Skip to Content

12.ஆன்மாவின் பார்வை - அருட்பார்வை

ஆன்மாவின் பார்வை - அருட்பார்வை

துணி வாங்கப் போகும்பொழுது மளிகைக்கடை தேவையில்லை. நாம் குடும்பம் செய்யும்பொழுது சிறைச்சாலை தவறு. இன்று துணி வாங்கும் நமக்கு நாளை கடை சாமான் வேண்டும். இன்று வேண்டாத மளிகைக்கடை நாளை தேவைப்படும். நமக்குத் தவறாகத் தெரியும் சிறைச்சாலை அங்கு இல்லாவிட்டால், அங்கிருக்க வேண்டியவன் நம் வீட்டில் நுழைவான். நமக்கு சிறைச்சாலையும் தேவை. நமக்குக் குடும்பம் உயர்வு. சிறைச்சாலை தேவையென்றாலும் மட்டம்; தாழ்வு. மேலே வந்தவர்கள் எல்லாம் கீழே அனுபவப்பட்டு வந்தவர்களே. கீழே அனுபவப்படாமல் மேலே வந்தவனைக் கீழேயுள்ளவன் தொந்தரவு செய்வான். எனவே கீழும், மேலும் அவசியம். என்றாலும் மனம் மேலேயுள்ளது உயர்வு எனவும், கீழேயுள்ளது தாழ்வு எனவும் கூறும். பூலோகத்தைவிட சொர்க்கம் உயர்ந்தது. அதையும் கடந்து பூலோகச் சுவர்க்கம் உள்ளது.

  • பெரியது பகுதி; சிறியது பகுதி. பெரியதும், சிறியதும் சேர்ந்ததே முழுமை.
  • பெரியது மேலேயுள்ளது. மேலேயுள்ள பெரியது கீழேயுள்ள சிறியதில் வந்து மலர்வது மக்கள் ஆட்சி. மக்கள் மன்னர் ஆகும் நிலை.
  • பெரியவன் சிறியவனை நாடி, சிறியவனுள் பெரியவனைக் கண்டு, வெளிக்கொண்டுவர முயலும் காலம் இது. ஆத்மா வாழ்வில் இறங்கிவந்து, வாழ்வினுள் புதைந்துள்ள ஆத்மாவாக மலரச்செய்வது சத்தியம் ஜீவியம் பெறுவதாகும்.
  • சர்க்கார் எளிய மக்களிடையே கல்விமூலம் வந்து, ஏழைகளின் மனத்தில் உள்ள ஆத்மா கல்வியாக மலர்ந்து, அது பட்டம், படிப்பு, அந்தஸ்தாக மாறி, டி.வி., வீடு, காராக மலர்வது மக்கள் ஆட்சியில் எல்லோரும் இந்நாட்டு மன்னராகும் கட்டம்.
  • பிச்சைக்காரனில் பிரம்மம் தெரிவது பிரம்ம ஜனனமான பிரம்ம ஞானம்.
  • அந்தப் பிச்சைக்காரன் "நான்" என்று உணர்வது ஆத்மா தன்னை அறிவதாகும்.

*****


 

Comments

12.ஆன்மாவின் பார்வை -

12.ஆன்மாவின் பார்வை - அருட்பார்வை

 Point 3 - Line 3 -  ஆசர்க்கார் -  சர்க்கார்

 Please move the following lines to a new point

     சர்க்கார் எளிய மக்களிடையே கல்விமூலம் வந்து

      :

      :

    ஆட்சியில் எல்லோரும் இந்நாட்டு மன்னராகும் கட்டம்.



book | by Dr. Radut