண்டிருக்கமுடியும் என்ற சிந்தனை அவருக்கு எழவில்லை.
  • தாயார் பாஸிட்டிவாக இருந்திருந்தால் அவர் பார்ட்னரிடத்தில் இருந்திருப்பார்.
  • பார்ட்னருக்கு அன்னையைத் தெரியாது என்றாலும், அவர் positive personality பாஸிட்டிவ் பர்சனாலிட்டி என்பதால் அவருக்கு அவருடன் உள்ள - கணவர் - வருக்காக இப்பெருஞ்சந்தர்ப்பங்கள் எழுந்தன.
  • வந்தவை தாயாருக்காக வந்தவை. தாயார் பெண் என்பதாலும், அவர் கணவர் தொழிலுக்குரிய படிப்பில்லாதவர் என்பதாலும், அவருடனிருந்த பார்ட்னருக்கு, கணவருக்காக வாய்ப்புகள் வந்தன.
  • தாயாரும், குடும்பமும் தற்சமயம் மனத்தால் பாஸிட்டிவானால், பார்ட்னருக்கும் குடும்பத்திற்கும் உள்ள உறவு தலைகீழே மாறும்.

கேலி

சமூகத்தில் ஒன்று புதியதாய் நடந்தால் அதற்குரிய வரவேற்பு பாராமுகம், எதிர்ப்பு, கேலி எனப் படிப்படியாய் மாறும். புதிய மதங்கள், அரசியல் கட்சிகள் ஆரம்பத்தில் காண்பவை இவை. ஒருவன் புதிய பயிர் செய்தாலும், ஒரு பள்ளிக்கூடம் புதிய முறையைக் கைக்கொண்டாலும், ஒரு டாக்டர் வழக்கத்திற்கு மாறாக நடந்தாலும், எது புதியதானாலும், ஊர் முதலில் அப்படி ஒரு விஷயம் நடப்பதாகக் கண்டுகொள்ளாது. அப்பாராமுகத்தால் புதியவை அழிவதுண்டு. அழியாமல் அது வளர்ந்தால் எதிர்ப்பு எழும். எதிர்ப்பை மீறி அது ஜெயித்துவிட்டால் கேலிசெய்வார்கள். புதிய இயக்கங்கள் எதிர்ப்பையும் மீறி ஜெயித்த பின்னும் கேலியைப் பொறுக்க முடியாமல் திணறுவார்கள்.

எதிர்ப்பை ஜெயித்தவர் கேலிக்குப் பலியாவதுண்டு.

சர்ச்சில் போர்க்களத்திலிருக்கும் பொழுது அவரைச் சுற்றி அருகில் குண்டு பாயும். சர்ச்சில் கலங்கமாட்டார். அஞ்சா நெஞ்சம் கொண்டவர். "போர்க்களத்தில் தேவைப்படும் தைரியம் பார்லிமெண்ட்டில் எதிர்ப்பைச் சமாளிக்கப் போதாது'' என்கிறார் சர்ச்சில். எதிர்ப்பு உடல் மீது விழும் அடி. கேலி நெஞ்சைச் சுடும் புண். கேலியை ஒருவன் கைக்கொண்டால் அவன் குத்தலாகப் பேசுவான்.

  • நம் வாழ்வில் மறைந்து போன தவறுகள் அவனுக்குத் தவறாமல் நினைவு வரும்.
  • நம்மிடம் இல்லாத குறைகளைக் கூறி பலரையும் சிரிக்க வைப்பான்.

இருக்கும் குறையைச் சொல்லும் பொழுது அளவு கடந்த கோபம் வரும். அவன் மேலும் கிளறுவான். "உள்ளதைச் சொன்னால் பொறுக்கவில்லை'' என்பான். மனிதச் சுபாவம் இல்லாத குறையைச் சொன்னால் சிரிப்பதற்குப் பதிலாக, அதிகமாகப் புண்படும். கேலி, கிண்டல், குத்தல், குதர்க்கமாகப் பேசுபவர்கள், "நான் அப்படிச் சொன்னால், நீ என்ன செய்வாய்?'' எனக் கேட்பார்கள்.

திட்டுவதை, அடிப்பதைப் பொறுத்துக் கொள்ளலாம், கிண்டல் செய்வதைப் பொறுக்க முடியாது.

சமூகத்தில் கேலி எப்படி எழுந்தது? வசதியாய் வாழ்ந்தவன் தாழ்ந்தபின் அவனுடனிருந்தவர்கள் வசதி பெற்றதைத் தாங்கமுடியாமல், தடுக்க முடியாமல் பயன்படுத்தும் கருவி கேலி. Ridicule என்பது பொருத்தமான சொல். ஒருவன் பெற்ற வசதியைப் பெறமுடியாதவன் பொறாமையால் பயன்படுத்தும் ஆயுதம் ridicule.

கேலி தோல்வி பெற்ற ஏழையின் பண்பற்ற ஆயுதம்.

பெரியவனுக்கு அது உண்டு. இது தரித்திரத்தின் சின்னம். தகப்பனார் பண்பற்ற குடும்பத்தினர். அவர் குணம் அவனுக்கு வந்துள்ளது. அதன் சுவடுள்ள இடத்தில் அதிர்ஷ்டமோ, அருளோ நிற்காது. MLAஆகி, மந்திரியான பின் இவன் ஏற்கனவே ஜெயிலுக்குப் போனவன் என்ற செய்தி வெளிவந்தால் அவன் பதவியிலிருக்க முடியாததுபோல், கேலியுள்ள இடத்தில் அருள் அரை நிமிஷமிருக்காது. தாயாருக்குத் திருமணத்தில் uncultured man பண்பற்ற கணவன் அமைந்த இடத்தில் இதன் வேர் உள்ளது. அது திருவுருமாறாமல் பிரச்சினை தீராது. அதனால் தான் பெரியவனை அடியாட்கள் தேடுகிறார்கள். தாயாருக்கு "உள்ளே வேலையுள்ள இடம்'' இது - கேலி.

பலித்த சமர்ப்பணம்

முழுவதும் பலித்த சமர்ப்பணம் பூரணஅதிசயம். அதைப் பார்த்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள், அருளுக்குரியவர்கள். அது பிரம்மஜனனம், பூலோகச்சுவர்க்கம். அதில் குறை வாராது. குறை திருவுருமாறி நிறையாகும் மார்க்கம் அது.

  • குறை தானே திருவுருமாறும் இடம் சமர்ப்பணம் பூரணமாகப் பலிக்கும் நேரம்.
  • சமர்ப்பணம் பூரணமாகப் பலித்ததற்கு அடையாளம் குறை நிறையாவது.
  • மனிதன் முயன்று தானே தன் குறையையும், பிறர் குறையையும் திருவுருமாற்றும் மனப்பான்மை உலகம் துன்பத்தை இன்பமாக மாற்றும் பாதை.

இதற்குமுன் கட்டம் உண்டு.

  • அது சமர்ப்பணம் பெரும்பாலும் - பூரணமாக இல்லை - பலிக்கும் நேரம்.
  • Let Thy will be done, not my will.

அன்னையின் திருவுள்ளம் பலிக்கட்டும், என் எண்ணம் பலிக்கவேண்டாம் என்பதைத் தொடர்ந்து சொல்ல வாராது. சொன்னால், அதற்குரிய பாணியில் சொல்வது இயலாது. அதற்குரிய பாணி என்பது நம் எண்ணம் பின்வாங்கி, அன்னை விருப்பம் மேலோங்குவது. ஆழ்ந்த நம்பிக்கை நாளடைவில் பக்தியாவதுண்டு. ஆழ்ந்த பக்தி நம்பிக்கையாவதுண்டு. நம்பிக்கை மனத்திற்குரியது. பக்தி நெஞ்சத்திற்குரியது. பக்தியும், நம்பிக்கையும் இணைவது,

  • மனமும் உணர்வும் இழைவதாகும்.
  • மனம் உணர்வாகி, உணர்வு மனமானால் ஜீவன் உயரும்.
  • அதுவே அன்னைக்குரிய நேரம்.

Let thy will be done என்பதையும் not my will என்பதையும் சொல்ல முடிவது ஆத்மா இசைவது. அப்படிச் சொல்லும் பொழுது not my will என்பது நம் விருப்பத்தை ஒதுக்குவதையும் Let thy will be done என்பது அன்னையின் அருளை ஆதரிப்பதையும் காணலாம். இந்நிலைக்கு வந்த பக்தன், அருள் பெறும் நேரத்திற்குரியவன்.

  • அந்த அற்புதமான நேரத்தில் censor மனம் போதும் எனக் கூறும்.
  • வேறு வேலை செய்ய வேகம் வரும்.
  • எதற்கும் அளவில்லையா என மனம் கேட்கும்.
  • இந்த வக்ரங்கள் எழாமல் தொடர்ந்து சொல்ல மனம் விழைவது அன்னை நம்மை ஆட்கொண்டதற்கு, நம்மையும் மீறி ஆட்கொண்டதற்கு அடையாளம்.
  • அப்படிப்பட்ட உன்னத நேரத்தில் பழைய ஆசைகள் அதிகமாகப் பூர்த்தியாகும் சந்தர்ப்பங்களை அன்னை தருவது வினோதமான முரண்பாடாகத் தெரியும்.
  • அவ்வாசைகள் முடிவாக அழிய அவற்றை ஏற்பது சரி. அவற்றுள் திளைக்கும் மனப்பான்மை, மேலும் மேலும் அனுபவிக்கும் மனப்பான்மை, தருணத்தை இழக்கும் மனப்பான்மையாகும்.

சாவித்திரி தன் ஆத்மாவின் பகுதிகள், எமன் காட்டும் ஆசைகளைக் கடந்து வந்தபின் இறைவனே அவ்வாசைகளைப் - மோட்சம், சொர்க்கம் - பூர்த்தி செய்யச் சொல்கிறார்.

சாவித்திரி மறுத்து விடுகிறாள்.

அந்தக் கட்டம் எல்லோர் வாழ்விலும், எந்த நேரமும் எழும். இக்குடும்ப வாழ்வில் அப்படி எழும் நேரங்களில் அவர்கள் எப்பாதையைத் தேர்ந்தெடுத்து எப்படிச் சாதித்தனர், எப்படித் திணறினர் என்பது நாம் கவனிக்கக்கூடியது.

  • மனிதச் சுபாவம் மேலெழுந்தவாரியாக நேராகவும்,
  • ஆழத்தில் எதிராகவுமிருப்பதை இக்குடும்பத்தில் காண்கிறோம்.

கணவர் அடிக்கடி மனைவியிடம், "நீ சொல்வதைச் செய்கிறேன்'' என்பது சரியாக இருப்பது, "நானாக இருந்தால் அவனை அறைவேன்'' என்பது ஆழத்தில் எதிராக நடப்பது. மனத்தை இரண்டிற்கும் நடுவே நிறுத்தினால் அது படும்பாடு தெரியும்.

  • பாடுபட்டுச் சரியானால் போதும்.
  • பாடுபடாமல் சரியாவது சரி.
  • சரியான பக்கம் மாற சந்தோஷப்படுவது அருளை ஏற்பது.

அண்ணன் கேலி செய்தபொழுது தம்பி முகம் வாடுகிறது. மாமா ஆக்ராவுக்கு அழைத்துப் போகிறேன் என்றவுடன், அதைத் தெரிந்து கொள்ளாமல் முகம் மலர்வது சிறியவன் அருளுக்குரியவன் என்று தெரிகிறது. டெய்வான் consultancyயைப் பற்றிப் பேசும் பொழுது, கணவர் பார்ட்னரிடம், "அப்படி வேலை வந்தால், நான் கம்பனியைப் பார்த்துக் கொள்கிறேன்'' என்றது சந்தோஷமாகச் சரியான முறையில் செயல்படுவதாகும். நகை வியாபாரியை வீட்டிற்கு நகையைக் கொண்டு வரச்சொல்வது பாடுபடாமல் தவறாக இருப்பதாகும். கம்பனி சென்னையில் இல்லாவிட்டால் வேண்டாம் என்பதும் அப்படிப்பட்ட குணமாகும்.

அம்மனநிலையை அவரவர் சோதனை செய்ய வேண்டும். தாயார் அந்த நேரம் தம் பங்கு உச்சக்கட்ட உயர்விருக்கிறதா எனச் சோதிக்க வேண்டும். கணவரோ, பிள்ளைகளோ அப்படிப் பேசும்பொழுது தாயார்,

  • எப்படியோ, தகராறில்லாதது சரி என நினைக்கலாம்.
  • தம் மனம் கணவருக்கு ஏற்றபடி நிலைமை அமைய விரும்பலாம்.
  • கணவர் மாறவேண்டும் என விரும்பலாம்.
  • கணவரைப் புறக்கணித்து, தம் மனம் சரியான பக்கம் சந்தோஷமாகப் போக முயல்வது சமர்ப்பணத்திற்குச் சமம்.
  • சமர்ப்பணம், சந்தோஷமாகச் சரியான பக்கம் போக அனுமதிக்கும்.
  • நடந்தவற்றைத் தாயார் இதுபோல் மாற்றுவதும்,
  • இப்பொழுது நடப்பதில் மனம் தானே சந்தோஷமாகச் சரியானபடி இருப்பதும்,
  • எதிர்காலத்தை நினைக்கும் பொழுது மனம் இப்பொழுது அப்படி இருப்பதும் தாயார் கடமை என்பது தாயாருக்கு முழுவதும் புரியவில்லை.

சிறியதும், பெரியதும்

  • பெரியது (infinite) சிறியதாக (finite) உள்ளது.
  • சிறியது பெரியதாக மலர்வது மனித வாழ்வு தெய்வீக வாழ்வாவது.
  • ஒருவர் வாழ்வில் அதிர்ஷ்டம் செயல்பட்டால், அருள் அவரை நாடி வந்தால் சிறியதும், பெரியதும் மோதும்பொழுது அவர் மனம் பெரியதைப் பாராட்டும்.
  • Power projectக்காக டெல்லி போகவேண்டுமென்றால், அந்த நேரம் எந்தச் சிறியதை நம் மனம் விடமுடியாதோ அது நேரடியாக எழுந்து மோதும். கோயம்புத்தூருக்குக் காரில் போகாவிட்டால், போக வேண்டாம் என மனம் கூறும். அது வரக்கூடாது. அப்படி வந்தால் வலியுறுத்தக்கூடாது. வயிற்று வலியுடைய குமாஸ்தாவின் நிலை தெரியாமல் ஆபீசில் 9 மணிக்குமேல் அரட்டை அடிக்கத் தோன்றும். வந்து பிறருக்கு உதவத் தோன்றும். உறவினர் துக்க விசேஷத்திற்கு அவசியம் போகவேண்டும் என மனம் வற்புறுத்தும்.
  • பெரிய மனப்பான்மை இருந்து சரியாகச் செயல்பட்டாலும், அடுத்த அடுத்த கட்டங்களில் "இனி லஞ்சம் கொடுக்காமல் காரியம் நடக்காது" என மனம் வற்புறுத்தும்.
  • நம் மனம் சிறியதை நாடக்கூடாது. சிறியதில் மனமிருந்தால், அதை மலரவிடாமல், அதனுள் உள்ள பெரியதை நாடி, அது மலரும் வகையில் செயல்பட வேண்டும்.
  • கவர்னர்பார்ட்டிக்கு மனம் புது டிரஸ்ஸை நாடக்கூடாது.
  • கணவர் அது சரியெனப் பேசக்கூடாது.
  • தாயார் பிள்ளையின் ஆசை தவறில்லை என நினைக்கக்கூடாது.
  • டிரஸ் சிறியது, கவர்னர்பார்ட்டி பெரியது.
  • மனம் டிரஸ்ஸை விட்டுப் பார்ட்டியை நாடவேண்டும்.
  • நாடுவதில் சந்தோஷப்படவேண்டும்.
  • Negativeவாகப் பேசக்கூடாது, நினைக்கக்கூடாது.
  • இலாபம் வரும்வரை காணிக்கை அவசியம் எனப் பேசிய மனம், இலாபம் வந்தவுடன் "எனக்கு அவ்வளவு பெரிய மனமில்லை" எனத் தனக்குத் தானே கூறிக்கொள்வது "நான் மெய்யை எனக்கு ஆதாயமான நேரம் வரை ஆதரிப்பேன்" என்பதாகும்.
  • மிகச் சிறியது - காரில் போவது, டிரஸ் - மிகப் பெரியதற்குச் சரியான சமயத்தில் நேர் எதிராக எழும்பொழுது மனம் க்ஷணம் கூட எதிராக இருக்கக்கூடாது.
  • அந்தப் போட்டியில் வெற்றி பெறுவது அதிர்ஷ்டம்.
  • அப்போட்டி வாராதது அருள்.
  • மனம் சந்தோஷமாகப் பெரியதை நாடுவது, சிறியதில் பெரியதைக் கண்டு பூரிப்பது பேரருள்.
  • தாயார் முதல் நிலையிலிருக்கிறார்.
  • அவர் யாத்திரை நீண்டது.

கணவர் "என்ன வந்தது, எப்பொழுது வந்தது, எனக்குத் தெரியாமல் வந்ததா, வந்து என்ன புண்ணியம்?, வந்தது பலிக்கவில்லையே, பலிக்காததினால் என்ன பயன்?, அருள் தானே செயல்படுவதாயிற்றே, ஏன் செயல்படவில்லை?, நான் வேண்டாம் எனச் சொல்கிறேனா?'' என்று ஆரம்பத்தில் பேசினார்.

  • இது தரித்திரத்தின் குரல்.
  • "நான் டிகிரி எடுத்துவிட்டேன். ஏன் எனக்கு வேலை கிடைக்கவில்லை?" என எவரும் கூறுவதில்லை. வேலை கிடைக்கப் படாதபாடு படுகின்றனர். கிடைத்தால் போற்றுகின்றனர். அதைக் காப்பாற்ற உயிரை விடுகின்றனர். அப்படிப்பட்ட வேலையை ஒருவர் தேடிவந்து கொடுத்தால், இந்த ஊரில் வேண்டாம், இந்த கம்பனியில் வேண்டாம் என்பதும், இப்பொழுது வேண்டாம் என்பதும் சரியாகாது. வேலை சிரமம், வேறுவேலை வேண்டும் என்பவரும் உண்டு. இவை எம்மனநிலைக்குரியவை? நாம் தேடிப்போக வேண்டியது நம்மை நாடி வருகிறது என்பது அருள். அருளுக்குத் தகுதியற்றவர் அருளுக்கு நிபந்தனை விதிப்பது, "என் தரித்திரத்திலிருந்து நான் விலகமாட்டேன்" என அறிவிப்பதாகும்.
  • தரித்திரம் என்ற தமிழ்ச்சொல் அர்த்தபுஷ்டியானது. அது ஏழ்மை, வறுமையாகாது. வசதியில்லாதது ஏழ்மை. வசதிக்குத் தகுதியில்லாதது தரித்திரம். எட்டு லக்ஷ்மிகள் இருப்பதைப்போல், தரித்திரத்திற்கும் பல ரூபங்களுண்டு,
    • இல்லாதது ஏழ்மை.
    • சுபாவத்திற்கு வறுமை வேண்டும், வசதி வேண்டாம் என்றால் அது சுடுமூஞ்சியாக இருக்கும்.
    • அது உச்சக்கட்டத்தில் சொற்களால் வெளிப்படும்.
      • புரியலையா என்பதை ஏறலையா என்பதும்,
      • சாப்பாடு பிடிக்கவில்லை என்பதை இறங்கவில்லை என்றும்,
      • நல்ல சொற்களுக்குப் பதிலாக மட்டமான சொற்களைப் பயன்படுத்தும்.
    • நண்பர்களாக இயல்பாக, தரித்திரமானவர்களைத் தேடும்.
    • ஒருவரைக் கண்டவுடன் அவர் குறைகளைக் கண்டுகொண்டு, நினைவு வைத்திருக்கும்.
    • பெருந்தன்மையைக் கயமையாகப் புரிந்துகொள்ளும்.
    • பண்பான மக்கள் பேச கூச்சப்படும் சொற்களை ஆரவாரமாக, ஆர்ப்பாட்டமாகப் பேசிக் கொண்டாடும்.
    • ஆதாயத்திற்கு மட்டும் மெய் பேசும்.
    • தான் சொல்வதைப் பிறர் ஏற்கவேண்டும், எவர் சொல்வதையும் தான் ஏற்கமாட்டேன் எனக் கூறும்.
    • ரோஷம் அதிகமாக இருக்கும்.
    • சாமர்த்தியமாக இருக்க முயலும்.
    • தோற்றத்தைப் போற்றும், நம்பும்; பிறர் நம்பமாட்டார் என அறியாது.
    • எள்ளளவு திறமையில்லாதபொழுதும் ஏராளமான கிராக்கி செய்யும். கிராக்கி செய்யப் பெருமைப்படும்.
    • அதிர்ஷ்டம் வரப்போகிறது என்றால் முன்கூட்டி எதிரானவற்றை எல்லாம் செய்யும்.
    • பொய்க் காரணம் காட்டி, அதிர்ஷ்டத்தைத் தவறு எனவும், மட்டம்எனவும், தரித்திரம் எனவும் பேசும்.
    • தரித்திரம் என்ற சொல் இத்தனைக் கருத்துகளையும் கொண்டது, அர்த்தபுஷ்டியானது; அதிர்ஷ்டம் என்ற சொல்லுக்கு நேர் எதிரானது.

கணவர் தரித்திரமானவர்; தாயார் அதிர்ஷ்டமானவர். உச்சக்கட்டத்தில் தரித்திரம் பிறருக்கு அவமானம், ஆபத்து, கெட்ட பெயர், நஷ்டம் தரும். உயிருக்கு ஆபத்தானது தரித்திரம்.

எவருக்கும் அசிங்கம் கொண்டு வரும் தரித்திரம் தான் அசிங்கத்தைத் தடுப்பேன் எனப் பேசும்.

கணவர் சரணாகதியை ஏற்றுத் திருவுருமாறினால் அதிர்ஷ்டமானவர் ஆவார். திருமணச் சட்டப்படி எதிரானவர் மணப்பர். அதனால் ஆரம்பத்தில் தாயார், கணவருக்காகத் தாம் திருவுருமாற முயன்றால், கணவர் பிறகு திருவுருமாறும் சந்தர்ப்பம் எழும்.

கயமைக்கு 30, 40 குணங்களுண்டு. அத்தனையும் தரித்திரத்திற்குண்டு. கணவருக்கு அத்தனை தரித்திரமான குணங்களும் உண்டு.

  • கணவரைத் தம் சாதனையாக எடுத்துக்கொள்வது தாயார் கடமை.
  • கணவர் குணத்திற்காக வருத்தப்பட்டால் அவர் குணம் வளரும்.
  • அதிலிருந்து ஒதுங்கினால் கணவர் குணம் தொந்தரவு தாராது; ஆனால் மாறாது.
  • கணவர் குணம் தம் குணத்தின் பிரதிபலிப்பு என ஏற்றால் கணவர் திருவுருமாறலாம்.
  • கணவர் கயமையான குணத்தை ஆர்வமாக வெளிப்படுத்துவது அவருக்குச் சரி என ஏற்பது தாயாருக்குச் சரணாகதி மனப்பான்மையாகும்.
  • கணவர் மனைவியைத் தரித்திரம் என்றும் ஒரு சமயம் பேசுவார். அப்படிப் பேசும்பொழுது தான் - தரித்திரம் - கணவர் என்ற உரிமையைக் கொண்டாடுகிறார் எனக் கொள்ளவேண்டும்.
  • தாயார் எதையும் செய்யலாம், வருத்தப்பட அவருக்கு உரிமை இல்லை.
  • கணவர் அருளைப் பற்றிப் பேசுபவற்றை தாம் அன்னையைப் பற்றி கருதுவதாகக் கொண்டால், சரிவரும். உதாரணமாக,
    • ஏன் அன்னை பலிக்கவில்லை என தாம் கேட்கும்பொழுது ஏன் தான் அருளை ஏற்கவில்லை என கேட்க மறந்துவிட்டது தெரியும்.
    • எப்படி அருளைத் தான் தவறவிட்டேன் என்பதை தாம் அறியும்வரை கணவரிடமிருந்து இக்கேள்விகள் எழுந்ததும், அருளைப் பெற்றபின் அக்கேள்விகள் மறைந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.
    • கணவனை ஏற்பது என்றால் கயமையை உளமார ஏற்பதாகும். கயமையும் பகுதி, அதிர்ஷ்டமும் பகுதி. இரண்டும் சேர்ந்த முழுமை அருள்.
    • பகுதியான தம் அதிர்ஷ்டம் முழுமையான அருளாக, கணவரின் அடுத்த பகுதியான கயமையை ஏற்கவேண்டும் என்பது திருவுருமாற்றத் தத்துவம்.
    • அதிர்ஷ்டம் கயமையைத் தனக்குரிய அடுத்த பகுதியாக complement ஏற்பதும், அகங்காரமாகவோ, அடக்கமாகவோ ஏற்கலாம்.
    • பலன் அடக்கத்திற்குத்தானுண்டு. அகங்காரத்திற்கு எதிரான பலன் கிடைக்கும்.
  • இதன் அடிப்படைத் தத்துவம் எறும்புப் புற்றும், சூரிய மண்டலமும் ஒன்று என்பது. மௌனமும், சலனமும் ஒன்று என்பது.

கயமையும், அதிர்ஷ்டமும் ஒன்று

என்ற பிரம்மஞானம் அடிப்படை. கயமை மட்டம், அதிர்ஷ்டம் உயர்ந்தது என்பது அகந்தைஞானம்.

  • மனைவி என்றும் கணவனுக்கு அடங்கியிருப்பது நல்லது. அதற்குப் பெரிய பலனிருக்காது. கணவர் கயமை என்ற அடுத்த பகுதியை என் அதிர்ஷ்டத்தைப் பூர்த்தி செய்யக் கொண்டு வந்தவர் என்ற அடக்கவுணர்வுக்குப் பெரும்பலன் உண்டு.
    • மனைவி என்ற அடக்கம் சமூகத்திற்குரியது.
    • கணவரும் தாமும் முரண்பாடான உடன்பாடு என்பது பிரம்மஞானத்திற்குரிய அடக்கம்.
  • தாயாருக்குத் தத்துவம் புரிந்தாலும், தம் வாழ்வில் தத்துவம் வெளிப்படும் ரூபம் புரியாது. இக்கருத்துகளைப் பொதுவாகப் புரிவதில் பொதுவான பலனும், குறிப்பாக ஒவ்வொரு செயலும் புரிவது குறிப்பான பலனும் தரும். 12 இலட்ச வியாபாரத்தின்பொழுது கொடுத்த 150 ரூபாய் காணிக்கை 5½ கோடி வியாபாரம் நடக்கும்பொழுது மாற்றாவிட்டாலும், செய்த சேவை பலன் தந்துவிட்டது. கருமித்தனம் தாராளமானால் வந்த 50 கோடி வாய்ப்பு தடையின்றிப் பலித்து, வளரும். சேவை பொதுவானது, காணிக்கை குறிப்பானது. பிறர் எடுத்துச் சொல்லி செய்வதில்லை இது. தானே உணர்ந்து பலன் பெறவேண்டியது.
  • குடும்பம் செய்து பலன் பெறுகிறதா என்பதை விட குடும்பம் என்ன செய்து, எப்பொழுது செய்து, எந்தப் பலன் பெறவேண்டும் எனத் தாயார் அறிவது பிரம்ம ஜனனத்திற்குரிய பிரம்மஞானம்.

முதற்பகுதி நிகழ்ச்சிகளெல்லாம் இப்படி இப்பகுதியில் விவரிக்கப்பட வேண்டியது, எந்த அளவு விவரமாக விளக்க முடியுமோ, அந்த அளவு எழுத முயல்கிறேன். படிப்பது பலன் தாராது; செய்வது பலன் தரும். படித்தால் புரியும்; புரிவது புரியும் பலன். பலன் பல நிலைகளிலுள்ளது.

  • பொருளாக (பணமாக) வரும் பலன் முதல் நிலைக்குரிய சிறிய பலன்.
  • ஏன் அப்பலன் வந்தது என்பது அறிவு; பலனைவிடப் பெரியது.
  • எந்தத் தத்துவம் இப்பலனாக வெளிப்படுகிறது என்பது அறிவைக்கடந்த ஞானம்.
  • இப்பலன் எப்படி மற்ற விஷயங்களில் வெளிப்படும் என்பது பூரணஞானம்.
  • பூரணஞானத்தின் சுபாவத்திற்குரிய ரூபம் பூரணயோகஞானம்.
  • முடிவானது யோகசித்தி.

தவறான செய்தியை நம்புபவர்

இந்தக் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய வாய்ப்புகள் வந்தன என்பதில் ஒரு பேருண்மையுண்டு. உள்ளத்தில் உண்மையிருந்தால் ஆண்டவன் நம்மை அதிர்ஷ்டமாகத் தேடி வருவான். பெரும்பாலும் நம் உள்ளத்தின் உண்மை நமக்குத் தெரியும். ஆனால் ஊரில் உலவும் செய்தி ஒன்றில் இருதரத்தார் எதிரெதிரான விவரங்களைக் கூறினால் புதிய மனிதர் எதை நம்புவது? அதில் ஆன்மீக உண்மையொன்றுண்டு.

எவர் எதை நம்புகிறாரோ, அவர் அதற்குரியவராவார்.

அன்பருக்கு அது ஒரு பிரச்சினையானால், சமர்ப்பணம் பிரச்சினையைத் தீர்க்கும். சமர்ப்பணத்தை நாடாதவர், உண்மையை நம்பினால் உண்மையானவராக இருப்பார். பொய்யை நம்புபவர் பொய்யான உள்ளம் உடையவராக இருப்பார். விலக்கில்லாத விதிகளில் இதுவும் ஒன்று. தாயாரால் பொய்யான செய்தியை நம்ப முடியாது என்பதால் இப்பெருங்காரியங்கள் அவர் வாழ்வில் நடந்தன. சுமார் இலட்சத்திற்கு மேற்பட்ட கடிதங்கள் எனக்கு வந்துள்ளன. படித்து, நல்ல பெரிய தொழில் உள்ளவர் ஒருவர் என் கட்டுரைகளைப் படித்துவிட்டு கடிதம் எழுதினார். கடிதம் விவரமானது. கட்டுரையின் நுணுக்கம், சூட்சுமத்தை அறிந்து, பாராட்டி எழுதியிருந்தார். இதுவரை நான் பெற்ற கடிதங்களில் ஆன்மவிழிப்பு, அர்த்தபுஷ்டி, இனிய மனநிலை, அனுபவச் சிறப்பு, நல்லெண்ணம் ஆகியவற்றுள் சிறந்து விளங்கிய கடிதம் அவருடையது. அவர் அதிலிருந்து தினமும் எனக்குக் கடிதம் எழுதுவார்.-மெயில் மூலம் வருவதால் அன்றே பதில் எழுதுவேன். Luck புத்தகம் படித்துவிட்டு, கீழே வைக்க முடியவில்லை என எழுதியிருந்தார். சுமார் 10 கட்டுரைகளை அவருக்கு ஈ-மெயில் மூலம் அனுப்பினேன்; பதிலில்லை. அதன்பிறகு நெடுநாட்களாக பதிலேயில்லை; தொடர்பு அறுபட்டது. வேறு சந்தர்ப்பங்களால் கடிதம் எழுதவில்லை என்றால், செய்தியாவது வந்திருக்கும். காரணம் தெரியாததால், காரணத்தை நாமே கற்பிக்கக் கூடாது. விருப்பமான தொடர்பை வேண்டுமென்றே விலக்கியதான தோற்றம். செய்தி தெரியாததால் சிந்தனைக்கு வேலையில்லை. சில மாதங்கள் கழித்து, அவர் வந்திருக்கிறார். அவருடைய கடிதங்களைப் பெற்றுப் பதில் அனுப்புபவர் அன்று வீட்டிலில்லை. அவர் ஒருவரைத் தவிர வேறு எவருக்கும் இந்த அன்பரைப் பற்றித் தெரியாது. வந்தவர் இனிமையாகப் பேசியிருக்கிறார். கடுமையாகப் பதில் வந்திருக்கிறது. கடுமையாகப் பதில் சொல்லியவர் தாம் கடுமையாகப் பேசுகிறோம் என்றும் அறியாதவர். அடுத்தவர் ஒருவரைச் சந்தித்திருக்கிறார். அவர் அன்பர் சொல்வது எதையும் நம்பவில்லை. வந்தவர் திரும்பப் போய்விட்டார். ஆரம்பத்தில் இவ்வன்பர் என்னைச் சந்திக்க விரும்பியபொழுது, "நான் அன்பர்களை இப்பொழுது சந்திப்பதில்லை. நீங்கள் சாதிக்கக்கூடியவர். சாதித்தால் நான் உங்களைச் சந்திக்கிறேன். வருமானம் 10 மடங்கு உயர்வது ஒரு சாதனை'' என்றெழுதியிருந்தேன்.

இனிய அன்பருக்கு (rude) கடுமையான வரவேற்பு தவறு. அவர் நம்பிக்கைக்குரியவரில்லை எனச் சந்தேகப்படுவது தவறு. மன்னிக்க முடியாத பழக்கம். இந்த வரவேற்பு நான் ஏற்கக்கூடியதில்லை; அனுமதிக்கக் கூடியதில்லை; பேச, பழகத் தெரியாதவர்கட்குப் பேசக் கற்றுக்கொடுக்க முடியாது. அன்பருக்கு அளித்த வரவேற்பு கண்டிக்கக் கூடியது. நான் இதுபோன்ற காரியங்களில் எவரையும் கண்டிப்பதில்லை என்பதுடன், கேட்பதுமில்லை. இதற்கு மேற்பட்ட ஆன்மீக உண்மை ஒன்றுண்டு. "நமக்குக் கிடைக்கும் வரவேற்பு நம் மனத்தைப் பொருத்தது; செயலைப் பொருத்ததன்று''. வரவேற்பு கடுமையானது என்றால் மனம் கடுமையாக இருப்பதாக அர்த்தம். சூட்சுமத்தில் மனத்தில் கடுமை எழுந்தால், நடைமுறையில் கடுமை எழும்.

இக்குடும்பத்தில் தாயாருக்குச் செய்திகள் வந்தால், எதையும் லேசாக நம்பமாட்டார். செய்தி வதந்தியாக இருக்கும், அக்கப்போராக இருக்கும், குபார், புகாராகவுமிருக்கும். தெளிவாகத் தெரியாமல் எதையும் தாயார் நம்பாததால், அவர் தவற்றை நம்பும் சந்தர்ப்பத்தை அறவே தவிர்த்தார். அதுவே அவருக்குப் பெரிய நல்லது நடக்கக் காரணமாயிற்று.

  • உண்மையான மனம் உண்மையை நம்பும்,
  • தவறான மனம் பொய்யை நம்பும்

என்ற விதி தாயார் கடைப்பிடிப்பது.

வதந்தி கம்பியில்லாத் தந்தி. எந்த அளவு வதந்தி பொய்யாக வளரும் என்பது அது எழுந்து, பிறகு உண்மை வந்தபிறகுதான் தெரியும். பத்திரிக்கைகள் செய்யும் பெரிய சேவை வதந்திக்குத் தடை செய்வது. 1965இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பத்திரிக்கைகள் வருவது நின்றபொழுது, நெய்வேலியில் 19 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; விழுப்புரத்தில் துப்பாக்கிக்கு 12 பேர் பலி என்று செய்தி வந்தது. பத்திரிக்கைகள் மீண்டும் வந்தபொழுது அவை வதந்தி எனவும், நெய்வேலி, விழுப்புரத்தில் எதிர்ப்புப் போராட்டமே நடக்கவில்லை எனவும் தெரியவந்தது.

60 ஆண்டுகள் நிரம்பிய கல்விக்கூடத்தில் பொறுக்க முடியாத புகார். பேராசிரியர்கள் செய்தி கேட்டு, அதிர்ந்தனர். "இப்படி கொள்ளை நடப்பதை உடனே அம்பலப்படுத்த வேண்டும்; தடுக்க வேண்டும்'' என்று கூடி சங்கல்பம் செய்தனர். 100க்கு மேலான பேராசிரியர்களிடையே ஒரு மனதான அபிப்பிராயம், "500 கோடி ரூபாயை ஸ்தாபகர் கொள்ளை அடித்துவிட்டார்'' என்ற செய்தி ஸ்தாபனத்தைக் கலக்கியது. அதன் ஆரம்ப நாட்களில் வருஷ பட்ஜெட் 10 இலட்ச ரூபாய். பிரச்சினை எழுந்த வருஷம் 10 கோடி ரூபாய். 60 ஆண்டு பட்ஜெட்டைக் கூட்டிப்பார்த்த பொழுது, 60 ஆண்டு மொத்த செலாவணி 50 கோடி ரூபாய். 500 கோடி கொள்ளை போனதாக அதிகம் படித்தவர் பேசுவது வதந்தியின் தன்மை. அதுவே வதந்தியின் உண்மை.

  • வதந்தியை நம்புபவர் வதந்தியின் மனநிலைக்குரியவர்.
  • "நான் தெரியாமல் நம்பினேன்" என்றாலும், உள்மனம் அப்பொய்யை விரும்பி ஏற்கிறது எனப் பொருள்.
  • நல்லவர் மீது எழும் புகாரை நம்புவது rudeness சூட்சுமத்தில் கடுமையாகும்.
  • life response சட்டப்படி சூட்சுமத்தில் கடுமையுடையவர்க்கு நடைமுறையில் physical life கடுமையான வரவேற்பு கிடைக்கும்.
  • விலக்கில்லாத இவ்விதியை நொந்துகொள்வது பயன்தாராது.
  • நாம் சந்திக்கும் விஷயங்கள், நபர்கள், நம் ஆழ்மனத்தைப் பிரதிபலிப்பதை ஏற்கும் பொறுமை அவசியம்.
  • வதந்திக்கும் பயனுண்டு. அது செய்வதும் சேவை என்பது ஸ்ரீஅரவிந்தம்.
  • வதந்தி பொய்யின் மலைபோன்ற உருவம். ஒருவர் அதை நம்புகிறார் எனில், அவர் மனம் மலை போன்ற பொய்யின் மனிதப்பிறப்பு என்றாகும்.
  • அவ்வுண்மையை நாமறிய வதந்தி உதவுகிறது.
  • வதந்தி செய்யும் சேவையை சத்தியம் செய்ய முடியாது.
  • ஒருவர் மனத்தின் உண்மையை அறியும் அளவுகோல் வதந்தி.
  • வதந்திக்குப் பலியாகுபவர் அன்னைஅன்பராக முடியாது.

கம்பனி பார்ட்னர்ஷிப் வந்தது போய்விட்டது, திரும்பிவந்தது. இதனுள் ஏதாவது தத்துவம் உண்டா? தத்தளிக்கும் உயிர் தப்பித்துக்கொண்டபின், உடலை விட்டுப் போனால், திரும்ப வாராது; கிடைக்காத வேலை கிடைத்தது தவறினால், மீண்டும் எளிதில் பெறமுடியாது; பெறுவது அரிது. உடல் ஜடம்; அதனால், போனால் வாராது. வேலை vital உயிரைச் சேர்ந்தது; போனால் வரமுடியும், ஆனால் அரிது. வாய்ப்பு பெரியதானால், தவறியது மீண்டும் கிடைக்காது. சிறியதானால் ஒருவேளை கிடைக்கலாம். இக்குடும்பத்திற்கு வந்தது பெரிய வாய்ப்பு; தவறியது, மீண்டும் வந்தது.

  • வாய்ப்பு என்பது சூழல் கனத்து, செறிந்து, அந்த உபரியால் எழுவது.
  • ஒரு சமூகத்தில் வாய்ப்புகள் உள்ளன என்றால், சமூகம் வளர்கிறது என்று அர்த்தம்.
  • அன்பருடைய வாழ்வில் திரைமறைவில் ஆத்மா அசைந்து வளர ஆரம்பிப்பதால், அன்பருக்கு வாய்ப்புகள் எழுகின்றன.
  • The unorganised excess favouring the organised old structure is opportunity. புதியது பொங்கி எழுவதால், பழையது உபரியாகப் பெறுவது வாய்ப்பு.
  • புதியதற்குப் போகும் திசையில்லை என்பதால், வந்து தவறியது மீண்டும் வர வழியில்லை.
  • மீண்டும் வருகிறது எனில் அன்னை விழிப்புடன் செயல்படுகிறார் எனப் பொருள்.
  • உபரி அளவுகடந்திருந்தாலும், அன்னைக்கு நம் நினைவிலிருந்தாலும் தவறியது மீண்டும் வரும்.
  • அளவுகடந்து உபரி சக்தி இருக்க, நம் வாழ்வு மையத்தைவிட (vital or mental) உயர்ந்த நிலையில் (ஆத்மா, வளரும் ஆத்மா) சக்தி உற்பத்தியாக வேண்டும்.
  • அன்னைக்கு நம்நினைவு வர, நமக்கு அன்னை நினைவு மட்டுமிருக்கவேண்டும்.
  • தாயாருடைய நினைவால் முழுக்குடும்பமும் பலன் பெற வேண்டுமானால் சக்தி குறையும்.
  • குடும்பத்தினர் அன்னைக்கு எதிரான பழக்கங்கள் உடையவராக இருப்பதால், வந்ததற்கு எந்த நேரமும் ஆபத்து. அது நிலைப்பது எதனால் என்பது தாயாருக்குப் பொதுவாகப் புரியும்; விவரமாகப் புரியாது. மற்றவர்க்கு அந்நினைவில்லை.
  • மேலும் மேலும், பெரிய பெரிய வாய்ப்புகள் வருவதால், அவற்றைப் பெற்று அனுபவிக்கும் திறன் குடும்பத்திலில்லை.
  • வருவதே ஓரளவு பெறும் திறனையும் கொடுக்கும். அது மட்டுமே தற்சமயம் இருக்கின்றது; வேறெதுவுமில்லை.
  • முதலில் கம்பனி வந்ததிருந்து கடைசிவரை இக்கண்ணோட்டத்துடன் நடந்த நிகழ்ச்சிகளை ஆராய்ந்தால், வீட்டினர் மனநிலைகளைக் கருதினால் வருவதற்கும், தத்தளிப்பதற்கும், இப்பொழுது நிலைத்து இருப்பதற்கும் உள்ள காரணம் புரியும்.
  • முதலில் வந்ததைப் பாராட்டாததால் வந்தது போய்விட்டது.
  • போனபிறகு அதன் அருமை தெரிந்ததால் மீண்டும் வந்தது.
  • வந்தபின் அன்னையை ஏற்க வேண்டும் என வாயளவில் பேசியதால் வந்தது பெருகிற்று.
  • பெரியது வந்தவுடன் அதைத் தாங்கும் சக்தியில்லாததால் சிறுசிறு சிரமங்கள் வந்தன.
  • சிறு நிகழ்ச்சிகள் பெரிய ஆபத்தைக் கொண்டுவருவது அதற்குரிய அன்னைச் சூழலிருப்பதைக் காட்டுகிறது.
  • வந்த ஆபத்து விலகுவது, வீட்டார் அடிப்படையில் கெட்ட சுபாவமுள்ளவரில்லை எனக் காட்டுகிறது.

தொடரும்.....

*******

Comments

Para 18 கேலிதோல்வி   -   

Para 18
 
கேலிதோல்வி   -    கேலி தோல்வி
 
Para 20  -   பலித்த சமர்ப்பணம்
Please highlight all the points under this paragraph
 
Para 34 - தவறான செய்தியை நம்புபவர்
 
Para 38 -  Line 5      -  பலிஎன்று      -   பலி என்று
Para 39   - Please highlight all the points
   Point 12 - Please move the following lines to new paragraph
            கம்பனி பார்ட்னர்ஷிப் வந்தது போய்விட்டது
              :
              :
            தவறியது, மீண்டும் வந்தது.
    Point 16 -  opportunity..       -     opportunity.
    Point 20  -  Line 2   -   குடும்பத்தில்லை    -   குடும்பத்திலில்லை
 

For all the paragraph in this

For all the paragraph in this article, please do the following
 
Please align all the lines for each point and highlight them. Also indent all the sub points with hyphen and highlight them. Also remove extra blank lines.
 
Para 4 - Point No 8
Sub Point 23 - Line 7 - ஆண்டவனிடம்அளவில்லாச்      -     ஆண்டவனிடம் அளவில்லாச் 
Please move the following lines from Sub bullet 23 to a new paragraph
இதுவரை நடந்தவை, இப்பொழுது நடப்பவை
:
:
அகந்தையின் ரூபங்களில் இரண்டு அப்படி வெளிப்படும்.
 
Para 7
 
Please make a new paragrah for following lines
 தாயார் தமக்கு ஆதாய மனப்பான்மையிருப்பது
:
:
தாயாருக்குப் பெரிய அம்சம், ஆத்மாவின் அம்சமிருப்பதால்,
 
Para 8
 
Also remove extra blank lines.
Sub point 12 - Please combine lines starting with the following
எண்ணம், எந்த ரூபத்திலிருந்தாலும்
:

:

  இந்தக் கோணத்தில்,

- எரிச்சல், விருப்பு, நினைப்பு -

Sub point 30 & 31 - Remove extra blank line.
Sub point 32 - Please replace " with '-' for all the sub points and highlight them
   Sub point 5    -  ணீ மணி            -     1/2 மணி
   Sub point 12  -
       Line 4  -    receptivityஏற்புத்திறனை    -      receptivity ஏற்புத்திறனை
       Please make a new paragraph for the following lines
       தாயார் அதை ஒரு நாள் செய்தவுடன் கணவரும்
       :
       :
       
 
Para 9
 
Point 15 - Please move the following lines to new para
 
இம்மனநிலையில் தாயார்,
:
:
செய்வது என யோசனை செய்தார்.
 
Para 10
 
Point  3   -  Line 1     - ஹள்ள்ங்ழ்ற்ண்ர்ய்           -     assertion
Point  3   -  Line 2     - மனதிருப்பது                     -     மனதிலிருப்பது
Point  6   -  Line 3     - நாமேஉயர்த்தக்கூடாதுஎனப்         -    நாமே உயர்த்தக்கூடாது எனப்
Point  9   -  Line  1    -  ஒஒ                                   -    II
Point 13  -  Line  1    -  கேலிசெய்யாமலிருக்க    -   கேலி செய்யாமலிருக்க
Point 15  -  Line  1    -    ciphersஅர்த்தமற்றசூன்யங்கள்என       -  ciphers அர்த்தமற்றசூன்யங்கள்என 
Point 16  -  Line  1    -   Motherஎன்பதை                -     Mother என்பதை
 
Para 11  -   அம்சமும், அலட்சியமும்
 
Please indent the first line under this paragraph. Also align all the lines for each point and hightlight them.
 
Point  5    -   Line  1   -  கடல்                                  -    கடலில்
Point 10  - Please make a new paragraph for the following lines
கங்கையோ, காவிரியோ
:
:
ஆத்மாவில் முன்னேறலாம் என அறிய முடியவில்லை.
 
Para 12
 
Point 2  -  Please move the following lines to a new paragraph
 
என்பதில் தாயார் முதற்கருத்தை அறிவார்.
:
:
அதைப் பலவாறு கூறலாம்.
 
Para 14
 
Please indent the first line starting with
 
தாயாரிடம் அன்னையைப்
 
Point  7  -  Please indent sub points 1 & 2
Point  9  -  Line  2   -   க்ண்ள்ஸ்ரீண்ல்ப்ண்ய்ங்,          -    discipline
Point  9  -  Line  3   -   negative discipலிne                       -    negative discipline
Point 13 -  Line   1  -   personaலிty                                  -    personality
 
Para 15
 
Please indent the following line
சமூகத்தில் ஒன்று புதியதாய் நடந்தால்
 
Line   2    -   கேலிஎனப்                    -              கேலி எனப்
Line   7    -   கேலிசெய்வார்கள்       -              கேலி செய்வார்கள்
 
Please center the following line
எதிர்ப்பை ஜெயித்தவர் கேலிக்குப் பலியாவதுண்டு.
 
Para 16
Please indent the following line
சர்ச்சில் போர்க்களத்திலிருக்கும்பொழுது
 
Point  1    -  தவறாமல்நினைவு                  -   தவறாமல் நினைவு
Please make a new paragraph for the following lines
இருக்கும் குறையைச் சொல்லும்பொழுது
:
:
நான் அப்படிச் சொன்னால், நீ என்ன செய்வாய்?'' எனக் கேட்பார்கள்.
Please indent the following line
திட்டுவதை, அடிப்பதைப் பொறுத்துக் கொள்ளலாம்

02..எங்கள் குடும்ப வாழ்வில்

02..எங்கள் குடும்ப வாழ்வில் யோக தத்துவங்கள்

 
Article heading          -         02..          -            02.
 
Para 1       -     Line  7   -      organisationsஸ்தாபனங்கள்            -       organisations ஸ்தாபனங்கள்
Para  1      -     Line 11   -     பண்புகள்நாட்டுப்                            -       பண்புகள் நாட்டுப்
 
Para  3
Please align all the lines for each bullet point and highlight them.
Also remove the blank lines from bullet points 5,6, & 7
Please move following lines from bullet point 8 to new paragraph
 
அதிர்ஷ்டத்தை நாடும்பொழுது
:
:
இதுவரை விளக்கவில்லை.
 
Para 4
Please align all the lines for each bullet point and highlight them.
Please indent all the points under bullet point 6 by two spaces and change
starting quote (")  to hyphen (-)
Please remove extra blank line from bullet point 7.
Bullet point 7   -  Line 2  -  Silenceஅசைவற்ற         -      Silence அசைவற்ற
Please indent all the points under bullet point 8 by two spaces and change
starting quote (")  to hyphen (-)
Bullet point 8
   Sub bullet 22  -  வேலைக்காரி- களுக்கும்     -    வேலைக்காரிகளுக்கும்
   Please indent all the points under Sub bullet 23 by two spaces  and remove extra blank  
   lines 



book | by Dr. Radut