Skip to Content

08.முன்னேற்றம் தரக்கூடிய சாதனை

முன்னேற்றம் தரக்கூடிய சாதனை

                                       (சென்ற இதழின் தொடர்ச்சி....)           N. அசோகன்

COURAGE - தைரியம்:

வாழ்க்கையில் சாதனை புரிவதற்கு மிகவும் முக்கியமான ஒரு பண்பு தைரியம். தைரியம் புருஷலட்சணம் என்று அதனால்தான் கூறுகிறோம். அரசியல் சாதனையாளர்களைப் பார்த்தோம் என்றால்,அவர்கள் சாதனையின் பின்னால் அவர்களுடைய தைரியம், துணிச்சல் துல்யமாகத் தெரியும்.

Hitlerஉடைய Nazi Germanyயின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் சரணடைந்தபொழுது Churchill மட்டும் தைரியமாக அவர்களை எதிர்த்து வெற்றி கொண்டார். பகவான் ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மீக சக்தி Churchillலின் தைரியத்தின் மூலமாகத்தான் செயல்பட முடிந்தது. காந்திஜியின் non-violence, civil disobedience அந்நியப் பொருள்களை உபயோகிக்காத தன்மை ஆகியவைகளே இந்தியாவிற்குச் சுதந்திரம் அளிக்கச் செய்தது. தைரியம் என்றால் என்ன? நம்முள்ளே எழுகின்ற ஓர் உணர்வு. எப்படிப்பட்ட உணர்வு? எல்லோரும், "இது முடியாது; தோல்விதான் கிட்டும்' என்று கூறும்போது, நம் மனதில், "நிச்சயமாகச் சாதிக்க முடியும்; வெற்றி நிச்சயம் கிட்டும்' என்ற உணர்வு பிறந்தால், அது தைரியம் எனப்படும்.

சில காரியங்கள் கைகூடுவது கடினமாகத் தோன்றுகின்றது.காரியத்தை முடிப்பதற்குப் பல தடங்கல்கள், இடஞ்சல்கள் ஏற்படுவதால்,மனம் தளர்வதால், நமக்கு அப்படித் தோன்றுகிறது. அப்படிப்பட்ட சமயத்தில், நமக்குத் தைரியம், வெற்றியை - நம் இலக்கை -அடைவதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். லீ ஐயக்கோக்கா அமெரிக்காவிலே மூன்று பெரிய கார் உற்பத்திக் கம்பெனிகளில் ஒன்றான Chrysler கம்பெனியின் நிர்வாகத்தை எடுத்து நடத்தி, அதை ஒரு லாபகரமான கம்பெனியாக மாற்றியது வரலாற்றில் இடம் பெற வேண்டிய ஒரு நிகழ்ச்சியாகும். அவர் அந்தக் கம்பெனியின் நிர்வாகத்தை 1980இல் எடுத்தபொழுது, அந்தக் கம்பெனி 1700 கோடி நஷ்டத்தில் இருந்தது. கம்பெனியில் வேலைகள் முறை கேடாகவும், ஒழுங்கின்றியும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. மேலும் government, bankதொழில்நுட்ப வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள், எல்லோரும் ஒருமனதாகத் தெரிவித்த கருத்து என்னவென்றால், "Chrysler கம்பெனியை மீட்க முடியாது''. ஐயக்கோக்கா அவர்கள் கூற்றின் உண்மையைக் கம்பெனிக்குச் சென்ற முதல் நாளே முழுமையாக உணர்ந்தார். இருப்பினும் மனம் தளரவில்லை. கடினமான உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் நான்கு ஆண்டுகளில் ரூபாய் 2400 கோடி சம்பாதித்து, நஷ்டத்தை சரி செய்து, அதற்கு மேல் 700 கோடி லாபம் ஈட்டிக்காட்டினார்.

Chrysler Companyஐ ஐயக்கோக்கா எடுத்தபொழுது எந்த மோசமான நிலையில் இருந்ததோ, அந்த நிலை தனிமனிதர் பலருக்கும் வாழ்வில் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறித் தங்களுடைய விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் அவர்கள் வெற்றிபெற்று உள்ளனர். ஸ்ரீ கர்மயோகி அவர்கள் கூறுகின்ற மாதம் ஒரு லட்ச ரூபாய் வருமானம், நாம் வேலை பார்க்கும் கம்பெனியைப் போன்ற வேறொரு கம்பெனிக்கு நாமே முதலாளியாவது, நாம் செய்கின்ற உத்தியோகம், வேலையில் (profession) முதன்மையான இடத்தை அடைவது, நாம் வாழ்கின்ற சமூகத்தில் ஒரு முக்கியமான அங்கத்தினராகக் கருதப்படுவது போன்றவை இன்று அன்னை அன்பர்களுக்கு ஓர் எட்டாக்கனியாக தோன்றலாம். அன்னை நம்முடன் இல்லைஎன்றால் அவர்கள் நினைப்பது ஓரளவுக்குச் சரி என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அன்னை அன்பர் என்ற இடத்திலே, அன்னை என்றும் நம்முடன் இருக்கும்பொழுது, அவருடைய சத்தியஜீவியசக்தி நம் வாழ்க்கையிலே அதிர்ஷ்டத்தை உண்டு பண்ணக் காத்திருக்கும்பொழுது மேற்கூறியவை எல்லாம் அன்னை அன்பர்களுக்கு நிச்சயம் நடக்கும் என்பது தான் உண்மை. நம்பிக்கையும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் உள்ள அன்பருக்கு வெற்றி நிச்சயம்.

ஆன்மீகத்தை எடுத்துக்கொண்டாலும் தங்கள் இலக்கை எட்ட விரும்பும் சாதகர்களுக்கும் தைரியம் மிகவும் அவசியமாகின்றது.Adventure, courting danger, risk taking are the qualities which Mother looks for in each devotee and through which Her force can act very fast with greater impact. நம்முடைய ஆன்மா இன்று மனதிற்கும், உணர்வுக்கும் கட்டுப்பட்டு மறைந்து செயல்படுகின்றது. அதாவது நாம் நம்முடைய surface personalityமூலம்தான் வாழ்வில் செயல்படுகிறோம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் தம்முடையThoughts and Aphorisms இல் நம்முடைய ஆன்மாவை உணர்வின் பிடியிலிருந்தும், எண்ணத்தின் பிடியிலிருந்தும் விடுவிக்க நமக்கு இரண்டு குணங்களை இறைவன் கொடுத்திருக்கிறான் என்கிறார். அவை அன்பு மற்றும் தைரியம் ஆகும். நம் மனதில் ஏற்படுகின்ற சஞ்சலங்கள், எண்ணங்கள், வாழ்வில் அன்னையை ஏற்றுக்கொண்டபிறகு விடவேண்டிய மூடநம்பிக்கைகள் (superstitions),மத சம்பந்தமான சடங்குகள் (religious rituals), சமூகத்துடன் ஒன்றிவாழ்வது (social conformity) ஆகிய வலுவான சக்திகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கத் தைரியம், துணிச்சல் அன்னை அன்பர்களுக்கு மிகவும் அவசியம். இந்தச் சடங்குகள் எவையும் எனக்குத் தேவையில்லைஎன்று முழுமையாக ஏற்றுக்கொண்ட அன்னை அன்பர்கள் மனம் நெகிழ்ந்து அன்னையை அழைத்தால் போதும்; அந்தச் சூழலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அன்னைசக்தி அவர்களுக்கு அந்த தைரியத்தையும், எதையும் எதிர்த்து சாதிக்கும் மனப்பக்குவத்தையும் கொடுப்பதை உணர்ந்திருப்பார்கள்.

முன்பே கூறியதுபோல அன்னை நமக்கு அளிக்க விரும்புகின்ற, கொடுப்பதற்குக் காத்துக்கொண்டிருக்கின்ற அதிர்ஷ்டத்தையும்,சுபிட்சத்தையும் நாம் பெறவேண்டும்என்றால் மூடப்பழக்கவழக்கங்கள்,வறட்டு சம்பிரதாயங்கள், சடங்குகள் போன்றவற்றைவிட்டு நாம் வெளிவர வேண்டும். அதற்குத் தைரியமும், துணிச்சலும் தேவை என்பதை அன்பர்கள் உணர வேண்டும்.

ஆசாரத்தைப் பற்றிப் பேசும்பொழுது ஸ்ரீ கர்மயோகி அவர்கள் "நூறு பேர்கள்'' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

ஆசாரம் விடமுடியாது என்பது ஆசாரம் புரியவில்லை என்றாகும்;

ஆசாரத்தின் சாரம் புரிந்தால், அதை விடமுடியும்;

ஆசாரத்தைப் புரியாமல் பின்பற்றினால், அதை விட மனம் வாராது;

ஆசாரத்தை விட முடியும் என்பவனே ஆசாரத்தின் வாழ்வுக்குரியவன்.

RESOURCEFULNESS - சமயோசிதத் திறமை:

எந்த ஒரு நாடுமே எல்லாவிதமான இயற்கை வளங்களையும், திறமைகளையும் ஆரம்பத்திலேயே பெற்றிருப்பதில்லை. ஏதோ ஒரு சில இயற்கை வளங்களைத்தான் அவர்கள் இயற்கையாகப் பெற்று இருக்கிறார்கள். நாட்டு முன்னேற்றத்திற்கு முக்கியமான சில இயற்கைச் செல்வங்களை அவர்கள் பெற்றிருப்பதில்லை. அப்படி என்றால் அத்தகைய நாடு முன்னேற முடியாதா? இயற்கைச் செல்வங்கள் (inherent resources) என்றால் என்ன? அதை எப்படிக் கண்டுபிடிப்பது? What turns a material into a resource is humanmind that finds a use value for it. . கடற்கரையில் மணற்பரப்பை நாம் காண்கிறோம். "Beach sand' இந்த மணல் எதற்கும் உபயோகமில்லாதது என்று பல நூறு வருடங்களுக்கு முன்பு கருதப்பட்டது. ஆனால் இன்றைய நிலைமை என்ன? அதிலிருந்து கண்ணாடிகள் (glasses) செய்யப்படுகின்றது; Titanium Di-oxideபோன்ற அத்தியாவசியமான பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

இன்று அந்த மணல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டு government controlக்குள் வந்துவிட்டது.சமீப காலமாக நாம் பத்திரிகையில் Jathroba, Jojoba ஆகிய தாவரங்களைப் பற்றிப் படிக்கின்றோம். தாவர விஞ்ஞானிகள் Jathrobaவிலிருந்து bio-dieselஉம், Jojobaவிலிருந்து ஒருவித lubricant oilஇலும் கண்டுபிடித்திருக்கின்றார்கள். இந்தத் தாவரங்களுக்கு அதிக நீர்ப்பசைத் தேவையில்லை, கவனம் தேவையில்லை, செலவும் குறைவு. இதனால் பல லட்சக்கணக்கான dry land, waste land நல்ல உபயோகத்திற்குப் பயன்படக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் உபரி வருமானத்திற்கு ஒரு வகை ஏற்பட்டுள்ளது. அப்படி என்றால் resourcefulness என்றால் என்ன?சுருக்கமாகச் சொன்னால், ஓர் இக்கட்டான சூழலிலிருந்து ஓர் உபயோகமான, நல்ல வழி பிறப்பதற்காகத் தோன்றுகின்ற ஓர் உபாயம் என்றும் கூறலாம். உதாரணமாக, நாம் நம் நாட்டுக் கதைகளில் படித்திருக்கின்றோம், பல படங்களில் பார்த்திருக்கின்றோம். ஒருவனைச் சிறையில் அடைத்துவிடுகிறார்கள். அங்கு தனக்குக் கிடைத்த ஒரு சிறு கம்பியை ஒரு கருவியாகப் பயன்படுத்தி சிறைக்குள் சுரங்கம் தோண்டி, அங்கிருந்து தப்பிப் போவதைப் பார்த்து இருக்கின்றோம். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது இதனால் தான். வாழ்வில் முன்னேற்றமடைய, சாதிக்க விரும்புகின்றவர்களுக்கு

இது மிகவும் அவசியமான ஒன்றாகும். சமயோசிதபுத்தி என்பது கெட்டிக்காரத்தனம் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் ஸ்ரீ கர்மயோகி அவர்கள் "கெட்டிக்காரன் என்பது திறமை + திருட்டுத் தனம் உடையவன்'' என்று கூறியிருக்கின்றார்கள். அதாவது தன்னுடையத் திறமையை நல்வழியில் பயன்படுத்தாமல் தவறானவற்றிற்கு அந்தத் திறமையை விரயம் ஆக்குகின்றவன்என்று பொருள்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்தையும், சாதனையையும் (accomplishment) கருதும்பொழுது resourcefulnessஎன்பது தன்னிடமுள்ள வளத்தை எப்படி முழுமையாக, விரயமில்லாமல் உற்பத்தியைப் பெருக்குவதற்கு உபயோகப்படுத்துகிறது என்பதைப் பொருத்தது. உதாரணமாக, Japan நாட்டை எடுத்துக்கொண்டால், இயற்கையிலேயே தாதுப்பொருட்கள் அதிகம் இல்லாத நாடு. இருந்தாலும் அறிவியல் துறையிலே, electronics துறையில் அந்நாடு மிகவும் உயர்ந்துள்ளது. தனக்குத் தேவையான மூலப்பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விரயத்தைத் தவிர்த்து, தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை உயர்த்தி சாதனை புரிந்து உள்ளது. Electronic fieldஇல் உலகிலேயே ஓர் உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. Japan தனக்கு மூலப்பொருட்கள் இல்லை, natural resources இல்லை என்று கூறி முடங்கிக்கிடந்திருந்தால், இந்த நிலையை எட்டியிருக்க முடியாது. They would have been an economically backward country had it not been for their resourcefulness.

Israelஐ எடுத்துக்கொள்ளுங்கள். ஆரம்பக் காலத்திலிருந்தே நீர் வளமில்லாத நாடு. இருப்பினும் அங்குள்ளவர்கள் drip irrigationஎன்ற முறையைக் கண்டுபிடித்து, அமுல்படுத்தி, விவசாயத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.Israel நாட்டுப் பூக்களுக்கும், பழங்களுக்கும் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இப்பொழுது இந்தியாவிலும் இந்த drip irrigationமுறைக்கு முக்கியத்துவம் வந்து கொண்டிருக்கிறது. Computer software என்ற இடத்தில் இந்தியர்கள் மிகவும் உயர்ந்து இருக்கின்றார்கள். Service Industry என்ற இடத்தில் இன்று இந்தியா முதலிடம் பெறக்கூடிய நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்தியாவைத் தங்களுடைய B.P.O (Business Processing Outsourcing) இடமாகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இதனால் இந்தியருடைய வருமானம் பல மடங்கு உயர்ந்துள்ளது. மாதம் ஒரு லட்சம் என்பது ஓர் எட்டாக்கனியாக இன்று இல்லை.

இந்த resourcefulnessஎன்பது ஒரு நாட்டிற்கு மட்டுமல்லாமல் சமூகத்திற்கும், குடும்பத்திற்கும், தனிமனிதனுடைய வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதது. தமிழ்நாட்டிலுள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை எடுத்துக்கொண்டால், விவசாயம் செய்வதற்குத் தேவையான நிலமோ, தொழில் செய்வதற்குத் தேவையான பணமோ அவர்களிடம் இல்லை. இருப்பினும், அவர்கள் கல்வியை முக்கியமாக,முதன்மையாக எடுத்துக்கொண்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் குழந்தைகளுக்கு அந்தக் கல்விச் செல்வத்தைக் கொடுத்தனர். அதன் காரணமாக, government serv ice, bank service, professional service like law, accountancy, computer software போன்ற துறைகளில் முதன்மை பெற்று, அந்தக் குடும்பங்கள் இன்று நல்ல நிலைமைக்கு வந்துள்ளன. வெளிநாடுகளுக்குச் சென்று அதிக வருமானம் பெற்றவர்களில் இந்தக் குடும்பங்களின் குழந்தைகள் நம் நாட்டிலே முன்னோடிகளாக இருக்கின்றனர்.

இன்று ஸ்ரீ கர்மயோகி அவர்கள் அன்னை அன்பர் ஒவ்வொருவரும் entrepreneur ஆகலாம். மாத வருமானம் குறைந்தபட்சம் ஒரு லட்சம் per family சம்பாதிக்கலாம் என்று கூறுவதன் உண்மையை நாம் உணர வேண்டும். அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்.

தொடரும்....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒரு காரியத்தைச் செய்ய மனம் உண்மையாக விழையுமானால், அதற்குரிய ஆன்மீக முயற்சி அதைப் பூர்த்தி செய்யும்.

ஆன்மா உண்மையான தேவையைப் பூர்த்தி செய்யும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

உடலுக்குத் தெளிவேற்பட்டால் எதையும் செய்ய முடியும். உனக்கு எந்த நிலையில் தெளிவிருக்கிறது (மனம், உணர்வு, உடல்) என்று கண்டுகொண்டால், அடுத்த நிலைக்குச் செல்ல முயலலாம்.

உடல் பெற்ற தெளிவே பலன் தரும்.book | by Dr. Radut