Skip to Content

03.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

                                              லைப் டிவைன்

                                                                (சென்ற இதழின் தொடர்ச்சி....)             கர்மயோகி
 

 

 

XII. Delight of Existence : The Solution 12.

Page No.108,Para No.14

ஆனந்தம் - விளக்கம்

This elimination is possible.

வலியை விலக்கலாம்.

Pain and pleasure are currents of delight.

வலியும், சந்தோஷமும் ஆனந்தத்தின் அலைகள்.

It is a delight of existence.

அது சச்சிதானந்தம்.

Pain is a perverse current.

வலிகுதர்க்கமான உணர்வு.

Pleasure is imperfect.

சந்தோஷம் குறையான ஆனந்தம்.

But still they are currents of delight.

இரண்டும் ஆனந்தத்தின் வெளிப்பாடுகள்.

There is a reason for this imperfection and perversion.

இக்குறைக்கும், குதர்க்கத்திற்கும் காரணமுண்டு.

It is the self-division of being.

ஜீவன் கண்டமானதே காரணம்.

The division is in the consciousness of the being.

ஜீவனின் ஜீவியத்தில் இப்பிரிவினை உள்ளது.

It is done by Maya.

இது மாயையின் செயல்.

Maya measures and limits.

மாயை அளந்து வரையறுக்கிறது.

An egoistic reception is the consequence.

. இதன் விளைவாக அகந்தை ஏற்படுகிறது.

It is a piecemeal reception.

இது கண்டமான வாழ்வு.

It is a reception by the individual.

இது மனித வாழ்வு.

It should be a universal reception.

இது பிரபஞ்ச வாழ்வாக வேண்டும்.

There is a sap of things.

பொருள்களுக்கு ரஸமுண்டு.

It is the essence.

அது சாரம்.

It is called by the Sanskrit term rasa.

சமஸ்கிருதம் அதை ரஸம் என்கிறது.

It is the taste of things too.

அது பொருள்களின் ருசி.

All things carry this rasa in them.

எல்லாப் பொருள்களுக்கும் இந்த ரஸம் உண்டு.

All contacts reveal the rasa.

எல்லா ஸ்பர்சங்களும் இந்த ரஸத்தை வெளிப்படுத்துகின்றன.

The universal soul knows this.

பிரபஞ்ச ஆத்மா இதையறியும்.

We are incapable of seizing the essence.

நம்மால் சாரத்தைக் கைப்பற்ற முடியவில்லை.

We do not seek this essence, Rasa.

ரஸா என்ற சாரத்தை நாம் தேடுவதில்லை.

Rasa is the essence of the thing in its contact.

ஸ்பர்சத்தின் சாரம் ரஸம்.

We see how our desires are affected.

நம் ஆசைகள் எப்படி பாதிக்கப்படுகின்றன என நாம் காண்கிறோம்.

We know how our fears are touched.

நம் பயம் என்னாகிறது என நாம் அறிவோம்.

We know our cravings, shrinkings, grief and pain.

நம் ஆசை, வேகம், சுருக்கம், வருத்தம், வலி, ஆகியவற்றை நாம் அறிவோம்.

We know how they suffer.

அவை எப்படி வதைகின்றன என நாம் அறிவோம்.

Our pleasure is imperfect and transient.

நம் சந்தோஷம் குறையானது, தற்காலிகமானது.

We have a blank inability to seize the essence.

சாரத்தைப் பற்ற நமக்குத் திறமையில்லை.

We can be entirely detached in our mind.

மனத்தால் நாம் முழுவதும் விலகியிருக்க முடியும்.

In our hearts too we can be detached.

உள்ளத்தாலும் நாம் பற்றற்றிருக்க முடியும்.

We could be disinterested in the mind.

மனமும் பற்றற்றிருக்கும்.

We can impose that detachment on the nervous being.

உணர்வின் பற்றற்ற தன்மையை நாம் அதிகப்படுத்த முடியும்.

It can eliminate the imperfect forms.

அது குறைகளை விலக்கும்.

Even perversity too can thus be eliminated.

குதர்க்கமும் அப்படி விலகும்.

There is the true essential taste of things.

உண்மையான சாரமான ருசியுண்டு.

It is the inalienable delight of things.

அது நீங்காத ஆனந்தம்.

It is found in all variations.

எல்லா மாற்றங்களிலும் அது உண்டு

Then, it will be within our reach.

அந்நிலையில் நமக்கு அது எட்டும்.

Art and poetry know of this reception.

கலையும், காவியமும் இதையறியும்.

It is a universal delight of aesthetic reception.

கலைநுகர்வை பிரபஞ்சம் அறிவது இது.

The sorrowful has this Rasa.

வருத்தத்திற்கு ரஸம் உண்டு.

We can enjoy it in the terrible.

பயங்கரத்திலும் இதைக் காணலாம்.

Even in the horrible and repellent it is there.

விகாரத்திலும், கொடூரத்திலும் இது உண்டு.

Detachment enables us to think of the essence.

விலகியிருந்தால் சாரத்தைப் பற்றிச் சிந்திக்க முடியும்.

Our disinterest makes us forget ourselves.

பற்றற்ற நிலை நம்மை மெய் மறக்கச் செய்யும்.

We forget our self-defence too.

நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் மறப்போம்.

Therefore we can enjoy the rasa.

அதனால் ரஸத்தை அனுபவிக்கலாம்.

The pure delight is supramental.

சுத்த ஆனந்தம் சத்தியஜீவியத்திற்குரியது.

It is supra aesthetic.

அது கலை நுகர்வைக் கடந்தது.

Aesthetic reception is not precise.

கலையுணர்வு விவரமானதில்லை.

It is not a precise image of the delight.

அது ஆனந்தத்தின் தெளிவான ரூபமில்லை.

Nor is it a reflection of the rasa.

அது ரஸத்தையும் பிரதிபலிக்காது.

The supramental would eliminate the sorrow.

சத்தியஜீவியம் கவலையைக் கரைக்கும்.

Sorrow, terror, horror, disgust will thus be eliminated.

வருத்தம், பயங்கரம், கொடுமை, அருவருப்பு விலகும்.

Their causes too will be eliminated by the supramental.

சத்தியஜீவியம் அதன் வேரையும் அறுக்கும்

Aesthetic reception admits the causes.

கலை ரசனை வேரை அறுக்கவல்லதன்று.

Aesthetic reception is partial.

கலையுணர்வு பகுதி.

It is imperfect.

அது குறையானது.

It represents one stage of the delight.

அது ஆனந்தத்தில் ஒரு நிலை.

It is a progressive stage of universal delight.

பிரபஞ்ச ஆனந்தத்தின் வளரும் கட்டங்களில் அதுவும் ஒன்று.

It is seen in the manifestation.

இதை சிருஷ்டியில் காணலாம்.

One part of our nature admits that detachment.

நம் சுபாவம் இப்பற்றற்ற நிலையை அடையவல்லது.

It is a detachment from the egoistic sensation.

இது அகந்தையினின்று விலகுவதாகும்.

We are divided beings.

நாம் கண்டம்.

We see chaos and discord.

குழப்பமும், சச்சரவும் நாம் காண்கிறோம்.

Detachment is a universal attitude.

பற்றற்ற நிலை பிரபஞ்சத்திற்குரியது.

Through it Soul sees harmony and beauty.

அதன்மூலம் ஆத்மா சுமுகத்தையும், அழகையும் காண்கிறது.

Full liberation needs liberation of all parts.

முழு விடுதலைக்கு எல்லாப் பகுதிகளும் விடுதலை பெறவேண்டும்.

It is universal aesthesis.

இது பிரபஞ்ச கலை நுகர்வு.

It is the universal standpoint of knowledge.

இது பிரபஞ்சத்தின் ஞானம்.

It is a universal detachment of things.

இது பிரபஞ்சத்தின் பற்றற்ற நிலை.

Yet it has sympathy with all.

இருந்தாலும் இதற்கு அனைவரிடமும் அனுதாபம் உண்டு.

Nervous and emotional being needs sympathy.

உணர்வும், இதயமும் அனுதாபத்தை நாடுகின்றன.

                                            Contd...

தொடரும்....

****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

திருவுருமாற்றம் நடைபெற மனதை மாற்றவேண்டும்; ஆசையை நாடக்கூடாது; ஆசையிலிருந்து செயல்பட மறுக்கவேண்டும்.

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பிறர் வாழ்வு மலர, தன்னை விட்டுக்கொடுப்பது அர்ப்பணம். தன் அதிகாரமும், செல்வாக்கும் அதிகப்படுவதை மனிதன் முன்னேற்றம் என இன்று கருதுகிறான். இறைவன் மனித வாழ்வில் மலர்ந்து வெளிப்படுதல் அவசியம் என மனிதன் உணரவேண்டுமானால், தன்னுடைய சொந்த அபிப்பிராயங்களை இரசிக்கும் பழக்கத்தைத் தான் விட்டுவிடவேண்டும் என அவன் அறியவேண்டும்.

பிறர் வாழ்வு மலர, தன்னை விட்டுக்கொடுப்பது அர்ப்பணம்.

 

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

தெரியவேண்டியது, தெரியாதது அறியாமை. "நாம் யார்'' என்று தெரிந்துகொள்ள விருப்பப்படாமல், "தான்'' - அது - யார் என்பதை மறக்கும் அளவுக்குப் போவது, பகவான் விளக்கப்படி "அறியாமை'' ஆகும்.

தெரியவேண்டியது தெரியாதது அறியாமை.

 

 

 

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

விஸ்வாசம் உயர்ந்த மனித இலட்சியம். கடந்த கால விஷயங்களுக்கு விஸ்வாசமாக இருப்பது, குறிப்பாக அவற்றின் தோற்றத்திற்கு விஸ்வாசமாக இருப்பது எதிர்கால முன்னேற்றத்திற்கு விலங்காகும். முடிவில் அதற்குத் துரோகமாகும்.

 

****


 


 


 


 


 


 


 

 

 book | by Dr. Radut