Skip to Content

07.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் மதர் ஸ்ரீ அன்னை!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்தியமயி பரமே!

இன்று (20.6.07) என் நண்பர் தம் வீட்டில் மனத்தாங்கல் வந்து, மிகவும் tensionஆக வந்துள்ளார். நான் ஏற்கனவே தாங்கள் எழுதிய புத்தகங்களைப் படிக்கச் சொல்லிக் கொடுத்து இருந்தேன். அவரும் தவறாமல் படித்து வருகிறார்.ஆனால் இன்று அவர் கம்பெனி வரும்முன் மிகவும் கோபமாக வந்தது எனக்குத் தெரியாது. ஆனால் நான் அதற்குமுன் தாங்கள் எழுதிய ஆயிரத்தில் ஒருவர் என்ற நூலில் இருந்து கோபம் என்னும் தலைப்பில் தாங்கள் எழுதிய கருத்துகளை அவர் வரும்முன் அவர் மேஜையில் வைத்துவிட்டேன். அவரும் அதை எதேச்சையாக படித்துவிட்டு, ஓர் அரை மணி நேரம் கழித்து என்னிடம், "நான் ஆத்திலிருந்து வருமுன் மிகவும் tensionஆக வந்தேன். ஆனால் நீ வைத்து இருந்த புக்கை படித்தவுடன் என் மனக்கவலை தீர்ந்தது.நான் நிறைய புத்தகங்களைப் படித்துள்ளேன். ஆனால் இன்று எனக்குக் கிடைத்த பதில் என் வாழ்நாளில் இதுபோன்று நிகழ்ந்தது இல்லை. நான் மனத்தாங்கலாக வந்ததும், அதுசமயம் இந்த புக்கை படித்ததும் பெரும்பாக்கியம்'' என சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுது அவர் கண்களிலிருந்து நான் பார்க்காத கங்கை வந்தது.எனக்கு ஒரு பக்கம் அன்னையைப் பற்றி ஆனந்தம். அதே சமயம்,"அவர் துன்பத்துக்கு நம்மால் ஏதேனும் செய்ய முடியுமா?' என நினைத்துக் கொண்டு இருந்தேன். ஸ்ரீ அன்னையிடம் சொல்லிவிட்டு,தங்களிடம் இருந்து வந்த Blessing Packetஐ அவரிடம் கொடுத்து,"இதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இனி எந்தப் பிரச்சினையும் வாராது'' என்று சொன்னேன்.மீண்டும் 1 மணி நேரம் கழித்து எனக்கு ஒரு துண்டு பேப்பரில் "நான் அன்னையை வணங்க வேண்டும். எப்படி வணங்க வேண்டும்?'' என்று கேட்டு எழுதியிருந்தார்.எனக்கு ஆச்சரியம் தாங்க முடியாமல், "ஸ்ரீ அன்னையைப் பற்றி சில வரிகள் படித்ததும் ஸ்ரீ அன்னை அவர்கள் அவரைத் தம் பக்கம் திருப்பியுள்ளார்' என்பதை நினைத்து என் கண்கள் குளமாகின,ஆனந்தத்தால். நான் சற்றும் யோசனை செய்யாமல் தங்களுக்கு அவரிடம் கடிதம் எழுதச் சொன்னேன். அவரும் ஒரு கடிதம் எழுதி என்னிடம் காண்பித்து, "இது சரியா?'' எனக் கேட்டார். அவர் தங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவரைத் தாங்கள் ஆசீர்வதித்துக் கடிதம் எழுத வேண்டுமாய் அன்புடன் பிரார்த்தனை செய்கிறேன். என் மூலமாக ஓர் அன்னை பக்தர் அன்னையிடம் வருவது எனக்கு அன்னையின் அருள்தான்! நான் செய்த பாக்கியம்!ஸ்ரீ பகவான், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அப்பா அவர்களுக்கு அனேக கோடி நன்றி கலந்த நமஸ்காரங்கள்!

***

ஸ்ரீ அரவிந்த சுடர்

சூட்சுமப் பார்வையில் பொன்னொளியைக் கண்டால் அது

சத்தியஜீவிய ஒளி உடலில் வெளிப்படுவதாகும்.

பொன்னொளியின் சூட்சுமம்

ஸ்ரீ அரவிந்த சுடர்

மோட்சத்தை நாடும் ஜீவன் முக்தனுக்கு ஸ்ரீ அரவிந்தம் பூலோகச் சுவர்க்கத்தைத் தருகிறது.

எதற்கும் அசையாத மனிதன் ஸ்ரீ அரவிந்தத்திற்கு அசைவான்.

காணாததைக் கண்ட மனிதன்.


 


 



book | by Dr. Radut