Skip to Content

02.சாவித்ரி

சாவித்ரி

P.84 Armed with a latent splendour of miracle.

அற்புதத்தின் ஆச்சரியம் புதைந்துள்ள ஆயுதம்.

. ஞானதிருஷ்டியின் தீர்க்க தரிசனம்.

. ஆத்ம சக்தியின் மின்னலெனும் அதிர்ச்சி.

. முடியாதனவெல்லாம் முடியும் தருணம்.

. வாய்ப்பின் இயல்பான வளமெனும் கிளை.

. உயர்வின் இயல்பு தெரிவிக்கும் புதிய பார்வை.

. காலம் தந்த இடத்தில் கனத்த சூட்சும சூத்திரதாரி.

. புற உலகம் புனைந்துரைக்கும் புதிரான திரைப்படம்.

. ஜீவியத்தின் இழைகள் ஜீவனின் செயலாகும்.

. திரளும் சக்தியின் உருளும் உடலுருவம்.

. சூன்யமான வெளியில் அச்சிலகப்படாத திறன்.

. திடமான ரூபத்தின் தீர்க்கமான மந்திரம்.

. எண்ணும் எழுத்தும் மந்திரமான மகிமை.

. விலக்க முடியாத தொடர்பின் விவரமற்ற பிணைப்பு.

. புலப்படாத சட்டத்தின் புனைந்தெழும் சிக்கல்.

. தவறற்ற சட்டம் திரைமறைவான திட்டம்.

. விளக்க முடியாத சிருஷ்டியை அம்பென அடையும் சக்தி.

. உயிரற்ற உடல்களை உருவாக்கும் சிருஷ்டியின் தவறு.

. ஜீவனுள்ள அஞ்ஞானத்தின் ஞானக்கரு.

. சிருஷ்டியின் சட்டத்தினின்று விலகிய புதிரின் புத்துணர்ச்சி.

. அவள் லோகத்தை அவளே சுதந்திரமாக சிருஷ்டிக்கின்றாள்.

. பரந்து விரியும் பரப்பை நிர்ணயிக்கும் அவள் எண்ணம்.

. அகண்டம் கண்டமாகும் பாங்கு.

. அவள் போக்கு அவர்கட்கு உத்தரவு.

. பிரமாதமான அவள் பித்தலாட்டம் தோற்றும் போட்டி.

. ஒளிந்துள்ள சிருஷ்டிக்கர்த்தாவின் பிரபஞ்ச இரகஸ்யம்.

. கற்பனையின் விரைவான நடை.

. அடிச்சுவடுகள் அகமகிழும் மலர்மாரி.

. அறிவைக் கடந்த அமைப்பு; தந்திரயுக்தியை மிஞ்சும் யோசனை.

. கற்பனையின் எழுச்சியை விஞ்சும் வேகம்.

. எண்ணமும், சொல்லும் எடுத்துரைக்கும் புதுப்பாணிகள்.

. மனமெனும் மந்திரக்கோலால் கட்டாயப்படுத்தப்படும் கட்டமைப்பு.

. மனம் எனும் தெய்வ தூதன்.

. பிரகிருதியின் கோட்டையை அழிக்கும் மனத்தின் செயல்.

. புவியின் இரும்புச் சட்டம் புலனெழும் கருத்தால் தகர்க்கப்படும்.

. தூங்கி வழியும் பூமியின் பழக்கம் அளித்த அனுமதி.


 

****
 

ஜீவிய மணி

எதிரான முரண்பாடு

இனிமையான உடன்பாடாவது திருமணம்.


 



book | by Dr. Radut