Skip to Content

02. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. நற்பண்பு மனத்தின் அணிகலன்.
    • ஞானம் சத்தியத்தால் பண்பாகிறது.
  2. நண்பனைப் பகைவனாக்காதே.
    • பகைவனில் நண்பரை உருவாக்கும் சமர்ப்பணம்.
  3. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் பயன்படும்.
    • அன்பர் பெறும் அருள் அனைவரும் பெறும் வசதி.
  4. நெருப்பில்லாமல் புகை வாராது.
    • நாம் இடம் தாராமல் நமக்குத் தீங்கு வாராது.
  5. தீதும் நன்றும் பிறர் தர வாரா.
    • அகமே புறம்.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தானே ஏற்றுக்கொண்ட உயர்வைவிட தானுயர்ந்தவன் என முடிவு செய்வது, ஆராய்ச்சியின் பலன். அது தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் அமைந்த கர்வம்.
 
கர்வம் தன்னை தானறிந்ததைவிட உயர்வாக்கிக்கொள்ளும்.

******



book | by Dr. Radut