Skip to Content

06. சாவித்ரி

சாவித்ரி

P.52 A joy that drags not sorrow as its shade.

சோகத்தின் சாயலற்ற மகிழ்ச்சி.

. தனக்காக விதிக்கப்பட்ட இவற்றிற்காக அவள் ஏங்குகிறாள்.

. சொர்க்கத்திற்குச் சொந்தமானதை அவள் தனக்குரியதுஎன உரிமை கொண்டாடுகிறாள்.

. உலகை ஒரு பார்வையால் கடவுளும் அவள் உரிமையை நியாயம்என ஏற்கிறார்.

. அறிவைக்கடந்த ஒளியின் தூய்மை ஏற்கிறது.

. ஞானம் அதன் கிரயப்பத்திரம்.

. குருட்டு எண்ணம் அறியாததை ஆத்மா ஏற்கிறது.

. உலகில் அபத்தத்தின் ஆர்ப்பாட்டம் மோட்சத்தில் சத்தியவாகனம்.

. இறைவனின் புரியாத புதிர் எதிர்காலச் சின்னம்.

. மனிதனுக்கு நிகழ்காலம் நிதர்சனம்.

. உணர்ச்சியில் சிக்கலை உதறமுடியாது.

. உலகிலும், அதைக்கடந்தும் நடப்பது அதுவே.

. எல்லையற்ற திட்டத்தின் எண்ணற்ற பகுதிகள்.

. அவன் உள்ளம் அறியும், அதுமட்டும் அறியும்.

. புறநிகழ்ச்சிகளின் வித்து அகவுணர்வாகும்.

. தவறி வந்த விதியும் தற்செயலை ஏற்கிறது.

. அர்த்தமற்ற முடிவுகள் அனந்தம்.

. பார்வையில்படாத சத்தியம் எழுதும் ஊமை வரைபடங்கள்.

.வாழ்வின் தோற்றத்தை வகுக்கும் நிகழ்ச்சிகள்.

. அறியாததை நிர்ணயிப்பவன் அறிந்ததை அனுப்புகிறான்.

. ஆழ்மனம் அதிர்ந்து சூன்யமாயிற்று.

. விவரமற்ற உணர்ச்சி ஆச்சரியத்திலாழ்த்துவதில்லை.

. மறைந்த மகத்துவங்களின் மலர்ந்த தோற்றம்.

. யதார்த்த உலகம் கண்டறியாதது.

. ஒளிந்த சக்தியின் ஆத்மஜோதியில் அவை பிறந்தவை.

. அவசரமாக மலையைக் குடைந்து வழிகண்டான்.

. சூட்சுமச் சாகரத்தைக் கடப்பது யார்?

. ஆத்மாவின் அவசியத்தைஎப்படி அறிவது?

. தீர்க்கமான அலட்சியத்தின் தீவிர விளைவு.

. அன்றாட வாழ்வின் அவசியத்துள் உறைபவன்.

. நம் பார்வை புறத்திலுள்ளது.

. சந்தர்ப்பச் சகடம் கடகடக்கிறது.

. மறைந்த இரகஸ்யத்தை மனம் கருதுகிறது.

.தீர்க்கதரிசனம் நமக்குரியது.

. ஆத்மாவில் நாம் உறையலாம்.

. அந்தரங்கக் குரலைக் கேட்கலாம்.

*******


 


 



book | by Dr. Radut