Skip to Content

05.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

 

XIII. The Divine Maya

Page No.116, Para No.10

13. தெய்வீக மாயை

There is a distinction between the lower and higher Maya.

மாயையில் இரு பகுதிகள் உள்ளன. அவை வேறுபட்டவை.

It is a link in thought

அதுவே எண்ணத்தை உயர்த்தும் ஏணி.

It is a cosmic Fact.

அது பிரபஞ்ச சத்தியம்.

The pessimist philosophy misses its existence.

நம்பிக்கையற்றவர் இதைக் காண மறுக்கிறார்கள்.

The illusionist philosophy neglects it.

மாயாவாதிகள் இதைப் புறக்கணிக்கிறார்கள்.

They mistake the Overmind to be the Mind.

தெய்வலோகத்தை அவர்கள் மனம்எனக் கொள்கின்றனர்.

They believe Mind created the world.

மனம் உலகை உற்பத்திசெய்ததாக நினைக்கிறார்கள்.

If the world had been created by mental Maya, it would be a paradox.

மனம் உலகை சிருஷ்டித்தது உண்மையானால், அது ஒரு புதிராகும்.

It would be inexplicable.

அதை விளக்கமுடியாது.

It would be a floating nightmare of conscious existence.

அது சத்தினுடைய வாழ்வை சிம்மசொப்பனமாக்கும்.

It cannot be called illusion or reality.

அது சத்தியமாகாது; மாயையுமாகாது.

The Mind is only an intermediate term.

மனம் இடைப்பட்ட கருவி.

Above is the creative governing knowledge.

மேலே சிருஷ்டிஞானம் உண்டு.

Below is the soul imprisoned in its works.

கீழே ஆத்மா வேலையுள் சிறைப்பட்டுள்ளது.

Sachchidananda is lost in self-oblivion.

சச்சிதானந்தம் தன்னுள் தன்னை இழந்துள்ளது.

He is involved in one of His lower movements.

சச்சிதானந்தம் மனித உலகில் சிறைப்பட்டுள்ளது.

It is the self-oblivious absorption of Force.

சக்தி தன்னை மறந்த நிலை அது.

The Force is lost in the form of her own workings.

சக்தி ரூபத்துள் மறைந்துள்ளது.

Sachchidananda must return towards Himself.

சத் மீண்டும் தன்னையடையவேண்டும்.

Mind is one of His instruments.

மனம் அதன் பல கருவிகளுள் ஒன்று.

It is an instrument in the descent and the ascent.

சிருஷ்டிக்கும், பரிணாமத்திற்கும் மனம் கருவி.

Mind is an instrument of creation in the descent

சிருஷ்டி நம்மை நோக்கிவரும்பொழுது மனம் கருவியாகச் செயல்படுகிறது.

Mind is not the secret creatrix.

மனம் சிருஷ்டிக்கர்த்தாயில்லை

It is a transitional stage in the ascent.

பரிணாமத்திற்கு மாறும் கருவி மனம்.

Mind is not our high original source of cosmic existence.

பிரபஞ்சத்துள் ஆதிமூலம் மனமில்லை.

Nor is it the consummate term.

மனம் பிரபஞ்சத்தின் முடிவான ரூபமுமில்லை.

Page No.116, Para No.11


 

There are different philosophies

தத்துவங்கள் பல.

Some of them recognise Mind as the creator of the worlds.

சில மனமே உலகை சிருஷ்டித்ததாகக் கருதுகின்றன.

They accept Mind as the original principle.

மனத்தையே அவை ஆதி எனக் கருதுகின்றன.

There are forms in the Universe.

அவை பிரபஞ்சரூபங்கள்.

They consider Mind as a mediator.

மனத்தை இடைப்பட்டதாக அவை கருதுகின்றன.

Some are noumenal.

சில தத்துவங்கள் யதார்த்தமானவை.

Others are idealistic.

மற்றவை இலட்சியமானவை.

The noumenal consider the world as created by Mind.

யதார்த்தமான தத்துவம் உலகை மனம் சிருஷ்டித்ததாகக் கருதுகிறது

They do not recognise any other in the cosmos.

பிரபஞ்சத்தில் மனத்தைமட்டுமே அவை கருதுகின்றன.

Thought and idea go with Mind.

எண்ணமும், கருத்தும் மனத்தைச் சார்ந்தவை.

But Idea may be purely arbitrary.

எண்ணம் என்பது நாமே வைத்துக்கொள்வது.

It may not have any essential relation with Truth.

அதற்கும் சத்தியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

Let us suppose such a truth exists.

அப்படி ஒரு சத்தியமிருப்பதாகக் கொள்வோம்.

It then becomes a mere Absolute.

அது பிரம்மம் எனப்படும்.

It is aloof from all relations.

அதற்கும் உறவுக்கும் தொடர்பில்லை.

It is irreconciliable with our world.

உலகத்திற்கு அது ஒத்துவாராது.

What is in front is the conceptive phenomenon.

எண்ணம் தோற்றமாக முன்னே நிற்கிறது.

There is a Truth behind.

அதன்பின் ஒரு சத்தியம் உண்டு.

The idealistic interpretation supposes a relation between them.

இவற்றிடையே தொடர்புண்டு என இலட்சியவாதம் கூறுகிறது.

It is a relation of opposition and antinomy.

இது எதிரான உறவு.

Sri Aurobindo presents yet another view.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் அடுத்தக்கட்ட இலட்சியத்தைப் பற்றிப் பேசுகிறார்

It goes farther in idealism.

அவர் கூறுவது இலட்சியத்தைக் கடந்தது.

It sees the creative Idea.

சிருஷ்டியின் எண்ணக்கருவை அது காண்கிறது.

It is a Real Idea.

அதை ஜீவனுள்ள எண்ணம் எனக் கூறுகிறது.

The Real-Idea has a spiritual meaning.

அதற்கு ஓர் ஆன்மீகவிளக்கம் உண்டு.

It is a power.

அது ஒரு சக்தி.

A power of Conscious – Force.

தன்னையறியும் சக்தியின் பகுதியது.

It can express the real being.

அதனால் சத்புருஷனை வெளிப்படுத்த முடியும்.

It is born out of the real being.

அது சத்புருஷனில் ஜனிக்கிறது.

It partakes of its nature.

ஜீவனுள்ள எண்ணம் சத்புருஷச் சுபாவம் பெற்றது.

It is not a child of void.

அது சூன்யத்தில் பிறந்ததில்லை.

Nor is it a weaver of fictions.

அது கற்பனையான மாயையிலில்லை.

It is Conscious Reality.

அது தன்னையறியும் சத்தியம்.

It throws itself into mutable forms.

சத்தியம் ரூபம் பெறுகிறது.

They are forms of its own substance.

அந்த ரூபங்கள் சத்புருஷனுடைய அஸ்திவாரத்திற்குடையவை.

The substance is imperishable.

அஸ்திவாரம் அழியாதது.

It is also immutable.

அது சலனமற்றது.

The world is not a figment of Mental conception

உலகம் மனத்தின் கற்பனையன்று.

Even the Universal Mind cannot create it.

பிரபஞ்சமனமும் அதை சிருஷ்டிக்கமுடியாது.

The world is a conscious birth.

உலகம் என்பது தான் விரும்பிப் பிறந்தது.

It is a birth of something beyond Mind.

அது மனத்தைக் கடந்த ஜனனம்.

It is born into forms of itself.

அது ரூபங்களாகப் பிறக்கிறது.

There is a Truth of conscious being.

அது சத்புருஷ சத்தியம்.

It supports these forms.

அது ரூபங்களை ஆதரிக்கிறது.

That Truth expresses itself in these forms.

சத்தியம் ரூபமாகிறது.

There is a knowledge corresponding to the Truth.

சத்தியத்தை வெளிப்படுத்தும் ஞானம் உண்டு.

It reigns.

அது ஆட்சி செய்கிறது.

It is the Supramental Truth Consciousness.

அதையே சத்தியஜீவியம் என்கிறோம்.

It ORGANISES Real Ideas.

ஜீவனுள்ள எண்ணத்தை சத்தியஜீவியம் செயல்பட வைக்கிறது.

The organisation is in perfect harmony.

அச்செயல் சுமுகமானது.

They are cast into the mental-vital-material mould.

உடல் - உயிர் - மனம் ஆகியவற்றின் ரூபமாக அவை வெளிப்படுகின்றன.

That harmony precedes them.

அவற்றின் சுமுகம் வெளிப்படுமுன் எழுகிறது.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்

உடல் மனத்தை நிர்ணயிப்பது சிறிய உண்மை. மனம் உடலை

நிர்ணயிப்பது பெரிய உண்மை.

உண்மையின் இரு துருவங்கள்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்

நமக்கு உரிமையில்லாததை நாம் விரும்புகிறோம். மற்றவர்க்கு உரிமையில்லாததை நாமே முனைந்தளித்தால் அச்செயல் (love) அன்பாக மாறுகிறது.

அருளாக வருவது அன்பாக வெளிப்படுகிறது.

*****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பேசித் தீர்க்கமுடியாத பிரச்சினைகளைப் பேசாமல் தீர்க்கமுடியும். அனுபவமில்லாமல் எழுப்பிய பிரச்சினைகளை அனுபவம் வந்தபின் தீர்க்கலாம். அதைப் பேசித் தீர்ப்பதற்குப் பதிலாக மௌனத்தால் தீர்க்கலாம். ஏனெனில், பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்ற மனநிலை ஏற்பட்டபின் அதை வெளியிடும் அளவுக்கு அறிவு வளர்ந்திருப்பதில்லை.

அறிவைவிட அனுபவம் முக்கியம்.

******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

தோல்வி, சோம்பல், எதிர்ப்பு, விரக்தி, துரோகம் ஆகிய ரூபத்தில் ஆரம்பத்தில் அன்னை நம்மை நாடிவருவதால், நம்மால் அவரைக் காணமுடிவதில்லை; ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

ரூபத்தை விலக்கி அன்னையைக் கண்டு பெறுவது நிறைவு.

******

Comments

05. லைப் டிவைன்  Page No.116,

05. லைப் டிவைன்

 Page No.116, Para No.11

 Line 34    -   forms.,    -   forms.

 Line 35    -   ow          -   own



book | by Dr. Radut