Skip to Content

05. பகவானுடைய இதர நூல்கள்’

"ஜப்பானியர் பண்பு"

‘Evening Talks' மாலைநேர உரையாடல்கள் என்ற நூல் பகவான் ஒரு சமயம் ஜப்பானியர்களைப் பற்றிப் பேசுகிறார். அவர் கூறுபவை.

  • ஜப்பானியர்கள் நாகரீகமானவர்கள்.
     
  • தங்கள் சொந்த வாழ்வைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்.
     
  • அளவு கடந்த சுயக்கட்டுப்பாடுள்ளவர்கள்.
     
  • கோபப்படுவதோ, சண்டையிடுவதோ அவர்கள் அறியாதன.
     
  • தங்கள் மானம் பாதிக்கப்பட்டால் கொலையும் செய்வார்கள். பிறரைக் கொலை செய்யமாட்டார்கள், தங்களையே கொன்று கொள்வார்கள்.
     
  • ஒரு ஜப்பானியர் ஆங்கிலேயர் வீட்டின் முன் தற்கொலை செய்து கொண்டால், அதன் பிறகு அவ்வாங்கிலேயர் அவ்வீட்டில் குடியிருக்கமுடியாது.
     
  • குற்றம் செய்பவனுக்கும் வினோதமான மான உணர்வுண்டு.
     
  • வீட்டிற்குத் திருடன் வந்து பணத்தை எடுத்தால் வீட்டுக்காரர் தம் செலவுக்குப் பணம் வேண்டுமென்றால் ஓரளவு பணத்தைத் திருடன் வைத்து விட்டுப் போவான்.
     
  • கடன் தர வேண்டுமெனத் திருடனிடம் சொன்னால் எல்லாப் பணத்தையும் வைத்துவிட்டுப்போவான்.
     
  • இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ என்ன நடக்கும் என நினைத்துப் பாருங்கள்.
     
  • எதிரியிடமும் பரிதாபம் கொள்ளும் குணம் ஜப்பானியரிடம் அதிகம்.
     
  • ஜப்பான் ரஷியாவைத் தோற்கடித்தபொழுது ஜப்பானிய அரசன் மிக்காடோ ஜார் மன்னனை நினைத்து கண்ணீர் விட்டார்.
     
  • பூகம்பம் வந்தபொழுது 50,000 பேர் நெருப்பில் மாட்டிக்கொண்டனர். எவரும் அபயக் குரல் எழுப்பவில்லை. அனைவரும் அமைதியாக புத்தர் மந்திரத்தை உச்சரித்தனர்.
     
  • ஒரு சாதகர் ‘அப்படிப்பட்ட கட்டுப்பாட்டுக்குட்பட்டவர் யோகத்தில் சிறப்பாக முன்னேறலாம்' என்றதற்கு ஸ்ரீ அரவிந்தர் ‘யோகத்திற்கு அது போதாது' என்றார்.
     
  • அப்படிப்பட்ட உயர்ந்த பண்புகள் இன்று மேல் நாட்டுத் தொடர்பால் பாழாகிறது என்று பகவான் கூறினார்.
     
  • இவ்வளவு உயர்ந்தவர்கள் இன்று வியாபார மனப்பான்மை பெற்றுவிட்டனர்.
     
  • நகஷீமா என்பவரின் தாயார் அமெரிக்காவிலிருந்து ஜப்பான் திரும்பியபொழுது ஜப்பான் மாறிவிட்டதைக் காணப் பொறுக்காமல் அமெரிக்கா திரும்பிவிட்டார்.

....

 



book | by Dr. Radut