Skip to Content

08.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

                                                              (சென்ற இதழின் தொடர்ச்சி....)

அண்ணன்- ஒருவரால் அதைச் செய்யமுடியுமானால் இரண்டு காரியங்கள் பூர்த்தியாகும்.

. அந்நூல் வாழ்வுக்குரிய Life Divine எனப்படும்.

. மனிதன் உடனே செயல்படுவான்.

தம்பி - ஸ்ரீ அரவிந்தர் ஆன்மீகத்தை அறிவுக்குப் பொருந்துமாறு கூறினார். நாம் அறிவுக்குப் பொருந்திய ஆன்மீகத்தை வாழ்வில் பொருத்திக் கூறவேண்டும்.

அண்ணன்- தத்துவம் சுலபம்.

. சர்வம் பிரம்மம்.

. மனிதன் தோற்றத்தைப் பார்ப்பதால் பிரம்மம் தெரிவதில்லை, ரூபம் தெரிகிறது.

. சர்வ ஜீவராசிகளும், பொருள்களும் பிரம்மத்தை நோக்கிச் செல்கின்றன.

. சமூகம் பிரம்மம்.

. மனிதன் பிரம்மம்.

. மனிதன் சமூகத்தை மனிதகுலமாகவும், தன்னை உடலாகவும் காண்கிறான்.

. கையிலுள்ள பிரச்சினை பணம்.

. பிரம்மமான சமூகம் தன்னை முழுமையாகவே மனிதனுக்குத் தரும்.

. தன் பணத்தைச் சமூகம் பிரவாகமாகப் பெற்றுள்ளது.

. சமூகத்தால் மனிதனுக்குத் தன் எல்லாப் பணத்தையுமே தரமுடியும், பகுதியாகத் தரமுடியாது.

. எல்லாப் பணமும் - காற்றுபோல் - மனிதனுக்குப் பயன்படாது.

. இன்று மனிதன் பணம் முக்கியம் என நினைக்கிறான்.

. தனக்கும், சமூகத்திற்கும் உள்ள அனந்தமான ஆன்மீகத் தொடர்பை மனிதன் ஏற்படுத்தினால் ஏராளமாக அவன் பணம் பெறமுடியும்.

. பணத்தில் அனந்தத்தைக் கண்டவன் மனத்திலும் கண்டு, முடிவாக அனந்தனை அடையவேண்டும்.

. இன்று மனிதன் ஆன்மீகப் பூரணம் பெற பணம் ஒரு கருவி.

. பேராசையால் பணத்தை நாடுபவனுக்கு இங்கு வேலையில்லை.

. அவன் பேராசையே அவனைத் தடுக்கும்.

தம்பி - தத்துவம் எனக்குப் புரிகிறது. இதை அனைவருக்கும் எடுத்துச்சொல்லும்பொழுது எழும் கேள்விகட்கும் பதில் கூறவேண்டும். முதல் கேள்வி,

சமூகம் தன்னை முழுவதுமே கொடுக்கும்;

அதனிடம் பெரும் பணம் உண்டு;

அதனால் மனிதனுக்குத் தன் முழுப் பணத்தையுமே தரமுடியும்.

இதன் எல்லா அம்சங்களையும் விவரிக்கவேண்டும்.

அண்ணன் - இதன் அடிப்படைகள்,

. ரூ.100/- நோட்டை நமக்கு ஒருவர் கொடுப்பது சமூகத்திற்குப் பணத்தின் முழு சக்தியுண்டு என்பதை அறிவிக்கிறது. இல்லையேல் அதை நாம் பெற்றுக்கொள்ளமாட்டோம்.

. பிரம்மம் தன்னை முழுமையாகக் கொடுப்பதுபோல் சமூகம் தன்னை முழுமையாகக் கொடுக்கிறது.

. கொடுப்பது முழுமையானால், பெறுபவர் பகுதியாகப் பெறலாம்.

சூரியன் தன் ஒளியை வெள்ளமாகத் தரும்பொழுது நாம் அத்தனையும் பெறலாம். அல்லது வீட்டிற்குள் வந்தபின் ஒரு சிறிது பெறலாம். எந்த நேரமும் நாம் வீட்டைவிட்டு வெளியில் போய் முழுச் சூரிய ஒளியைப் பெறலாம் என்பது பிரம்மம், சமூகம், பள்ளி, மார்க்கட் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

ஆயிரம் ஆண்டுகட்குமுன் சமூகத்திற்குப் பணபலம் குறைவு. இன்று அது ஆயிரம் மடங்கு அதிகப்பட்டுள்ளது. அன்று சமூகத்திற்கு உண்டான பலம் physical power, உடலின் சக்தி, பிறரைக் கொலை செய்யும் சக்தி, சிரச்சேதம் செய்வது, அடி, தடி, சண்டையே முக்கியம். அந்தச் சண்டை போடும் சக்தி எல்லாம் இன்று பணபலமாகிவிட்டது. அன்று அடித்தார்கள், கொலை செய்தார்கள். இன்று அபராதம் போடுகிறார்கள். இந்தியாவில் ரிஸர்வ் பேங்க் 1935இல்தான் ஏற்பட்டது. நோட்டு பிரபலமானது அதற்குப் பிறகுதான். அதன்முன் வெள்ளி ரூபாய்தான் நாணயம். நோட்டு வருவதற்குமுன் பணப்புழக்கம் குறைவு. பணம் ஏராளமாகப் பெருகிவிட்டது.ஆகாயம் தன் காற்றை முழுமையாகவே தரும். கடல் குளிப்பவனுக்குத் தன்னை முழுமையாகவே தருகிறது என்பதுபோல் சமூகம் தன் சொத்துகளை - கல்வி, பணம், பாதுகாப்புப் போன்றவற்றை -தனிமனிதனுக்கு முழுமையாகவே தருகிறது. பெறுபவன் தன் தேவை பூர்த்தியாகும்வரை பெறுகிறான்.

நோட்டு ஏற்படுமுன் சர்க்கார் 1 நூறு ரூபாய் நோட்டை அடிக்க முடியாது, அடிப்பதில்லை, அடித்துக் கொடுத்தால் அதை யாரும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். சர்க்காருக்குப் பணபலம் ஏற்படும்வரை நோட்டு அடிக்கும் உரிமையில்லை. ஒரு நோட்டை நாம் பெற்றுக்கொள்கிறோம் என்றால், சர்க்காருக்கு நோட்டு அடிக்கும் திறன் வந்துவிட்டது, முழுப் பணபலம் வந்துவிட்டது எனப் பொருள்.

நெய்வேலியிலிருந்து நம் வீட்டிற்கு 600 யூனிட் கரண்ட் வருகிறது எனில் 600 யூனிட் மட்டும் உற்பத்தி செய்து அனுப்புவதாக அர்த்தமில்லை.அதைப்போல் ஆயிரமாயிரம் மடங்கு கரண்டு உற்பத்தியானால்தான் நமக்கு 600 யூனிட் வரும். நாம் 600 யூனிட் மட்டும் பெறவேண்டும் என்பதில்லை, 6000 யூனிட்டும் பெறலாம். சர்க்காரிடமிருந்து சமூகத்திடமிருந்து - நாம் எத்தனை கோடி வேண்டுமானாலும் பெறலாம் என்ற தத்துவம் பேசினால் எடுபடாது. "என்னால் சம்பளமாக 10,000ரூபாய்தான் பெறமுடிகிறது. நான் எப்படி ஒரு கோடி ரூபாய்க்கு சம்பளமாகப் பெற உழைக்க முடியும்'' என்று கேள்வி எழும். உத்தியோகம் செய்தால் சம்பளம் ரூ.10,000. 1 கோடியை சமூகத்திலிருந்து பெற வேலை செய்வதில்லை. அதை நாம் நம் value, பண்புகள்மூலம் பெற நாம் என்ன செய்யமுடியும் என்பதைக் கடைசி பக்கத்தில் எழுதுகிறேன். நாம் மனதால் goodwill,நல்லெண்ணம் உற்பத்தி செய்தால் அதற்குரிய தொகை நமக்கு வரும். 1 கோடி வேண்டுமானால் அந்த அளவுக்கு நல்லெண்ணம் மனதில் உற்பத்தியாக வேண்டும்.

Perception, sensation, conception என்ற சொற்களை பகவான் பயன்படுத்துகிறார்.அதைக்கொண்டு இதை விளக்கலாம். மேற்சொன்ன கருத்து தெளிவாக அறிவுக்குப் புரிவது conception, உணர்வுக்குப் புரிவது perception, கையில் ரூபாய் வருவது sensation .

நாம் ஒரு கம்ப்யூட்டர் வாங்கி அதில் கடிதம் டைப் செய்கிறோம். நாம் கற்றுக்கொண்டது அதுதான். ஆனால் கம்ப்யூட்டர் ஒரு லெட்டர் டைப் செய்ய உதவும் கம்ப்யூட்டராகவே செயல்படுகிறதே தவிர,டைப்ரைட்டர்போல செயல்படவில்லை. லெட்டர் மட்டும் நாம் டைப் செய்வதால், கம்ப்யூட்டருக்கு லெட்டர் மட்டும்தான் டைப் செய்யத் தெரியும் என்பதில்லை. கம்ப்யூட்டர் லெட்டர் டைப் செய்வதைப்போல் 100 மடங்கு, 1000 மடங்கு திறனுடையது. நம் திறமை குறைவாக இருப்பதால் கம்ப்யூட்டர் சிறிய பயன் தருகிறது. நாம் முழு கம்ப்யூட்டரைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் முழுப் பயன் பெறலாம்.

சமூகம் கம்ப்யூட்டர்போன்றது.

நாம் பெறும் வருமானம் லெட்டர் டைப் செய்வதுபோன்றது.

சமூகம் பொருள்கள், சேவை (goods&services) உற்பத்தி செய்தது. பணம் அவற்றைப் பிரதிபலித்தது என்றோம். அடுத்தாற்போல் சமூகம் values,பண்புகளை உற்பத்தி செய்ததைப் பணம் பிரதிபலித்தது.ஒரு மனிதன் பொருள்களை அளவோடு உற்பத்தி செய்ய முடியும், அளவோடு பயன்படுத்த முடியும். சேவையும் அப்படியே. ஆனால் values, பண்புகளை உற்பத்தி செய்யவோ, பயன்படுத்தவோ அளவு கிடையாது.

எந்த மனிதனால் இப்பண்புகளை அளவிறந்து உற்பத்தி செய்ய முடிகிறதோ, அவனால் சமூகத்திலிருந்து அளவுகடந்து பணம் பெறமுடியும்.

இன்று தொழிலதிபர்கள் கோடிக்கணக்காகச் சம்பாதிக்கிறார்கள் எனில் அவர்கள் goods பொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். 3 நடிகர்களை ஒரு விழாவுக்கு வர அழைத்தனர். காலை, மாலை, இரவு என ஒவ்வொருவரும் 5 நிமிஷம் மேடைக்கு வரவேண்டும். மூன்று பேரும் சேர்ந்து 25 இலட்சம் கேட்டனர். சேவை செய்பவர்கள் அதிக வருமானம் பெறுகிறார்கள். Values, பண்புகளை அளவில்லாமல் உற்பத்தி செய்பவர்கள் அளவில்லாமல் பயன் பெறுவர்.

இது நம் வாழ்வில் நடக்கவேண்டுமானால் சமூகம் எப்படிப் பணத்தை உற்பத்தி செய்கிறது என முதல் தத்துவரீதியாகப் புரிந்துகொள்ளவேண்டும். பிறகு அதை உணர்வால் புரிந்துகொள்ளவேண்டும். இரண்டு கட்டமும் தாண்டினால் பலிக்கும்.ஏற்கனவே சமூகம் தான் பெற்ற பணத்தை இனி தானே பெருக்கிக்கொள்ளும் திறன் பெற்றுள்ளது என்று கூறினோம். அதேபோல் மனிதன் தான் பெற்றுள்ள பணத்தை தானே பெருக்கிக்கொள்ளும் திறன் பெறுவான். சமூகத்தில் அனைவரும் பெறும்பொழுது அவனுக்கும் அத்திறன் வரும்.

ஒருவரிடம் 1 கோடி இருந்தாலும், இலட்சமிருந்தாலும், 1 ஆயிரமிருந்தாலும், அது தானே பெருகும் என்பது சட்டம். சமூகம் பெற்றபின் நாமும் பெறலாம். சமூகம் பெறுமுன் இத்திறமையை நாம் பெற, சமூகம் இத்திறனை எந்த உற்பத்தி ஸ்தானத்திலிருந்து பெறுகிறதோ அந்த உற்பத்தி ஸ்தானத்துடன் நாமும் தொடர்புகொள்ள முடியுமா எனக் காணவேண்டும். முடியுமானால், நாமும் அத்திறனை இன்றே பெறலாம். அந்த உற்பத்தி ஸ்தானம் goodwill, நல்லெண்ணம். அது ஆன்மாவின் 12 அம்சங்களில் ஒன்று. சமூகம் நல்லெண்ணத்தால் பணத்தைப் பெருக்குவதால், நல்லெண்ணத்தின் ஆதியுடன் தொடர்புகொண்டால், சமூகத்தில் இத்திறன் பரவி அனைவருக்கும் வரும்முன் நமக்கு அத்திறன் - பணத்தைப் பெருக்கும் திறன் - வரும்.

தொடரும்....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

அன்னையின் சக்தியை ஒரு நிலையில் எழுப்பினால், அதைப் பெறத் தயாரான நிலை, அதைப் பெற்றுக்கொள்கிறது.

எழுப்பிய சக்தியை ஏற்பது தயாரான நிலை.


 

 


 


 


 


 



book | by Dr. Radut